search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் விமானப்படை துணைத் தளபதியாக உள்ளார்
    • தற்போதைய விமானப்படை தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி பணி பெறுகிறார்

    இந்திய விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக தற்போது துணை தளபதியாக உள்ள ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய விமானப்படை தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அன்றைய தினம் விமானப்படை தளபதி பதவியை அமர் ப்ரீத் சிங் ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    1984 ஆம் ஆண்டு முதல் விமானப்படையில் சேவை ஆற்றி வரும் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், 2023 பிப்ரவரி 1 முதல் விமானப்படை துணை தளபதியாக பதவி ஏற்று பணியாற்றி வருபவர் ஆவார். நேஷனல் டிபன்ஸ் அகாடெமியில் [NDA] பயின்ற அமர் ப்ரீத் சிங் பிளைட் கமாண்டர் முதல் காமாண்டிங் ஆபிசர் வரை அனைத்து ரேங் - களையும் வகித்தவர் ஆவார்.

    • ஹேக் செய்யப்பட்ட சேனலை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர்.
    • ஹேக்கர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.

    உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்பு செய்துவந்த அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலை மர்ம நபர்கள் ஹேக் செய்தனர். உச்சநீதிமன்றத்தின் சேனலில் தற்போது கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது அந்த சேனல் நேரலையில் ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோ ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் உச்சநீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைகளின் நேரலை பாதிக்கப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட சேனலை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர்.

    நாட்டிலேயே சக்திவாய்ந்த அதிகார மையமாக விளங்கும் உச்சநீதிமன்றத்தின் பயன்பாட்டில் உள்ள சேனலே ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் டிஜிட்டல் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.

    மேலும் ஹேக்கர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் சேனலின் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற எங்களின் அதிநவீன உற்பத்தி நிலையங்களில் அமுல் நெய் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
    • அமுல் நெய் உயர்தர தூய பால் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

    திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆந்திர அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதனிடையே நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மைதான் என்று தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலை கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்துவது குறித்த சர்ச்சைக்கு மத்தியில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒருபோதும் நெய் சப்ளை செய்யவில்லை என்று அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    திருப்பதி தேவஸ்தானத்திற்கு அமுல் நெய் சப்ளை செய்தாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை தொடர்ந்து அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அமுல் நிறுவனம் கூறுகையில்,

    ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற எங்களின் அதிநவீன உற்பத்தி நிலையங்களில் அமுல் நெய் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

    அமுல் நெய் உயர்தர தூய பால் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எங்கள் பால் பண்ணைகளில் பெறப்படும் பால் கடுமையான முறையில் செல்கிறது. FSSAI ஆல் கலப்படம் கண்டறிதல் உட்பட கடுமையான தர சோதனைகள் மூலம் அனுப்பப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

    அமுல் நிறுவனம் இந்த அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் பொதுநலனுக்காக வெளியிட்டுள்ளது.

    • தற்போது முதல்வராகப் பதவியேற்க உள்ள அதிஷி டெல்லியின் இளைய முதல்வர் ஆவார்.
    • அதிஷி தலைமையிலான புதிய அமைச்சரவையும் இன்று பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான முறைகேடு வழக்கில் கடந்த 155 நாட்களாக திகார் சிறையில் இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வெளியே வந்த கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து புதிய முதல்வராக கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அதிஷியை முதல்வராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை அன்று கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து துணை நிலை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அதிஷி உரிமை கோரினார்.

    இந்த நிலையில், டெல்லி முதல்வராக அதிஷி இன்று மாலை பதவியேற்பார் என்றும் அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் இன்று பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா மாலை 4.30 மணிக்கு ராஜ் நிவாஸில் நடைபெறுகிறது.

    தற்போது முதல்வராகப் பதவியேற்க உள்ள அதிஷி டெல்லியின் இளைய முதல்வர் ஆவார். மேலும், மேற்கு வங்கத்தின் மம்தா பானா்ஜியை தொடா்ந்து, நாட்டின் தற்போதைய இரண்டாவது பெண் முதல்வராகவும் அதிஷி தேர்வாகியுள்ளார்.

