என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிறந்த நாள்"
- உண்மையில் தனக்குத்தான் பிறந்தாளா என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார்.
- நாட்டின் தலைநகரான ஹனோய் -க்கு தாய் குடிபெயர்ந்துள்ளார்
சினிமாக்களில் வருவதுபோல் வியட்நாமில் நடந்த ஒரு உண்மை சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வியட்நாமை சேர்ந்த தந்தை ஒருவருக்கு பள்ளிக்கு செல்லும் வயதில் மகள் இருந்துள்ளார். தனது மகள் வளர வளர அவள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் போலும் இல்லாமல் மிகவும் அழகாக இருந்ததால் அவள் உண்மையில் தனக்குத்தான் பிறந்தாளா என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார்.
எனவே மகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ளார். இதில் அவள் தனது மகள் இல்லை என்று அவருக்கு தெரியவந்தது. இதற்குப் பிறகு தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சிறுமியின் தந்தை தனது மனைவியிடம் குழந்தைப்பேறு இல்லாதவள் என்று கூறி தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.
ஆனால் தான் குழந்தை பெற்றதாக சிறுமியின் தாய் உறுதியாக இருந்துள்ளார். சண்டை முற்றிய நிலையில் தனது கணவனை பிரிந்து மகளை அழைத்துக்கொண்டுநாட்டின் தலைநகரான ஹனோய் -க்கு தாய் குடிபெயர்ந்துள்ளார். அங்கு மகளை புதிய பள்ளியில் சேர்த்தார்.
இந்நிலையில் பள்ளியில் மகளின் பிறந்தநாள் விழாவில் அதே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் அவளது தோழியான லான் என்ற சிறுமியை தாய் பார்த்துள்ளார். லான் பார்ப்பதற்கு தன்னைப் போலவே இருப்பதை இந்த தாய் உணர்ந்துள்ளார். எனவே மேற்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் அனைத்திற்கும் விடை கிடைத்துள்ளது.
டிஎன்ஏ பரிசோதனையில் லான் - தான் இவரின் மகள் என்று தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு சிறுமிகளுக்கும் ஒரே மருத்துவமனையில் பிரசவம் ஆகியுள்ளது . மருத்துவமனையில் வைத்து இரண்டு பெண் குழந்தைகளும் இடம் மாறி இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.
- இந்நிலையில் அஜித் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்
- அஜித்திடம் சொகுசு கார்கள் இருந்தாலும், பைக்குகள் மீது தனி ஆர்வம் உண்டு.
நடிகர் அஜித்குமார், நடிகை ஷாலினி இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் அமர்க்களம். இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கினார்.
இந்நிலையில் பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக்கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் உருவானது.
மேலும் பட ஷூட்டிங் நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் அதிகரித்தது. இதை யொட்டி கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்தனர்.
இந்நிலையில் அஜித் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இதையொட்டி நடிகை ஷாலினி, தனது காதல் கணவர் அஜித்தின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த டுகாட்டி பைக்கை பரிசாக கொடுத்துள்ளார் .இதன் விலை ரூ.23 லட்சம் ஆகும்.
அஜித்திடம் பல சொகுசு கார்கள் இருந்தாலும், அவருக்கு பைக்குகள் மீது தனி ஆர்வம் உண்டு. அஜித் பைக் பிரியர் என்பதால் 'டுகாட்டி' 'பைக்' ஷாலினி பரிசாக கொடுத்துள்ளார்.
ஷாலினி தனது கணவருக்கு விலை உயர்ந்த பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படம் தற்போது இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அஜித்தின் பிறந்த நாளை மேலும் சிறப்பாகும் விதத்தில், விடாமுயற்சி குறித்த அப்டேட் மற்றும் குட் பேட் அக்லி படம் குறித்த அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சென்னையில் ஒரு தியேட்டரில் ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்கினர்.
- ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த படம் 'தீனா'.இப்படத்தில் அஜித்குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பின் அஜித்திற்கு 'தல' என்ற பட்டம் பிரபலமானது.
இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் இன்று (மே 1 ) அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அஜித் பிறந்தநாள் விழாவை இன்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித் நடித்த தீனா "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டதை யொட்டி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் 'தீனா' படத்தை பார்ப்பதற்காக இன்று காலையில் அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று 'தீனா' படம் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது 'வத்திக்குச்சி பத்திக்காதுடா '.. பாடல் ஒலித்தது. உடனே ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்கினர்.
அப்போது ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர். இதனால் தியேட்டரில் பட்டாசு தீப்பொறி புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் தியேட்டரின் உள்ளே படம் ஓடிக்கொண்டு இருந்த போது அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடிய சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.
- கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நாகப்பட்டினம்:
இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.
அதன்படி, கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.
சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர், தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்–கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.
கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்ட குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு, தங்கும் வசதி போன்றவற்றை பேராலய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்துள்ளது.
இன்றும் ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பர்ண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கந்தர்வகோட்டை ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. இளைஞ ரணி அமைப்பா ளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
- , தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலைக்கு மா லை அணிவித்தும்,பொது மக்க ளுக்கும் தொண்டர்க ளுக்கும் இனிப்புகள் வழங்கி யும் கொண்டாடினர்.
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. இளைஞ ரணி அமைப்பா ளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கந்தர்வ கோட்டை காந்தி சிலை| பேருந்து நிலையம் மற்றும் புதுகை சாலையில் கட்சி கொடி ஏற்றியும்,வெடி வெ டித்தும் , தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலைக்கு மா லை அணிவித்தும்,பொது மக்க ளுக்கும் தொண்டர்க ளுக்கும் இனிப்புகள் வழங்கி யும் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் பரம சிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, தி.மு.க. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தவசு மணி, நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், பழைய கந்தர்வ கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மெய்குடி பட்டி முருகேசன் ,
ஒன்றிய குழு உறுப்பி னர்கள் பாரதி பிரியா அய்யாதுரை, திருப்பதி, இளைஞர் அணி அமைப்பா ளர் கலையரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் மரியாதை
- கொடும் செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மார்த்தாண்டம் :
கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கருங்கல் ராஜீவ் ஜங்சனில் இந்திரா காந்தியின் 106-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கொடும் செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் குமரேசன், கருங்கல் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஆசீர்பிரைட் சிங், குமார், சுனில்குமார், ஊராட்சி பேரூராட்சி காங் கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஜெபர்சன், சுரேஷ் கியூபர்ட் ராஜ், ஜெஸ்டின், ராஜகிளன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளி குழந்தைகளுக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. இனிப்புகள் வழங்கினார்.
- காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மார்த்தாண்டம் :
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134 -வது பிறந்த நாள் விழா கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ் சந்திப்பில் நடைபெற்றது.
கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கருங்கல் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன், பேரூர் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேஷ்குமார், கிள்ளியூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் டிஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் மற்றும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஜவஹர்லால் நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளி குழந்தைகளுக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மரிய அருள் தாஸ், கிளன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- உலக சாதனை படைத்தார்
- முகாமில் வேலை வாய்ப்பு, மருத்துவம், சிறுதானிய உணவுகள், கண் சிகிச்சை, பொது மருத்துவம், பெண்களுக்கான சிகிச்சை,
என். ஜி. ஓ. காலனி :
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73- வது பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஜவான் அய்யப்பன் தலைமையில் நாகர்கோவில் அருகே உள்ள முகிலன்விளை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதமர் மோடி கொண்டு வந்த 73 திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் உலக சாதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முகாமில் வேலை வாய்ப்பு, மருத்துவம், சிறுதானிய உணவுகள், கண் சிகிச்சை, பொது மருத்துவம், பெண்க ளுக்கான மருத்துவ சிகிச்சை, மருத்துவ காப்பீடு அட்டை பெற நடவடிக்கை, பான் கார்டு பெற நடவடிக்கை, விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருட் கள் கிடைக்க நடவடிக்கை, விவசாயம் செய்ய விவசாய நிலத்தின் மண் பரிசோதனை, இலவச கியாஸ் இணைப்பு பெறாதவர்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு பெற்று தருதல், இலவச வீடு கிடைக்காதவர்களுக்கு இலவச வீடு பெற்று தர ஏற்பாடு செய்தல், இஸ்லாமிய பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், மீனவர்களுக் கான முத்ரா கடன் திட்டம், மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட விஸ்வகர்மா திட்டம் உள்ளிட்ட பாரதபிரதமர் மோடியின் 73 திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பொது மக்களின் பார்வைக்காக மத்திய அரசின் நலத்திட்டங் களை பிரதிபலிக்கும் வகை யிலான 73 ஸ்டால் வைக்கப்பட்டு அதன் மூலம் பொது மக்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்தான ஆலோசனையும் வழங்கப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்வினை அமெரிக்காவில் இருந்து கிறிஸ்டோபர் என்பவர் வேர்ல்ட் ரிக்கார்ட் யூனியன் என்ற புத்தகத்தில் பதிவு செய்ய நேரில் பார்வையிட்டு மேலும் பிரதமர் மோடியின் 73 திட்டங்களை ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு வழங்கி யமைக்காக நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜவான் அய்யப்பனுக்கு உலக சாதனை படைத்தமைக்காக உள்ள சான்றிதழையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு குமரி மாவட்ட துணைத்தலைவர் எஸ். ஜெயக்குமார், பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் வக்கீல் ஜெகநாதன், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் மாவட்ட தலை வர்கள் கணேசன், முத்து கிருஷ்ணன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் முரளி மனோ கர்லால், ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜேஷ், மாநகராட்சி மாமன்ற உறுப்பி னர்கள் வீரசூரபெருமாள், சதீஷ், ஆட்சியம்மாள், தேரூர் பேரூராட்சி துணைத் தலைவர் மாதவன்பிள்ளை, மாவட்ட தொழில் பிரிவு தலைவர் டாக்டர் மோகன்ராஜ், பா.