search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரித்து கொலை"

    • மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
    • 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மராட்டிய மாநிலத்தில் கட்சிரோலி என்ற பகுதி இருக்கிறது. இது மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இங்குள்ள பர்சேவாடா குக்கிராமத்தில் பழங்குடியின பெண்கள் 2 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

    ஜம்னி தெலமி (வயது 52), தேவு அட்லமி (57) ஆகிய 2 பேரும் மாந்தீரிகம் செய்வதாக அந்த கிராம பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டனர்.

    இதை தொடர்ந்து 2 பெண்களும் 3 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்டு 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு காட்டுக்குள் இழுத்து செல்லப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்.

    இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் உயிரோடு எரிக்கப்பட்ட பெண்ணான ஜம்னி தெலமி கணவர் திவாகர் மகன் தேவாஜி ஆகியோரும் அடங்குவர்.

    • ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் விரைந்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், முஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புடானில் உள்ள நைத்துவா கிராமத்தில், மது அருந்துவதை தடுத்த மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட முனீஸ் சக்சேனா மதுவுக்கு அடிமையானவர். நேற்று இரவு முனீஸ் சக்சேனா குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார்.

    அவரது மனைவி ஷனோ (40), முனீஸ் மேலும் மது அருந்துவதை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனீஸ், தனது மோட்டார் பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து, ஷனோ மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

    இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷனோவின் மாமியார் முன்னி தேவி, ஷனோவை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில், அவருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது.

    ஷனோ தீயில் எரிவதை கண்டு அவரது குழந்தைகள் கத்தி கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் தீயை அணைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஷவேனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அவரது மாமியார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்போது தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினர்.

    • விசாரணையில் தளி தைல மரத்தோப்பில் எரித்துக் கொலை செய்யப்பட்டவர் அவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
    • தனிப்படை போலீசார் பெங்களுர் விரைந்து சென்று அங்குள்ள சுரேஷ்பாபுவின் நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக் கோட்டை வட்டம் தளி அருகே ஒசபுரம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள தைல மரத்தோப்பில், உடல் எரிந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, தளி போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள மரத்தின் அருகே, பாலித்தின் பையில் வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இந்த கிராமம், கர்நாடக மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், கொலையானவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து, கர்நாடக மாநில எல்லையில் உள்ள போலீஸ் நிலை யங்களுக்கு தகவல் தெரிவித்து, விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரு ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த லூர்து சாமி மகன் சுரேஷ்பாபு என்கிற அலுமினிய சாமி (45) என்ற தொழிலாளி, மாயமானதாகவும், பெங்களூரு கெங்கேரி போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் தளி தைல மரத்தோப்பில் எரித்துக் கொலை செய்யப்பட்டவர் அவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, அவர் எதற்காக கொலை செய் யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிபடை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பெங்களுர் விரைந்து சென்று அங்குள்ள சுரேஷ்பாபுவின் நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    • அப்போது உடல் அழுகிய நிலையில் இருந்தது.
    • மர்ம நபர்கள் கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து எரித்தது தெரியவந்தது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் கிடப்பதாக உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, உத்தனப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் குமுதா, வருவாய் அலுவலர் ராஜக்குமார் ஆகியோர் விரைந்து சென்று பார்வை யிட்டனர்.

    அப்போது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரை மர்ம நபர்கள் கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து எரித்தது தெரியவந்தது.

    இதனால் அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரக்காணம் அருகே கணவன் மனைவியை அடித்து எரித்து கொன்றதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு (வயது 62). இவரது மனைவி ஞானம்மாள் (60). இவர் நேற்று மாலை வீட்டில் உடல் எரிந்த நிலையில் மர்மமானமுறையில் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இறந்து கிடந்த ஞானம்மாள் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டியின் கணவர் செல்லக்கண்ணு போலீசாரிடம் தெரிவிக்கையுல் தனது மனைவியுடன் வாய்தகராறு ஏற்பட்டதாகவும், இதில் மனம் உடைந்த ஞானம்மாள் வீட்டில் இருந்த மண்எண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை கொண்டார் என கூறினார்.

    இதையடுத்து போலீசார் ஞானம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலம் கனக செட்டிக்கு ளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரி சோதனையில், ஞான ம்மாகள் அடித்து கொலை செய்ய ப்ப ட்டு எரிக்க ப்பட்டு ள்ளது தெரிய வந்தது. இதனை த்தொட ர்ந்து ஞானம்மா ளின் கணவர் செல்லக்கண்ணுவை போலீஸ் நிலையத்தில் வைத்து மரக்காணம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • போலீசார் எலும்புக்கூடுகளை சேகரித்து விசாரணை.
    • 3 பேர் சிக்கினர்.

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த நாவல்பாக்கம் கிராமம் அருகே குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தில் எரிந்த நிலையில் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தெள்ளார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் எலும்புக்கூடுகளை சேகரித்து விசாரணை செய்தனர்.

    எரிந்த நிலையில் டி-ஷர்ட்டும் மற்றும் கடை சாவி இருசக்கர வாகன சாவி ஆகியவை அங்கு கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்ததில் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மளிகை கடை வியாபாரி ஏழுமலையின் மகன் விஜய் (வயது 22) என்பது தெரியவந்தது. அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மளிகை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பாமல் காணாமல் போனது தெரியவந்தது.

    போலீசார் இதுகுறித்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விஜயை கொலை செய்துவிட்டு அவருடைய இரு சக்கர வாகனத்தை அருகே உள்ள கிணற்றில் வீசியதாக தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கிணற்றில் தீயணைப்பு வீரர்களை கொண்டு இருசக்கர வாகனத்தை வெளியே எடுத்தனர்.மேலும் போலீசார் விசாரணையில் கார் வாங்குவதில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக விஜய்யை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாசரேத்தில் மனவளர்ச்சி குன்றிய மகனை தந்தையே எரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாசரேத்:

    நாசரேத் அருகே பாட்டக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40) ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி சிவகனி. இவர் அங்கன்வாடி சமையலர். இவர்களுக்கு சத்யகோமதி (12), மீனாட்சி கீர்த்தனா (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கச்சனாவிளையில் உள்ள பள்ளியில் சத்யகோமதி 7-ம் வகுப்பும், மீனாட்சி கீர்த்தனா 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் முத்துக்குமார் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் அவருடைய 14 வயது மகன் ஹரி பிரசாத் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான்.

    நள்ளிரவில் மதுபோதையில் கட்டிலுக்கு முத்துக்குமார் தீ வைத்ததாகவும், பின்னர் போதையில் அந்த பகுதியிலேயே தூங்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கட்டிலில் படுத்து இருந்த ஹரி பிரசாத் அப்படியே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த சிவகனி நேற்று காலையில் வீட்டுக்கு வந்தார். அங்கு கட்டிலுடன் தனது மகன் எரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல் கருகி கிடந்த ஹரி பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நாசரேத் போலீசார் முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

    ஹரி பிரசாத் சிறுவயதில் இருந்தே மூளை வளர்ச்சி குறைபாடு உடைய வாய் பேச முடியாது, காது கேட்காது. இதையடுத்து பல ஆண்டுகளாக அவன் கட்டிலில் படுத்தபடுக்கையாக உள்ளான். இதனால் அவன் படும் வேதனைகளை பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. தொடர்ந்து மருத்துவம் பார்க்க என்னிடம் பணவசதி இல்லை. 

    இந்நிலையில் எனக்கும் எனது மனைவியின் அண்ணன் சாமுவேல் பட்டுராஜ் என்பவருக்கும் இடையே தோட்டம் வாங்கியது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படும். இதேபோல் நேற்று முன்தினமும் எனக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த நான் ஹரி பிரசாத்தை கொலை செய்துவிட்டு பலியை சாமுவேல் பட்டுராஜ் மீது போட்டு அவரை சிக்க வைக்க முடிவு செய்தேன். 

    இதை தொடர்ந்து எனது மகன் படுத்திருந்த கட்டிலுக்கு தீ வைத்தேன். வாய் பேச முடியாததால் அவனால் சத்தம்போடமுடிய வில்லை. இதையடுத்து தீயில் கருகி அவன் இறந்தான். உடனடியாக நான் அங்கிருந்து தப்பியோடிவிட்டேன். ஆனால் இடையன்விளை ரெயில்வே கேட் அருகே நின்றபோது போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    தந்தையே மனவளர்ச்சி குன்றிய மகனை எரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×