என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உண்டியல் காணிக்கை"
- 130 கிராம் தங்கமும் கிடைத்தது
- கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 108 திவ்யதேசங் களில் ஒன்றான லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு யோக நரசிம்மர் திருக்கோவில், யோக ஆஞ்சநேயர் திருக்கோவில், தக்கான்குளம் ஆஞ்சநேயர் கோவில், ஊர் கோவிலான லட்சுமி நரசிம்மர் கோவில்கள் உள்ளன.
கோவில்களில் வைக்கப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட உண் டியல்களை திருக்கோவில் ஆணையர் ஜெயா முன்னிலையில் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. இதில் உண்டியல் காணிக்கையாக 42 லட்சத்து 49 ஆயிரத்து 536 ரூபாய் பணமும், 130 கிராம் தங்கமும், 372 கிராம் வெள்ளியும் எண்ணப்பட்டு கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் சூப்பிரண்டு சுரேஷ், கிஷோர் மற்றும் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
- 188 கிராம் தங்கம், ஆயிரத்து 240 கிராம் வெள்ளி கிடைத்தது
- பணிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கம் உள்ளிட்ட கோவில்களில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
ஐப்பசி மாத பவுர்ணமி முடிந்த நிலையில் நேற்று காலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் காணிக்கை உண்டியல்கள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், கோயில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.
இதில் ரூ.2 கோடியே 24 லட்சத்து 41 ஆயிரத்து 224, 188 கிராம் தங்கம், ஆயிரத்து 240 கிராம் வெள்ளி உள்ளிட்டவைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
- உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
- ரூ.42 லட்சத்து 35 ஆயிரம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோ வில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 21 உண்டியல்கள் வைக்கப் பட்டு உள்ளன.
கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டிய ல்கள் ஒவ்வொரு மாதமும் திறக்கப்பட்டு எண்ண ப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
கோவில் செயல் அலுவ லர் மேகனா, பவானி சங்க மேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சுவாமி நாதன், சத்தியமங்கலம் அறநிலையத்துறை ஆய்வாளர் சிவ மணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இந்த பணியில் வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவ-மாணவர்கள், பக்தர்கள், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதில் ரொக்க பணமாக ரூ.42 லட்சத்து 35 ஆயிரத்து 150-ஐ காணிக்கையாக உண்டியலில் பக்தர்கள் செலுத்தி இருந்தனர். மேலும் 103 கிராம் தங்கம், 290 கிராம் வெள்ளி ஆகிய வற்றையும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
- எண்ணும் பணி வீடியோ பதிவு செய்யப்பட்டன
- 230 கிராம் தங்கம், 993 கிராம் வெள்ளி இருந்து
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் பக்தர்கள் ஒரு கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 ரூபாயை காணிக்கையாக அளித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் 14 கிலோமீட்டர் தூரமுள்ள அண்ணாமலையைச் சுற்றி உள்ள கோவில்களில் வைக்கப்பட்டுள்ள காணிக்கை உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன.
கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை உண்டியல்கள் எண்ணும் பணி நடந்தது.
இதில் ரூ.1 கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 ரூபாய் பணம், 230 கிராம் தங்கம், 993 கிராம் வெள்ளி ஆகியவற்றை பொதுமக்கள் காணிக்கையாக அளித்திருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.
- இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.86 லட்சம், 225 கிராம் தங்கம் கிடைத்தது.
- இந்த காணிக்கை எண்ணும் பணியில் ராஜபாளையம் சரக ஆய்வாளர் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம் மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக வழங்கும் பணம் மற்றும் நகைளை ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறந்து எண்ணப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பக்தர்கள் காணிக்கையை கோவிலில் உள்ள 11 நிரந்தர உண்டியல் மற்றும் 3 தற்காலிக உண்டியல் மற்றும் கோசாலை உண்டியல் 1 என மொத்தம் 15 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இதில் மதுரை கூடலழகர் திருக்கோயில் உதவி ஆணை யரும் செயல் அலுவலருமான செல்வி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையாளர் வளர்மதி (பொறுப்பு) ஆகியோர் முன்னிலையில் கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி ஆகியோர் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் மற்றும் பணம் எண்ணப் பட்டன.
