அறிந்து கொள்ளுங்கள்

டெலிகிராமில் பிரீமியம் கட்டண சேவை அறிமுகம் - ஒரு மாத சந்தா இவ்வளவா?

Published On 2022-06-21 04:40 GMT   |   Update On 2022-06-21 04:40 GMT
  • பிரீமியம் சந்தாதாரர்கள் விளம்பர இடையூறு இன்றி பார்க்கலாம்.
  • பிரீமியம் சந்தாதாரர்கள் 4 ஜிபி அளவிலான பைல்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

நடப்பாண்டில் உலகளவில் அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்பட்ட டாப் 5 செயலிகளில் டெலிகிராமும் ஒன்று. தற்போது இந்த செயலியை உலகம் முழுவதும் சுமார் 70 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டெலிகிராம், அதன் பிரீமியம் கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது. டெலிகிராம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய பீரிமியம் சேவையை பெற, மாதம் ஒன்றிற்கு ரூ.469 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பீரிமியம் சேவையில் இணையும் சந்தாதாரர்கள், பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பிரீமியம் சந்தாதாரர்கள் 4 ஜிபி அளவிலான பைல்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி பிரத்யேகமான ஸ்டிக்கர்கள், வேகமான தரவிறக்க வசதி உள்பட பல வசதிகள் அவர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரீமியம் சந்தாதாரர்கள் விளம்பர இடையூறு இன்றி பார்க்கலாம் என்றும், வாய்ஸை டெக்ஸ்டாக மாற்றும் அம்சமும் வழங்கப்பட்டு உள்ளது.


இந்த பிரீமியம் சேவை டெலிகிராமின் 8.8 வெர்ஷனில் தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த சேவை iOS பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் இதற்கான அப்டேட் இன்னும் விடப்படவில்லை. விரைவில் அனைவருக்கும் இந்த பிரீமியம் சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News