search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்ப தகராறு"

    • பிள்ளைகளுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.
    • கணவன்-மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை பகுதியில் உள்ள பெலவர்த்தியை அடுத்த காட்டூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 72), விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி (63). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ராமமூர்த்தி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவியிடம் பிள்ளைகளுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கணவன்-மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த, ராமமூர்த்தி அருகில் கிடந்த கட்டையால் மனைவி லட்சுமியை சரமாரியாக தாக்கினார்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத அவர், கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து மகராஜகடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமமூர்த்தியை கைது செய்தனர்.

    மகராஜகடை அருகே குடும்ப தகராறில் மூதாட்டியை அவரது கணவரே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சஜ்ஜத்துக்கும், மனைவி கவுசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சஜ்ஜத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் அலிபூரைச் சேர்ந்தவர் சஜ்ஜத் கோகர். இவரது மனைவி கவுசர் (வயது 42). இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்தனர்.

    இவர்கள் அனைவருமே 8 மாதம் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் ஆவர். இந்தநிலையில் சஜ்ஜத் கூலி வேலை பார்த்து வந்தார். ஆனால் தனது குடும்பத்தை காப்பாற்றக்கூடிய அளவுக்கு அவருக்கு போதிய வருமானம் இல்லை என கூறப்படுகிறது.

    இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் தனது குழந்தைகளுக்கு வயிறார உணவு கூட வழங்க முடியவில்லையே என்ற மன உளைச்சலில் சஜ்ஜத் இருந்துள்ளார்.

    இந்தநிலையில் சஜ்ஜத்துக்கும், மனைவி கவுசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த சஜ்ஜத் வீட்டில் இருந்த கோடரியை எடுத்து தனது மனைவியை வெட்டிக் கொன்றார்.

    மேலும் ஆத்திரம் அடங்காத அவர் பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் தனது 7 குழந்தைகளையும் அதே கோடரியால் சரமாரியாக வெட்டினார். இதில் அந்த குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதனையடுத்து சஜ்ஜத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தைகளை தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு பலுசிஸ்தான் மாகாண முதல்-மந்திரி மரியம் நவாஸ் ஆழ்ந்த தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

    • மகள் விமலா தேவி திருமணமாகி சென்னையில் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார்.
    • கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய இன்னாசிமுத்துவை தேடிவந்தனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இன்னாசிமுத்து (வயது 56). பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்தார்.

    இவரது மனைவி மருதம்மாள் (54). இவர்களது மகள் விமலா தேவி திருமணமாகி சென்னையில் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இன்னாசிமுத்து மற்றும் அவரது மனைவி மருதம்மாள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இன்னாசிமுத்து மனைவியை வெட்டிக்கொலை செய்தார்.

    நேற்று காலை இன்னாசி முத்து வீட்டுக்கு சென்ற மருதம்மாளின் தம்பி சின்னமருது, சகோதரி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இன்னாசிமுத்துவிடம் தட்டிக் கேட்டார்.

    அப்போது அவரையும் இன்னாசி முத்து அரிவாளால் வெட்டினார். இதில் காயம் அடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய இன்னாசிமுத்துவை தேடிவந்தனர்.

    இந்நிலையில், பாண்டவர்மங்கலம் அருகே மயங்கி நிலையில் இன்னாசிமுத்து கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மனைவியை கொலை செய்து விட்டு இன்னாசிமுத்துவும் விஷம் குடித்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலையில் அவர் உயிரிழந்தார்.

