search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் டிரைவர்"

    மீனாட்சிபேட்டையில் கார் டிரைவர் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது45). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ஆனந்தகுமார் தனது மனைவி வனிதாவுடன் கோரிமேடு அருகே மீனாட்சிபேட்டை பாரதிதாசன் வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஆனந்தகுமார் கார் டிரைவராக வேலைபார்த்து வந்தார். 2 மகன்களும் கடலூரில் உள்ள வனிதாவின் தாய் வீட்டில் தங்கி படித்து வந்தனர்.

    வனிதா அவ்வப்போது தாய் வீட்டுக்கு சென்று மகன்களை பார்த்துவிட்டு வருவார். அதுபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்ற வனிதா அங்கேயே தங்கி இருந்தார். இதையடுத்து கடந்த 15-ந்தேதி ஆனந்தகுமார் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் மகன்களை பார்த்து விட்டு மீனாட்சிபேட்டையில் உள்ள வீட்டுக்கு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வனிதா கணவரை பார்க்க வீட்டுக்கு வந்தார். ஆனால் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வனிதா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்ட நிலையில் கணவர் பிணமாக தொங்குவதை கண்டு வனிதா அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குபதிவு செய்து ஆனந்தகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ. கார் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகன் கார்த்திக் (வயது 27), இவர் கருணாஸ் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவர் ஆவார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாங்குநேரி அருகே அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டது. இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கருணாஸ் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்திக் மற்றும் சிலர் சேர்ந்து பஸ்கள் மீது கல்வீசியது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து கார்த்திக் மற்றும் சிலரையும் நாங்குநேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது கார்த்திக் ஜாமீனில் விடுதலையாகி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே கார்த்திக் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் போலீசார் இரவு நேரங்களில் சோதனை செய்ய வந்திருப்பதாக கூறி வந்துள்ளனர்.

    இதனைதொடர்ந்து கார்த்திக், மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை (28), சுப்பையா (18) ஆகிய 3 பேரும் நேற்று இரவில் நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். ஜாமீனில் வந்த பின்னரும் எங்களை ஏன் தொந்தரவு செய்தீர்கள் என்று போலீசாரிடம் கேட்டுள்ளனர்.

    போலீசார் 3 பேரையும் வெளியேறும் படி கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் போலீசார் 3 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த கார்த்திக், சுப்பையா, சாமிதுரை மூவரும் திடீர் என தாங்கள் கொண்டு வந்திருந்த மண் எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    இதைப்பார்த்த பொதுமக்கள் மூவரையும் மீட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுப்பையா மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் நாங்குநேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    கள்ளக்குறிச்சியில் கார் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 1/2 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டு ரங்கன் (51). கார் டிரைவர். இவர் நேற்று மாலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது குடும்பத்தினரும் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர்.

    இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நேற்று நள்ளிரவு பாண்டுரங்கன் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.

    வெளியூருக்கு சென்றிருந்த பாண்டுரங்கனின் குடும்பத்தினர் இன்று அதிகாலை வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

    மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகளும் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து பாண்டுரங்கனுக்கு செல்போன் மூலம் அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசில் பாண்டுரங்கன் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பால முரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
    முத்துப்பேட்டை அருகே தி.மு.க. எம்.எல்.ஏ.கார் டிரைவர் குளத்தில் மூழ்கி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள பண்ணைபொதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 35). இவருடைய மனைவி செந்தமிழ்செல்வி. இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஜீவானந்தம், திருத்துறைப்பூண்டி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ. ஆடலரசனின் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் ஜீவானந்தம் நேற்று முன்தினம் அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்தபோது கரையில் மோட்டார் சைக்கிள் மட்டும் நின்றது.

    இதையடுத்து உறவினர்கள் குளத்தினை சுற்றி பார்த்தபோது ஜீவானந்தத்தின் உடல் தண்ணீரில் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்த எடையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ஜீவானந்தம் குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பலியானது தெரிய வந்துள்ளது. 
    மோட்டார்சைக்கிள் மீது கார் உரசியதால் ஏற்பட்ட தகராறில் மருத்துவமனை ஊழியரை தள்ளிவிட்டதால் லாரி மோதி அவர் பலியானார்.
    பூந்தமல்லி:

    தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு, ராம்ஜி நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 42). தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை அவர் குன்றத்தூர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். பெரியார் நகர் பஸ் நிலையம் அருகே வந்த போது அவ்வழியே சென்ற கால்டாக்சி ஒன்று சண்முகத்தின் மோட்டார் சைக்கிள் மீது லேசாக உரசியது.

    இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் சண்முகத்துக்கும், கால் டாக்சி டிரைவர் மாங்காட்டை சேர்ந்த அப்துல் கரீமுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை கண்டு அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் 2 பேரையும் சமாதானம் செய்தனர்.

    அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் சண்முகத்தை தள்ளியதாக தெரிகிறது. இதில் நிலைகுலைந்த அவர் சாலையோரத்தில் தடுமாறி நின்றார். அந்த நேரத்தில் குன்றத்தூர் நோக்கி சென்ற லாரி சண்முகம் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் மகாதேவன், கால் டாக்சி டிரைவர் அப்துல் கரீம் ஆகியோரிடம்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூட்டத்தில் சமாதானம் பேசிய போது சண்முகத்தை தள்ளி விட்டது யார் என்றும் விசாரணை நடக்கிறது. #tamilnews
    பாவூர்சத்திரம் அருகே, கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பாவூர்சத்திரம்:

    தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரை சேர்ந்தவர் சங்கர்ராஜ் மகன் சரவணன் (வயது 32). இவர் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள மகிழ்வண்ணநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்த சுப்புகுட்டி என்பவருடைய மகள் முத்துச்செல்விக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது.

