search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • நேற்று காலை முதலே புதுவையில் வானம் மற்றும் மந்தாரமுமாக இருண்டு இருந்தது.
    • தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் வலுபெற்று தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது.

    இதனால் தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாகவும் புதுவை- காரைக்கால் பகுதியில் வருகிற 19-ந் தேதி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 2 நாட்கள் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக புதுவை, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை முதலே புதுவையில் வானம் மப்பும் மந்தாரமாக இருண்டு இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. சுமார் 6 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்தது.

    இரவு 8 மணிக்கு கன மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் மழை கொட்டியது. இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்து பெய்தது. இதனால் புதுச்சேரியின் முக்கிய சாலைகளான புஸ்சி வீதி, காந்தி வீதி, பாரதி வீதி, சின்னசுப்புராய பிள்ளை வீதி உள்ளிட்ட பல தெருக்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மழையால் வழக்கமாக பாதிக்கப்படும் ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், பாவாணன் நகர், நடேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. ஒரு சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    புதுச்சேரியில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    இன்றும் (செவ்வாய்கிழமை) காலை முதல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மேலும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • கிராம மக்கள் அறிவிப்பு
    • நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து சட்டவிதிமுறைப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலுக்கு சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றங் கரையில் தீர்த்தவாரி மண்டபம் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆற்று திருவிழாவின் போது, மூலநாதர் சுவாமி இந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பது வழக்கம்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு ஜுலை மாதம் விழுப்புரம்- –நாகப்பட்டினம் புறவழிச்சாலை பணிக்காக தீர்த்தவாரி மண்டபத்தை, நெடுஞ்சாலை துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர்.

    தீர்த்தவாரி மண்டபம் இருந்த இந்த இடம் சோரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள செடல் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்றும், இழப்பீடு தொகை தங்களுக்கு தான் சேர வேண்டும் என அந்த கிராம மக்கள் உரிமை கோரினர்.

    மேலும், அந்த இடத்தில் புதியதாக தீர்த்தவாரி மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்கான சொந்த இடத்தை கணினி மயமாக்கும்போது குருவிநத்தம் என குறிப்பிட்டிருந்தது நீக்கப்பட்டது.

    அந்த ஆவணத்தில் குருவிநத்தம் கிராமத்தின் பெயரையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதேபோல், பாகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மூலநாதர் கோவிலின் பயன்பாட்டில் இருந்து வந்த தீர்த்தவாரி மண்டபம் சட்ட விரோதமாக, சோரியாங்குப்பம் கோவிலுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில் புதுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வல்லவன் தலைமையில் பாகூர், சோரியாங்குப்பம், குருவிநத்தம் ஆகிய 3 கிராம முக்கியஸ்தர்களுடன் கடந்த மாதம் 30-ந் தேதி பேச்சு வார்த்தை நடந்தது.

    பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், பாகூர் தாசில்தார், போலீஸ் சூப்பிரண்டுகள் வீரவல்லபன், பக்தவச்சலம் மற்றும் அதிகாரிகள், 3 கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதில் தீர்த்தவாரி மண்டபம் தொடர்பாக 3 கிராமத்தினரும் உரிமை கோரியதால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.

    இதனை தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை ஆணையர் பேசும்போது, இடிக்கப்பட்ட மண்டபத்தை கட்டி கொடுக்கத்தான் இழப்பீடு வழங்கப் பட்டுள்ளது. நிலத்திற்காக இழப்பீடு வழங்கப்பட வில்லை.

    மேலும், மண்டபத்தை கட்டுவது என்பது அரசின் கொள்கை முடிவு. நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து சட்டவிதிமுறைப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

    இதையடுத்து, பாகூர் முக்கியஸ்தர்கள் பேசுகையில், எங்களுக்கு இடிக்கப்பட்ட மண்டபத்தை கட்டி கொடுத்தால் போதும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதனையேற்று உடனே தீர்த்தவாரி மண்டபம் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வல்லவன் உறுதியளித்தனர்.

