என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்
நீங்கள் தேடியது "ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்"
நாகை, கீழையூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று 8-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 8-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 8-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர் களுக்கு சிறப்பு தேர்வு நடத்த வேண்டும்.
முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். கோட்ட வளர்ச்சி அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மகளிர்குழு அமைப்பாளர் ஜம்ருத்நிஷா, வட்டார தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் வளர்மாலா, பொருளாளர் மணிவண்ணன், மாவட்ட துணை தலைவர் குணசேகரன், ஊராட்சி செயலாளர் சரவண பெருமாள், ஓவர்சீயர் சங்க மாவட்ட செயலாளர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டார தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜோதிமணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நாகை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தொடர்ந்து 8 நாட்களாக பணிக்கு வராததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு பணிகள் நிமித்தமாக வரும் பொதுமக்களும் சான்றிதழ்கள் உள்ளிட்டவைகள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்:
ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 25 பெண்கள் உள்பட 155 பேர் கைது செய்யப்பட்டனர்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதியம் மாற்றம் வழங்க வேண்டும். அதற்கான அரசாணையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மூன்றாவது நாளான நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலளளர் காமராஜ், துணைத்தலைவர் சையத்பயாஸ் அகமத், ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் கோபாலகண்ணன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார். #tamilnews

26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்:
26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஊராட்சி செயலாளருக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்தது.
அதன்படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க வட்ட பொருளாளர் கட்டக்குடி டி.முருகேசன் தலைமை தாங்கினார். வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் பேசினார்.
இதில் அரசு ஊழியர் சங்க வட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன், சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி முருகையன், கணினி உதவியாளர்கள் சங்க நிர்வாகி மணிகண்டன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் ராஜா, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி எழுத்தர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்கி அரசாணை வழங்கிட வேண்டும். கணினி உதவியாளர்கள் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். பணி மேற்பார்வையாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
கரூர்:
ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தப்பட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். கரூர் மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், தாந்தோன்றிமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை மற்றும் கடவூர் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஊராட்சி வளர்ச்சி பிரிவு, மாவட்ட ஊராட்சி தணிக்கை பிரிவு ஆகிய பிரிவுகளில் உள்ள 534 பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 100 நாள் வேலை திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டும் பணி உள்பட துறைரீதியான அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.
கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும், அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்பட்டால் போராட்டம் வாபஸ் பெறப்படும் என சங்க வட்டாரத்தில் தெரிவித்தனர். மேலும் சங்கத்தின் தலைமை நிர்வாகிகள் அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலாளர்கள் வரை மொத்தம் 247 பேர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
ஊராட்சி செயலாளர்களுக்கு, பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வு கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த உத்தரவிட வேண்டும்.
பல மாவட்டங்களில், எவ்வித விளக்கமும் கோராமல் ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். காலிப்பணி இடங்களை நிரப்பிட வேண்டும். தனி நபர் இல்ல கழிவறைக்கு வழங்கும் மானியத்தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் ஆகியவை உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று இச்சங்கத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலாளர்கள் வரை மொத்தம் 247 பேர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இதனால் அனைத்து பணிகளும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கீழையூரில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 26 அம்க கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பல மாவட்டங்களில் ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.60-ஐ ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.
ஊராட்சி ஒன்றியங்களின் புதிய கணினி உதவியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஊராட்சி செயலாளராக பணியாற்றி 2003-ம் ஆண்டுக்கு முன்பு பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் முந்தைய பணி காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பொறியாளர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். கோட்ட வளர்ச்சி அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வேலை நிறுத்தப்பட்ட போராட்டம் காரணமாக கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அலுவலர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது.

27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
ஊட்டி:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பது உள்பட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் நேற்று பணிக்கு வராமல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி செயலர்களுக்கு அரசு ஏற்றுக்கொண்ட பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர், குந்தா ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும், ஒன்றிய பணி மேற்பார்வையாளருக்கு அளவீடு மற்றும் மதிப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும், கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளருக்கும் பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், இளநிலை பொறியாளர்களுக்கும் முறையான ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அலுவலர்கள் பணிக்கு வராததால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கிராம ஊராட்சி பிரிவு, வளர்ச்சி பிரிவு உள்ளிட்ட பிரிவு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி முகமை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

×

X