search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமாப்பிள்ளை பலி"

    தாராபுரத்தில் சாலையில் வெட்டிப்போட்ட மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பலி மனைவி கதறல்

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வீராச்சிமங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 22). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி செண்பகம் (19). கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

    சம்பவத்தன்று இரவு நாகராஜ் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் சீராம்பாளையத்தில் வந்தபோது சாலையில் இருந்த சிறிய கல் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.

    இதனால் நிலைதடுமாறியது. மோட்டார் சைக்கிளை நாகராஜ் திருப்பியபோது அங்கு ஏற்கனவே வெட்டிப்போட்டிருந்த மரத்தின்மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார். நாகராஜின் உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார்.

    இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் தென்னை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் இவரது மகன் சிவா(26) இவருக்கும் மணிமேகலை என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. சிவாவிற்கு சொந்தமான விவசாய நிலம் பாதிரி ஏரிக்கரை செல்லும் வழியில் உள்ளது. பாம்பு செட் அருகில் உள்ள தென்னை மரத்தில் ஏறி நேற்று சிவா இளநீர் பறித்துள்ளார். அப்போது சிவா கைப்பிடித்து இருந்த தென்னை மட்டை பாரம் தாக்காமல் முறிந்தது. இதனால் சிவா கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சிவாவை வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவர் இறந்தார்.

    இதுதொடர்பாக அவரது உறவினர் வேலு வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்‌ திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வந்தவாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் திருமணமாகி 6 மாதமே ஆன புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் பழனி (வயது 28). விவசாயியான இவர் தனது டிராக்டருக்கு டீசல் வாங்கி வர நேற்று இரவு வந்தவாசி சென்றார்.

    டீசல் வாங்கிக்கொண்டு வந்தவாசியில் இருந்து ஆரியாத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். விளாங்காடு நெடுஞ்சாலை சளுக்கை கூட்டு ரோடு அருகே வந்த போது வந்தவாசி நோக்கி வந்த கார் பழனி ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது.

    இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்தவெள்ளத்தில் பழனி பலியானார். பழனிக்கும் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த அமுதவல்லி என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.

    வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 6 மாதம் ஆன நிலையில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    மண்ணச்சநல்லூர்:

    அரியலூர் அருகே உள்ள கீழப்பழுர் கிராமத்தை சேர்ந் தவர் மூர்த்தி (வயது 33), தொழிலாளி. இவருக்கு கடந்த 7 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருச்சி சிறுகனூர் அருகே தச்சன்குறிச்சி பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தார். 

    நேற்றிரவு அவர் சமத்துவபுரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது திருச்சி-லால்குடி சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம் , மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். 

    இது குறித்த தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். 

    இதனிடையே இன்று காலை தச்சன்குறிச்சி சமத்து வபுரம் அருகே உள்ள மது பானக்கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி -லால்குடி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இது குறித்த தகவல் அறிந்ததும் லால்குடி தாசில்தார் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், தச்சன்குறிச்சி சமத்துவபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. 

    ஏராளமானோர் அங்கு குவிவதால் போக்குவரத்து நெரிசல்  ஏற்படுகிறது. மேலும் மது அருந்தி விட்டு செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆம்பூர் அருகே விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் சைனா (வயது 26). ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவருக்கும் கண்ணடி குப்பம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா (22) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    அர்ச்சனா தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் நேற்று அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனால் உற்சாகத்தில் இருந்த சைனா தனது நண்பர்களுக்கு மது விருந்து வைத்துள்ளார்.

    பின்னர் நேற்றிரவு 8 மணியளவில் கண்ணடி குப்பம்- நாச்சார்குப்பம் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் செல்போன் பேசியபடி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது விண்ணமங்கலத்தை சேர்ந்த சீனிவாசன் ஓட்டி வந்த ஆட்டோ சைனா மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சைனா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சீனிவாசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னுடைய மனைவியின் வளைகாப்பு அன்றே புது மாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் சென்னை பீர்க்கங்கரணை காட்டன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் வசந்தகோவிந்தன் (45). ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் வடபுதுப்பட்டு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். 

    அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வேகமாக சென்ற கார் வசந்த கோவிந்தன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. விபத்தில் படுகாயம் அடைந்த வசந்தகோவிந்தனை மீட்ட ஆம்பூர் தாலுகா போலீசார் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் ஆடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    சோழவந்தான் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
    சோழவந்தான்:

    வாடிப்பட்டி அருகே உள்ள சல்லக்குளத்தை சேர்ந்தவர் குருவையா. இவரது மகன் கார்த்திக் (வயது 27). டிரைவரான இவருக்கு அடுத்த மாதம் 12-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கார்த்திக் அதே கிராமத்தை சேர்ந்த நண்பர் சீனிவாசன் என்பவருடன் மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் இருவரும் ஊருக்கு புறப்பட்டனர்.

    வாடிப்பட்டி அருகே உள்ள நகரி 4 வழிச்சாலையில் வந்து கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    கார்த்திக், சீனிவாசன் ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். சீனிவாசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருமணமாக இருந்த புதுமாப்பிள்ளை கார்த்திக் விபத்தில் பலியானது அவரது உறவினர் மட்டுமின்றி கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    உத்தமபாளையம் அருகே பைக் மீது மினி வேன் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 25). இப்பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக சூர்யா தனது நண்பர்கள் காதர் மைதீன் (வயது 29). சுருளி மஸ்தான் (39) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் உத்தமபாளையம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிரே வந்த மினி வேன் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது இதில் காதர் மைதீன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இவருக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்து 3 மாத கைக்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. சுருளி மஸ்தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார்.

    சூர்யா படுகாயங்களுடன் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் மினி வேன் டிரைவர் தங்கமாயன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். #tamilnews
    திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதலில் புதுமாப்பிள்ளை பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே சந்தைபுதுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ் என்ற ராஜசேகர் (வயது32). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் பொதுப்பணித்துறையில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வந்த இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதால் புதுவையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.

    நேற்று இரவு இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான தனவேலு (34) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் லிங்காரெட்டிபாளையத்துக்கு சென்றனர். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ராஜ் ஓட்டிவந்தார். தனவேலு பின்னால் அமர்ந்து வந்தார்.

    சந்தைக்புதுக்குப்பம் அருகே கைலாசபுரம் என்ற இடத்தில் வந்த போது எதிரே சந்தைக்புதுக்குப்ப முதுநகரை சேர்ந்த சதீஷ் (23) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாரதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ், தனவேலு, சதீஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள வானூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக 3 பேரும் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து தனவேலு, சதீஷ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விபத்தில் பலியான ராஜிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. மாலதி (24) என்ற மனைவி உள்ளார். தற்போது மாலதி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    திருமணமான 6 மாதத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சந்தை புதுக்குப்பம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எண்ணூரில் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவொற்றியூர்:

    எண்ணூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 26). இவருக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று இரவு அவர் காசிமேட்டில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    எர்ணாவூர் ரவுண்டானாவில் வந்த போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராகேஷ் பலியானார். இது தொடர்பாக மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலையை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ்குமாரை கைது செய்தனர். #Tamilnews
    ×