    அதேபோன்று, குருவிநத்தம், சோரியாங்குப்பம் கிராம முக்கியஸ்தர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உங்களிடம் ஆதாரம் இருப்பதால், ஒரு வாரத்தில் அதனை திருத்தம் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பிறகு, இழப்பீடு தொகையை எப்படி கொடுப்பது என்று பேசி முடிவு செய்யப்படும். என்றார். இதனை இரு கிராமத்தினரும் ஏற்றுக் கொண்டனர்.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, பொங்கல் பண்டிகை வர இருப்பதால் தீர்த்தவாரி மண்டபத்தை உடனடியாக கட்ட வேண்டும். அதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்று பாகூர் கிராமத்தினர். கோரிக்கை மனு அளித்தனர்.

    இதனை தொடர்ந்து  பாகூரில் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அமைச்சர் லட்சுமிநாராயணன், நடிகர் நாசர் பங்கேற்பு
    • ரசின் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்தநாள் கொண்டா டப்பட்டு, நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    தமிழ் நாடகத் தந்தை, தமிழ் நாடக மறுமலர்ச்சியா ளர் என அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாடகத்தை தனது மூச்சாக கொண்டு 63 நாட கங்களை அரங்கேற்றியவர்.

    புதுவையில் மறைவு எஸ்.ஜி.கிட்டப்பா, பி.கே.சண்முகம் சகோத ரர்கள், எம்.ஆர்.ராதா போன்ற முன்னணி நடி கர்களை அறிமுகப்படுத்தி யவர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் தனது இறுதி காலத்தை புதுவையில் கழித்தார்.

    புதுவையில் 1922-ம் ஆண்டு நவம்பர் 13-ம் நாள் சங்கராதாஸ் சுவாமிகள் மறைந்தார். அவரது உடல் கருவடிக்குப்பம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு ள்ளது.

    புதுவை அரசின் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்தநாள் கொண்டா டப்பட்டு, நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

    புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் 101- வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. புதுவை வேதபுரீஸ்வரர் கோவில் அருகில் இருந்து அவரது உருவப் படத்துடன் கலைஞர்களின் ஊர்வலம் நடந்தது

    ஊர்வலத்தில் காளி ஆட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், மானாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் காந்தி வீதி வழியாக கருவடிக்குப்பம் சுடுகாட்டை அடைந்தது. அங்கு உள்ள நினைவு மண்டபத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

    அமைச்சர் லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, நடிகர் சங்க தலைவர் நாசர், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலா ளர் சலீம், முன்னாள்

    எம்.எல்.ஏ. நாரா.கலை நாதன் மேற்றும் சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்த்த நாடக கலைஞர்கள் பங்கேற்றனர்.

    • சத்யாவிற்கும் திருபுவனையை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
    • வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் பத்துக்கண்ணு பகுதியை சேர்ந்தவர் முத்து–கிருஷ்ணன். இவரது மகள் சத்யா (வயது 29) புதுவை காவல்துறையில் காவலராக பணியாற்றி வந்தார்.

    சத்யாவிற்கும் திருபுவனையை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. வினோத் மின்துறையில் பணியாற்றி வருகிறார்.

    கடந்த 1 ½ ஆண்டுகளாக கணவன்-மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் 1½ மாதங்களுக்கு முன்னர் மனைவியை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். சத்யா தனது தாயை துணைக்கு வைத்துக்கொண்டு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    வினோத் அடிக்கடி போன் செய்து சத்யாவிற்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சத்யாவின் தாய் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது வீட்டிற்கு சென்று விட்டார். மாலை மகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சத்யா தூக்கு போட்டு பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார்.

    இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப பிரச்சனையால் பெண் காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுவை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 1 மணி நேரம் போராடி மீட்ட போலீசார்
    • பாலத்தின் இடையே ,தலையை மாட்டிக் கொண்டு கால்கள் கீழே தொங்கியவாறு நாய்குட்டி இருந்தது.

    புதுச்சேரி, நவ.13-

    புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்தில் முழபிலாங்காடு பைபாஸ் சாலை உள்ளது.

    இந்த சாலையில் உள்ள பாலத்தின் இடுக்கு சந்தில் நாய்க்குட்டி ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் ஒலமிட்டபடி இருந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் நாய்குட்டியை மீட்க முயன்றனர்.

