search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.
    • மழையால் ரத்தானால் இங்கிலாந்தின் சூப்பர் 8 கனவு சிதைந்து விடும்.

    ஆன்டிகுவா:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. இதில் 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, குட்டி அணியான ஓமனை ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) சந்திக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. துரதிர்ஷ்டவசமாக மழையால் அந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது.

    இதையடுத்து எஞ்சிய இரு லீக்கில் வென்றால் மட்டும் சூப்பர்8 சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற வாழ்வா-சாவா சிக்கலுக்கு மத்தியில் ஓமனுடன் இன்று களம் காணுகிறது. ஆனால் இந்த ஆட்டத்திற்கும் மழை ஆபத்து இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒரு வேளை இந்த ஆட்டமும் மழையால் பாதியில் ரத்தானால் இங்கிலாந்தின் சூப்பர் 8 கனவு சிதைந்து விடும்.

    இங்கிலாந்தை பொறுத்தவரை ஓமன் மற்றும் நமிபியாவை வீழ்த்த வேண்டும். அதே சமயம் ஆஸ்திரேலிய அணி கடைசி லீக்கில் ஸ்காட்லாந்தை சாய்க்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும்.

    அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு தேர்வாகும். ரன்ரேட்டில் ஸ்காட்லாந்து (+2.164) வலுவாக இருப்பதால் இங்கிலாந்து (ரன்ரேட் -1.800) இரு ஆட்டத்திலும் மெகா வெற்றியை பெற்றாக வேண்டும்.

    முன்னதாக கிங்ஸ்டனில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம்- நெதர்லாந்து (டி பிரிவு) அணிகள் மல்லுக்கட்டுகின்றன. தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் உள்ள இவ்விரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமாகும்.

    • இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 25-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா சார்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி வெறும் 9 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவர் தவிர ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    நேற்றைய போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. முன்னதாக 2014 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 3.2 ஓவர்கள் பந்துவீசி 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

    அந்த வகையில், டி20 உலகக் கோப்பை போட்டியில் 10-க்கும் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் மேற்கொண்டார். இதுதவிர டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்தார்.

    நேற்றைய போட்டியில் முதல் பந்தை வீசிய அர்ஷ்தீப் சிங் அமெரிக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

    முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை சேர்த்தது. அமெரிக்கா சார்பில் நிதானமாக ஆடிய ஸ்டீவன் டெய்லர் 24 ரன்களிலும், நிதிஷ் குமார் 27 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    இதைத் தொடர்ந்து இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் 50 ரன்களையும், ஷிவம் துபே 31 ரன்களையும் குவித்தனர்.

    • பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் அரைசதம் விளாசினார்.
    • அமெரிக்கா தரப்பில் சௌரப் நேத்ரவல்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, அமெரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்திலும், கடைசி பந்திலும் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் 10 ஓவரில் அமெரிக்கா 42 ரன்களை எடுத்தது.

    12-வது ஓவரில் 11 ரன்னும், 13-வது ஓவரில் 12 ரன்னும் எடுத்தது. நிதிஷ் குமார் 27 ரன்னிலும், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், அமெரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது.

    இந்தியா சார்பில் 4 ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 111 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலி களமிறங்கினர். விராட் கோலி 0 ரன்னிலும் ரோகித் 3 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த ரிஷப் 18 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனால் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியது. இதனையடுத்து துபே - சூர்யகுமார் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் இந்திய அணி 18.2 ஓவரில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 50 ரன்னிலும் துபே 31 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அமெரிக்கா தரப்பில் சௌரப் நேத்ரவல்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    • ஜம்மு-காஷ்மீரில் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு.
    • 9 பேர் பலியான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தில் ஷ்வ்கோரி கோவிலில் இருந்து வைஷ்ணவ தேவி கோவிலுக்கு பேருந்தில் 53 யாத்ரீகர்கள் சென்ற கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து பேருந்து போனி பகுதியில் உள்ள தெர்யாத் அருகே பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 41 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி "எல்லா கண்களும் வைஷ்ணவ தேவி தாக்குதல் மீது" என எழுத்தப்பட்ட போட்டோவை இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்துள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.

    காசாவின் ரபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ரபாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள். பெரும்பாலான மக்கள் தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தற்காலி முகாம் தீப்பிடித்து எரிந்து பலர் உயிரிழந்தனர்.