    சரவணன் சென்னையில் இருந்து அவ்வப்போது கீழப்புலியூர் வந்து தங்கிச் செல்வார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துச்செல்வி மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் சென்னையில் இருந்து ஊருக்கு வந்த சரவணன், மனைவி முத்துச்செல்வியை தேடி மகிழ்வண்ணநாதபுரத்துக்கு வந்துள்ளார். மனைவியை தன்னுடன் ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார். இதற்கு முத்துச்செல்வி வர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சரவணன் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சரவணன் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    திண்டுக்கல் அருகே இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் - கரூர் சாலை எரமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் புவனா (வயது 16). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் மகன் கனகபாண்டி (24). இவர் டாடா மேஜிக் வாகனம் ஓட்டி வருகிறார்.

    இருவரும் கடந்த சில நாட்களாக பேசி பழகி வந்துள்ளனர். கனகபாண்டி காதலிப்பதாக புவனாவிடம் கூறி வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்து கொண்டு இருந்த புவனாவை தனது வேனில் ஏற்றி தனியார் கல்லூரி அருகே அழைத்துச் சென்றார்.

    ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்தார். அதன் பின்னர் வீட்டுக்கு போக வேண்டும் என புவனா கூறவே சிறிது நேரம் கழித்து தானே கொண்டு போய் விடுவதாக கூறியுள்ளார்.

    அப்போது மழை பெய்யவே அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இரவு முழுவதும் புவனாவிடம் ஆசை வார்த்தை பேசியபடியே கனகபாண்டி உல்லாசமாக இருந்துள்ளார்.

    வேலைக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பாததை கண்டு அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடிப்பார்த்த அவரது பெற்றோர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அதிகாலையில் புவனாவை தனது நண்பரான சீனிவாச நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (18) என்பவரை வரவழைத்து அவரது மோட்டார் சைக்கிளில் வீட்டில் விடுமாறு கூறியுள்ளார். மோட்டார் சைக்கிளில் புவனாவை அழைத்துச் சென்ற ஸ்டீபன் ராஜ் பாடியூரில் உள்ள உறவினர் வீட்டில் அவரை விட்டுச் சென்று விட்டார். உடல் சோர்வாக காணப்பட்ட புவனாவை உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்த போது அவர் நடந்த விபரங்களை கூறியுள்ளார். 

    இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி. பாலகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் மும்தாஜ்மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணை கற்பழித்த கனகபாண்டியையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஸ்டீபன் ராஜையும் கைது செய்தனர்.

    கனகபாண்டி மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாரின் கார் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    கோவை:

    கோவை ராமநாதபுரம், ராமலிங்கஜோதி நகரை சேர்ந்தவர் சிவகுமார், சலவை தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 35). ஜெயந்தி அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பாத்திரம் கழுவுதல் போன்ற வீட்டுவேலைகள் செய்துவந்தார். கடந்த 17-ந் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயந்தி திடீரென்று மாயமானார்.

    அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து சிவகுமார் ராம நாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

    இந்த நிலையில் சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் உள்ள சாக்கடையில் சாக்குமூட்டைக்குள் ஒரு பிணம் கிடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் காணாமல்போன ஜெயந்தி என்பது தெரிந்தது.



    போலீசார் ஜெயந்தி வீட்டில் இருந்த செல்போனை ஆய்வு செய்ததில், அதே பகுதியை சேர்ந்த மணிவேல் (34) என்பவர் கடைசியாக பேசியது தெரியவந்தது. உடனே போலீசார் மணிவேலை பிடித்து தீவிர விசாரணை செய்தனர். அப்போது அவர், ஜெயந்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து போலீசார் மணிவேலை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் ஜெயந்தியை கொலை செய்தது குறித்து அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது:-

    மணிவேலின் சொந்த ஊர் திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள எத்தரைபாளையம். இவர் ராமநாதபுரம் ராமலிங்கஜோதி நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். என்.என்.வி. கார்டனில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக கார் டிரைவராக வேலை செய்துவந்தார்.

    தற்போது சுந்தரம் தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டார். இதனால் வீட்டை மணிவேல் கவனித்து வந்தார். அப்போது அவர் ஜெயந்தியிடம் தொடர்புகொண்டு, வீட்டை சுத்தம் செய்ய வருமாறு கூறினார். அதன்படி அவர் கடந்த 17-ந் தேதி மாலையில் அங்கு சென்று வீட்டை சுத்தம் செய்தார். அப்போது மணிவேல், ஜெயந்தியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி அவரை கடுமையாக திட்டினார். தனது ஆசைக்கு இணங்க அவர் மறுத்ததால், மணிவேலுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர் ஜெயந்தியை பிடித்து கீழே தள்ளியதில் மயக்கம் அடைந்தார். பின்னர் ஜெயந்தி கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    கொலையை மறைக்கவும், தன்மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ஜெயந்தி அணிந்திருந்த 4 பவுன் நகையை திருடிக் கொண்டார். பின்னர் பிணத்தை சாக்குமூட்டைக் குள் வைத்து கட்டி சாக்கடையில் வீசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் ஜெயந்தியிடம் செல்போனில் பேசியதால் சிக்கிக்கொண்டார்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    இந்த கொலையை மணிவேல் மட்டும்தான் செய்தாரா? அல்லது வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×