    ஆனால், பாலத்தின் இடையே ,தலையை மாட்டிக் கொண்டு கால்கள் கீழே தொங்கியவாறு நாய்குட்டி இருந்தது. இதனால் எத்தனை முயற்சி செய்தும் அவர்களால் நாய்க்குட்டியை மீட்க முடியவில்லை இதனையடுத்து பள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் அப்பகுதியினர் உதவியுடன் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோமன், காவலர் ஜீஜேஷ் ஆகியோர் ஒரு மணி நேரம் போராடி கடும் முயற்சிக்குப் பிறகு சிறு கீறல் கூட இல்லாமல் நாய்க்குட்டியை மீட்டனர்.

    வெளியே வந்தவுடன் மகிழ்ச்சியில் நாய்க்குட்டி துள்ளி குதித்து ஓடியது.

    நாய்க்குட்டிக்காக அதிக அக்கறை எடுத்து மீட்ட பள்ளூர் போலீசாருக்கு புதுவை மற்றும் கேரள மாநிலத்தில் பாராட்டுக்கள் குவிகிறது.

    • அன்பழகன் வலியுறுத்தல்
    • மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படக்கூடிய பணிகளை தொழிலாளர்கள் உயிரிழந்தால் ரூ 1 கோடி நிவார ணம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலாப்பட்டில் ரசாயன தொழிற்சாலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

    இப்போது ஏற்பட்ட பாய்லர் வெடி விபத்தில் 15-க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயம் அடைந்தனர். அதில் சுமார் 5 பேர் 50 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட தொழி லாளர்களையும் மூடி மறைத்து வருகின்றனர்.

    இதில் நெடுஞ்செழியன் என்ற தொழிலாளி 2 தினங்களுக்கு முன்பு நள்ளி ரவில் மரணம் அடைந்தார். இந்த மரணம் இன்று தான் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இந்த மரணத்தை கூட யார் அறி வித்தார் என்று தெரிய வில்லை.

    கடந்த 3 மாதத்திற்கு முன்பு கூட சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதாள சாக்கடை அள்ளும் தொழில் செய்பவர்கள், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படக்கூடிய பணிகளை தொழிலாளர்கள் உயிரிழந்தால் ரூ 1 கோடி நிவார ணம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    எனவே அதன் அடிப்படையில் அந்த இழப்பீட்டுத் தொகையாக புதுவையை சேர்ந்த அந்த நிறுவனம் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும்.

    காயமடைந்தவர்களுக்கு 50 லட்சம் நிவாரணமாக கொடுக்கலாம். அரசு மூடி மறைக்காமல் சட்டத்திற்கு உட்பட்டு நிறுவனத்துடன் பேசி உரிய நிவாரணத் தொகையை வாங்கி கொடுக்க வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் இதில் வெறும் பார்வையாளராக மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகப்படியான இழப்பீட்டு தொகையை பெற்று தர வேண்டும்.

    காலாப்பட்டு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட காவல் ஆய்வாளரிடம் தொழிற்சாலை தீ விபத்து குறித்து புகார் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை சம்மந்தப்பட்ட விபத்துக்கு காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தில் ஒருவர் மீது கூட எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. அந்த நிறுவனம் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    • ஊசுட்டேரி கன்னியகோவில் பின்புறம் உள்ள ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அதில் ஆடு, கோழி வளர்த்து வருகிறார்.
    • ஆடுகள் திருடுபோனது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் வசந்த் நகர் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மகன் சரண்ராஜ் (வயது 28). இவர் ஊசுட்டேரி கன்னியகோவில் பின்புறம் உள்ள ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அதில் ஆடு, கோழி வளர்த்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி யன்று காலை சரண்ராஜ் பட்டிக்கு சென்றார்.

    அப்போது பட்டியில் அடைத்து வைத்திருந்த 100 ஆடுகளில் 25 ஆடுகள் காணாமல் போயிருந்தது. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து சரண்ராஜ் ஆடுகள் திருடுபோனது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு கேக் வெட்டி மையத்தில் உள்ள மன நோயாளிகளுக்கு வழங்கினார்.
    • டாக்டர் இளவழகன் மற்றும் ஆத்திச்சூடி பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன் ஆகியோர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் மணவெளி பகுதியில் அமைந்துள்ள அரிச்சுவடி மனநல மையத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு கேக் வெட்டி மையத்தில் உள்ள மன நோயாளிகளுக்கு வழங்கினார்.

