தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு அப்டேட்டில் பி.ஐ.பி. மோட்

Published On 2018-12-16 06:02 GMT   |   Update On 2018-12-16 06:02 GMT
வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சர் இன் பிக்சர் மோட் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. #WhatsApp #Android



வாட்ஸ்அப் செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் (பி.ஐ.பி.) ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடியே பார்க்க வழி செய்யும். யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் இதர தளங்களில் இருக்கும் வீடியோக்களை வாட்ஸ்அப் பி.ஐ.பி. மோட் சப்போர்ட் செய்கிறது.

கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த பி.ஐ.பி. வசதி ஒருவழியாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. புதிய பி.ஐ.பி. மோட் வசதி வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.280 வழங்குகிறது. இதுதவிர செயலியில் மேலும் பல்வேறு புதிய வசதிகளை வாட்ஸ்அப் வழங்க இருக்கிறது. 



வாட்ஸ்அப் ஐபோன் செயலியில் சமீபத்தில் க்ரூப் காலிங் பட்டன் வழங்கப்பட்டது. இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் க்ரூப் ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ள முதலில் ஒருவரை அழைத்து, அதன்பின் மற்றவர்களை அழைப்பில் சேர்க்க வேண்டும்.

புதிய வசதி வழங்கப்படும் போது, அழைக்க வேண்டியவர்களை அழைப்புக்கு முன்னதாக சேர்க்க முடியும். இதேபோன்று செயிலயில் டார்க் மோட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வசதி வழங்கப்படும் பட்சத்தில் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகப்படுத்த முடியும். குறிப்பாக OLED ரக ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன்களில் அதிக பலன்கள் கிடைக்கும்.

ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியில் டிராப் டவுன் நோட்டிஃபிகேஷன் பேனல் வழங்கப்பட்டது. இந்த வசதி நோட்டிஃபிகேஷன் டிராப் டவுன் பேனலில் இருந்தபடி புகைப்படம் மற்றும் வீடியோக்களின் பிரீவியூக்களை காண்பிக்கும்.
Tags:    

Similar News