அறிந்து கொள்ளுங்கள்

இணையத்தில் லீக் ஆன ரெட்மி பேட் விவரங்கள்

Published On 2022-09-20 07:29 GMT   |   Update On 2022-09-20 07:29 GMT
  • ரெட்மி பிராண்டின் புதிய டேப்லெட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சியோமி நிறுவனம் தனது சியோமி 12T சீரிஸ் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் முதல் ரெட்மி டேப்லெட் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த டேப்லெட் ரெட்மி பேட் என அழைக்கப்பட இருக்கிறது.

குவைத் மற்றும் ஈராக் பகுதிகளுக்கான சியோமி இன்ஸ்டாகிராம் வலைபக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இதனை டிப்ஸ்டரான கேஸ்பர் சிபெக் தெரிவித்து இருக்கிறார். இது மட்டுமின்றி டேப்லெட் மாடலின் கமர்ஷியல் படத்தையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த தகவல்களின் படி ரெட்மி பேட் மாடல் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

இந்த டேப்லெட் எந்த நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவல் மர்மமாகவே உள்ளது. எனினும், குவைத்தில் இதன் விலை 232.5 டாலர்கள், ஈராக்கில் இதன் விலை 225 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டேப்லெட் மாடல் மெட்டாலிக் ரியர், ஒற்றை கேமரா லென்ஸ் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் எல்இடி பிளாஷ் மற்றும் ரெட்மி பிராண்டிங் உள்ளிட்டவை இடம்பெறவில்லை.

ரெட்மி பேட் அம்சங்கள்:

ரெட்மி பேட் மாடலில் 11 இன்ச் LCD டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், மீடியாடெக் சிப்செட், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13, 7800 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி. 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இரண்டு மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த டேப்லெட் கிராபைட் கிரே, மூன்லைட் சில்வர் மற்றும் மிண்ட் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும்.

Tags:    

Similar News