    முன்னதாக விழாவில் பங்கேற்ற சபாநாயகர் ஏம்பலம் செல்வத்துக்கு அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் மற்றும் ஆத்திச்சூடி பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன் ஆகியோர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

    அரிச்சுவடி டிரஸ்டி அரசமாதேவி பழக்கூடை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரிச்சுவடி மனநல மைய ஊழியர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பா.ஜனதா செயலாளர் கலைவாணன், தனுசு, தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீபாவளி பண்டிகைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
    • மோட்டார்சைக்கிளில் அந்த வாலிபர்களை ஏற்றி செல்வதற்குள் போலீசார் படாதபாடுபட்டனர்.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையையொட்டி அண்டை மாநிலமான தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதுவைக்கு வாலிபர்கள் குவிந்தனர்.

    வழக்கமாக வார இறுதிநாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவார்கள். அவர்கள் விடுதிகளில் அறை எடுத்து தங்கி ரெஸ்டோபார்களில் குத்தாட்டம் போடுவது, பார்களில் மது அருந்தி கொண்டாடுவர்.

    இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் அதே வேளையில் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து மது அருந்துவதற்காகவே பல இளைஞர்கள் புதுவைக்கு வந்திருந்தனர்.

    இதனால் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் போதை வாலிபர்களின் அட்டகாசத்தை பார்க்க முடிந்தது. புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே வெளியூர் இளைஞர்களின் கூட்டம் அலைமோதியது.

    மாஸ் ஓட்டல் பின்புறம் உள்ள சாலையில் 2 இளைஞர்கள் உச்சகட்ட போதையில் ரகளையில் ஈடுபட்டனர்.

    சாலையில் சென்ற பொதுமக்களைஅவர்கள் அடித்து விரட்டினர். தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களை பிடித்தனர்.

    ஆனால் அவர்கள் போலீசாருடன் மல்லுக்கட்டினர். மோட்டார்சைக்கிளில் அந்த வாலிபர்களை ஏற்றி செல்வதற்குள் போலீசார் படாதபாடுபட்டனர்.

    ஒருவரை வாகனத்தில் ஏற்றும்போது மற்றொருவர் இறங்குவதும், போலீசாரின் கைகளை கடிப்பதும் என அட்டூழியத்தில் ஈடுபட்டனர். ஒருவழியாக அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    இதேபோல நேற்று மதியம் காமராஜர் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே போதை ஆசாமி ஒருவர் நடுரோட்டில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திச் சென்றார்.

    இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மீண்டும் அந்த போதை ஆசாமி மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல முயன்றார். அவர் செய்த அலப்பறையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். அவர் வாகனத்தை எடுத்துச்சென்ற பிறகுதான் போக்குவரத்து சீரானது.

    இதேபோல நகரின் பல பகுதிகளில் போதையில் ஆங்காங்கே வாலிபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். சாலையோரங்களில் மதுபோதையில் மயங்கி கிடந்தனர்.

    மாநில எல்லை பகுதிகளில் உள்ள மதுபார்களிலும் 2 நாட்களாக கூட்டம் அலைமோதியது. மது அருந்தியவர்கள் எங்கே இருக்கிறோம் என தெரியாமல் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தந்த பகுதி போலீசார் அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.

    • குழந்தைகள் ஆர்வத்துடன் அவருக்கு உணவை ஊட்டினர்.
    • குழந்தைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கி விழாக்களை கொண்டாட வேண்டும் என சபாநாயகர் செல்வம் கேட்டு கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கிருஷ்ணா நகரில் உள்ள ஜாலி ஹோம்ஸ் நரிக்குறவர் குழந்தைகள் பாதுகாப்பு மையம் உள்ளது.

    நரிகுறவர் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம் இங்குள்ள குழந்தை களுக்கு புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் காலை உணவு வழங்கி தீபாவளி கொண்டா

    டினார். அப்போது குழந்தைகள் ஆர்வத்துடன் அவருக்கு உணவை ஊட்டினர்.

    தொடர்ந்து குழந்தைகளுக்கு ஆந்திராவின் புகழ்மிக்க காக்கிநாடா காஜா, ஜாமூன் ஆகியவற்றுடன் பட்டாசு மற்றும் புத்தாடைகளை சபாநாயகர் வழங்கினார். தொடர்ந்து குழந்தைகளுடன் அவர் சேர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்.

