search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வாடகை வீட்டில் வசிப்பதால், மகன் திருமணத்துக்கு முன்பாக, சொந்த இடம் வாங்கி வீடு கட்ட கற்பகவள்ளி ஆசைபட்டார்.
    • மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கற்பக வள்ளி (50). கணவரை இழந்தவர். ஒரு மகனுடன் வசித்து வருகிறார்.

    கணவர் கன்டெய்னர் லாரி டிரைவராக இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் காப்பீடு தொகையாக வந்த பணத்திலும், சேமிப்பு பணத்திலும், மகன் வேலைக்கு சென்றதால் வந்த ஊதியத்தில் செலவு போக மீதமுள்ள பணத்தையும் சேமித்து வைத்திருந்தார்.

    வாடகை வீட்டில் வசிப்பதால், மகன் திருமணத்துக்கு முன்பாக, சொந்த இடம் வாங்கி வீடு கட்ட கற்பகவள்ளி ஆசைபட்டார்.

    இதற்காக இவர் வில்லியனூர் என்.எஸ்.பி. போஸ் நகரில் ரூ.35 லட்சம் கொடுத்து வீட்டுமனை வாங்கினார்.

    அந்த இடத்தில் வீடு கட்ட பூஜை செய்ய கற்பகவள்ளி சென்றபோது அந்த இடம் வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கு சொந்தமானது என்பதும் போலி பத்திரம் தயாரித்து தன்னை ஏமாற்றி வீட்டு மனையை விற்று விட்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து கற்பகவள்ளி, வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மனையை உருளையன்பேட்டை சரவணன் மனைவி அனிதா, உழவர்கரையை சேர்ந்த வீட்டுமனை தரகர் கோபி ஆகியோர் போலி பத்திரம் தயாரித்து கற்பக வள்ளி விற்றது தெரியவந்தது. இதற்கு அவர்களுக்கு முதலியார்பேட்டை ஜெயமூர்த்திராஜா நகரை சேர்ந்த வேணிமூர்த்தி, மற்றும் மூலகுளம் பகுதியை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அன்பழகன் பேச்சு
    • புதுவையிலும் திராவிட மாடல் ஆட்சி அமைப்போம் என எதிர்கட்சி தலைவர் சிவா கூறுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை ஏம்பலம் தொகுதியில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கரிக்கலாம்பாக்கம் ராஜீவ்காந்தி சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.

    தொகுதி செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ராஜாராமன், பெரியசாமி, ராமசாமி, சேகர், ரேணுகாதேவி, சண்முகம், அழகப்பன், தெய்வநாயகம், ராஜேந்திரன், செல்வராணி, நல்லதம்பி, கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    புதுவையில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏம்பலம் தொகுதியை குறிவைத்து பசுமை வாய்ந்த விவசாய நிலைங்களை பிளாட் போட்டு விற்று வருகின்றனர்.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார். 2 ஆண்டு புதுவையின் பட்ஜெட்டே ரூ.25 ஆயிரம் கோடிதான். ஆனால் ரூ.30 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

    முன்னாள் முதல்- அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டு களை கூறும் போது ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். நாராயணசாமிக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் பதிலளிப்பதில்லை. பதில் அளிக்காததால் குற்றச்சாட்டு உண்மை என அவர் பேசி வருகிறார்.

    தமிழகம் போல புதுவையிலும் திராவிட மாடல் ஆட்சி அமைப்போம் என எதிர்கட்சி தலைவர் சிவா கூறுகிறார். தமிழகம் இன்று அழிவுப்பாதையில் செல்கிறது.

    எனவே எடப்பாடியார் கரத்தை தமிழகம் மற்றும் புதுவை மக்கள் வலுப்படுத்த தயாராகிவிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும்

    அ.தி.மு.க. நிச்சயமாக வெற்றி பெறும். புதுவை தொகுதி வெற்றிக்கு ஏம்பலம் தொகுதி செயல்வீரர்கள் வீராங்கணைகள் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இவரது மனைவி பாலசுபலட்சுமி (வயது 39). தனியார் பள்ளி ஆசிரியை.
    • மேலும், கை, கால், மூக்கிலும் காயம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் ஒப்பிலார் மணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி பாலசுபலட்சுமி (வயது 39). தனியார் பள்ளி ஆசிரியை. சம்பவத்தன்று இரவு இவர் காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில், தனது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டு விட்டு, மகன் திவ்யேஷ் கார்திக் (15), உறவினர் மகன் சரவண ப்பிரியன் (17) ஆகியோ ருடன் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். காரை க்கால் காமராஜர் சாலை கென்ன டியார் வீதி சந்திப்பில் சென்ற போது எதிர் திசையில் மற்றொரு மோட்டார் சைக்களில் வந்த அர்ஷாத் (19) என்பவர் மோதியதில், இருதரப்பும் தடுமாறி சாலையில் விழுந்தனர்.

