என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரேத பரிசோதனை"
- உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்திருக்கலாம் என்று மருத்துவமனை ஊழியர்ககள் தெரிவித்தனர்.
- இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவமனையில் இறந்து போன ஒருவரின் இடதுபக்க கண் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 14 அன்று பன்டூஷ் என்ற நபரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக நாளந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நவம்பர் 15 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று இரவு அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து நேற்று அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவிருந்த நிலையில், அவரது இடது கண் காணாமல் போனதை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அறுவை சிகிச்சை பிளேடு ஒன்று சடலத்துக்கு அருகில் இருந்ததாக உறவினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.
உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்திருக்கலாம் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக கூறி, பன்டூஷ் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக பேசிய நாளந்தா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் வினோத் குமார், "இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. யாராவது அவர் கண்ணை வெளியே எடுத்திருப்பார்களோ அல்லது எலி கண்ணை கடித்ததா என்ற 2 கோணத்தில் விசாரித்து வருகிறோம். இது இரண்டில் எது நடந்திருந்தாலும் அது தவறு தான். விசாரணைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி புதூர் ரெயில்வே கேட் அருகே உள்ள சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகள் சகுந்தலா (வயது 48). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் நேற்று இரவு சக்தி நகரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார்.
அப்போது புதூர் கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சகுந்தலா மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலா ர்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
சகுந்தலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செங்கம் அரசு மருத்துவமனையில் அவலம்
- டாக்டர்களை நியமிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
புதுப்பாளையம்:
செங்கம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மருத்துவ தேவைகளுக்காக செங்கம் தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
குறிப்பாக நாய்க்கடி, பாம்பு கடி, உள்பட அவசர சிகிச்சை பிரிவு வரை பொதுமக்கள் மருத்துவ மனைக்கு வருகின்றனர்.
ஆனால் செங்கம் தலைமை அரசு மருத்துவ மனையில் பல்வேறு சமயங்களில் மருத்துவர் பற்றாக்குறையால் மருத்துவர்கள் வரும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
மேலும் செங்கம் சுற்று வட்ட பகுதிகளில் நடைபெறும் விபத்துகளில் உயிர் சேதம் ஏற்பட்டால் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யாமல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவ மனையில் பரிந்துரை செய்யப்படுகிறது.
குறிப்பாக கடந்த ஒரு வருடமாகவே செங்கம் பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் உயரிழந்த வர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தும் பிரேத பரிசோதனை செய்யாமல் திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் உயிரிழந்த வர்களின் உறவினர்கள் உட்பட காவல்துறையினர் என பலதரப்பட்ட மக்கள் இதனால் பாதிக்கப்ப டுகின்றனர்.
செங்கத்திலிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து உடலை மீண்டும் கொண்டு வருவதற்கு 2 நாள் வரை காத்திருக்க வேண்டிய சூழலும் நிலவுகிறது.
எனவே கூடுதல் மருத்துவர்களை நியமித்து செங்கம் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் செயல்படுத்திட வேண்டும் எனவும் பிரேத பரிசோதனைகளை செங்கம் அரசு தலைமை மருத்துவ மனையில் உடனுக்குடன் செய்து மக்களை சிரமத்திற்கு ஆளாக்காமல் இருக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணி செய்த பாலாஜி, கடந்த 18 மாதங்களாக பணிக்கு செல்லவில்லை.
- தொட்டி குஞ்சரம் சாலையில் நிலை தடுமாறி கிழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே குஞ்சரம் பகுதியை சேர்ந்தவர் அப்பாவு மகன் பாலாஜி (வயது 47). இவர் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதியாக செயல்பட்டார். இவரது மனைவி உமாமகேஸ்வரி குஞ்சரம் ஊராட்சி தலைவராக உள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணி செய்த பாலாஜி, கடந்த 18 மாதங்களாக பணிக்கு செல்லவில்லை. இந்நிலையில் எலவனாசூர்கோட்டையில் இருந்து குஞ்சரத்திற்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பாலாஜி வந்து கொண்டிருந்தார். அப்போது தொட்டி குஞ்சரம் சாலையில் நிலை தடுமாறி கிழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
அவ்வழியே சென்றவ ர்கள் இவரை மீட்டு எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்த தகவலின்பேரில் விரைந்து சென்ற எலவனாசூர்கோட்டை போலீசார், பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ள க்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி தலைவரின் கணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
- ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டை சேர்ந்தவர் அசோகன் (வயது 59). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர்.
கடந்த 3 நாட்களாக அசோகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை குணமாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக குடும்பத்தி னரிடம் கூறிவிட்டு வெளியே சென்றார்.
பின்னர் வாணிய ம்பாடி- விண்ண மங்கலம் இடையே உள்ள தண்டவா ளத்தில் தலை வைத்து படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் தலை மீது ஏறி இறங்கியது. இதில் அசோகன் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் அசோகன் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுவையில் பல்வேறு பணிகளை முடித்து நேற்று இரவு திருவண்ணாமலைக்கு காரில் திரும்பினர்.
- அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்:
திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் ரியாஸ் (வயது 26), யாசின் (32), சராபுதீன் (28) ஆகியோர் காரில் புதுவைக்கு வந்தனர். இந்த காரினை யாசின் ஓட்டி வந்துள்ளார். புதுவையில் பல்வேறு பணிகளை முடித்து நேற்று இரவு திருவண்ணாமலைக்கு காரில் திரும்பினர். புதுவை - திண்டிவனம் 4 வழிச் சாலையில் மொளசூர் இடையன்குளம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற டிராக்டரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் சென்ற ரியாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். யாசின், சராபுதீன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் காயமடைந்தவர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கிளியனூர் போலீசார் விரைந்து வந்தனர். ரியாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூரை அடுத்த செதுவாலையில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடக்கமுயன்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரியசாமி அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே வி.அலம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. கூலி தொழிலாளியான இவர் இன்று அதிகாலை விருத்தாசலத்தில் இருந்து சொந்த ஊரான வி.அலம்பலம் கிராமத்திற்கு செல்ல நைனார்பாளையம் கிராமம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இன்று காலை வெகுநேரமாகியும் விடுதி அறையை விட்டு வெளியில் வரவில்லை.
- ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்தனர்.
கடலூர்:
தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் ராஜதுரை (வயது 28). என்ஜீனியரிங் பட்டதாரி. இவர் வடலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி ஷேர் மார்க்கெட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று காலை வெகுநேரமாகியும் விடுதி அறையை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை தட்டி குரல் கொடுத்தனர். இருந்தபோதும் அவர் வெளியில் வரவில்லை. இது குறித்து தனியார் விடுதி ஊழியர்கள் வடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அவரை காணவில்லை.
அவரை தேடியபோது குளியலறைக்குள் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதயைடுத்து வடலூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குளிக்கும் போது திடீர் மாரடைப்பால் இறந்தாரா? என்பது குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வடலூர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சம்பவத்தன்று 2 பேரும் மோட்டார் சைக்கிளில் எறையூர் சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
- தர்ஷினி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த காட்டுசெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36), அவரது மகள் தர்ஷினி (4). சம்பவத்தன்று 2 பேரும் மோட்டார் சைக்கிளில் எறையூர் சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது காட்டு செல்லூர் தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த கார் ஆறுமுகம் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த தர்ஷினி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்து ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆறுமுகம் மனைவி உஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி.ரோட்டில் தனி யார் திருமண மண்டபம் அருகே அந்த வழியாக நடந்து சென்ற 70 வயது மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்த மூதாட்டியார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இது குறித்தும், விபத்துக்கு காரணமான வாகனம் மற்றும் தப்பிய டிரைவர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நண்பரை பார்க்க சென்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் (வயது 22). ஐ.டி.ஐ. முடித்துவிட்டு கட்டிட வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் பள்ளிப்பட்டு கிராமத்தில் இருந்து நண்பரை பார்க்க சின்ன வேப்பம்பட்டு வழியாக வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டி ருந்தார். திருப்பத்தூர்- வாணியம்பாடி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி விக்னேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்