என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாமி சிலைகள்"
- சுவாமி அறை அருகே பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு அதில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
- வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை சீர்காழி சட்டைநாதர் கோவிலில் வைக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரியும்,முன்னாள் ஐ.ஜி.யுமான பொன்.மாணிக்கவேல் வருகை புரிந்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கணக்கர் செந்தில் கோயில் ஸ்தலவரலாறு புத்தகம் கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, சட்டைநாதர்சுவாமி, மலைமீது அருள்பாலிக்கும் தோணியப்பர்-உமாம கேஸ்வரி அம்மன்,சட்டைநாதர் சுவாமி மற்றும் திருஞானசம்பந்தர்,திருநிலைநாயகிஅம்மன் சுவாமி சந்நிதிகளில் பொன்.மாணிக்கவேல் சுவாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் சட்டைநாதர்கோயில் வளாகத்தில் கண்டெடுக்க ப்பட்ட 23 சுவாமி ஐம்பொன் திருமேனிகள்,தேவாரபதிகம் தாங்கிய செப்பேடுகள் ஆகியவை கோயில் பள்ளியறை அருகே தனிபாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு பூட்டி சில்வைக்கப்பட்டுள்ளது.
இதனை பொன்.மாணிக்கவேல் பார்வையிட்டு சுவாமி திருமேனிகளின் காலம் மற்றும் அதன் வரலாறு ஆகியவை குறித்து விவாதித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், சீர்காழி சட்டைநாதர் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தெய்வ திருமேனிகள் சட்டைநாதர் கோயிலில்தான் வைக்க வேண்டும்.
இதனை அரசு கையகப்படுத்தக் கூடாது. பூமிக்கு அடியில் பொருள்கள் அல்லது பொக்கிஷங்கள் கிடைத்தால் தான் அரசு கையகப்படுத்த வேண்டும்.
தெய்வ திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது. அப்படி கையகப்படுத்த நினைத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு அரசை எதிர்த்து போராட வேண்டும் என்றார்.
பேட்டியின் போது அ.தி.மு.க.வை சேர்ந்தவரும், தமிழ் சங்கத் தலைவருமான மார்கோனி, வர்த்தக சங்க துணை தலைவர் கோவி.நடராஜன், மருந்தாளுனர் முரளிதரன் உடனிருந்தனர்.
- இவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது ஏதோ தென்படுவதாக தெரிந்துள்ளது.
- கிராம நிர்வாக அலுவலர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே திருநாரையூர் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற பொல்லா பிள்ளையார் கோவில் உள்ளது.இந்த ேகாவில் அருகே உத்ராபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது ஏதோ தென்படுவதாக தெரிந்துள்ளது. அதனை தோண்டி பார்த்த போது அடுத்தடுத்து சிலையாக 5-க்கும் மேற்பட்ட சிலைகள் கிடைத்தது. இத்தகவல் காட்டு தீ போல் பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி சோழன், வருவாய் தாசில்தார் தமிழ்ச்செல்வனுக்கு தகவல் தெரிவித்தார். பின்பு குமராட்சி இன்ஸ்பெக்டர் அமுதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சாமி சிலைகளை பார்வையிட்டனர். அங்கு மேலும் சிலைகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து தோண்டி வருகிறார்கள். இது குறித்து இந்து அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மண் தோண்டும் போது கிடைத்த சிலைகள் சுமார் 200 கிலோவுக்கு மேல் இருக்கும் எனவும் அவைகள் அனைத்தும் ஐம்பொன் சிலை எனவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.சம்பவ இடத்தை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வேல்விழி மற்றும் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் கிராம நிர்வாக அலுவலர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் எங்கள் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பொள்ளாப் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சிலைகள் கூட இருக்கலாம் எனதெரிவித்தனர். மேலும் கிராமத்தில் தொடர்ந்து ஆய்வு பணிகள் நடத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கிருஷ்ணா நதியில் ஆங்காங்கே சாமி சிலைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆற்றின் கரையோரம் பழங்கால சாமி கற்சிலைகள் இருப்பதை கண்டனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழையின் காரணமாக கிருஷ்ணா, கோதாவரி மற்றும் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பல்நாடு மாவட்டம் அச்சம்பேட்டை அம்பதிப்புடி கிருஷ்ணா நதிக்கு அப்பகுதி சேர்ந்த சிலர் நேற்று சென்றனர். அப்போது ஆற்றின் கரையோரம் பழங்கால சாமி கற்சிலைகள் இருப்பதை கண்டனர்.
இதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. திரளான மக்கள் திரண்டு வந்து ஆற்றில் இருந்த விஷ்ணு மூர்த்தி, சிவலிங்கம் மற்றும் 2 நந்தி சிலைகளை கரைக்கு கொண்டு வந்தனர்.
இதேபோல் தாடே பள்ளி மண்டலம் சீதா நகரம் என்ற கிராமத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் நாக தேவதை கற்சிலைகள் குவியல் குவியிலாக கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு சென்ற தொல்லியல் துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்ட நாக தேவதை சிலைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதில் பல சிலைகள் சேதம் அடைந்து காணப்பட்டது.
ஆற்றில் இருந்து சாமி சிலைகள் மீட்கப்பட்ட தகவல் கிராமம் முழுவதும் பரவியதால் ஏராளமானோர் திரண்டு வந்து சாமி சிலைகளை வணங்கி சென்றனர்.
தொல்லியல் துறை அதிகாரிகள் சாமி சிலைகள் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆற்று வெள்ளத்தில் சாமி சிலைகள் அடித்து வரப்பட்டதா அல்லது மணலுக்குள் அடியில் இருந்த சாமி சிலைகள் மழை வெள்ளம் காரணமாக மேலே வந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்களை இடிக்கும் போது சேதம் அடைந்த சாமி சிலைகளை கிருஷ்ணா நதியில் வீசி சென்றார்களா. அல்லது மழை வெள்ளத்தில் சாமி சிலைகள் அடித்து வரப்பட்டதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றன.
கிருஷ்ணா நதியில் ஆங்காங்கே சாமி சிலைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காகாபாளையம் அருகே உள்ள கனககிரி கிராமம் உள்ளது.
- அரசு புறம்போக்கு மந்தைவெளி நிலத்தில் வேலப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த சிலர் பிள்ளையார், கன்னிமார், காளியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட சாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.
மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம், காகாபாளையம் அருகே உள்ள கனககிரி கிராமம் உள்ளது. இங்குள்ள வேலப்பன் கோவில் அருகே உள்ள அரசு புறம்போக்கு மந்தைவெளி நிலத்தில் வேலப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த சிலர் பிள்ளையார், கன்னிமார், காளியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட சாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.
மேலும் 15 தென்னை மரங்களை நட்டும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சங்ககிரி வட்டாட்சியர், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ் பிரபு சப்-இன்ஸ்பெக்டர் ரகு உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு வழிபாடு நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்பு அங்கிருந்த சாமி சிலைகளை அகற்றி டெம்போவில் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- கருப்பர் கோவில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டது
- மர்ம நபர்கள் அட்டூழியத்தால் பரபரப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ளது சுணை கருப்பர் கோயில். அப்பகுதி கிராம மக்களின் காவல் தெய்வமாக கருதப்படும் சுணை கருப்பர் கோயில் வரலாற்று புகழ் பெற்ற பழங்கால கோயிலாகும். இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை ஆகிய ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.
தீபாவளியை முன்னிட்டு நேற்று பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் நள்ளிரவு கோயிலின் முன் பக்க கதவை உடைத்த மர்ம நபர்கள், கருவறை உள்ளே செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த மரத்திலான கதவின் ஸ்க்ருவை கழட்டிவிட்டு உள்ளே சென்றவர்கள் உள்ளிருந்த மூலவர் கருப்பர் சிலை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கோயில் சுற்றுப்புறத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த வேல், அருவாள், கம்பு உள்ளிட்ட பொருட்களை சிதறடித்து சென்றுள்ளனர்.
மர்ம நபர்களின் இந்த செயலால் அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள், கோயில் முன் திரண்டனர். இதனை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- நவராத்திரி பவனி பாரம்பரிய முறைப்படி நடைபெறும்
- ஆலோசனை கூட்டத்தில் முடிவு
கன்னியாகுமரி:
திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சிக்காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு மாறிய பின்னர் நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.
இதற்காக நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்ம நாபபுரம் அரண்மனை யில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, குமாரகோ வில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் ஆகிய மூன்று சாமி சிலைகள், வெள்ளிக்குதிரை வாகனம், யானை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருவனந்த புரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் வைத்து பூஜை செய்வது வழக்கம். நவராத்திரி விழாவுக்கு பின் னர் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் எடுத்து வரப்படும்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கார ணமாக இந்த நிகழ்ச்சிகள் முறையாக நடைபெற வில்லை. இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 26-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. செப்டம் பர் மாதம் 23-ந்தேதி காலை 8 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து நவராத்திரி பவனி திருவ னந்தபுரம் புறப்பட உள் ளது.
முதல் நாள் குழித்துறை யில் ஓய்வுக்குபின்னர் புறப்படும் பவனிக்கு, 24-ந் தேதி குமரி-கேரள எல்லை யான களியக்காவிளையில் வரவேற்பும் அளிக்கப்ப டுகிறது. அன்று மாலை நெய்யாற்றின்கரை கிருஷ் ணன் கோயிலில் ஓய்வுக்கு பின்னர் 25-ந்தேதி காலை திருவனந்தபுரம் புறப்படும் பவனிக்கு நகர பகுதியில் நேமம் என்ற இடத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
பவனி செல்லும் பாதை யில் எல்லாம் பக்தர்கள் வர வேற்பு அளிக்கவும், பூஜை பொருட்கள் சமர்ப்பிக்க வும் வாய்ப்பு வழங்கப்ப டும். அக்டோபர் 5-ந்தேதி சரஸ்வதி பூஜைக்கு பின்னர் ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் அக்டோபர் 7-ந்தேதி காலை விக்ரகங் கள் பத்மநாபபுரம் அரண்மனை நோக்கி புறப்படும். இரண்டு ஆண்டு இடை வெளிக்கு பின்னர் பத்மநாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி பாரம்பரிய முறைப்படி இந்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளிமலை குமாரசாமி வெள்ளிக்கு திரையிலும், முன்னுதித்த நங்கை அம்மன் பல்லக் கிலும், சரஸ்வதி தேவி யானை மீதும் பவனியாக வலம் வருகின்றனர். சாலையின் இருபுறமும் நடைபெறுகின்ற தட்டம் பூஜை உள்ளிட்ட நிவேத்திய சமர்ப்பண நிகழ் வுகளும் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நவராத்திரி பவனி சம்பிரதாய முறையில் நடைபெற்றது. வழக்கமான கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி பவனி நடைபெற உள்ளது பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இது தொடர் பான ஆலோ சனை கூட்டம் திருவனந்த புரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கேரள மந்திரிகள் ராதாகிருஷ்ணன், அகம்மது மற்றும் குமரி-கேரள அதிகாரிகள் பங்கேற்றனர்.
சேலம்:
சேலம் மிகவும் பிரசித்தி பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான சுகவனேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து சாமியை தரிசனம் செய்து செல்கிறார்கள்.
மூகூர்த்த நாட்களில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். இந்த கோலிலுக்கு கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி கும்பாபிேஷகம் நடந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை கருதி கோவிலை விரிவு படுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி நடந்து வருகிறது. அப்பபோது பல சுவாமி சிலைகள் அகற்றப்பட்டதுடன் மேற்கு புற வாசல் கதவு சாத்தப்பட்டது. சுகவனேஸ்வரர் சன்னதியில் துவார பாலகர்கள் சிலை அகற்றப்படாமல் துணி போர்த்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் சொர்ணாம்பிகை சன்னதியில் இருந்த துவாரபாலகிகளின் கற்சிலைகள் அகற்றப்பட்டு சிலை தெரியாத படி துணியால் மறைத்து கட்டி கீேழ கிடத்தப்பட்டுள்ளது. அந்த சிலைகள் வெயிலிலும் , மழையிலும் நனைந்த படி உள்ளது. இதனால் பார்க்கும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே அந்த சாமி சிலைகளை புகைப்படம் எடுத்து ஏற்கனவே அகற்றப்பட்ட சிலைகளின் கதி என்ன என கூறி சமூக வலை தளங்களில் பக்தர்கள் சிலர் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்போரூர் அருகே வெண்பேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேஷ். இவருடைய வீடு அங்குள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ளது.
நேற்று ராஜேஷ், தனது வீட்டின் அருகே எரு போடுவதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது பூமிக்கு அடியில் பெரிய கற்கள் இருப்பது போல தெரிந்தது. மேலும், தோண்டியபோது 4 கற்சிலைகள் இருந்தன. அவற்றை வெளியே எடுத்து பார்த்தபோது அவை பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார் சாமி சிலைகள் என்பது தெரிய வந்தது. அவை 2 அடி உயரம் இருந்தன.
உடனே இதுகுறித்து திருப்போரூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் ராஜ்குமார் நேரில் சென்று சிலைகளை பார்வையிட்டார்.
இதையடுத்து 4 சிலைகளும் திருப்போரூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அவை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
தாசில்தார் அலுவலகத்தில் இருந்த சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். சிலர் சிலைகளை தொட்டு வணங்கினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்