தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போனில் வீடியோ ரிங்டோன் வைக்க புதிய ஆப் அறிமுகம்

Published On 2019-01-09 09:40 GMT   |   Update On 2019-01-09 09:40 GMT
கலிபோர்னியாவை சேர்ந்த விங் எனும் ஆப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆப் கொண்டு ஸ்மார்ட்போனில் வீடியோ ரிங்டோன் செட் செய்து கொள்ள முடியும். #app



கலிபோர்னியாவை சேர்ந்த வீடியோ ரிங்டோன் செயலி இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் சோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த செயலி வழங்கப்படுகிறது.

இந்தியா முழுக்க டவுன்லோடு செய்யக்கூடிய வகையில் விங் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை கொண்டு ஒவ்வொரு அழைப்பிலும் வீடியோவினை ரிங்டோனாக செட் செய்து கொள்ளலாம். இதன் இந்திய பதிப்பில் பயனர்கள் பாலிவுட் வீடியோக்களை தங்களது ஸ்மார்ட்போனில் ரிங்டோனாக செட் செய்யலாம்.



பயனர் விரும்பும் வீடியோக்களை தங்களது ரிங்டோனாக செட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட வீடியோக்களை ரிங்டோனாக செட் செய்யவோ அல்லது தங்களது நண்பர்களுக்கென பிரத்யேக ரிங்டோன்களை செட் செய்யலாம்.

இந்தியா, அமெரிக்கா, வங்கதேசம், நேபால், நைஜீரியா, கானா, இந்தோனேசியா என உலகம் முழுக்க 174 நாடுகளில் விங் செயலி பயன்படுத்தப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட விங் செயலியில் உலகம் முழுக்க இதுவரை சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான விங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Tags:    

Similar News