    இதற்கிடையே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, அதிஷியை டெல்லி மாநில முதல்வராக அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார்.

    • ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
    • எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐ.நா. சபையில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார்.

    குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது. ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க நேரப்படி 21-ந்தேதி (இன்று) பங்கேற்கிறார்.

    இந்த அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

    அடுத்த நாள் நியூயார்க் நகரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 23-ந்தேதி தேதி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்த பயணத்தின்போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

    அமெரிக்க புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி "இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, செழிப்புக்காக பணியாற்றும் முக்கிய குழுவாக குவாட் உருவெடுத்துள்ளது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு சார்பில் போட்டியில் முன்னாள் ஜனாதிபதி டொனால் டிரம்ப் சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.

    • உச்சநீதிமன்றத்தின் சேனலில் தற்போது கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
    • ஹேக் செய்யப்பட்ட சேனலை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்

    உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்பு செய்துவந்த அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் சேனலில் தற்போது கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது அந்த சேனல் நேரலையில் ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோ ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் உச்சநீதிமன்றத்தில் நாடாகும் விசாரணைகளின் நேரலை பாதிக்கப்ட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட சேனலை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் ஹேக்கர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே சக்திவாய்ந்த அதிகார மையமாக விளங்கும் உச்சநீதிமன்றத்தின் பயன்பாட்டில் உள்ள சேனலே ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் டிஜிட்டல் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.

    • கபில்மான் தனது காதலியான காஜல்காத்ரி என்பவர் மூலம் இந்த கொலையை நிகழ்த்தியதும் தெரியவந்தது.
    • டெல்லி குற்றப்பிரிவு சிறப்புக்குழுவினர் காஜல்காத்ரியை கைது செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி அருகே உள்ள நொய்டாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏர் இந்தியா ஊழியரான சுரஜ்மான் (வயது 30). என்பவர் ஒரு கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

    நொய்டாவில் உள்ள ஜிம்மில் இருந்து வெளியே வந்து காரில் அமர்ந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அவரை சுட்டுக்கொலை செய்தது. போலீஸ் விசாரணையில் சுரஜ்மான் மீது எந்த குற்றவழக்குகளும் நிலுவையில் இல்லை என்பது தெரியவந்தது. எனவே வேறு ஏதேனும் காரணங்களுக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    அப்போது சுரஜ்மானின் சகோதரர் பர்வேஷ்மான் ஒரு வழக்கில் கைதாகி மண்டோலி ஜெயிலில் இருப்பதும், அவருக்கு சுரஜ்மான் அடிக்கடி பண உதவி செய்து வருவதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பர்வேஷ்மான் ஏற்கனவே டெல்லியை சேர்ந்த கபில்மான் என்பவரின் தந்தையை கொலை செய்ததும், அதற்கு பழி வாங்குவதற்காக கபில்மான் தனது காதலியான காஜல்காத்ரி என்பவர் மூலம் இந்த கொலையை நிகழ்த்தியதும் தெரியவந்தது.

    அதாவது கபில்மான் ஏற்கனவே ஒரு வழக்கில் ஜெயிலில் அடைக்கபட்டுள்ளார். அவரை சந்திப்பதற்காக காஜல்காத்ரி சென்ற போது அவர் பர்வேஷ்மானை பழி வாங்குவதற்காக அவரது சகோதரரான சுரஜ்மானை கொலை செய்ய திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்0. மேலும் இந்த கொலை திட்டத்திற்காக காஜல்காத்ரி ரூ.4 லட்சம் பேசி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்குவதற்காக முன்பணமாக ரூ.1½ லட்சத்தை பெற்றதும் தெரியவந்தது.

    காஜல்காத்ரி கடந்த 2019-ம் ஆண்டு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றபோதுதான் கபில்மானை சந்தித்துள்ளார். ரவுடியாக திகழ்ந்த கபில்மானுடனான பழக்கத்திற்கு பிறகு காஜல்காத்ரியும், குற்றச்சம்பவங்ளில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கபில்மான் சிறைக்கு சென்ற நிலையில் காஜல்காத்ரி பெண் தாதாவாக உருவெடுத்துள்ளார்.

    இந்தநிலையில் தான் இந்த கொலை வழக்கில் காஜல்காத்ரியை தீவிரமாக தேடி வந்தனர். அவரை பற்றி துப்புக்கொடுத்தால் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்தனர். இந்தநிலையில் டெல்லி குற்றப்பிரிவு சிறப்புக்குழுவினர் காஜல்காத்ரியை கைது செய்துள்ளனர்.

    • முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என விசாரணையின் போது குறிப்பிட்டிருந்தார்.
    • பெண் வழக்கறிஞருக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்தை தெரிவித்திருந்தார்.

    கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா, நில உரிமையளருக்கும்- குத்ததைதாரருக்கும் இடையிலான பிரச்சனை தொடர்பான வழக்கில பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியை பாகிஸ்தான என அழைத்தார். இது மிகவும் சர்ச்சையானது.

    அத்துடன் பெண் வழக்கறிஞருக்க எதிராக வெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்தார். ஒரு வழக்கில் அஜரான பெண் வழக்கறிஞரை பார்த்து, எதிர்க்கட்சி பற்றி வழக்கறிஞருக்கு நிறைய தெரியும் என்று தோன்றுகிறது. அதனால் அவர்களின் உள்ளாடைகளின் நிறத்தை அவளால் வெளிப்படுத்த முடியும் என வெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவை. இது தொர்பாக விளக்கம் அளிகக் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

    இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிமன்றம் அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.

    • கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் எரிபொருள் சில்லரை விற்பனையாளர்கள் அவசரப்படவில்லை.
    • எரிபொருள் சில்லரை விற்பனையாளர்கள் ஒரு நாள் விலையைக் குறைத்து மீண்டும் உயர்த்த வேண்டிய சூழ்நிலையை விரும்பவில்லை என்றனர்.

    புதுடெல்லி:

    கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பீப்பாய் 70 அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி கடந்த மார்ச் 14-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. இதற்கிடையே மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 80 அமெரிக்க டாலருக்கு குறைவாக இருந்தால் பெட்ரோல், டீசல் விலையை சில்லரை விற்பனையாளர்கள் குறைக்கலாம்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் எரிபொருள் சில்லரை விற்பனையாளர்கள் அவசரப்படவில்லை.

    அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு சந்தையில் ஏற்ற இறக்கம் குறையும் வரை காத்திருந்திருப்பார்கள். கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.

    கடந்த வாரம் ஒரு நாள் 70 அமெரிக்க டாலருக்கு கீழே வந்தது. ஆனால் அடுத்த நாள் விலை உயர்ந்தது. இதனால் எரிபொருள் சில்லரை விற்பனையாளர்கள் ஒரு நாள் விலையைக் குறைத்து மீண்டும் உயர்த்த வேண்டிய சூழ்நிலையை விரும்பவில்லை என்றனர்.

    • உண்மை எனில், முழு வீச்சில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியை அடையாளம் காண வேண்டும்.
    • உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டப்படிருந்தால், லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் நம்பிக்கை மீதான அவதூறுக்காக மன்னிக்கமாட்டார்கள்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டுகளில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் நெய்க்குப் பதில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். அதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எந்த நிலைக்கும் செல்வார் என பதிலடி கொடுத்திருந்தது.

    அதேவேளையில் ஆய்வு முடிவில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் ஏழுமலையான் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு உடனடியாக தீர்வு எட்டப்படவில்லை என்றால், பாஜக-வின் பிரித்தாளும் சதி கொள்கைக்கு அனுமதிப்பது போன்றதாகிவிடும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெர்ரா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி லட்டை அவமதிக்கும் வகையிலான இந்த குற்றச்சாட்டு உண்மை எனில், முழு வீச்சில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியை அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேவேளையில் தவறாக அல்லது உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டப்படிருந்தால், லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் நம்பிக்கை மீதான புனிதத்தன்மையை களங்கப்படுத்தியதற்காக மன்னிக்கமாட்டார்கள்.

    அதுவரை தேர்தல் சீசனில் பிரித்தாளும் சதி கொள்கை அனுமதிக்கும் வகையில் பாஜக-விற்கு வசதியாக அமைந்திவிடும்.

    இவ்வாறு பவன் கெர்ரா தெரிவித்துள்ளார்.

    • காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.
    • பாகிஸ்தான் மந்திரியின் இந்தக் கருத்து காங்கிரஸ் கூட்டணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ராணுவ மந்திரியாக இருந்து வரும் கவாஜா ஆசிப் பாகிஸ்தான் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சிக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவது அந்தக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அரசும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கூட்டணியும் ஒரே பக்கத்தில் நிற்கின்றன என தெரிவித்தார். அவரது கருத்து காங்கிரஸ் கூட்டணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் கூட்டணிக்கு பாகிஸ்தான் ராணுவ மந்திரி ஆதரவு தெரிவிப்பதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு பாகிஸ்தான் ராணுவ மந்திரி ஆதரவு தெரிவித்திருப்பது மீண்டும் காங்கிரசை அம்பலப்படுத்தியுள்ளது.

    காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் ஒரே நோக்கம், ஒரே திட்டம் இருப்பதை அந்நாட்டு ராணுவ மந்திரியின் கருத்து மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

    ராகுல் கடந்த சில ஆண்டுகளாக தேசவிரோத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறார்.

    சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து ஆதாரம் கேட்டார். இந்திய ராணுவத்துக்கு எதிரான விஷயங்களைப் பேசினார். இப்படி ராகுலின் காங்கிரசும், பாகிஸ்தானும் எப்போதும் ஒரே மாதிரி செயல்படுகின்றன.

    ஆனால், மத்தியில் மோடி அரசு இருப்பதை காங்கிரசும், பாகிஸ்தானும் மறந்துவிட்டன. எங்கள் ஆட்சியில் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தோ அல்லது பயங்கரவாதமோ மீண்டும் வரவே வராது என உறுதியாக தெரிவித்தார்.

    • நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
    • வரும் 21-ம் தேதி முதல் டாக்டர்கள் பணிக்கு திரும்புகின்றனர்.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் பெண் டாக்டர் கொலை தொடர்பாக நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதல் மந்திரி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்த கூட்டத்தில் ஜூனியர் டாக்டர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது மம்தா பானர்ஜி, கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குதல் உள்ளிட்ட 3 நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார்.

    இதையடுத்து, ஜூனியர் டாக்டர்கள் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் மற்றும் வேலைநிறுத்தப் பணிகள் தொடரும். மாநில அரசுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் என தெரிவித்தனர்.

    இதற்கிடையே, மேற்குவங்க அரசின் அதிகாரிகளுக்கும், ஜூனியர் டாக்டர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. எனவே போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தைத் தொடர உள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஜூனியர் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியது. வரும் 21-ம் தேதி முதல் அவர்கள் பணிக்கு திரும்புகின்றனர்.

    இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், வெள்ளப் பிரச்சனை உள்ளது. நமக்குத் துணை நின்றவர்கள் ஏதேனும் பேரிடரை எதிர்கொண்டால், அவர்களுக்கு உதவ நாம் இருக்க வேண்டியது நமது கடமை. எனவே, இந்தப் போராட்டக் களத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளோம். சிஜிஓ வளாகம் வரை பேரணி நடத்துவோம். அபயாவுக்கு நீதி கிடைக்க சி.பி.ஐ. விசாரணையை துரிதப்படுத்தக் கோரி போராட்டம் நடத்துவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வந்து மாணவர்களின் குறைகளைக் கேட்கும் வகையில் மருத்துவமனைகளில் முறையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

    இதன்மூலம் 40 நாட்களுக்கு மேலாக நடந்த டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வருகிறது.

    ×