    அப்போழுது குழந்தைகள் தீபாவளி வாழ்த்து பாடலை பாடி சபாநாயகர் செல்வத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    அரசியல் தலைவர்களும் வர்த்தக பிரமுகர்களும் இது போன்ற காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கி விழாக்களை கொண்டாட வேண்டும் என சபாநாயகர் செல்வம் கேட்டு கொண்டார்.

    • வேளாண் அறிவியல் கல்லூரி முதல்வர் முகமது யாசின் தொடங்கி வைத்தார்.
    • தோட்டக்கலை உதவி பேராசிரியை இலக்கியா தொகுத்து வழங்கினார்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் வேளாண் அறிவியல் கல்லூரியில், 8-வது தேசிய ஆயுர்வேத தின விழா கொண்டாடப்பட்டது.

    கல்விக் குழுமத்தின் தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லூரியின் இயக்குனர் வெங்கடாஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேளாண் அறிவியல் கல்லூரி முதல்வர் முகமது யாசின் தொடங்கி வைத்தார். கல்லுாரி பதிவாளர் அறிவழகர் சிறப்புரை

    யாற்றினார். மண்ணாடிப்பட்டு சமுதாய மையம் மருத்துவ அலுவலர் ஜாய் இம்மானுவேல், டாக்டர் தீப்தி மரியா ஆகியோர் விரிக்ஷா ஆயுர் வேதம் என்ற தலைப்பில் முதலாமாண்டு வேளாண் மாணவ-மாணவிகளுடன் கலந்துரை யாடினர்.

    நிகழ்ச்சியை தோட்டக் கலை உதவி பேராசிரியை இலக்கியா தொகுத்து வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்' நிஸ்மல் அஸ்வின் நன்றி கூறினார்.

    • தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வர வாழ்த்துகிறேன்.
    • ஒளிர்வதுபோல உங்கள் வாழ்வு ஒளிரட்டும், மகிழ்ச்சி தங்கட்டும் என்று கூறி அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையை யொட்டி புதுவை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

    சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தை யும் மகிழ்ச்சியையும் கொண்டு வர வாழ்த்துகிறேன்.

    இந்த தீபாவளி கொண்டாட்டம் பாரத தேசத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதாக இருக்கட்டும். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த தீபாவளி பண்டிகை மதம், புவியியல் எல்லைகளை கடந்து பல்வேறு கலாச்சார, பாரம்பரிய மரபுகளை பின்னணியாக கொடாட மக்களை ஒன்றிணைக்கிறது.

    தேசத்தின் துடிப்பான பண்டிகைகளில் ஒன்றாக திகழும் இந்த தீபாவளி பண்டிகையின்போது உங்கள் அனைவரது இல்லங்களிலும் ஏற்றப்படும் தீபங்கள் ஒளிர்வதுபோல உங்கள் வாழ்வு ஒளிரட்டும், மகிழ்ச்சி தங்கட்டும் என்று கூறி அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இருள்நீக்கி ஒளியை ஏற்றிடும் நாளாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகவும், வேற்றுமை மறந்து ஒற்றுமை, சகோதரத்துவத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம். அனை வருக்கும் நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    தீபாவளி பண்டிகை நாள் மக்களுக்கு எல்லை யில்லாத மகிழ்ச்சியையும், வெற்றியையும், ஆரோக்கி யத்தையும் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டு கிறேன்.

    தீப ஒளி எனும் தீபாவளி திருநாள் அனைவர் வாழ்வும் வளர்ந்து மகிழ்வூட்ட வேண்டும். தீபங்கள் ஒளி வெள்ளத்தில் மூத்தோர்களின் வழியில், நன்மைகள் நிறைந்திட புதிய வழி பிறக்க தாங்கள் எல்லா வளமும் பெற இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    மக்கள் கொண்டாடும் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டா டும் அனைவருக்கும் என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இதுபோல் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வ கணபதி எம்.பி, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்தி சேகர், வையாபுரி மணி கண்டன், அனந்தராமன் பா.ம.க. அமைப்பாளர் கணபதி, அ.ம.மு.க. மாநில செயலாளர் எஸ்.டி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தியின் மனைவி விஜயலட்சுமி ஜெயமூர்த்தி, மக்கள் பாதுகாப்பு பேரி யக்கம் கராத்தே வளவன் ஆகியோரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ×