search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • போடியில் பெய்த கனமழைக்கு மூதாட்டியின் வீடு உள்பட 2 வீடுகள் இடிந்து தரைமட்டமானது.
    • பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சிலமலை நடுத்தெரு பகுதியில் சரஸ்வதி(50) என்பவர் தனியாக வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் கூலிவேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார்.

    இவரது வீடு ஏற்கனவே பலம் இழந்து காணப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து தரைமட்டமானது. நல்வாய்ப்பாக சரஸ்வதிக்கு எந்த காயமும் ஏற்படடவில்ைல. இருந்தபோதும் வீட்டில் இருந்த பொருட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்தது.

    இதேபோல் போடி யை சேர்ந்த செல்வராஜ் தனது மனைவி செல்வி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீடு கனமழைக்கு இடிந்து விழுந்தது. இதில் அவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கடந்த 5.5.2023-ம் தேதி சுப்பிரமணியை குறிஞ்சிநகரில் வைத்து கடுமையாக தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.
    • சில நாட்கள் கழித்து தான் இனிமேல் சத்யாவுடன் பழக மாட்டேன் என்றும், தனது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப தருமாறு கேட்டார்.

    தேனி:

    மதுரை சம்மட்டிபுரம் ராஜ்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ரவி மகன் சுப்பிரமணி(30). தந்தை இறந்துவிட்ட நிலையில் தனது தாய் நாகஜோதியுடன் வசித்து வந்தார். சுப்பிரமணி தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மகளிர் சுயஉதவிக்குழுவில் பணிபுரிந்து வந்தார்.

    கன்னிசேர்வை பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்றுவந்தார். மகளிர்சுய உதவிக்குழு பெண்களுக்கு வழங்கப்படும் கடனுதவியை வசூல் செய்து நிறுவனத்தில் கட்டி வந்தார். அப்போது தேனி அல்லிநகரம் குறிஞ்சிநகரை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி சத்யா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். மேலும் கடந்த 5.5.2023-ம் தேதி சுப்பிரமணியை குறிஞ்சிநகரில் வைத்து கடுமையாக தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.

    இதனால் அவமானம் தாங்காமல் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே இருந்தார். சில நாட்கள் கழித்து தான் இனிமேல் சத்யாவுடன் பழக மாட்டேன் என்றும், தனது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் தர மறுத்து அன்னஞ்சி பைபாஸ் பகுதியில் கடுமையாக தாக்கி சென்றுவிட்டனர்.

    பலத்த காயமடைந்த சுப்பிரமணி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு வீட்டிற்கு சென்றபோது மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது மகன் அடித்து கொலை செய்யப்பட்டதாக அவரது தாய் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு தேனி அல்லிநகரம் போலீசுக்கு மாற்றப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சுப்பிரமணியின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டதும் உறுதியானது.

    இதனையடுத்து 6 மாதத்திற்கு பின்பு கள்ளக்காதலி சத்யா மற்றும் அவரது கணவர் ராமமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • தேனி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 134.90 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குரங்கணி, கொட்டக்குடி, டாப் ஸ்டேசன் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் போடி அருகே உள்ள அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பெரியகுளம், தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், வடுகபட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கள்ளிப்பட்டி, கெங்குவார்பட்டி, மஞ்சளாறு அணை, தேனி, லெட்சுமிபுரம், வீரபாண்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    இதனால் கும்பக்கரை அருவியில் இன்று 21-வது நாளாக பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுருளி அருவியிலும் தண்ணீர் அதிக அளவு கொட்டி வருவதால் அங்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. போடி அருகே உள்ள ராஜவாய்க்கால் மதகுகள் அடைக்கப்பட்டு தண்ணீர் முழுவதும் வைகை அணைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் கடந்த 10-ந் தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட பாசனத்துக்காக 2000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பூர்வீக பாசனத்துக்காக மேலும் கூடுதலாக 4000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டம் வரை வைகை ஆற்று படுகையில் உள்ள உறைகிணறுகளை நிரப்பும் என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று முதல் வருகிற 29-ந் தேதி வரை 7 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 17410 கன அடி தண்ணீரும், சிவகங்கை மாவட்டத்துக்கு 7165 கன அடி தண்ணீரும், மதுரை மாவட்டத்துக்கு 3970 கன அடி தண்ணீரும் என 3 மாவட்டத்துக்கும் சேர்த்து 28545 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் டி.வாடிப்பட்டி, தருமத்துப்பட்டி ராமநாயக்கன்பட்டி, செக்காபட்டி, எஸ்.மேட்டுப்பட்டி, அணைப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், துவரிமான், மதுரை, விரகனூர், சிலைமான், திருப்புவனம், எமனேஸ்வரம், பரமக்குடி, பார்த்தீபனூர் வழியாக ராமநாதபுரம் பாசன பகுதிக்கு செல்கிறது.

    மேலும் தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள முட்செடிகள், அமலைச் செடிகள் ஆகியவையும் அடித்துச் செல்லப்பட்டு பூர்வீக பாசனத்துக்காக தொடர்ந்து 3 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 67.65 அடியாக உள்ளது. நீர்வரத்து 2477 கன அடி. நீர் திறப்பு 6099 கன அடி. நீர் இருப்பு 5238 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 134.90 அடியாக உள்ளது. நேற்று 133.75 அடியாக இருந்த நிலையில் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று 1284 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4118 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5843 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 435.32 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.93 என முழு கொள்ளளவில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 331 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளதால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

    பெரியாறு 30.4, தேக்கடி 38.4, கூடலூர் 11.4, உத்தமபாளையம் 9.2, சண்முகாநதி அணை 18.6, போடி 47.8, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 40, பெரியகுளம் 29, வீரபாண்டி 46, அரண்மனைப்புதூர் 27, ஆண்டிபட்டி 17.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    • அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் சட்ட விரோதச் செயல்கள் அரங்கேறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூா் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெறும் சமூக விரோதச் செயல்களை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்த வேண்டுமென நோயாளி களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனா்.

    சின்னமனூர் அருகே பூலாநந்தபுரம், சீலைய ம்பட்டி, அப்பிப்பட்டி, வேப்பம்பட்டி, காமாட்சி புரம், எரசை, மாா்க்கை யன்கோட்டை. குச்சனூர், அழகாபுரி. உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வருகின்றனர்.

    இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் சட்ட விரோதச் செயல்கள் அரங்கேறு கின்றன.

    மது அருந்துதல், கஞ்சா விற்பனை, பாலியல் தொழில் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதால் இரவு நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

    இதனால் உடனடியாக இந்த அரசு ஆஸ்பத்திரி நுழைவாயில் பகுதி 2 கேட்டிற்கும் காவலாளிகளை நியமிக்க வேண்டும். மேலும் சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சின்னஓவுலாபுரம் (வெள்ளக்கரடு) ஊராட்சி களில் நெடுஞ்சாலை யோரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.
    • இந்த மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும், மாவட்ட நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதிமக்கள் தெரிவித்தனா்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூா் ஒன்றியத்தைச் சோ்ந்த எரசக்கநாயக்கனூா், சின்னஓவுலாபுரம் (வெள்ளக்கரடு) ஊராட்சி களில் நெடுஞ்சாலை யோரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைக ளில் மது அருந்திவிட்டு வரும் குடிமகன்களால் அந்த வழியாகச் செல்லும் பெண்கள், குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாகி ன்றனா்.

    இது தவிர தினமும் மது போதையில் வாகனங்களை இயக்குவோரால் விபத்து க்கள் ஏற்படுவதுடன், பல இடங்களில் தகராறிலும் ஈடுபடுகின்றனா்.

    இதனால் அந்தப் பகுதி பொதுமக்களும் தாங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதாக தெரிவிக்கி ன்றனா்.

    இந்த மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி யும், மாவட்ட நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவா்கள் தெரிவித்தனா். எனவே மாவட்ட நிா்வாகம் இந்த மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கும்பக்கரை அருவில் கடந்த 20 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புவரை வடகிழக்கு பருவமழை வெளுத்துவாங்கியது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து நின்றுவிட்டது. தற்போது நேற்று மீண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    போடி, உத்தமபாளையம், பெரியகுளம், தேவதானப்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவில் கடந்த 20 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக அதன் முழுகொள்ளளவிலேயே உள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் மஞ்சளாறு அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    முல்லைபெரியாறு அணையின்நீர்மட்டம் 133.75 அடியாக உள்ளது. வரத்து 1284 கனஅடி, திறப்பு 1000 கனஅடி, இருப்பு 5575 மி.கனஅடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 67.82 அடி, வரத்து 1690 கனஅடி, திறப்பு 2099 கனஅடி, இருப்பு 5208 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 55 அடி, வரத்து மற்றும் திறப்பு 100 கனஅடி, சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.60 அடி, வரத்து மற்றும் திறப்பு 142 கனஅடி.

    பெரியாறு 16.2, தேக்கடி 13.6, கூடலூர் 8.6, உத்தமபாளையம் 18.4, சண்முகாநதி அணை 7..8, போடி 52.4, வைகை அணை 12, மஞ்சளாறு 46, சோத்துப்பாறை 47, பெரியகுளம் 67, வீரபாண்டி 27.6, அரண்மனைப்புதூர் 12.6, ஆண்டிபட்டி 6.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • மீனாட்சிபுரம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் செவ்வந்தி மற்றும் வீரியரக வெள்ளை நிற ஒட்டுசெவ்வந்தி பூக்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.
    • செடியிலேயே அழுகி வருவதால் வேதனையடைந்த விவசாயிகள் டிராக்டர் மூலம் உழுது அழித்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் செவ்வந்தி மற்றும் வீரியரக வெள்ளை நிற ஒட்டுசெவ்வந்தி பூக்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையின்போது ஒட்டுசெவ்வந்தி ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. 2-ம் ரக செவ்வந்தி பூக்கள் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. இந்தநிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.

    இதனால் பெரும்பாலான செவ்வந்தி பூக்கள் செடியிலேயே அழுகி வீணானது. மேலும் விலையும் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். முதல்ரக செவ்வந்தி ரூ.70 முதல் ரூ.80 வரையும், 2-ம் ரகம் ரூ.40 முதல் ரூ.50 வரை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இந்த விலை பறிப்புகூலிக்குகூட பத்தவில்லை. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் செடிகளை டிராக்டர் மூலம் உழுது அழித்தனர்.

    • தொழிலாளி ஓட்டிவந்த பைக் மீது மற்றொரு பைக் பயங்கரமாக மோதியது.
    • இதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள குமணன்தொழு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் ரகு(34) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 13-ந்தேதி பொன்னம்படுகை பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்ேபாது காமன்கல்லூரை சேர்ந்த அய்யனார் என்பவர் ஓட்டிவந்த பைக் இவர் மீது பயங்கரமாக மோதியது.

    ரத்தகாயம் எதுவும் இல்லாத நிலையில் ரகு வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

    இதுகுறித்து ரகுவின்தாய் முருகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் மயிலாடும்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூடலூரில் 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • விஷம பிரசாரம் செய்யும் தீவிரவாத அமைப்புகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தடை செய்ய வேண்டும்.

    கூடலூர்:

    கூடலூரில் 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியதாவது,

    முல்லைபெரியாறு அணை விசயத்தில் கேரளாவில் சில அமைப்புகள் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். 5 மாவட்டங்களின் நீர்ஆதாரமாக விளங்கும் முல்லைபெரியாறு அணையை இடித்தே தீரவேண்டும் என்றும், அந்த இடத்தில் புதிய அணை உருவாக்க வேண்டும் என முல்லைபெரியாறு சமரச சமிதி என்ற அமைப்பு கேரளாவில் இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு தீவிரவாத அமைப்பு போல் செயல்பட்டு வருகிறது.

    கேரள அரசு, வனத்துறை, நீர்வளத்துறை, தனியார் அமைப்புகள் ஆகியவை அணையின் பலம் குறித்து பொய்யான செய்திகளை கேரள மக்களிடையே தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. அணையின் உறுதி தன்மை குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

    அதன்பின்னரும் அணையின் உறுதிதன்மை குறித்து சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர். சேவ்கேரளா பிரிகேட் முல்லைபெரியாறு சமரசசமிதி ஆகிய அமைப்புகள் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்து வருகிறது. இந்த அமைப்புகள் மீது தமிழக போலீசார் வழக்குபதிவு செய்யவேண்டும். இதுபோன்ற அமைப்புகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பள்ளியில் வகுப்பறை மேற்கூரையில் உள்ள சிலாப்புகள் உடைந்து கம்பிகள் நீட்டிக்கொண்டு உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
    • பள்ளியின் மைதானத்திற்கு நடுவில் செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பா லான குழந்தைகளின் பெற்றோர் காலையில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து பின்பு மாலையில் தாங்களே நேரடியாக வந்து அழைத்துச் செல்கின்றனர். பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் கூறியதாவது,

    பள்ளியில் வகுப்பறை மேற்கூரையில் உள்ள சிலாப்புகள் உடைந்து கம்பிகள் நீட்டிக்கொண்டு உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானா லும் இடிந்து விழுமோ என்ற அச்சம் உள்ளது. மேலும் பள்ளியில் உயர் மின் அழுத்த கம்பிகள் மைதானத்திற்கு நடுவே செல்கின்றன. இந்த கம்பிகள் அறுந்து கீேழ விழுந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

    குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே பள்ளி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும். இதுகுறித்து கடந்த 3 மாதத்திற்கு முன்பே மின்சார வாரியத்திற்கு மனு எழுதி பள்ளியின் மைதானத்திற்கு நடுவில் செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு க்கொண்டோம் ஆனால் இதுவரை மின்சார வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு உரிய தீர்வு காணவேண்டும் என்றனர்.

    • போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
    • போடி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கான காய்ச்சல் நோயாளிகள் சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை. சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.

    போடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகள் மட்டுமின்றி கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக எல்லை பகுதிகளான பூப்பாறை, ராஜாக்காடு, நெடுங் கண்டம், கட்ட ப்பனை போன்ற பகுதிகளிலி ருந்தும் ஏராளமான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    தற்போது போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தினமும் ஆயிரக்கணக்கானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    போடி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கான காய்ச்சல் நோயாளிகள் சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் போடி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணி யாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பதிவு சீட்டு வாங்கும் இடத்திலும் சிகிச்சை பெறுவதிலும் ஊசி போடும் இடத்திலும் மாத்திரை பெறும் இடத்திலும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூடலூரில் இருந்து 4 கி.மீ. தூரம் உள்ள ஏக லூத்துவரை யிலான சாலைகள் மழைக்கால ங்களில் அடிக்கடி காட்டா ற்று வெள்ளங்களினால் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது.
    • இருசக்கர வாகனங்களில் விளை நிலங்களுக்குச் சென்று வரும் விவசாயிகள் கூர்மையான ஜல்லிக் கற்க ளால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி இடையிலேயே நின்று விடுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரப் பகுதிகளான கல் உடை ச்சான் பாறை, ஏகலூத்து , குறுக்கு வழி சாலை, புதுக்குளம் ஆகிய பகுதிக ளில் உள்ள மானாவாரி காடுகளில் விவசாயிகள் நிலக்கடலை, எள், தட்டைப் பயறு, மொச்சை, அவரை உள்ளிட்ட பயிர்களையும், தோட்ட விவசாயிகள் வாழை,தென்னை, திராட்சை, முட்டைக்கோஸ், வெங்காயம் உள்ளிட்ட பணப் பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்ற னர் . மேலும் மா, புளி, இலவம் மர தோப்பு களும் அதிக அளவில் உள்ளன.

    கூடலூரில் இருந்து 4 கி.மீ. தூரம் உள்ள ஏக லூத்துவரை யிலான சாலைகள் மழைக்கால ங்களில் அடிக்கடி காட்டா ற்று வெள்ளங்களினால் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தி ருந்தனர்.

    இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

    ஆனால் கடந்த 3 மாதங்களாக இந்தச் சாலையில் மேற்கொண்ட பணிகள் எதுவும் செய்ய ப்படாமல் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் விளை நிலங்களுக்குச் சென்று வரும் விவசாயிகள் கூர்மையான ஜல்லிக் கற்க ளால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி இடையிலேயே நின்று விடுகிறது.

    இதனால் விளைப் பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×