மேலும் கோவிலில் மண்டபத்தில் வைத்து உண்டியல் எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ.86 லட்சத்து 37 ஆயிரத்து 70 ரொக்கமும் 225 கிராம் தங்கமும், 133 கிராம் வெள்ளியும் இருந்தது.
இந்த காணிக்கை எண்ணும் பணியில் ராஜபாளையம் சரக ஆய்வாளர் மகளிர் சுய உதவி குழுவினர் பக்தர் சேவா சங்க உறுப்பின்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
- கடந்த மாதம் 20-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது
- உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 69 லட்சத்து 29 ஆயிரத்து 944 வருவாய் கிடைத்தது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 20-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்றும் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 69 லட்சத்து 29 ஆயிரத்து 944 வருவாய் கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 826 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்கத்திலான பொருட்கள் 925 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 12 கிலோ 162 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
- விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்.
- இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வாடிக்கை.
அமராவதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது.
இந்நிலையில், கோவில் அதிகாரிகள் சார்பில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடந்தது. அப்போது உண்டியலில் இருந்த காசோலை ஒன்றை எடுத்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தக் காசோலையில், 100 கோடி ரூபாய்க்கு கோவில் பெயரில் காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில், பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு காசோலை என தெரிய வந்தது. காசோலை எம்விபி டபுள் ரோடு கோடக் வங்கி கிளையின் பெயரில் இருந்தது. அதிலும் வராகலட்சுமி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் ரூ10 என்றும், பிறகு அதை அடித்து 100 கோடி எனவும் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் வங்கிக்குச் சென்று அந்த சேமிப்பு கணக்கு குறித்த தகவல்களை விசாரித்தனர். அந்த சேமிப்பு கணக்கில் 17 ரூபாய் மட்டும் இருப்பு இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, காசோலையை காணிக்கையாக போட்டவரைக் கண்டுபிடித்து, இனி இதுபோன்ற செயலில் ஈடுபடாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க கோவில் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கோவில் உண்டியலில் 100 கோடி ரூபாய்க்கு காசோலை போட்ட நபரின் செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடைந்தனர்.
- பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 26, 27 ஆகிய 2 நாட்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
- உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 874 வருவாயாக கிடைத்தது.
பழனி :
இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது. அதன்படி பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 26, 27 ஆகிய 2 நாட்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று உண்டியல் காணிக்கை பணி தொடங்கியது. இதில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
முன்னதாக கோவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணி அளவிடும் பணி நடைபெற்றது.
உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 874 வருவாயாக கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர். இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 878 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 1025 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 13 கிலோ (13573) கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
- ஜூன் மாதம் 20,00,187 பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்தனர்.
- மே மாதம் ரூ.109.99 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருமானம் ரூ.100 கோடிக்கு மேல் வந்துள்ளது. கடந்த ஜூன் மாதமும் 100 கோடியை தாண்டியது.
ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 20,00,187 பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்தனர். 11-ந் தேதி 92,238 பேரும், 10-ந் தேதி 88,626 பேரும், 17-ந் தேதி 87,762 பக்தர்களும், 25-ந் தேதி 87,407 பக்தர்களும் தரிசனம் செய்தனர்.
18-ந் தேதி அன்று அதிகபட்சமாக ரூ.4 கோடியே 59 லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.123.07 கோடி, பிப்ரவரியில் ரூ.114.29 கோடி, மார்ச் மாதத்தில் ரூ.120.29 கோடி, ஏப்ரலில் ரூ.144.12 கோடி, மே மாதம் ரூ.109.99 கோடி, ஜூன் மாதம் ரூ.116 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜூலை 15-ந்தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து.
- சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருமலை :
திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று காலை பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்றுப் பேசினார்.
அவா் பேசியதாவது:-
திருமலையில் பக்தர்களுக்கு கோடை முன்னேற்பாடுகளை செய்வதில், தேவஸ்தானத்தின் அனைத்துத் துறைகளும் எந்தவித சிரமமும் இன்றி ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதற்காக, அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால், வி.ஐ.பி. புரோட்டோகால் தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதற்காக சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், அதிக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
இலவச தரிசன டோக்கன்கள் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் நெரிசல் அதிகமுள்ள நேரத்தில் தரிசனத்துக்காக கிட்டத்தட்ட 2 நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. இதுபோன்ற நேரத்தில் பக்தர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
திருமலையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மாநில உள்துறை முதன்மைச் செயலாளர் ஹரிஷ்குமார்குப்தா மேற்பார்வையில், திருமலையில் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் 2 நாட்கள் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்
டிரைவர்கள் கவனக்குறைவு மற்றும் வாகனங்களின் மோசமான நிலை காரணமாக திருப்பதி மலைப்பாதைகளில் சமீப காலமாக விபத்துகள் நடந்தன. விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் திருப்பதி தேவஸ்தானம் ஒருங்கிணைந்து நீண்ட கால திட்டங்களை தயாரித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் நிர்ணயித்த வேகத்தின்படி மெதுவாக ஓட்டுமாறு கார் டிரைவர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகளை கேட்டுக்கொள்கிறேன். வாகனங்களை ஓட்டும்போது செல்போனில் பேசாமல், திருப்பங்களில் வேகத்தைக் கட்டுப்படுத்தி, முந்தி செல்லாமல் ஓட்ட வேண்டும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதத்தில் 23 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.109.99 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்துள்ளது. 1 கோடியே 6 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. 56 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 11 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆனது.
- இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த மாதம் முதல் பக்தர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவு 2 மடங்காக அதிகரித்தது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும், விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் உண்டியல் வருவாய் குறைந்து காணப்படுகிறது.
ஆங்கில வருட பிறப்பு முதல் ஏப்ரல் மாதம் வரை உண்டியல் வருவாய் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.4 கோடியாக இருந்தது.
கடந்த மாதம் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதால் சுமார் 35 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். இருப்பினும் மே மாத உண்டியல் வருவாய் ரூ.110 கோடி மட்டுமே வசூலானது. மற்ற மாத உண்டியல் வசூலைவிட இது குறைவாகும்.
திருப்பதியில் நேற்று 62,407 பேர் தரிசனம் செய்தனர். 33,895 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இதனால் இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆனது. ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் பக்தர்கள் சுமார் 6 மணி நேரமும் இலவச நேர ஒதுக்கீட்டில் வந்த பக்தர்கள் 10 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- கடந்த 5-ந் தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடந்தது
- 165 கிராம் தங்கம், 2 கிலோ 213 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தின மும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாம லைக்கு வந்து கிரிவலம் செல்வார்கள். இதில் சித்ரா பவுர்ணமி விசேஷமாகும். அன்றைய தினம் திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும். அதன்படி கடந்த 5-ந் தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடந்தது.
ஒவ்வொரு பவுர்ணமி முடிந்த பின்னரும் கோவில் உண்டி யல் காணிக்கை எண்ணப்படும். அதன்படி இந்தமாதம் பவுர் ணமிமுடிவடைந்ததையொட்டி நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் வளாகங்களில் உள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள உபகோவில் உண்டியல்கள் என மொத்தம் 70 உண்டியல்கள் அருணாச லேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டு இணை ஆணையர் குமரேசன் (பொறுப்பு) முன்னிலையில் காணிக்கை எண்ணப் பட்டது.
இதில் ரூ.2 கோடியே 16 லட்சத்து 4 ஆயிரத்து 221-ஐ பக்தர் கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 165 கிராம் தங்கம், 2 கிலோ 213 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்