search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அன்பழகன் குற்றச்சாட்டு
    • நம்மால் ஆட்சிக்கு வந்தவர்கள் தேர்தல் முடிந்தவுடன் நம்மை பற்றி சிந்திப்பதையே நிறுத்திவிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் திருக்கனூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    முன்னாள் கவுன்சிலர் மகாதேவி தலைமை வகித்தார். மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் நாசர், பொதுக்குழு உறுப்பினர் மகாதேவன், பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    பா.ஜனதா கூட்டணி அரசில் அ.தி.மு.க.வுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஆட்சி அமைந்தவுடன் தேசிய ஜனநயாக கூட்டணி இருந்ததற்கான அடிச்சுவடு இல்லாமல் செய்துவிட்டனர்.

    கூட்டணி கட்சிக்கு உழைத்த நாம் ஓய்ந்துவிட்டோம். நம்மால் ஆட்சிக்கு வந்தவர்கள் தேர்தல் முடிந்தவுடன் நம்மை பற்றி சிந்திப்பதையே நிறுத்திவிட்டனர்.

    புதுவை அரசின் அமைச்சரவையில் 2-ம் இடத்தில் உள்ள அமைச்சர் இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. கரும்பு சர்க்கரை ஆலை உட்பட மூடப்பட்ட எந்த ஒரு தொழிற்சாலையும் இதுவரை திறக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்க வில்லை. ஆட்சி சுகமே என்னவென்று தெரியாமல் 40 ஆண்டுக்கும் மேலாக காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா என கூட்டணி கட்சிகளுக்காக அதிமுகவினர் உழைத்து, அவர்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்தோம்.

    இதற்கு மேலும் நாம் ஏமாற வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க. தனியாக போட்டியிட வலியுறுத்துவோம். புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி மலர நாம் பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில அவை தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி குணசேகரன், நாகமணி, காந்தி, நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார். 

    • எதிர்கட்சித்தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
    • முதுகலை என்ஜினீயரிங் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ மாணவர்கள் என 500- பேர் கலந்து கொண்டு, பேசினார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக புதுவை மாநில தி.மு.க பொறியாளர் அணி சார்பில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று காலை காலை 9 மணிக்கு தொடங்கியது.

    புதுவை மாநில தி.மு.க அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கி பேச்சுப்போட்டியை தொடங்கி வைத்தார்.

    மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்குமார் வரவேற்றார்.

    திருபுவனை தொகுதி செயலாளர் செல்வ பார்த்திபன், பொறியாளர் அணி தலைவர் பூபாலன், நிர்வாகிகள் மணிகண்டன், உமாபதி, முகுந்தன், சுவர்ணராஜ், எழிலரசன், அர்ஜூன், பிரகாஷ், ரமேஷ், பிரபாகரன், வீரமணி கண்டன், சுவாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுவை மாநில தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளர் சீனு.மோகன்தாசு தலைமையில், வேல்முருகன், நெய்தல் நாடன், பேராசிரியர்கள் அரங்க முருகையன், வேல் கார்த்திகேயன், உருஅசோகன், ரேவதி, விசாலாட்சி, எழில்வசந்தன், ஏழுமலை, குணசேகர், திரு நாவுக்கரசு, முத்தையாசாமி, முருகமணி ஆகியோர் 5 குழுக்களாக பிரிந்து பேச்சுப் போட்டியை நடத்தினர்.

    போட்டியில் புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த இளங்கலை, முதுகலை என்ஜினீயரிங் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ மாணவர்கள் என 500- பேர் கலந்து கொண்டு, பேசினார்கள்.

    அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மலர்க்கண், பேராசிரியர்கள் வள்ளி, ஜெயக்குமார், பிரியா, தி.மு.க. துணை அமைப்பா ளர் தைரியநாதன், தலைமைச் செயற்குழ உறுப்பினர் சண். குமரவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், தங்கவேலு, வேலவன், பழநி, தொகுதி செயலா ளர்கள் சக்தி வேல், தியாகராஜன், மாநில இளை ஞர் அணி துணை அமைப்பாளர் முகிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 3 சுற்றுகளாக நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்ற பொறியியல் மாணவர்க ளுக்கு இன்று மாலை பரிசு வழங்கப்படு கிறது.

    • ஆப்பிரிக்கா நாட்டில் வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் டிசம்பர் 4-ந் தேதி வரை மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் போட்டி நடைபெற உள்ளது.
    • போட்டியில் கலந்துகொள்ள சான் ரேச்சல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காந்தி தேவராஜ். இவரது மகள் சான்ரேச்சல் (வயது 23). இவர் சிறு வயதில் இருந்தே மாடலிங் துறையில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்.

    மிஸ் புதுச்சேரி-2020, மிஸ் பெஸ்ட் ஆட் டிட்யூட்-2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு-2019, குயின் ஆப் மெட்ராஸ்-2022 ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் இந்தியா-2023 அழகி போட்டியில் கலந்து கொண்டு விருது பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் ஆப்பிரிக்கா நாட்டில் வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் டிசம்பர் 4-ந் தேதி வரை மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள சான் ரேச்சல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவர் சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து

    பெற்றார். மேலும் இப்போட்டியில் பங்கேற்க நிதியுதவி வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உடனிருந்தார்.

    • தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
    • ரூ.1½ லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தது.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை அப்பாவு நாயக்கர் வீதியை சேர்ந்தவர் பழனி. ஓட்டல் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    இன்று காலை பழனியின் இளைய மகள் வீட்டின் மாடியில் உள்ள சமையல் அறையில் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கியாஸ் சிலிண்டரை திறந்து தீ பற்ற வைக்கும் போது ரெகுலேட்டரில் தீபற்றியது.

    இதனை பார்த்ததும் பழனியின் மகள் அதிர்ச்சியடைந்து வீட்டின் கீழ் தளத்தில் இருந்த தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

    இதனால் சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர் உடனே வீட்டை விட்டு வெளியேறினர். சிறிது நேரத்தில் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சிலிண்டர் இரண்டாக பிளந்து போனது.

    குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் அனைவரும் உயிர் தப்பினர்.

    இதுபற்றி உடனடியாக புதுவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், தையல் எந்திரம் உள்ளிட்ட ரூ.1½ லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தது.

    இந்த தீவிபத்து குறித்து முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோதி சைக்கிளில் சென்ற செல்வரசி மீது பயங்கரமாக மோதியது.
    • அக்கம் பக்கத்தினர் 5 பேரையும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நேரு நகர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், ஹோம்கார்டு பயிற்சி எடுத்து வந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி யானார். மேலும் 4 பேர் காயம் காயம் அடைந்தது குறித்து, காரைக்கால் போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்கால் நித்தீஸ்வ ரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வரசி (வயது 23).இவர் நேற்று முன்தினம் இரவு காரைக்கால் நேரு நகர் அருகே உள்ள பாரதியார் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பூவத்தை சேர்ந்த சண்முக வேல் (61), மற்றொரு மோட்டார் சைக்கி ளில் சென்ற மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த எழிலன் (26) ஆகியோர் மீது மோதி சைக்கிளில் சென்ற செல்வரசி மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் செல்வ ரசி சாலையில் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் சண்முகவேல், எழிலன் மற்றும் காரில் சென்ற, மயிலாடுதுறை மாவட்டம் ஆயர்பாடியை சேர்ந்த ஜெகபர் அலி (73), காரை ஓட்டிய திருக்களாச் சேரியை சேர்ந்த முபாரக் அலி (48) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 5 பேரையும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் செல்வரசி சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து காரைக்கால் போக்கு வரத்து போலீசார் முபாரக் அலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காங்கிரஸ் - தி.மு.க. தலைவர்கள் வாழ்த்து
    • இளைஞர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் சால்வை அணிவித்து, பூங்கோத்து பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவரும் லாஸ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான வைத்தியநாதன் தனது பிறந்தநாளை லாஸ்பேட்டை வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே கொண்டாடினார்.

    இதில் லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜை செய்து முளைப்பாரி எடுத்து கமலா அறக்கட்டளை முதன்மை செயலர் கமலா வைத்தியநாதன் தலைமையில் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் முளைப்பாரியை வைத்தியநாதன்

    எம்.எல்.ஏ.விடம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடந்து வைத்தியநாதன் எம்.எல்.ஏ. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் துணை சபாநாயகர் எம்.என்.ஆர். பாலன் முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன்

    தி.மு.க. மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ., தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சம்பத், செந்தில்குமார் மற்றும் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள்

    எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், காவல்துறை, அரசு துறை அதிகாரிகள், கமலா அறக்கட்டளை நிர்வாகிகள், லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இளைஞர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் சால்வை அணிவித்து, பூங்கோத்து பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து கடந்த கல்வி ஆண்டில் 10-வது மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்க தொகையும், கமலா அறக்கட்டளை சார்பில் தட்டச்சு பயிற்சி மற்றும் தையல் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகையும் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார். பின்னர், 5 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கமலா அறக்கட்டளை நிர்வாகிகள் லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள், ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.

    முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்புபூஜை நடந்தது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகிேயார் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கத்தேர் இழுத்தனர்.