    இதில், பாலசுப லட்சுமியின் 2 பற்கள் உடைந்து போனது. மேலும், கை, கால், மூக்கிலும் காயம் ஏற்பட்டது. அர்ஷாத்துக்கு கையில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த பாலசுபலட்மியை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீ சாரிடம் பாலசுபலட்மி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ஷாத்தை விசாரித்து வருகின்றனர்.

    • மாணவர்களுக்கு எதிர்கட்சித்தலைவர் சிவா அழைப்பு
    • மாணவர்களுக்கு முதல் பரிசு கேடயத்துடன் ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா புதுவை மாநில தி.மு.க. சார்பில் ஆண்டுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    புதுவை மாநில தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் பொறியியல் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் நடக்கிறது.

    மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்குமார் வரவேற்கிறார். திருபுவனை தொகுதி செயலாளர் செல்வபார்த்திபன், பொறியாளர் அணி நிர்வாகிகள் மணிகண்டன், உமாபதி, முகுந்தன், சுவர்ணராஜ், எழிலரசன், அர்ஜூன், பிரகாஷ், ரமேஷ், பிரபாகரன், வீரமணிகண்டன், சுவாதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    போட்டியை, மாநில பொறியாளர் அணி தலைவர் துரை சரவணன், அணி செயலாளர் கருணாநிதி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். அவைத் தலைவர்

    எஸ்.பி.சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ. உட்பட கட்சியினர் பலர் பங்கேற்கின்றனர்.

    தொழில்நுட்ப கல்விக்கு தோள் கொடுத்தவர் கலைஞர், தொழில் துறையை உயர்த்தியவர் தமிழின தலைவர், திராவிட மாடலும் திறன்மிக்க கல்வியும், தெற்கு சூரியன், கலைஞரும் தமிழும் என்ற தலைப்புகளில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த இளங்கலை, முதுகலை பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்கள் பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாதவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம்.

    மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு கேடயத்துடன் ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

    இதில் வெற்றி பெறுபவர்கள் மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெறலாம். இறுதிச் சுற்றில் வெல்பவர்க்கு ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்படும்.

    இந்த போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும்படி புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    • ஆட்டோ ஸ்டாண்டில் யார் பெரியவர் என அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • கொலை தொடர்பாக உருளையன் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை கோவிந்த சாலையை சேர்ந்தவர் பரத் (வயது 29). ரவுடியான இவர் மீது 2 கொலை , 3 கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. பிரபல ரவுடியானமடுவுபேட் முரளியின் கூட்டாளியான இவர், அவரது கொலைக் குப்பின் புதிய பஸ்நிலைய பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார்.

    அடிதடி உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தின் எதிரே உள்ள மாஸ் ஓட்டல் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு பரத் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மற்றொரு ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் பரத்தை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்றது.

    இந்த கொலை குறித்து தகவல் அறிந்து கிழக்குப்பகுதிபோலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங், இன்ஸ்பெக்டர் வெங்கடா ஜலபதி, மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிபோய் நின்றது.

    ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இந்த கொலை தொடர்பாக உருளையன் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பரத் தனது பகுதியை சேர்ந்த கூட்டாளிகளான கருப்பு முரளி, பெர்னாண்டஸ், ஸ்டீபன், ஆனந்த், ஜான், சதீஷ் ஆகியோரையும் தனது ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்ட அழைத்து வந்துள்ளார். நாளடைவில் ஆட்டோ ஸ்டாண்டில் யார் பெரியவர் என அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பரத் தனது கூட்டாளிகளை தாக்கியுள்ளார்.

    ஆயுதபூஜை தினத்தன்றும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொ டர்ந்து அவர்களை ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து நீக்க பரத் நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கருப்பு முரளி உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து பரத்தை வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கொலையாளிகளான முதலியார்ேபட்டை ரவி (32), கோவிந்த சாலை பகுதியை சேர்ந்த கருப்பு முரளி (32) , பெர்னாண்டஸ் (33), பொட்டி வீரன் (27), ஸ்டீபன்ராஜ் (29) , சதீஷ்குமார் (28), ஆனந்த் (26), ஜான் 30) , உள்ளிட்ட 8 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். கைதான அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையில் வேறுயாருக்காவது தொடர்பு உண்டா கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாசு கட்டுப்பாட்டு குழுமம் அறிவிப்பு
    • சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பட்டாசு களுக்கு பதிலாக பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்ப ட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2 மணிநேரம் மட்டுமே...

    சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். புதுவையில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம். அமைதி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், வழிபாட்டுதலங்கள், கல்விகூடங்கள், நீதிமன்ற வளாக சுற்றுப்புறங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்கக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பட்டாசு களுக்கு பதிலாக பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்ப ட்டுள்ளது.

