தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் நோட்டிஃபிகேஷனில் இருந்து நேரடியாக வீடியோக்களை பார்க்க புதிய வசதி

Published On 2018-11-23 05:07 GMT   |   Update On 2018-11-23 05:18 GMT
வாட்ஸ்அப் செயலியில் நோட்டிஃபிகேஷன்களில் இருந்து நேரடியாக வீடியோக்களை பார்க்க புதிய வசதி சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Whatsapp #Apps



வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதிகளை வழங்குவதற்கான பணிகளில் அந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. புதிய அப்டேட்டகள் செயலியின் அடிப்படை வசதிகளுடன் பயனுள்ள பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. 

அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் நோட்டிஃபிகேஷன்களில் இருந்தபடியே வீடியோக்களை நேரடியாக பார்க்கும் வசதியை உருவாக்கி வருவதாக தெரிகிறது. 

இதன் மூலம் நோட்டிஃபிகேஷனில் இருந்தபடியே மெசேஜ்களுக்கு பதில் அளிக்கும் வழிமுறை அதிகளவு மேம்படும். இதுவரை வாட்ஸ்ப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் வீடியோ மெசேஜ்களை பார்க்க, செயலியை திறந்து குறிப்பிட்ட லின்க்கை கிளிக் செய்ய வேண்டும். புதிய வசதி வழங்கப்படும் போது, நோட்டிஃபிகேஷனில் இருந்தே நேரடியாக வீடியோ பார்த்து விட முடியும்.



இதன் மூலம் மெசேஜை பார்த்தாலே பயனர்களின் லாஸ்ட் சீன் மாறிவிடும். மேலும் புதிய வசதியுடன் நோட்டிஃபிகேஷனில் இருந்தபடியே செயலியில் வரும் அனைத்து வித மெசேஜ்களையும் பார்க்க முடியும் என்பதோடு, லாஸ்ட் சீன் மாறாமல் இருக்கும். சில பயனர்களுக்கு லாஸ்ட் சீன் நேரம் பெரியதாக இல்லை என்றாலும், சிலர் அவற்றை முக்கியமானதாக பார்ப்பர். 

லாஸ்ட் சீன் மூலம் பயனர்கள் தங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களின் குறுந்தகவல்களை பார்த்து இருப்பார்களா, இல்லையா என்பதை குறுந்தகவல் அனுப்பியவர் பார்த்து புரிந்து கொள்ள முடியும். மேலும் பயனர் ஆன்லைனில் இருந்துகொண்டு குறுந்தகவலுக்கு பதில் அனுப்பாமல் இருப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.

புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதை WABetaInfo மூலம் தெரியவந்து இருக்கிறது. புதிய வசதியை வாட்ஸ்அப் முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ். தளத்தில் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்களை அழிப்பதாக ஆப்பிள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News