search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் பங்க்"

    • பெட்ரோல் பங்கில் இருந்த வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்.
    • பெட்ரோல் பங்கில் கேஸ் வெளியேறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சென்னை கே.கே.நகரில் பெட்ரோல் பங்கில் உள்ள சிஎன்ஜி கேஸ் நிரம்பும் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.

    சிஎன்ஜி கேஸ் நிரப்பும் நிலையத்தில் இருந்து திடீரென கேஸ் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பெட்ரோல் பங்கில் இருந்த வாகன ஓட்டிகள் அங்கு இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பெட்ரோல் பங்கில் கேஸ் வெளியேறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது



    • பெட்ரோல் பங்கில் யானை ஒன்று புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • பெட்ரோல் பங்கில் யானை சுற்றித் திரிந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    கோயம்புத்தூர்:

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது.

    இந்த பெட்ரோல் பங்கில் யானை ஒன்று புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங்கில் யானையைப் பார்த்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.

    இதுதொடர்பான காட்சிகள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. பெட்ரோல் பங்கில் யானை சுற்றித் திரிந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    யானை ஊருக்குள் வந்த சம்பவம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பண்ருட்டி அருகே பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்கை சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.
    • பெட்ரோல் பங்க்-கிற்கு கீழ் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில், பண்ருட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்-ல் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைத்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.

    இதனையடுத்து, பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்கை சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.

    பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் மெத்தனால் பதுக்கி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்க்-கிற்கு சீல் வைக்கப்பட்டது.

    பெட்ரோல் பங்க்-கிற்கு கீழ் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்று வந்த இருதயராஜ், பழனிசாமி, சக்திவேல், குமார் மற்றும் அண்ணாதுரை ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சங்கராபுரம் மற்றும் சின்னசேலம் பகுதிகளில் 5 பேரும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    • தீவிபத்து நிகழ்ந்தபோது அந்த பெட்ரோல் பங்கில் மற்ற வாகனங்களும் எரிபொருள் நிரப்புவதற்காக நின்று கொண்டிருந்தன.
    • விபத்து சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், புவனகிரி பகுதியில் அமைந்துள்ள நயாரா பெட்ரோல் பங்கில் ஒரு லாரி டீசல் நிரப்ப பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் உடனடியாக பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து துரிதமாக செயல்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த தீ விபத்து சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த தீவிபத்து நிகழ்ந்தபோது அந்த பெட்ரோல் பங்கில் மற்ற வாகனங்களும் எரிபொருள் நிரப்புவதற்காக நின்று கொண்டிருந்தன.

    லாரி டேங்க் வெடித்து தீப்பிடித்ததும் அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தெறித்து ஓடினர். ஆனால், பெட்ரோல் பங்கின் ஊழியர்களில் ஒருவர் மட்டும் துணிவுடன் முன்வந்து ஓடிச்சென்று தீயணைப்பு கருவியை எடுத்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் மற்ற ஊழியர்களும் தீயணைப்பு கருவிகளுடன் வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்து சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெட்ரோல் போடும் சாக்கில் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று எச்சரித்து உள்ளனர்.
    • ஆண்கள், பெண்கள் என 20 பேர் கொண்ட கும்பலுடன் வந்த பங்கில் வேலை செய்பவர்களை சராமரியாக தாக்கினர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் அடையாளம் தெரியாத வாலிபர்கள் 2 பேர் அங்கு பெட்ரோல் போடும் சாக்கில் அந்த பங்கிற்கு அடிக்கடி வந்து, அங்கு பெட்ரோல் போடும் வேலையில் இருந்த இளம்பெண் நிஷா வயது.21 என்பவரிடம் பேச்சு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சக ஊழியர்களான தனுஷ் வயது.38, இனியன் வயது.28, இருவரும் அந்த வாலிபர்களிடம் அடிக்கடி இங்கு வந்து பெட்ரோல் போடும் சாக்கில் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று எச்சரித்து உள்ளனர், பெண்ணிடம் பேசும் காட்சி இங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தும் என்று கூறி அந்த வாலிபர்களை கண்டித்துள்ளனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த இரண்டு வாலிபர்களும் எங்கள் ஏரியாவில் பெட்ரொல் பங்க் வைத்து கொண்டு எங்களுக்கே அறிவுரை சொல்கிறாயா? என தகராறு செய்து உறவினர்கள் ஆண்கள், பெண்கள் என 20 பேர் கொண்ட கும்பலுடன் வந்த பங்கில் வேலை செய்பவர்களை சராமரியாக தாக்கினர். அங்கிருந்த கண்ணாடி டோர், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தியதுடன் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தனுஷ், இனியன், மற்றொரு பெண் ஊழியர் வாசுகி ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    காயமடைந்த 3 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சினிமாவில் நடக்கும் காட்சிகள் பெட்ரோல் பங்கில் 1 மணி நேரம் நடந்த இந்த சம்பவங்கள் அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தன. பிறகு பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கல்பாக்கம் போலீசார் சி.சி.டி.வி. காட்சி பதிவினை வைத்து தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • ஓ.எம்.ஆர். சாலையில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து.
    • பெட்ரோல் பங்க் அருகில் இருந்தவர்கள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.

    சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கந்தன்சாவடி பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக பெட்ரோல் பங்க் அருகில் இருந்தவர்கள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.

    மேலும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். மேலும் தீ மற்ற இடங்களுக்கு பரவுவதை தடுத்து நிறுத்தினர். தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓ.எம்.ஆர். சாலையில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • ரூ.20 ஆயிரத்தையும் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடி சென்றனர்.
    • நீதிபதி விசாரணை செய்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தார்.

    ராஜாக்கமங்கலம் :

    ராஜாக்கமங்கலம் அருகே எறும்பு காட்டில் ரத்தின தங்கம் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு எறும்பு காட்டை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 55) உட்பட 7 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 4 பேர் பகலிலும் 3 பேர் இரவிலும் பணியாற்றி வருகின்ற னர். நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் விற்ற ரூ.20 ஆயிரத்தை விஸ்வ நாதன் தனது தலையணையின் அடிப்பகுதியில் வைத்து விட்டு இரவு சுமார் 11 மணிக்கு தூங்கி னார். அப்போது ராஜாக்கமங்க லம் துறையை சேர்ந்த 17 வயது சிறுவனும், புன்னைநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனும் பெட்ரோல் போடு வது போல் வந்து விஸ்வநாதனின் தலையணை அடியில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தையும் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடி சென்றனர்.

    விஸ்வநாதன் கண் விழித்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் கொள்ளை யடிக் கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடி யாக அவர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ரத்தின தங்கத்திற்கு தகவல் அளித்தார்.

    இச்சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் உரிமையா ளரின் கணவர் ராம்கோபால் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனிப்படையினர் பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற 2 சிறுவர்களையும் கைது செய்த னர். பெட்ரோல் பங்கில் திருடு வதற்கு முன்னதாக இருவரும் தாராவிளை மகேஷ் (வயது 45) என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும், புஷ்ப ஆண்டனி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் திருடியதை ஒப்புக்கொண்டனர். வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகர்கோவில் சிறார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி விசாரணை செய்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தார்.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஏழு பேருக்கு தொடர் சிகிச்சை.
    • காயமுற்ற மூன்று பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதி.

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 30 வயது இளைஞர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் கந்தசாமி என்பதும், இவர் பெட்ரோல் பம்ப்-இல் பணியாற்றி வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

    இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த நான்கு பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், மூன்று பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், பங்க் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    • சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதலே கனமழை பெய்து வருகிறது.
    • மழை காரணமாக பெட்ரோல் பங்கில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒதுங்கி நின்றதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்தின் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது.

    மழை காரணமாக பெட்ரோல் பங்கில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒதுங்கி நின்றதாக கூறப்படுகிறது. மேற்கூரை இடிந்துவிழுந்ததை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த மூன்று பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இடிந்து விழுந்த மேற்கூரையை அகற்றும் பணிகளில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • சினிமா தியேட்டர்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை.
    • கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் இந்த நோட்டுகளை வாங்குவதை நிறுத்திவிட்டனர்.

    சென்னை:

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. மக்களிடம் குறைவான அளவே புழக்கத்தில் இருந்த இந்த நோட்டுகள் நாளை மறுநாளுக்கு(செப்டம்பர் 30-ந்தேதி) பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்தது.

    இதனை தொடர்ந்து வங்கிகள் மூலமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடங்கியது. கிட்டத்தட்ட 5 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டும், பலர் இன்னும் வங்கிகளில் இந்த நோட்டுகளை மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வருகின்றனர்.

    இந்த சூழலில் காலக்கெடு முடிவதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் பஸ்களில் கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று கண்டக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றால், அதற்கு கண்டக்டர்களே பொறுப்பு என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்தது. இதேபோல் சினிமா தியேட்டர்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை.

    கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் இந்த நோட்டுகளை வாங்குவதை நிறுத்திவிட்டனர். இதே போல பெட்ரோல் பங்குகளிலும் இன்று முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

    தமிழகத்தில் மொத்தம் 5,900 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்த பங்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    • மூங்கில் துறைப்பட்டில் டிராக்டரில் சிக்கி இளம் பெண் பலியானார்.
    • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே இளையாங்கன்னி பகுதியை சேர்ந்த அருள் மனைவி ரேவதி(35) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ரேவதி மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி, அந்த வழியாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
    • நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர்.

    ஆவடி:

    ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. கடந்த சில நாட்களாக திருமுல்லைவாயில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக இந்த பெட்ரோல் பங்க்கில் தரைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டு இருக்கும் டேங்கிற்குள் தண்ணீர் கசிந்தது.

    இதனை அறியாமல் வழக்கம் போல் வாகனங்களுக்கு ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பினர். சிறிது தூரம் சென்றும் சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் பழுதாகி நின்றன.

    தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பப்பட்டதால் பழுது ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாகன ஓட்டிகளுக்கு முறையான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர். இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    ×