    பட்டாசுகள், வெடிகள் வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டர் தூரத்தில் 125 டெசிபல் அளவுக்கு வெடி சத்தம் ஏற்படுத்தும் பட்டாசு உபயோகித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் உடல்நலன், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைக்கும் பேரியம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், சரவெடி பட்டாசுகளை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்கவும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்லவும் சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்ப டுத்தாமல் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பட்டாசு தொழிற்சாலை, பட்டாசு குடோன் மற்றும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • தீ விபத்தை தடுக்கும் பாதுகாப்பு உபகர ணங்களை வைத்திருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் அடுத்தடுத்து பட்டாசு தொழிற்சாலை களில் விபத்து ஏற்பட்டு பலர் உயிர் இழந்தனர்.

    இதையடுத்து புதுவை முழுவதும் பட்டாசு தொழிற்சாலை, பட்டாசு குடோன் மற்றும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி பாகூர் மாஞ்சாலை சாலையில் உள்ள பட்டாசு குடோனில் பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் தமிழ ரசன் மற்றும் போலீசார் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் பட்டாசு கடைகளின் உரிமம், வெடிமருந்து இருப்பு, விற்பனை செய்த ரசீது ஊழியர்கள் விபரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    அப்போது, பட்டாசு கடை நடத்துபவர்கள் புதுவை அரசு அறிவித்துள்ள பாதுகாப்புவழி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும். தீ விபத்தை தடுக்கும் பாதுகாப்பு உபகர ணங்களை வைத்திருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

    • மீனவர் விடுதலை அமைப்பு கூட்டத்தில் தீர்மானம்
    • மீனவ சமுதாயத்தை அங்கீகரித்துவிட்டு கல்வி, வேலைவாய்ப்புகளை மீனவ சமுதாயத்தினர் பெற முடியாத நிலையை அரசு உருவாக்கி வஞ்சித்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு சார்பில் மீனவர்களுக்கு இ.பி.டி. இடஒதுக்கீடு பலன்கள், பாதிப்புகள், தீர்வு குறித்து ஆய்வரங்கள் தமிழ்ச்சங்கத்தில் நடந்தது.

    புதுவை மாநில அமைப்பாளர் மலையா ளத்தான், முதன்மை செயலாளர் சக்திவேல் வரவேற்றனர். தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் நிறுவன தலைவர் மங்கையர்செல்வன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நடராஜன், நாகராஜ், இளங்கோவன் ஒருங்கிணைத்தனர். திருமுகம், செல்வம், வெங்கடேசன், ரமேஷ், அருணாச்சலம், ஞானமணி, மாறன், கார்த்திகேயன், முருகன், செந்தில்நாதன், பன்னீர்செல்வம், கனகராஜ் உட்பட பலர் கருத்துரை வழங்கி பேசினர். நகர செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

    புதுவை மக்கள் தொகையில் 3-வது பெரும்பான்மை சமூகமாகவும், ஆண்டுக்கு ரூ.300 கோடி வருமானம் ஈட்டித்தரும் மீனவ சமூகத்திற்கு புதுவை அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் 2 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழங்குகிறது. இது சமூகநீதிக்கு எதிரானது. அதீத பிற்படுத்தப்பட்டோர் என மீனவ சமுதாயத்தை அங்கீகரித்துவிட்டு கல்வி, வேலைவாய்ப்புகளை மீனவ சமுதாயத்தினர் பெற முடியாத நிலையை அரசு உருவாக்கி வஞ்சித்து வருகிறது.

    எனவே கல்வி, வேலைவாய்ப்பில் மீனவ சமுதாயத்துக்கு 7.5 சதவீத இடஒதுககீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 21-ந் தேதி உலக மீனவர் நாளில் இடஒதுக்கீடு மாநாடு நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் அனைத்து மீனவ கிராம தலைவர்கள், பஞ்சாயத்தார்கள், விசைப்படகு உரிமையாளர்கள், பைபடர் படகு உரிமையாளர்கள், மீன் அங்காடி மகளிர் நிர்வாகிகள் உட்பட மீனவ சமுதாயத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

    • பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
    • கூட்டத்தில் அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றி வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது.

    சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றி வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 2016-ம் ஆண்டு பணிக்கு அமர்த்தப்பட்ட எம்.டி.எஸ். ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

    பொதுப்பணித்துறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை மாலை 4 முதல் 5 மணி வரை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க போராட்டம் நடத்துவது

    வரும் 10-ந் தேதி மாலை 3 முதல் 5 மணி வரை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு காலி நாற்காலிக்கு மாலை போட்டு நூதன போராட்டம் நடத்துவது. 12-ந் தேதி காலை 5.30 முதல் 6.30 மணி வரை பொது சுகாதார கோட்டத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் வேதனை
    • புதுவையில் உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என முதல்- அமைச்சர் மக்களை ஏமாற்றுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை விடுதலை நாள் விழாவை கீழூரில் நடத்தியிருந்தால் உணர்வுள்ளதாக இருந்தி ருக்கும். முதலமைச்சர் தனது உரையில் புதுவை விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், அவர்களின் தியாகத்தை பற்றி குறிப்பிடாதது வருத்தமளிக்கிறது. புதுவையில் உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என முதல்- அமைச்சர் மக்களை ஏமாற்றுகிறார்.

    புதிய தொழிற்சாலைகள் இல்லாமல் தொழில் வளர்ச்சி எப்படி வந்தது? புதுவையில் அனைத்து மில்களும் மூடப்பட்டு கிடக்கிறது. விவசாய உற்பத்தி, மீன்வளத்துறையும் உயரவில்லை. புதுவையின் வளர்ச்சி சதவீதம் 4 சதவீதமாக குறைந்துள்ளது. விலைவாசி உயர்வு 8 சதவீதமாக உள்ளது.

    இந்த நிலையில் புதுவை எல்லா துறையிலும் முன்னேறியுள்ளது என எப்படி பெருமைப்பட முடியும்? புதுவையில் ஒரு குடும்பத்தினர் வருமானம் ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரத்து 780 என குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால் புதுவையில் ஒரு குடும்பம்கூட வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ வாய்ப்பில்லை.

    ஆனால் புதுவையில் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்தில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் குடும்பம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகிறது. உண்மையில் தனி நபர் வருமானம் 4.5 சதவீதம் குறைந்துள்ளது. வேலையும், வாழ்வாதாரமும் வருமானமும் இல்லாமல் வாழ்க்கையை தொலைத்து விட்டு கஞ்சாவையும் மதுவையும் நாடி ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் புதுவையில் அதிகரித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • விவசாய அணிச் செயலாளர் விஜயன் வெளியிட்டுள்ளார்.
    • நாராயணசாமி, பெருமாள், ராமானுஜம், ஹரிதேவன், அருள், சுரேஷ் குமார் ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. விவசாய அணிக்கு புதிய நிர்வாகிகளை தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

    மாநில அமைப்பாளர் சிவா பரிந்துரையின்பேரில் இதற் கான அறிவிப்பை தமிழக முதல்-–அமைச்சர் ஸ்டாலின் ஒப்புதலுடன், விவசாய அணிச் செயலாளர் விஜயன் வெளி யிட்டுள்ளார்.

    அதன்படி, புதுவை மாநில விவசாய அணித் தலைவராக பாஸ்கர், துணைத் தலைவராக செல்வராசு, அமைப்பா ளராக குலசேகரன், துணை அமைப்பா ளர்களாக சுந்தரமூர்த்தி, காசிநாதன், சுப்ரமணி, பாண்டியன், ஜெயசீலன், நாராயணசாமி, பெருமாள், ராமானுஜம், ஹரிதேவன், அருள், சுரேஷ் குமார் ஆகி யோர் நியமிக்கப் பட்டுள்ளனர். 

    • மின்சாரம் இன்றி மக்கள் அவதி
    • பைபாஸ் ரோட்டில் இடி தாக்கி மரம் விழுந்து மின் ஓயர்கள் அறுந்து விழுந்தது.

    புதுச்சேரி:

    பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. அவ்வப்போது வெயிலும் அடித்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு இடி,மின்னல் சூறை காற்றுடன் கனமழை பெய்தது.

    பாகூர் பைபாஸ் ரோட்டில் இடி தாக்கி மரம் விழுந்து மின் ஓயர்கள் அறுந்து விழுந்தது.

    மேலும் அதில் உள்ள இன்சுலேட்டர்கள் பல சேதமாகின. இதேபோல் கிருமாம்பாக்கம் பகுதியிலும் மின்ஓயர் அறுந்து சேதமானது. தகவல் அறிந்த மின் ஊழியர்கள் பாகூர் பைபாஸ் ரோட்டில் உள்ள மின்கம்பத்தை விடிய விடிய சரி செய்தனர்.

    இதனால் இரவு 10 மணியிலிருந்து 2 மணி வரை மின்சாரம் இன்றி பொது மக்கள் தவி த்தனர். இரவில் மழையை பொருட்படுத்தாமல் துரிதமாக செயல்பட்ட ஊழியர்களை பொது மக்கள் சமூக வலை தளங்க ளில் பாரா ட்டி யுள்ள னர்.

    பாகூ ரில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை 2 செமீ. மழை பதிவா கியுள்ளது.

    பாகூரில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையின் அளவு 5செமீ. ஆகும்.

    ×