search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • தருமபுரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
    • மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கொம்மனநாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சபரி (வயது 24). இவரது மனைவி நதியா (21). சபரி சென்டரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 25-ந் தேதி வேலை முடிந்து இரவு 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி வந்து கொண்டி ருந்தார். அப்போது பாலக்கோடு் தேசிய நெடுஞ்சாலை கோடியூர் பாரதி நகர் அருகே வந்த போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சபரியின் வாகனத்தின் மீது மோதியது.

    இதில் சபரியும், மற்றொரு வாகனத்தில் வந்த 2 பேர் உட்பட 3 பேரும் காயம் அடைந்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் 3 பேரையும் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சபரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீ சார் வழக்கு விசாரணை நடத்தியதில், எதிரே மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்த 2 பேரும் பாலக்கோடு அருகேயுள்ள எண்டப்பட்டி கிராமத்தை சேர்்ந்த பாஸ்கர் மகன் கண்ணப்பன் (18), முத்துசாமி மகன் திருக்குமரன் (18) என தெரியவந்தது.

    காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் 2 பேரிடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    • தருமபுரி அருகே மது, லாட்டரி விற்ற பெண் உட்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • சீட்டு கட்டுகள் 12 மற்றும் ரூ. 15,430 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி மாவட்டம், அரூர் போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் அரூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாருக்கு மது பாட்டில்கள் விற்கப்படு வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி மேலபாஷா பேட்டை பகுதியில் உள்ள பிரியாணி கடை பின்புறம் சென்று சோதனை செய்த போது அங்கு இருந்த வெள்ளை நிற உர சாக்கில் 27 மது பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டி ருந்தன. அந்த மது பாட்டில்களில் சில மூடி திறந்து இருந்தன. அதனை எடுத்து ஆய்வு செய்தபோது அதிக போதைக்காக அதில் ஊமத்தங்காய் சாறு கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த அமித் மகன் காதர்பாஷா(45) சேரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் சுகதேவன்(44) ஆகிய 2 பேரையும் கைது செய்து் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே போன்று பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது பாப்பி ரெட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகே பெண் ஒருவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்தார். அவரை பிடித்து அவரிடமிருந்து கேரளா லாட்டரி சீட்டு கட்டுகள் 12 மற்றும் ரூ. 15,430 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணை யில் லாட்டரி சீட்டு விற்றவர் தென்கரைகோட்டை கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகள் பழனி யம்மாள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.  

    • தருமபுரியில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்ல போதுமான பஸ்கள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • 2000 பேர் காத்திருந்தனர்.

    கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருவண்ணா மலைக்கு பேருந்து மூலம் பயணித்தனர். இந்நிலையில் நேற்று தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து கோவிலுக்கு செல்லும் நிலை இருந்தது.

    மேலும் நேற்று காலை முதல் 60 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து பயணிகள் கூறும்போது:-

    மாத மாதம் நாங்கள் கிரிவலத்திற்கு செல்வோம். இந்த மாதம் போதிய பேருந்து இல்லாததால் பஸ் நிலையத்தில் 2000 பேருக்கு மேல் காத்திருக்கிறோம். ஐந்து கிலோ மீட்ட முக்கிய கார்த்திகை தீப திருநாளில் கிரிவலம் செல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

    முக்கிய பண்டிகை காலங்களில் அரசு போக்குவரத்து கழகம் பயணிகளுக்காக பேருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சில தடங்களில் செல்லும் பேருந்துகள் காலாவதியாகி ஓட்டை உடைச்சலுமாக உள்ளது. அவைகளை மாற்றி பயணிகளுக்கு தேவையான பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட கலெக்டர் குடியிருப்புக்கு பின்புறம், ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் என்பவர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்றிரவு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கி உள்ளது.

    இதனை அருகே இருந்தவர்கள் பார்த்து தருமபுரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தீ கட்டுக் கடங்காமல் மளமளவென எரிந்தது. பின்னர், அரூர், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கபட்டு கொளுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் போராடி அணைத்தனர்.

    மேலும், தீ விபத்து நிகழ்ந்த பிளாஸ்டிக் கம்பெனி அருகில் தனியார் பேட்டரி கம்பெனி, லாரி பார்க்கிங் உள்ளிட்டவைகள் இருப்பதால் அங்கு தீ பரவாத வண்ணம் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த தீ விபத்தில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் தருமபுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • மண் மற்றும் பீங்கானால் ஆன அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
    • ரூ. 1 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்டது.

    அரூர், 

    கார்த்திகை மாத பௌர்ணமி தீப திருநாளாக தமிழகத்தில் கொண்டா டப்படுகிறது. அன்றைய தினம் இந்துக்கள் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுவர். வீட்டில் ஏற்கனவே அகல் விளக்குகள் இருந்தாலும் வருடத்திற்கு வருடம் புது விளக்குகளை வாங்குவர்.