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை
    • அரசு துறைகளில் உட்கட்ட மைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் தகவல் தொழில்நுட்ப உட்கட்ட மைப்பை மேம்படுத்த அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவின் ஆலோசனைக்கூட்டம் சுற்றுலாத்துறை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் செயலர்கள் மணிகண்டன், முத்தம்மா, தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் மோகன்குமார், உயர்கல்வித்துறை செயலர் ருத்ரகவுடு, தேசிய தகவல் தொழில்நுட்ப துறை ராஜசேகர், குழு உறுப்பினர்கள் ஸ்ரீராம், தனிஷ்குமார், நாகராஜன், சரவணன், சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்களின் சேவை திட்டங்களை இணையதளம் மூலம் வழங்குவது, அரசு துறைகளில் உட்கட்ட மைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    • மாணவர்களுக்கான நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 30-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • உதவி பேராசிரியைகள் சரோஜா, பவித்ரா, ஆகியோர் முகாமை வழி நடத்தினர்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் கீழ் இயங்கிவரும் வேளாண் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு தோட்டக்கலை துறை மாணவர்களுக்கான நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 30-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு நிகழ்ச்சியக நெட்டப்பாக்கம் கொம்யூன் பண்டசோழநல்லூர் கிராமத்தில் ரசாயன மருந்தில்லா இயற்கைமுறை காய்கறி பயிர் சாகுபடி பற்றிய சிறப்பு முகாம் நடைபெற்றது.

    வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முகமது யாசின் முகாமினை தொடங்கிவைத்தார்.

    மேலும், இம்முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட த்தின் ஒருங்கிணைப்பாளர், ராவ் கெலுஸ்கர் , வேளாண் விரிவாக்கத்துறை உதவி பேராசிரியர் ஒருங்கிணைத்தார்.

    உடன் உதவி பேராசிரியைகள் சரோஜா, பவித்ரா, ஆகியோர் முகாமை வழி நடத்தினர்.

    • நேத்தாஜி நகர் பகுதியில் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
    • அரிகிருஷ்ணன், சந்திரன், காளப்பன், செல்வம், கோபி, ரவி, ராக்கேஷ், அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் தொடரும் மழையையொட்டி உப்பளம் தொகுதியில் நோய் பரவாமல் தடுக்க நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் பிரீதாவை கென்னடி எம்.எல்.ஏ. சந்தித்து தொகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.

    மேலும் நேத்தாஜி நகர் பகுதியில் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து வாணரப் பேட்டை பகுதியில் உப்பனாறு தூர்வாரும் பணியை கென்னடி

    எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் தூர் வாரும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.

    இந்நிகழ்ச்சியின் போது தி.மு.க. நிர்வாகிகள் சக்தி வேல், அரிகிருஷ்ணன், சந்திரன், காளப்பன், செல்வம், கோபி, ரவி, ராக்கேஷ், அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    • ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது கல்விச்சூழலுக்கு மேலும் உதவிடும்.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    தமிழகத்தில் வயது தளர்வு அளித்துள்ளதை போல ஆசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களில் தற்போது அறிவித்துள்ள வயது வரம்பில் மேலும் 3 வயதை உயர்த்தி வழங்க வேண்டும்.

    மேலும் ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது கல்விச்சூழலுக்கு மேலும் உதவிடும். பாகுபாடு நிறைந்த சமூக ஒடுக்குமுறை மற்றும் ஒதுக்குதலுக்கு உள்ளாகி உள்ள பெண்கள் அதிகாரம் பெறவும், முன்னேறவும் அரசு வேலை வாய்ப்பில் சிறப்பு சலுகையை உறுதி செய்ய வேண்டும்.

    பெண்களுக்கு சிறப்பு கூறு நிதியத்தை முறைப்படுத்தி செயல்படுத்திட விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும். அது குறித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் கூட்டத்தை நடத்த அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • அதிகாரிகளுக்கு ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்
    • புதிய சாலை அமைத்தல் என பொதுப்பணித்துறை மூலம் வேலைகளை விரைந்து முடிக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை இந்திராநகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் பொதுப்பணித்துறை மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து பொறியாளர்களுடன் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள அரசு கொறடா அலுவலகத்தில் நடந்தது.

    அரசு கொறடாவும், இந்திரா நகர் தொகுதி எம்.எல்.ஏவுமான ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் பொதுப் பணித்துறை இளநிலை பொறியாளர், நிர்வாக பொறியாளர், முதன்மை பொறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் பயன் பாட்டுக்கு கழிவுநீர் கால்வாய், புதிய குடிநீர் குழாய் அமைத்தல், புதிய சாலை அமைத்தல் என பொதுப்பணித்துறை மூலம் வேலைகளை விரைந்து முடிக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    • திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று வழக்கத்தை விட கூடுதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • திருநள்ளாறு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், போக்குவரத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் பக்தர்கள் வந்துச் சென்றனர்.

    காரைக்கால்:

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது காரைக்கால் மாவட்டம். காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலக புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    வருகிற 20.12.23 அன்று மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமர்சையாக நடைபெறவுள்ளது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர். சனிப்பெயர்ச்சி விழா நெருங்குவதால், வழக்கத்தைவிட இன்று அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிலிருந்தும், திரளான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடி தங்கள் தோஷங்களை போக்கி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் காத்திருந்து அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருநள்ளாறு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், போக்குவரத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் பக்தர்கள் வந்துச் சென்றனர். அதேபோல் கோவில் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திருந்ததால் பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்தனர். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும் என்பதால், மாவட்ட கலெக்டரும், கோவில் தனி அதிகாரியுமான குலோத்துங்கன் உத்தரவின் பேரில், பாதுகாப்பு பணியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×