search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • காலிறுதிச் சுற்று போட்டியில் இத்தாலி வீரர் முசெட்டி வென்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.

    இதில் முசெட்டி 3-6, 7-6 (7-5), 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் முசெட்டி, ஜோகோவிச்சுடன் மோதுகிறார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் காலிறுதியில் எலினா ரிபாகினா வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

    இதில் ரிபாகினா 6-3, 6-2 என எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    மற்றொரு காலிறுதியில் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார். இதில் கிரெஜ்சிகோவா 6-4, -6-7 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் எலினா ரிபாகினா, பார்பரா கிரெஜ்சிகோவாவை சந்திக்கிறார்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 121 ரன்னுக்கு சுருண்டது.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. இங்கிலாந்து அணி துல்லியமாக பந்து வீசியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி சிக்கித் திணறியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    அந்த அணியில் அதிகபட்சமாக மிக்கில் லூயிஸ் 27 ரன்னும், ஹோட்ஜ் 24 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் அரையிறுதியில் நுழைந்தார்.

    லண்டன்

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடந்து வருகிறது.

    இன்று நடைபெற இருந்த காலிறுதியில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான செர்பிய வீரர் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதுவதாக இருந்தது.

    இந்நிலையில், இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அலெக்ஸ் டி மினார் அறிவித்தார். இதன்மூலம் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இத்தாலி வீராங்கனை காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.

    இதில் பவுலினி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் குரோசிய வீராங்கனை வெகிக், ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் மோதுகின்றனர்.

    • சம்பவம் நடந்த போது வாகனத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
    • பயனர்கள் பலரும் இந்த சம்பவத்தை மிகவும் விசித்திரமானது என பதிவிட்டுள்ளனர்.

    இங்கிலாந்து கடற்கரையில் ஐஸ்கிரீம் வாகனம் ஒன்று கடலில் அடித்து செல்லப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள ஒரு பிரபல கடற்கரையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்வதற்காக வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    சம்பவத்தன்று கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஐஸ்கிரீம் வாகனத்தை கடலுக்குள் இழுத்து சென்றுள்ளது. இதை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த வாகனத்தை வெளியே இழுக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்களால் முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு ஐஸ்கிரீம் வாகனம் மீட்கப்பட்டது. சம்பவம் நடந்த போது வாகனத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. பயனர்கள் பலரும் இந்த சம்பவத்தை மிகவும் விசித்திரமானது என பதிவிட்டுள்ளனர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • காலிறுதி சுற்று போட்டிகளில் மெத்வதேவ், அல்காரஸ் வென்றனர்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-7 (7-9), 6-4, 7-6 (7-4), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார். இதில் அல்காரஸ் 5-7, 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், மெத்வதேவுடன் மோதுகிறார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் காலிறுதியில் குரோசிய வீராங்கனை வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் குரோசிய வீராங்கனையான டோனா வெகிக், நியூசிலாந்து வீராங்கனை லுலு சுன்னுடன் மோதினார்.

    இதில் வெகிக் முதல் செட்டை 5-7 என இழந்தார். இதையடுத்து சுதாரித்த அவர் 6-4, 6-1 என கைப்பற்றினார். இதையடுத்து, வெகிக் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    • 2021-க்கும் முன்னதாக 4 ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே வந்தனர்.
    • 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை 45,774 ஆக அதிகரித்தது.

    சமீப ஆண்டுகளில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறிய படகு மூலம் இங்கிலாந்து நாட்டிற்குள் அதிகமானோர் வரத் தொடங்கினர். 2021-க்கும் முன்னதாக நான்கு ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே சட்டவிரோதமாக குடியேறிய நிலையில் 2022-ம் ஆண்டு 45774 பேராக அது உயர்ந்தது.

    இதை கட்டுப்படுத்த முன்னாள் இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் புதிய சட்டம் கொண்டு ஒன்றை கொண்டு வந்தார்.

    இந்த புதிய சட்டத்தின்படி சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் குடிபெயர்ந்தவர்கள் விமானம் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    இந்நிலையில், சட்ட விரோதமாகப் பிரிட்டனுக்குள் வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் முந்தைய பிரதமர் ரிஷி சுனக்கின் திட்டத்தை ரத்து செய்வதாக பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் மிகவும் கவுரவமிக்கதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

    முதல் இரு செட்டை அல்காரஸ் கைப்பற்றினார். சுதாரித்து ஆடிய ஹம்பர்ட் 3வது செட்டை கைப்பற்றினார். 4வது செட்டை அல்காரஸ் வென்றார்.

    இறுதியில் அல்காரஸ் 6-3, 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இத்தாலி வீராங்கனை 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

    இதில் பவுலினி முதல் செட்டை 6-3 என எளிதில் வென்றார். இதையடுத்து சுதாரித்த மேடிசன் கீஸ் 7-6 (8-6) என போராடி கைப்பற்றினார்.

    3வது செட்டில் இருவரும் 5-5 என்ற புள்ளிக் கணக்கில் இருக்கும்போது மேடிசன் கீஸ் விலகினார். இதனால் பவுலினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், காலிறுதிக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் மிகவும் கவுரவமிக்கதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்தத் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை யூலியா புடின்ட்சேவா உடன் மோதினார்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 1-6, 2-6 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார். இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் யூலியா புடின்ட்சேவா 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ×