search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை ஆக்கிரமிப்பு"

    • தனியார் தங்கும் விடுதிகளில் கார் நிறுத்தும் வசதி இல்லாததால் பிரதான சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்தி போக்கு வரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • கொடை க்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா வரும் பயணிகள் இதுபோன்ற பிரச்சினையால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் பல்வேறு சாலைகளில் அனுமதி பெறாத தனியார் தங்கும் விடுதிகளில் கார் நிறுத்தும் வசதி இல்லாததால் பிரதான சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதேபோல் லாஸ்காட்ரோடு, அரசு மருத்துவமனை அமைந்துள்ள பி.டி.ராஜன் சாலை ஆகிய பகுதிகளிலும் பஸ்களை நிறுத்தி கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஏரிச்சாலையில் இருந்து வரும் கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான நெடுஞ்சாலையான அரசு மருத்துவமனை சந்திப்பு சாலையில் உள்ளதங்கும் விடுதிக்கு வரும் அனைத்து பேருந்துகளையும் பிரதான நெடுஞ்சாலையிலேயே நிறுத்துவதால் காலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் மற்றும் பிற நேரங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

    மகாராஜா என்கிற தங்கும் விடுதியை வாடகை ஒப்பந்தத்தில் எடுத்துள்ள உரிமையாளர் மற்றும் மேலாளர் போக்குவரத்து நெரிசலை தட்டி கேட்பவர்களை கடுமையான வார்த்தைகளால் பேசுவதோடு, நான் யார் என்று உனக்குத் தெரியுமா என்று மிரட்டுகிற தொனியில் பேசுவதாகவும் நாங்கள் நிறுத்தும் வாகனங்களை அகற்ற சொன்னால் நடப்பதே வேறு என்று மிரட்டி வருவதாகவும் உள்ளூர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எத்தனை முறை போலீசார் அங்கு நிறுத்த ப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் பிரதான நெடுஞ்சாலைகளிலேயே பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர்.

    அந்த தங்கும் விடுதி முறையான அனுமதி பெற்று இயங்குகிறதா? கார் பார்க்கிங் வசதி உள்ளதா? என்பதை மாவட்ட காவல்துறை ஆய்வு செய்ய வேண்டும். கொடை க்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா வரும் பயணிகள் இதுபோன்ற பிரச்சினையால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே சுற்றுலா பயணிகள் அதிகரிக்கும் சமயங்களில் போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடங்காமல் செல்கிறது. இதுபோன்ற தனியார் ஆக்கிரமிப்பால் மேலும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது என சுற்றுலா பயணிகள் வேதனை அடைகின்றனர்.

    • வீடுகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
    • 2 பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை இடிக்க தொடங்கினர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் குப்பன் குளம் பகுதியில் மாநகராட்சி சாலையை ஆக்கிரமித்து 7 வீடுகள் கட்டப்பட்டு இருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வந்த நிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணை யாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகரமைப்பு அலுவலர் முரளி, நகரமைப்பு ஆய்வாளர் அருள் செல்வன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கு முன்னதாக அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து 2 பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை இடிக்க தொடங்கினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு முன்னதாக 7 வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களையும் அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பாக எடுத்துச் சென்று இருந்தனர்.

    இந்த நிலையில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை எடுக்கிறோம் என திட்டவட்டமாக தெரிவித்து தங்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து காலை முதல் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் திரண்டு இருந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

    • விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற ஏற்பாடு
    • வீடுகள், கடை உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்படும் என அதிகாரி தகவல்

    ஒடுகத்தூர்:

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் சாலை ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவிடும் பணிகள் நேற்று முதல் தொடங்கியது.

    ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது மற்றும் 5வது வார்டுகளான பஜார் தெரு, பஸ் ரோடு பகுதியில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகள் கட்டிள்ளனர்.

    இதனால், பஸ் போக்குவரத்து மட்டுமின்றி வாகனங்கள் செல்ல கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், இரண்டு தெருக்களிலும் 25 அடிக்கும் மேல் இருந்த சாலை தற்போது ஆக்கிரமிப்பு செய்த பின் 15 அடி கூட இல்லாமல் உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

    எனவே, சாலை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் முறையாக அளவிடு செய்து சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே நடந்து முடிந்த கவுன்சிலர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கடிதத்தை வருவாய்த்துறையினரிடம் வழங்கப்பட்டது.

    இதுகுறித்த, மனுக்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு பகுதிகளை முறையாக அளவிடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்படி, தாசில்தார் ரமேஷ் ஆலோசனையின் பேரில் ஆர்ஐ நந்தகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியாவதி பாஸ்கரன், சர்வேயர் திலீப்குமார் (பள்ளிகொண்டா பிர்கா), சர்வேயர் கிரிதரன் (ஒடுகத்தூர் பிர்கா) மற்றும் 8 கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர், பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று இரண்டு தெருக்களிலும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவிடும் செய்யும் பணிகளை தொடங்கினர்.

    இப்பணிகள், முடிந்த பிறகு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகள், கடை உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    • சோழவந்தான் அருகே சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட சர்வே பணி தொடங்கப்பட்டது.
    • சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட அளவீடு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே வைகை ஆற்றுக்கு மேற்கு பகுதியில் செல்லும் மேலக்கால் பேரணை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மார்நாட்டான் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை அடுத்து இது தொடர்பாக முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வருவாய்துறையினர் முதல் கட்ட சர்வே பணி முடித்து அறிக்கையை கோர்ட்டில் சமர்பித்தனர். இதைத்தொடர்ந்து வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன் ஆலோசனையின் பேரில் வருவாய் ஆய்வாளர் சதீஷ் முன்னிலையில் பிர்கா சர்வேயர் சந்திரா, கிராம நிர்வாக அலுவலர் முபாரக் ஆகியோர் சித்தாயிபுரம் கோவில், குருவித்துறை, அய்யப்பநாயக்கன்பட்டி, மன்னாடிமங்கலம் பகுதிகளில் உள்ள சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட அளவீடு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடலூர் அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அவசர காலங்களில் 108 ஆம்பு லன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் கோண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழனியாண்டவர் நகர்உள்ளது. இந்த நகரில் அரசு அதி காரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் போன்ற முக்கிய பிரமுகர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பழனி ஆண்டவர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை வசதி சரிவர இல்லாமல் குண்டும் குழியுமாக பொது மக்களின் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்த முடியாத அள வில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மோட்டார் சைக்கில் மற்றும் வாகனங்களில் செல்வோர் பெரும் பாதிப்படைகின்றனர். மேலும் இந்த பஞ்சரான சாலையினால் அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது.

    இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள் சரிவர பராமரிக்கவில்லை இத னால் மழைக்காலங்களில் மழை நீர் கழிவுநீர் கால்வாயில் தேங்கி சாலையில் பெருக் கெடுத்து ஓடும் அவல நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த கழிவுநீரில் தேங்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் உள்ளவர் களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. நீண்ட நாட்கள் கால்வாயில் தேங்கும் மழை நீரால் பொதுமக்கள் அந்த பகுதியை கடக்கும்போது துர்நாற்றம் வீசி அங்குள்ளவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்படுகிறது. மேலும் ஒரு சிலர் இந்த பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இந்த சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளினால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. அதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே உரிய அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • அரசு வழங்கிய இலவச வீட்டு மனை நிலத்தில் குடியிருந்து வருகின்றனர்.
    • இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும்.

    பல்லடம்:-

    பல்லடம் அருகேயுள்ளஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பல்லடம் தாசில்தாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தில், அரசு வழங்கிய இலவச வீட்டு மனை நிலத்தில் குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் பொதுவான காங்கிரீட் ரோட்டை உடைத்து, ரோட்டை ஆக்கிரமித்து அஸ்திவாரம் அமைத்துள்ளார்.

    இதனை தட்டி கேட்டபோது அப்படித்தான் செய்வோம் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்து, பொது ரோட்டை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புகார் குறித்து விசாரணை செய்த அதிகாரிகள் அந்த இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும் என தெரிவித்தனர்.

    ×