    அப்போது எல்லா கண்களும் ரஃபா மீது என்ற வாசத்துடன் ஒரு படம் இணைய தளத்தில் வைரலாக பரவியது. இதற்கு இஸ்ரேல் அக்டோபர் 7-ந்தேதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஒரு படத்தை வெளியிட்டிருந்தது.

    அந்த வகையில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

    ஹசன் அலியின் மனைவி சமியா இந்தியாவை சேர்ந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய அமெரிக்கா 110 ரன்களை எடுத்தது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, அமெரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்திலும், கடைசி பந்திலும் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் 10 ஓவரில் அமெரிக்கா 42 ரன்களை எடுத்தது.

    12-வது ஓவரில் 11 ரன்னும், 13-வது ஓவரில் 12 ரன்னும் எடுத்தது. நிதிஷ் குமார் 27 ரன்னிலும், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், அமெரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது.

    இந்தியா சார்பில் 4 ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 111 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • கிரிக்கெட் போட்டி 19-வது நூற்றாண்டில் டெஸ்ட் வடிவில் சர்வதேச போட்டியாக மாறியது.
    • 16-வது நூற்றாண்டில் இங்கிலாந்தால் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு போட்டியாக கருதப்படுகிறது.

    இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்பவர் ஜேஸ்பிரிட் பும்ரா. யார்க்கர், ஸ்விங், பவுன்ஸ் என பந்து வீச்சில் கிங்-ஆக திகழ்கிறார். டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்த நிலையில் பாலிவுட் நடிகரான ரித்தஷ் தேஷ்முக் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

    அந்த படம் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் ஆகும் இந்த சிற்பத்தை பார்க்கும்போது பும்ரா பந்து வீசும் சைகை பிரதிபலிப்பது போல் உள்ளது.

    கிரிக்கெட் போட்டி 16-வது நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 19-வது மற்றும் 20-வது நுற்றாண்டில் உலககளில் பல்வேறு நாடுகளில் விளையாடப்பட்டது. 19-வது நூற்றாண்டில் முதன்முறையாக டெஸ்ட் முறையில் கிரிக்கெட்டில் விளையாடப்பட்டது.

    ஆனால் 10-ம் நூற்றாண்டு படத்தை பதிவிட்டுள்ளதாக குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    • தொடக்க சுற்றின் பெரும்பாலான போட்டிகள் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
    • தற்காலிக பிட்ச் அமைக்கப்படுள்ள நிலையில், வீரர்களுக்கான வசதி மிகவும் குறைவு என ஐசிசி மீது புகார்.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் மூன்று போட்டிகளை நியூயார்க்கில் விளையாடுகிறது. இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில், இன்று 3-வது போட்டியில் அமெரிக்காவை எதிர்த்து விளையாடி வருகிறது.

    அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தொடக்க சுற்று போட்டிகள் நடத்தப்படுகிறது. தற்காலிக பிட்ச் உள்ளிட்ட மைதான வேலைகளை செய்த போதிலும் வீரர்கள் தங்கும் அறைகள், உடற்பயிற்சி செய்வதற்கான வசதிகள், மைதானத்திற்கு வெகு தொலைவில் ஓட்டம் போன்ற விமர்சனங்கள் பல்வேறு அணிகளால் முன்வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்திய அணிக்கு லாங் தீவில் ஓட்டல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் தரமான உடற்பயிற்சி கூடம் (ஜிம்) இல்லை எனத் தெரிகிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

    மேலும், நியூயார்க்கில் உள்ள கான்டியாக் பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தில் போதுமான வசதி இல்லாமலும் இந்திய வீரர்கள் அவதிப்படுகிறார்கள்.

    வீரர்கள் சிறந்த முறையில் உடற்பயிற்சி மேற்கொள்ள உள்ளூர் ஜிம்மில் இந்திய வீரர்களை உறுப்பினர்களாக்கி பயிற்சி மேற்கொள்ள பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளார்.

    ஆனால் வசதி குறைபாடு என இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இதுவரை புகார் ஏதும் செய்யப்படவில்லை. இலங்கை அணி தங்களுக்கான பாதகமான வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டதாக இந்நாட்டு மந்திரி புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    • இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்னில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்னில் வென்றது.

    இந்நிலையில், இந்தியா, அமெரிக்கா அணிகள் இன்று நியூயார்க்கில் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    • மும்பை இந்தியன்ஸ் அணி 4 இடத்தில் உள்ளது.
    • ஆர்சிபி அணி 2-வது இடத்தில் உள்ளது.

    உலகளாவிய முதலீட்டு வங்கி ஹௌலிஹான் லோகி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி ஐபிஎல் (இந்தியன் பிரிமீயர் லீக்) வணிக மதிப்பு இந்த வருடம் 6.5 சதவீதம் உயர்ந்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. அதேவேளையில் பிராண்ட் மதிப்பு 6.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் பிராண்ட் மதிப்பு 28 கோடி ரூபாய் ஆகும்.

    டாடா குரூப் ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற்றுள்ளது. இதற்காக 2024 முதல் 2028 வரை தோராயமாக 2500 கோடி ரூபாய் செலுத்த உள்ளது. இது கடந்த முறையைவிட சுமார் 50 சதம் அதிகமாகும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (23.1 கோடி அமெரிக்க டாலர்) பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த போதிலும் மிகவும் மதிப்புமிக்க அணியாக திகழ்கிறது. கடந்த ஆண்டை விட மதிப்பு 9 சதவீதம் அதிகரித்துள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியின் வளர்ச்சி 19.30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    ஆர்சிபி அணி (22.7 கோடி அமெரிக்க டாலர்) 2-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (21.6 கோடி அமெரிக்க டாலர்) 3-வது இடத்தை பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது இடத்திறகு பின்தங்கியுள்ளது.

    • முதலில் பேட் செய்த கனடா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து வென்றது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், கனடா அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த கனடா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் முகமது அமீர், ஹரிஸ் ராப் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முகமது ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 33 ரன் எடுத்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அரைசதம் அடிக்க 52 பந்துகளை எடுத்துக்கொண்டார். இதன்மூலம் அவர் மோசமான சாதனையை படைத்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மெதுவான அரைசதம் (பந்துகள் அடிப்படையில்) அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை ரிஸ்வான் (52 பந்துகள்) படைத்தார். இதற்கு முன் இந்தப் பட்டியலில் டேவிட் மில்லர் (50 பந்துகள் - நெதர்லாந்துக்கு எதிராக, 2024) முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
    • நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இதில் 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன.

    லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கும் முன்னேறும். இதுவரை 24 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

     தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை வெறும் 77 ரன்களிலும், நெதர்லாந்தை 106 ரன்களிலும் சுருட்டியது. வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இதேபோல், ஆஸ்திரேலியா அணி ஓமனை 39 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்திலும், நமீபியாவை 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வென்றது.

    இதன்மூலம் பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    பி பிரிவில் இடம்பெற்ற நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் பரிந்துரை செய்துள்ளது.
    • ஆய்வு செய்ய ஐ.சி.சி. அதிகாரிகள் பலர் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.

    லாகூர்:

    "மினி உலக கோப்பை" என அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு வங்காளதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென்ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது.

    கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை 8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் முதல் தடவையாக 2025-ல் நடத்துகிறது.

    ஒருநாள் போட்டித் தரவரிசையில் டாப் 8 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை கராச்சி, லாகூர், ராவல் பிண்டியில் நடத்த திட்டமிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் பரிந்துரை செய்துள்ளது.

    தொடக்க ஆட்டம், அரைஇறுதி உள்பட 3 போட்டிகள் கராச்சியிலும், இறுதிப்போட்டி உள்பட 7ஆட்டங்கள் லாகூரிலும், அரைஇறுதி உள்பட 5 போட்டிகள், ராவல் பிண்டியிலும் நடத்த முடிவு செய்துள்ளது.

    1996 உலக கோப்பைக்கு பிறகு முதல் ஐ.சி.சி. போட்டியை பாகிஸ்தானில் நடைபெறுவதால் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய ஐ.சி.சி. அதிகாரிகள் பலர் பாகிஸ்தான் சென்றுள்ளனர்

    இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பது உறுதியில்லை. மத்திய அரசின் அனுமதியை பொறுத்துதான் இருக்கிறது.

    இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை லாகூரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா பங்கேற்க மறுத்தால் கடந்ந காலங்களை போல இந்தியா ஆடும் போட்டிகள் வேறு நாட்டுக்கு மாற்றப்படும். 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×