    • மகளிடம் கணவர் தகராறு செய்வதை அறிந்த மாதுரியின் தந்தை மற்றும் சகோதரர் ஆத்திரமடைந்து கத்தியை எடுத்துக்கொண்டு நரேஷ் வீட்டிற்கு வந்தனர்.
    • வீட்டில் இருந்த நரேஷ், அவரது தந்தை சுப்பா ராவ், தாய் ஆதிலட்சுமி ஆகியோரை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் பிடுகுரல்லா மண்டலம் கோணங்கியை சேர்ந்தவர் சாம்பசிவ ராவ் (வயது 63). இவரது மனைவி ஆதிலட்சுமி (60 ). இவர்களது மகன் நரேஷ் (30). நரேஷின் மனைவி மாதுரி. பட்டதாரி வாலிபரான நரேஷ் 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் நரேஷ் விவசாய நிலத்தில் வேலை செய்ய சென்றார். ஆனால் நரேஷின் மனைவி மாதுரி விவசாய நிலத்தில் வேலை செய்ய வரவில்லை. மாலை வீட்டிற்கு வந்த நரேஷ் மனைவியிடம் விவசாய பணிக்கு ஏன் வரவில்லை என கேட்டார். அப்போது மாதுரி தனக்கு வயிற்று வலி இருந்ததால் வேலைக்கு வரவில்லை என தெரிவித்தார்.

    இது சம்பந்தமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து உள்ளூர் டாக்டர் ஒருவரை அழைத்து வந்து மாதுரிக்கு சிகிச்சை அளித்தார்.

    மீண்டும் இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து மாதுரி தனது சகோதரர் சீனிவாச ராவ், தந்தை சுபா ராவ் ஆகியோருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். மகளிடம் கணவர் தகராறு செய்வதை அறிந்த மாதுரியின் தந்தை மற்றும் சகோதரர் ஆத்திரமடைந்து கத்தியை எடுத்துக்கொண்டு நரேஷ் வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது வீட்டில் இருந்த நரேஷ், அவரது தந்தை சுப்பா ராவ், தாய் ஆதிலட்சுமி ஆகியோரை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

    பின்னர் மாதுரி அவரது தந்தை சகோதரர் 3 பேரும் போலீசில் சரணடைந்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை கொண்டார். தாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி பசுமை நகரை சேர்ந்தவர் சர்க்கரை மகள் வினோதேவி(33). இவருக்கும் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த முரளிகுமார் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே வினோதேவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தேனிக்கு வந்து தனது தாய் முருகலெட்சுமி யுடன் தனியாக கொடு விலார்பட்டியில் வசித்து வந்தார்.

    இதனிடையே அவரது கணவர் முரளிகுமார் அவ்வப்போது தேனிக்கு வந்து தனது குழந்தைகளை பார்த்து சென்றுள்ளார். இதனால் அவரது தாயார் முருகலட்சுமியும் இனிமேல் தனது மகள் கணவருடன் சேர்ந்த ஒற்றுமையாக வாழ்வார் என நினைத்து ள்ளார். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    சம்பவத்தன்று வினோதேவியின் அண்ணன் மதன்ராஜா தீபாவளிக்கு ஜவுளி எடுக்க தனது தங்கை குடும்பத்தை அழத்துச்செல்வதற்காக வந்துள்ளார். அப்போது ஒரு அறையில் வினோதேவி தூக்குமாட்டிய நிலையில் இறந்துகிடந்தார்.

    அவரது தாய் முருக லட்சுமி அதிகளவு மாத்திரை களை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக தனது தாயை மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்க ப்பட்டது.

    போலீசார் சம்பவ இட த்திற்கு வந்து வினோதேவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பால்ராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஆறாம்பண்ணை சர்ச் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். (வயது 32). தொழிலாளி. இவரது மனைவி மீனா (28). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மீனா தனது குழந்தைகளை இன்று காலை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டில் இருந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பால்ராஜ் அரிவாளால் மீனாவை சரமாரியாக வெட்டினார்.

    இதில் மீனாவுக்கு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த மீனா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து பால்ராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முறப்பநாடு இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பால்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கோவிந்தன் .இவரது மனைவி மகேஸ்வரி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி முதல் மகேஸ்வரியை காணவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டை சேர்ந்தவர் சிங்காரவேல். இவரது மகன் கோவிந்தன் (வயது 29) லாரி டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி (25). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரதாப் (3) என்ற மகன் உள்ளார். கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில், கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி முதல் மகேஸ்வரியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளை பார்க்க வேணு தனது மனைவியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
    • ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி குன்னம்தானம் பகுதியை சேர்ந்தவர் வேணு(வயது45). இவரது மனைவி ஸ்ரீஜா(35). இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் இருக்கிறார்.

    வேணு மற்றும் அவரது மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு எற்பட்டு வந்திருக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்களது மகன் ஸ்ரீஜாவுடனே வசித்து வந்திருக்கிறார்.

    இந்நிலையில் மகளை பார்க்க வேணு தனது மனைவியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு நடந்துள்ளது. அதில் ஆத்திரமடைந்த வேணு, தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினார். பின்பு அவர் தனது கழுத்தையும் கத்தியால் அறுத்துக்கொண்டார்.

    ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு கணவன்-மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து கீழ்வாய்ப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு திருவல்லாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    ஸ்ரீஜா உடலில் 13 இடங்களில் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்துள்ளன. கணவன்-மனைவி இருவரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவரால் கொல்லப்பட்ட ஸ்ரீஜா, தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மனைவியின் ஊருக்கு ஷாஜி வந்திருக்கிறார்.
    • அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த ஷாஜி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் அருகே உள்ள ஆலபடம்பு பகுதியை சேர்ந்தவர் ஷாஜி(வயது40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பிரசன்னா(38).

    ஷாஜி மற்றும் பிரசன்னாவுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரசன்னா கண்ணூர் கட்டிலபீடிகா பகுதியில் உள்ள பெற்றோரின் வீட்டில் வசித்துவந்தார்.

    இந்நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மனைவியின் ஊருக்கு ஷாஜி வந்திருக்கிறார். அப்போது அவர் மனைவியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    அதில் ஆத்திரமடைந்த ஷாஜி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து தலையை துண்டித்து கொலை செய்தார். பிரசன்னாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டிற்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது அங்கு பிரசன்னா தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த ஷாஜி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசன்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியை தலை துண்டித்து கொன்ற ஷாஜியை தேடி வந்தனர். இந்நிலையில் பையனூர் போலீஸ் நிலையத்தில் அவர் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப தகராறில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் கண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஜெயமாரிக்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சம்பவ இடத்திற்கு சென்ற சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் தேவசகாயம் மற்றும் போலீசார் சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள தங்கம்மாள்புரம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெயமாரி (வயது44). எலக்ட்ரீசியன். இவருக்கு சந்தியா (33) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் ஜெயமாரிக்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயமாரி, சந்தியாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தியா சாப்பிடாமல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை ஜெயமாரி ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் தேவசகாயம் மற்றும் போலீசார் சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஜெயமாரியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனவேதனை அடைந்த ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • வடிவேலுவை தாக்கியதாக ராஜேஸ்வரியின் சகோதரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    ஆர்.கே.நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் வடிவேல். இவரும் திருவொற்றியூரை சேர்ந்த ராஜேஸ்வரியும் (வயது19) கடந்த 6 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ராஜேஸ்வரி பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இது தொடர்பாக அவரை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதற்கிடையே வடிவேலுவை தாக்கியதாக ராஜேஸ்வரியின் சகோதரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.
    • தற்கொலை குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது40). தொழிலாளி. இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இரவு கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆசீர்வாதம் தான் விரும்பிய வேறு ஒரு நிகழ்ச்சியை பார்க்க டி.வி. சேனலை மாற்றுமாறு கூறினார். மேலும் மனைவியிடம் இருந்த ரிமோட்டையும் கேட்டார். ஆனால் அவரது மனைவி நிஷா டி.வி. ரிமோட்டை கொடுக்க மறுத்து அவர் பார்த்து கொண்டு இருந்த டி.வி. நிகழ்ச்சியையும் மாற்ற மறுத்தார்.

    இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆசீர்வாதம் அறையில் இருந்து வெளியே வந்து மகனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனைவியுடன் மீண்டும் மோதல் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து கோபித்துக் கொண்ட ஆசீர்வாதம் பெரும்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதேபோல் அவரது மனைவி நிஷாவும் கொண்டஞ்சேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இந்தநிலையில் வீட்டுக்கு திரும்பி வந்த ஆசீர்வாதம் திடீரென அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இந்த விபரீத முடிவை எடுத்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×