    இன்று கார்த்திகை தீபம் என்பதால அரூர் கடைவீதியில் சாலையோ ரங்களிலும், தள்ளுவ ண்டிகளில் வைத்தும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் மற்றும் பீங்கானால் ஆன அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    விநாயகர், துளசி மாடம், தாமரை பூ, உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் அழகான வண்ணங்களில் வைக்கப்பட்டிருந்த அகல் விளக்குகளை ஏராளமானோர் வாங்கி சென்றனர். அளவு மற்றும் வடிவத்தை பொறுத்து ஒரு அகல் விளக்கு ரூ. 1 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்டது.

    • கூலி பணத்தை பிரிப்பதில் தகராறு
    • குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார்

    மாரண்டஅள்ளி,   

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் (வயது .28) தருமன் (வயது.27) சங்கர் (வயது .29) மூவரும் நேற்று மாரண்டஅள்ளி சந்தைவீதியை சேர்ந்த ராஜன் என்பவரிடம் வேலைக்கு சென்றனர். வேலை முடிந்ததும் மொத்த கூலி பணத்தையும் மாரியப்பன் வாங்கி கொண்டு மற்ற இருவருக்கும் கூலியை பிரித்து தராமல் குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார். நேற்று மாலை தருமன் ,சங்கர் இருவரும் மாரியப்பனிடம் வேலை செய்தகூலி பணத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர்.

    ஆனால் மாரியப்பன் பணத்தை தராததால் ஆத்திரமடைந்த இருவரும் மாரியப்பணை சராமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த மாரியப்பனை அவரது மனைவி தேவி பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தருமன் ,சங்கர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாணவிகளிடம் விசாரித்தும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
    • செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    தருமபுரி,   

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பொது குறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அரூர் அரசு கல்லூரியில் முதலமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 23ந்தேதி அன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் கல்லூரி முடிந்து மாலை வீடு திரும்பவில்லை.

    அவரை உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீடுகளிலும் தேடியும் அவர் எங்கே போனார் என்று தகவலும் கிடைக்கவில்லை. அவருடன் படிக்கும் மாணவிகளிடம் விசா ரித்தும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாணவி மாயமாகியிருந்தார்.

    இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    அதே போன்று தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள குட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மர வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (வயது29) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 24ந்தேதி சுரேஷ் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று விட்டார். மாலை வீட்டுக்கு வந்த பார்த்த போது சந்தியாவை காணவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது,

    அவரை உறவினர்கள் வீடுகள் மற்றும் பல இடங்களில் தேடியும் அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை. இது குறித்து சந்தியாவின் தாய் ஜெயசீலா அளித்த புகாரின் பேரில் இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர். 

    • பேராசிரியரும், பேச்சாளருமான பர்வீன் சுல்தான ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
    • 15 மாவட்டத்திற்குள் வருவதற்கு நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரியில் தனியார் கல்லூரி கலை அரங்கில் தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் கல்வியாளர்கள் சங்கம் இணைந்து ஆசிரியர்களுடன் அன்பின் நம்மில் ஒருவர் என்னும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற தலைப்பில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றினார். முன்னதாக பல்வேறு தலைப்புகளில் தொடக்க கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன், பள்ளி கல்வி துறை இயக்குனர் அறிவொளி, பேராசிரியரும், பேச்சாளருமான பர்வீன் சுல்தான ஆகியோர் உரைநிகழ்த்தினர். சிறப்புரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில்;-

    தமிழகம் முழுவதும் பள்ளி கல்வி துறை சார்பில் அரசு பள்ளிகளில்கள ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதற்கெல்லாம் ரோல் மாடல் நமது தலைமை ஆசிரியரான தமிழக முதல்வர் தான். ஆசிரிய பெருமக்கள் இரவு பகல் பாராமல் திட்டமிட்டு உழைத்து வருவதாகவும், ஆனால் கல்வியாண்டு இறுதியில் அந்த பள்ளியில் எவ்வளவு தேர்ச்சி விகிதம் பெற்றது என்பது நமக்கான அளவுகோலாக இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் அங்கீகாரம் பெறவேண்டுமானல் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில் உள்ள தருமபுரி மாவட்டம் தேர்ச்சி சதவிகிதம் மாநில அளவில் 15 மாவட்டத்திற்குள் வருவதற்கு நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழக முதல்வர் பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தி உள்ளார்கள். மேலும் பேசிய அவர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு வெறும் கல்வியை மட்டும் போதிக்காமல் நாட்டு நடப்பு பற்றியும் சொல்லி தர வேண்டும். கல்வியில் பின்தங்கிய என்ற வார்த்தையே வரக்கூடாது என நினைப்பவர் நமது முதலமைச்சர் என்றும் வளர்ச்சி பெற்ற மாவட்டங்களாக உருவாக்குவதே நமது லட்சியம் என நினைப்பவர் அவர், அதற்கு உதாரணம் தாய்லாந்தின் பிரசித்தி பெற்ற பல்கலை கழகத்தில் இந்தியாவை சார்ந்த 3 மாணவிகள் உயர்கல்வி மேற்படிப்பிற்காக தேர்ந்தெடுக்கபட்ட நிலையில் அதில் தமிழகத்தை சேர்ந்த 2 அரசு பள்ளி மாணவிகள் தேர்தெடுக்கபட்டுள்ளனர் என்பதும், அதில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவி என்பது மிகவும் பெருமைக்குரியது. இதற்கு முழு காரணம் ஆசிரியர்கள் தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி மற்றும் இருபால் ஆசிரியர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

    • கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.
    • இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தை யொட்டியுள்ள கரடு பகுதியில் வித்தியாசமான உறுமல் சத்தம் வந்து கொண்டிருக்கவே சத்தம் வந்த இடத்திற்கு கிராம மக்கள் சென்று பார்த்துள்ளனர்.

    அங்கு சிறுத்தை ஒன்றின் கழுத்தில் இரும்பு கம்பி இறுக்கிய நிலையில் உயிருக்கு போரடியபடி உறுமிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்,

    இதனை அடுத்து பாலக்கோடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வன விலங்குகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துபட்டது,

    சிறுத்தை மயங்கியதும் கழுத்தை இறுக்கியிருந்த இரும்பு கம்பி அகற்றபட்டு காயங்களுக்கு மருந்துகள் தடவி விட்ட பின்னர் கூண்டு ஒன்றில் சிறுத்தையை அடைத்து இரவோடு இரவாக ஒகேனக்கல் சின்னாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    இறைச்சிக்காக மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் வைத்த இரும்பு கம்பி வலையில் எதிர்பாராத விதமாக சிறுத்தை சிக்கியிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

    கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.

    வன விலங்குகளை வேட்டையாட இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • எஸ்.பி அதிரடி நடவடிக்கை

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக வந்த ரகசிய தகவலை அடைத்து மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், உத்தரவின் பேரில் தருமபுரி, அரூர், பென்னா கரம், பாலக்கோடு, உள்ளிட்ட காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.

    அப்போது தருமபுரி சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் 5 கடைகளிலும் அரூர் சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் 9 கடைகளிலும் பென்னாகரம் சரக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 கடைகளிலும் பாலகோடு சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 5 கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது இதனையடுத்து அவைகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்டத்தில் குட்கா ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக ஒரே நாளில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • சிக்னல் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • லாரி ஒன்று தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலை பிரிவு ரோட்டில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

    பாலக்கோடு நகரில் இருந்து ராயக்கோட்டை, ஓசூர், பெங்களூர் மற்றும் காரிமங்கலம், காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்டவை இரவு பகலாக இயக்கி வருகிறது.

    நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கனரக வாகனங்கள் மற்றும் ஒரு சில வாகனங்கள் புறவழிச்சாலையை பயன்ப டுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு ஓசூர் பகுதிக்கு செல்ல கனரக லாரி ஒன்று புறவழிச்சாலை பிரிவில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இப்பகுதியில் உயர்மின் கோபுர மின்விளக்கு, எச்சரிக்கை சிக்கல் இல்லாததால் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

    எனவே மாவட்டம் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் உயர்மின் கோபுர மின்விளக்கு மற்றும் எச்சரிக்கை சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 600 ரூபாய்க்கு விற்ற சன்னமல்லி இன்று கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • சாமந்திப்பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் மாரண்ட ஹள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் விவசாயிகள் சாமந்தி பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

    விவசாயிகள் அறுவடை செய்த பூக்களை தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்படும் பூ சந்தையில் விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில், கோவை, திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, சேலம், தருமபுரி, வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு மட்டு மல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் தருமபுரி சந்தைக்கு வந்து மொத்தமாகவும், சில்லறை யாகவும் சாமந்திப் பூக்களை கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை அதிகரிப்பால் கிலோ 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    பண்டிகை காலங்களில் வழக்கமாக பூக்கள் விலை உயரும். இது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. சாதாரண நாட்களை விட பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் விலை விண்ணைத்தொடும் அளவிற்கு இருக்கும். இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பண்டிகை போன்ற காலங்களை எதிர்ப்பார்த்து காத்து கொண்டி ருப்பார்கள்.

    அந்த வகையில் இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தருமபுரி பூக்கள் சந்தையில் பூக்களின் விலை இன்று அதிகரித்துள்ளது. 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ இன்று கிலோ 80 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று வரை ஒரு கிலோ சன்னமல்லி 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல் குண்டுமல்லி 800 ரூபாய்க்கு நேற்று விற்பனையான நிலையில் இன்று 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கனகாம்பரம் நேற்று 800 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில் இன்று 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போல் சம்பங்கி, ரோஸ், அரளி, செண்டுமல்லி ஆகிய பூக்களின் விலையும் நேற்றை விட இன்று விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ×