search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • மன்னார்குடியில் இருந்து கம்பங்குடி ஆர்ச் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
    • லாரியின் மீது எதிர்பாரா தவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கம்பங்குடி ஆர்ச் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 30 ) கொத்தனார்.

    இவருக்கு திருமணமாகி சுதா ரஞ்சனி என்ற மனைவியும் மகதிஷ் ( 7) என்ற மகனும் , இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கார்த்திகேயன் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு மன்னார்குடியில் இருந்து கம்பங்குடி ஆர்ச் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது திருத்துறைப்பூண்டி சாலையில் செம்மொழி நகர் எனும் இடத்தில் சென்ற போது முன்னாள் சென்ற லாரியின் மீது எதிர்பாரா தவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்தி கேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெ க்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இள ங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் லாரி டிரைவர் திருப்பூர் மாவட்டம் கணப திபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜை (33) கைது செய்தனர்.

    • பேரணியானது அரசு பள்ளியிலிருந்து புறப்பட்டு பழைய பஸ் நிலையம் வரை சென்றது.
    • விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை வட்டார கல்வி அலுவலகம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி முத்துப்பேட்டையில் நடைபெற்றது. பேரணியை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் தலைமையில் தொடங்கிய பேரணி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து புறப்பட்டு பழைய பஸ் நிலையம் வரை சென்று திரும்பியது.

    பேரணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், மாவட்ட செயலாளர் பக்ருதீன் அஹமது, பேரூராட்சி உறுப்பினர்கள் ஜகபர் அலீ, மெகருன்னிசா மற்றும் பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்கள், மேலா ண்மைக்குழு தலைவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள், கோவிலூர் பெரியநாயகி பள்ளி மாணவிகள், சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர். முடிவில் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • சர்வதேச சதுரங்க தினம் குறித்து ஆசிரியர் சுந்தர் பேசினார்.
    • மாணவர்களுக்கு சதுரங்கம் விளையாடும் முறைகள் கற்று கொடுக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சர்வதேச நிலவு தினம் மற்றும் சதுரங்க தின கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்கரபாணி அனை வரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு நிலவு தினம் குறித்து பேசினார்.

    தொடர்ந்து, சர்வதேச சதுரங்க தினம் குறித்து ஆசிரியர் சுந்தர் பேசினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு சதுரங்க போட்டியின் விதிமுறைகள், விளையாடும் முறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாணவன் ஜீவன் நன்றி கூறினார்.

    • 668 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப படிவத்தை வீடுகளுக்கே சென்று அமைச்சர் வழங்கினார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த வல்ளூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 17 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான இலவச வீட்டுமனை பட்டா, 56 நரிக்குறவ பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 128 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 215 பயனாளிகளுக்கு இணைய வழிபட்டா, 200 பயனாளிகளுக்கு மாதந்திர உதவித்தொகை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 52 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் என மொத்தம் 668 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 88 லட்சத்து 41 ஆயிரத்து 251 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.

    முன்னதாக, வள்ளூர் ஊராட்சியில் புதிய பகுதி நேர அங்காடி கட்டிடத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்து, கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப படிவத்தை அப்பகுதியிலுள்ள வீடு களுக்கே சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் சமீப காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
    • சாலை மற்றும் தெருக்களில் குப்பைகள் அல்லப்படாமல் ஆங்காங்கே சிதறி கிடந்தது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் சமீப காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இதனால் தினமும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதேபோல், நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் அன்றாடம் நடைபெறும் தூய்மை பணி, தெருவிளக்கு பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்ப ட்டுள்ளது.

    இதனால் கவுன்சி லர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் அன்றாட பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பேரூராட்சியில் நேற்று மின்சார பொருட்கள், பிளம்பிங் பொருட்கள் டெண்டர் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.

    இதனால் விரக்தி அடைந்த கவுன்சிலர்கள் சிலர் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் கோபமடைந்த பணியாளர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். மேலும், இதனை கண்டித்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன்படி, காலை 6 மணிக்கு வரவேண்டிய 61 துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வரவில்லை.

    இதனால் அதிகாலை திறக்க வேண்டிய பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டிருந்தது. மேலும், குப்பைகள் சேகரிக்க பயன்படுத்தும் வாகனங்களும், அங்கேயே நிறுத்தப்பட்டி ருந்தது.

    சாலை மற்றும் தெருக்களில் குப்பைகள் அல்லப்படாமல் ஆங்காங்கே சிதறி கிடந்தது.

    இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

    திருவாரூர்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

    திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே சந்திப்பு நிலையம் முகப்பு வாயிலில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக கூறி தமிழக அரசை கண்டித்து அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேசும்போது கூறியதாவது, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது போன்ற பொய்யா வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது. மேலும் பொருட்களின் விலைவாசி யையும் உயர்ந்து விட்டது.

    தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

    கடைமடை வரை முறையாக நீர் பாயாததால் குறுவை சாகுபடி பொய்த்துள்ளது.

    பயிர்கள் கருகி வருகின்றன.

    குறுவை பொய்த்து விட்ட நிலையில் சம்பா சாகுபடியாவது நடை பெறுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர் என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர்கள் சிவா.ராஜமாணிக்கம், டாக்டர் கோபால் உள்பட மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர கிளைக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமான பெண்கள் பொதுமக்கள் ஆர்ப்பா ட்டத்தில் பங்கேற்றனர்.

    • பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், கொய்யா தோப்பு பகுதி மக்கள் முகமது நாசர் தலைமையில் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார் ஆகியோர் போராட்டக்கா ரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டக்காரர்கள் பேரூராட்சியில் இருந்த அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார்.

    இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள்களைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கஜா புயலுக்கு பின் லட்சக்கணக்கான மரங்களை அடியோடு சாய்த்தன.
    • சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் மரங்கள், செடிகொடிகள் நிரைந்து காணப்பட்டது.

    ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலுக்கு பின், முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் லட்சக்கணக்கான மரங்களை அடியோடு சாய்த்தன.

    இதனை மீட்டெடுக்கும் வகையில், முத்துப்பேட்டை அடுத்த மேலத்தொண்டியக்காடு கிராமத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 75 மரக்கன்றுகள் அப்பகுதியில் நடப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள், கிராம நிர்வாகிகள் மற்றும் மன்ற நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் சோமசுந்தரத்துக்கு வாய் பகுதியில் சிறிய கட்டி ஏற்பட்டது.
    • தஞ்சாவூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சோமசுந்தரம் சிகிச்சைக்காக சென்றார்.

    மன்னார்குடி:

    தஞ்சாவூர் அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 78). இவரது மனைவி தாயம்மாள் (77). இவர்களது மகன் மதுரையில் வசித்து வருகிறார். சோமசுந்தரம் தஞ்சாவூர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் தம்பதி இருவருக்கும் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

    இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் சோமசுந்தரத்துக்கு வாய் பகுதியில் சிறிய கட்டி ஏற்பட்டது. இதற்காக தஞ்சாவூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சோமசுந்தரம் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு வாய்ப்பகுதியில் இருந்த கட்டியை அகற்றிய டாக்டர்கள் அதனை புற்றுநோய் தொடர்பான பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .

    இதனால் மனம் உடைந்த சோமசுந்தரம், தனது மனைவி தாயம்மாளை அழைத்துக் கொண்டு, வாடகை காரில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஈசனகுடி கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

    வரும் வழியில் பெட்டிக்கடை ஒன்றில் நிறுத்தி குளிர்பானம் வாங்கி அதில் விஷத்தை கலந்து இருவரும் குடித்துள்ளனர். பின்னர் அந்த காரில் ஈசனகுடி உறவினர் வீட்டுக்கு வந்த சோமசுந்தரம், வாடகை காரை திருப்பி அனுப்பினார்.

    பின்னர் உறவினர்களிடம் தானும், தனது மனைவியும் விஷம் குடித்திருக்கும் விபரத்தை தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து உறவினர்கள் அவர்களை சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சோமசுந்தரத்தை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் சோமசுந்தரமும், தாயம்மாளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவாரூர்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது.
    • விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

    திருவாரூர்;

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. கூட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை,

    கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து வியூகம் வகுத்து வருகின்றன.
    • ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து வியூகம் வகுத்து வருகின்றன. அந்த வகையில், பீகாரில் முதல் கூட்டமும், பெங்களூரில் 2-வது கூட்டமும் நடத்தப்பட்டது.அமலாக்கதுறையை பா.ஜனதா அரசு சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகிறது. நெருக்கடி நிலையில் இருந்து தற்காத்து கொள்ள அமலாக்கத்துறையை கொண்டு எதிர்க்கட்சி தலைவர்களை, நிர்வாகி களை கைது செய்வது, அச்சுறுத்துவது போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கை யில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    • அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு பயன்படக்கூடியது அறிவியல் மன்றம் ஆகும்.
    • அமிலத்தன்மை நீக்கும் சோதனையை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித மற்றும் அறிவியல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, ஆடின் மெடோனா, உமா மகேஸ்வ ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாணவி மோனிகா அனை வரையும் வரவேற்றார்.

    மன்னார்குடி பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத்துறை உதவி பேராசிரியர் விமலா கலந்து கொண்டு பேசுகையில்:-

    கணித மன்றத்தின் மூலம் கணித புதிர்கள் மற்றும் கணித விளையாட்டுகள் வேதகால கணிதம் மற்றும் மின்னல் வேக கணிதம் அன்றாட வாழ்வில் கணிதத்தின் பயன்பாடுகள், போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஏதுவாக எளிய முறையில் கணித பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவை கணித மன்றத்தின் செயல்பாடுகள் ஆகும். மாணவரின் முழுமையான வளர்ச்சிக்கு பயன்படும் அறிவியல் சார்ந்த பல செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு பயன்பட க்கூடியது அறிவியல் மன்றம் ஆகும் என்றார்.

    பின்னர், திரவ அடர்த்தி வேறுபாடு சோதனையை சந்தோஷ், அமிலத்தன்மை நீக்கும் சோதனையை புஷ்பா ஆகியோர் செய்து காண்பித்தனர். முடிவில் மாணவி அகத்தியர் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவி ஷாலினி தொகுத்து வழங்கினார். இதில் ஆசிரியர்கள் பாஸ்கரன், சக்கரபாணி, நடராஜன், முகமது ரஃபீக், பாலசுப்பி ரமணியன் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம் மற்றும் விஜயகுமார் செய்திருந்தனர்.

    ×