search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • யஷஸ்வி ஜெய்ஸ்வால் 93 ரன்னும், சுப்மன் கில் 58 ரன்களை சேர்த்தனர்.

    ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 93 ரன்னும், ஷுப்மன் கில் 58 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

    இந்நிலையில் 160 ரன்களைச் சேர்த்தால் வெற்றி பெறலாம் என நினைத்தோம். ஆனால் இந்திய அணி பேட்டிங் செய்த விதத்தில் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது என ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா கூறினார்.

    இப்போட்டியின் தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-

    இன்றைய போட்டிக்கான விக்கெட் சற்று ஈரமாக இருந்தது என்று நினைக்கிறேன். இதில் நாங்கள் 160 ரன்களைச் சேர்த்தால் வெற்றி பெறலாம் என நினைத்தோம். ஆனால் இந்திய அணி பேட்டிங் செய்த விதத்தில் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது. ஒவ்வொரு விளையாட்டிலிருந்தும் நாங்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறோம்.

    கடைசி 5 ஓவர்களில் 8-10 ரன்கள் அதிகம் என்று நினைக்கிறேன். இந்த பிட்ச்சில் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் பவுன்ஸ் கிடைத்தது. எனவே இன்னிங்ஸின் தொடக்கத்தில் நாங்கள் எங்களை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. இன்னிங்ஸ் இடைவேளையில் ஹெவி ரோலர் பிட்ச்சின் மீது பயன்படுத்தப்பட்ட காரணத்தால் நிலைமை அவர்களுக்கு சாதகாம செயல்பட்டது. இதன் காரணமாக அவர்கள் பேட்டிங் செய்யும் போது அது எளிதாக அமைந்துவிட்டது.

    இவ்வாறு ராஸா கூறினார்.

    • விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேசிங் செய்த அணி பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது.
    • இந்த பட்டியலில் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது.

    ஹராரே:

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்தது.

    இதில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது. ஜெய்ஸ்வால் 53 பந்தில் 93 ரன்னும், சுப்மன் கில் 39 பந்தில் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன் மூலம் இந்திய புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேசிங் செய்த அணி பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 200 ரன்களை சேசிங் செய்தது.

    விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமான 150-க்கும் மேற்பட்ட ரன் சேஸ்கள்

    பாகிஸ்தான் vs இங்கிலாந்து, கராச்சி, 2022 (இலக்கு: 200)

    நியூசிலாந்து vs பாகிஸ்தான், ஹாமில்டன், 2016 (இலக்கு: 169)

    இங்கிலாந்து vs இந்தியா, அடிலெய்டு, 2022 (இலக்கு: 169)

    இந்தியா vs ஜிம்பாப்வே, ஹராரே, 2024 (இலக்கு: 153)

    பாகிஸ்தான் vs இந்தியா, துபாய், 2021 (இலக்கு: 152)

    மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 150க்கு மேற்பட்ட இலக்கை எட்ட குறைந்தபட்ச பந்துகளை எடுத்துக்கொண்ட போட்டிகளின் பட்டியலில் இன்றைய போட்டி முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 153 ரன்கள் இலக்கை 28 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டி இச்சாதனையை படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக 154 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 26 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டியது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி சார்பில் அதிகபட்ச பார்ட்னஷிப்பை குவித்த வீரர்கள் வரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இருவரும் இணைந்து 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இவர்கள் இருவரும் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே இதுநாள் வரை சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேற்கொண்டு இந்திய அணிக்காக தொடக்க வீரர்கள் இணைந்து அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்கள் வரிசையில் யஷஸ்வி மற்றும் ஷுப்மன் கில் இருவரும் ஐந்தாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர். முன்னதாக ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 165 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 50 ரன்னும், யூசுப் பதான் 30 ரன்னும் எடுத்தனர்.
    • இந்திய அணி 19.1 ஒவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்றது.

    அப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா மற்றும் யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சோயப் மாலிக் 41 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் உத்தப்பா 10 ரன்னிலும் சுரேஷ் ரெய்னா 4 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனை தொடர்ந்து அம்பதி ராயுடு மற்றும் குர்கீரத் சிங் மான் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடு அரை சதம் விளாசி அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் குர்கீரத் சிங் மான் 34 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த யூசப் பதான் அதிரடியாக விளையாடினார். அவர் 16 பந்தில் 30 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.

    இறுதியில் இந்திய அணி 19.1 ஒவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 50 ரன்னும், யூசுப் பதான் 30 ரன்னும் எடுத்தனர்.

    இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அம்பதி ராயுடுவும் தொடர் நாயகனாக யூசப் பதானும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 26-ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • தற்போது இந்த போட்டி ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு வருகிற 27-ம் தேதி நடைபெறும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பல்லகெலேயில் வருகிற 26-ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது இந்த போட்டி ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு வருகிற 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதேபோல் 2-வது, 3-வது 20 ஓவர் போட்டியும் ஒருநாள் தள்ளிபோடப்பட்டு முறையே 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஒருநாள் தொடரில் முதலாவது ஆட்டம் ஆகஸ்டு 1-ம் தேதியில் இருந்து 2-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 2-வது, 3-வது ஒருநாள் போட்டி ஏற்கனவே அறிவித்தபடி முறையே ஆகஸ்டு 4, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் கொழும்பில் அரங்கேறுகிறது.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
    • இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.

    துபாய்:

    இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்தது. இதில் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியுடன் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது.

    புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 68.52 சதவீதத்துடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 62.50 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 50 சதவீதத்துடன் 3-வது இடத்திலும், இலங்கை 50 சதவீதத்துடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 36.66 சதவீதத்துடன் 5-வது இடத்திலும் உள்ளன.

    வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இங்கிலாந்து ஆகியவை 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • ஏழு சீசனில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.
    • கடந்த மூன்று சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை.

    ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். தலைசிறந்த பேட்ஸ்மேனான இவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். கடந்த ஏழு சீசனில் இவரது தலைமையில் டெல்லி அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

    இந்த சீசனில் 14 போட்டிகளில் ஏழு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அத்துடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கடைசி மூன்று சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இந்த நிலையில் ரிக்கி பாண்டியை பிரிவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 152 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 156 ரன்கள் எடுத்து வென்றது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, இந்தியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் சிக்கந்தர் ராசா 28 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். டாடிவான்சே மருமானி 32 ரன்னில் அவுட்டானார். வெஸ்லி மாதவரே 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர்.

    இறுதியில், இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது.

    ஜெய்ஸ்வால் 53 பந்தில் 93 ரன்னும், சுப்மன் கில் 39 பந்தில் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • முதலில் ஆடிய மதுரை 156 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து விளையாடிய திருப்பூர் 157 ரன்களை எடுத்து வென்றது.

    கோவை:

    டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்துது. சசிதேவ் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கவுஷிக் 28 ரன்னும், ஸ்ரீ அபிஷேக் 21 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    திருப்பூர் சார்பில் அஜித் ராம் 3 விக்கெட்டும், ராமலிங்கம் ரோகித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பாலசந்தர் அனிருத் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், திருப்பூர் அணி 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முகமது அலி 28 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நடப்பு தொடரில் திருப்பூர் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

    மதுரை சார்பில் முருகன் அஷ்வின் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 152 ரன்கள் எடுத்தது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, இந்தியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகம் ஆகிறார்.

    அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த நிலையில் டாடிவான்சே மருமானி 32 ரன்னில் அவுட்டானார். வெஸ்லி மாதவரே 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதிரடியாக ஆடிய கேப்டன் சிக்கந்தர் ராசா 28 பந்தில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது.

    இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்த தொடருக்கான இந்திய அணியின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் வரும் 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளமும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வரும் 19-ம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதுகிறது. அடுத்த லீக் ஆட்டங்களில் இந்திய அணி 21-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 23-ம் தேதி நேபாளத்தையும் எதிர்கொள்கிறது.

    • 3 போட்டிகள் முடிவில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
    • டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    ஹராரே:

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 13 ரன் வித்தியாசத்திலும் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்திலும், 3வது ஆட்டத்தில் இந்திய அணி 23 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்திய அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகம் ஆகிறார்.

    • இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    • கெய்க்வாடுக்கு நிதியுதவி அளிக்கவேண்டும் என பிசிசிஐயிடம் கபில் தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அணி வீரர் அன்ஷுமன் கெய்க்வாடுக்கு நிதியுதவி அளிக்கவேண்டும் என பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    அன்ஷுமன் கெய்க்வாட் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்தார்.

    மொகிந்தர் அமர்நாத், சுனில் கவாஸ்கர், சந்தீப் பாட்டீல், திலீப் வெங்சர்க்கார், மதன்லால், ரவிசாஸ்திரி மற்றும் கீர்த்தி ஆசாத் போன்ற அவரது முன்னாள் அணியினர் கெய்க்வாட் சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகின்றனர் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த விவகாரத்தை பிசிசிஐ பரிசீலித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் கெய்க்வாட்டுக்கு நிதியுதவி அளிக்கும் என கபில்தேவ் குறிப்பிட்டார். இதுதொடர்பாக கபில் தேவ் கூறியதாவது:

    இது ஒரு சோகமானது மற்றும் மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. நான் அன்ஷுவுடன் சேர்ந்து விளையாடியதால் நான் வலியில் இருக்கிறேன். இந்த நிலைமையில் அவரைப் பார்க்க சகிக்க முடியவில்லை. யாரும் கஷ்டப்பட வேண்டாம். அவரை வாரியம் கவனித்துக் கொள்ளும் என்று எனக்குத் தெரியும்.

    அன்ஷுவுக்கு எந்த உதவியும் உங்கள் இதயத்தில் இருந்து வரவேண்டும். ரசிகர்கள் அவரைத் தவறவிட மாட்டார்கள், அவர் குணமடைய பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    துரதிர்ஷ்டவசமாக எங்களிடம் ஒரு அமைப்பு இல்லை. இந்த தலைமுறை வீரர்கள் நன்றாக பணம் சம்பாதிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. துணை ஊழியர்களுக்கும் நல்ல ஊதியம் கிடைப்பது நல்லது.

    எங்கள் காலத்தில் வாரியத்திடம் பணம் இல்லை. இன்று அது மூத்த வீரர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினால் அவர்கள் தங்கள் பணத்தை அங்கு வைக்கலாம். பிசிசிஐ அதைச் செய்யமுடியும் என்று நான் நினைக்கிறேன்.

    அவர்கள் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். நாங்கள் எங்கள் ஓய்வூதியத் தொகையை வழங்க தயார் என தெரிவித்தார்.

    ×