ஜ.க. முன்னாள் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செய லாளர் ரூபின், அகஸ்தீஸ்வரம் வடக்கு மண்டல தலைவர் சுயம்பு, முகிலன்விளை மிசா. ரெத்தினஜோதி, பா.ஜ.க. மாநில பொருளாதாரப் பிரிவு செயலாளர் பார்வதி விஜயகுமார், அக்ரி சிவா, மற்றும் பயனாளிகள், பொது மக்கள் தன்னார்வலர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
- அ.தி.மு.க. சார்பில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாகர்கோவில் :
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொருளாளர் கேட்சன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், அணி அமைப்பாளர்கள் இ.என். சங்கர், அருண் காந்த் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அ.தி.மு.க. சார்பில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவைத் தலைவர் சேவியர் மனோகரன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன் மற்றும் வடிவை மாதவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மோகன், அந்தோணி ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயலாளர் முத்தரசன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- தருமபுரி பா.ம.க. எம்.எல்.ஏ. எஸ்.பி வெங்கடேஸ்வரன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
- தருமபுரி மேற்கு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக பசுமை தாயகம் சார்பில் இன்று 5000 மரக்கன்றுகள் நடப்படுகிறது.
தொப்பூர்,
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளான இன்று (25-ந் தேதி) பசுமை தாயக தினமாகவும், மரக்கன்றுகள் நடும் நாளாகவும் பா.ம.க.வினர் மற்றும் பசுமை தாயக அமைப்பினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தருமபுரி பா.ம.க. எம்.எல்.ஏ. எஸ்.பி வெங்கடேஸ்வரன் சாமிசெட்டிபட்டி கிராமத்தில் இன்று அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
அப்போது எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாகலஹள்ளி ஊராட்சி சவுளூர் ஏரிக்கரையில் 20 வகையான பறவைகளுக்கு பலன் தரக்கூடிய மற்றும் நிழல் தரக்கூடிய 500 மரக்கன்றுகள் மற்றும் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யபட்டது. தருமபுரி மேற்கு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக பசுமை தாயகம் சார்பில் இன்று 5000 மரக்கன்றுகள் நடப்படுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், பசுமை தாயக மாநில துணைசெயலாளர் மாது, மாவட்ட துணை செயலாளர்கள் தமிழரசன், சரவணன், தங்கதுரை, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, வெங்கடேஷ், முத்துகுமார், ராமசந்திரன், பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் அறிவு, ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் காமராஜ், பச்சாக்கவுண்டர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.
- கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளன.
- முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது 2023-24-ம் நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஆகஸ்ட் 2-ந்தேதி அன்றும், கலைஞர் பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 4-ந்தேதி அன்றும் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் காலை 9.30 மணியளவில் நடை பெற உள்ளன.
பேச்சு போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாண வர்களை திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும், பள்ளி மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் வாயிலா கவும் தெரிவிக்கப்படும்.
கல்லூரி போட்டியில் வெற்றிபெறும் மாண வர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
பள்ளி போட்டியில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாண வர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இவ்விழாவில் பள்ளி மழலைகள் காமராஜர் போல் வேடம் அணிந்து கல்வி கண் திறந்த காம ராசரை பெருமைப்படுத்தினர்.
- இவ்விழாவை சிறப்பிக்க கல்வி இயக்குநர் ஜான் இருதயராஜ் பட்டிமன்றத்தின் நடுவராக தலைமை தாங்கினார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர், ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
வள்ளுவர் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பாக பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் ஆகியோர் காமராஜரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் பள்ளி இயக்குநர் தமிழ்மணி, பவானி தமிழ்மணி கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும் இவ்விழாவை சிறப்பிக்க கல்வி இயக்குநர் ஜான் இருதயராஜ் பட்டிமன்றத்தின் நடுவராக தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் வெற்றிவேல் செல்வம் நன்றி கூறினார்.
பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், ஏஞ்சலீனா, உமா தேவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பள்ளி மழலைகள் காமராஜர் போல் வேடம் அணிந்து கல்வி கண் திறந்த காமராசரை பெருமைப்படுத்தினர். மேலும் பள்ளியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர், இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்