என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் தற்கொலை முயற்சி"
அயனாவரம் கெல்லீஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி திவ்யா (28). இவர்களுக்கு விக்னேஷ் (11), என்ற மகனும், அபிநயா (8), செந்தமிழ் (5) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளை பிரிந்து சென்ற வெங்கடேஷ் ஒருவருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்தநிலையில் திவ்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் திவ்யா வீட்டுக்கு வந்து சென்றார். இதை பக்கத்து வீட்டு பெண்கள் தவறாக பேசினார்கள். திவ்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டனர்.
இதனால் மனவருத்தம் அடைந்த திவ்யா நேற்று இரவு பாலில் எலிமருந்து கலந்து குடித்தார். தனது குழந்தைகள் விக்னேஷ், அபிநயா மற்றும் செந்தமிழ் ஆகியோருக்கும் கொடுத்தார். வயிறு மற்றும் தொண்டை எரிந்ததால் நள்ளிரவு 12 மணியளவில் குழந்தைகள் அலற தொடங்கினர்.
உடனே அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தார். பக்கத்து வீடுகளை சேர்ந்த 3 பெண்களிடம் விசாரணை நடத்தினார். #tamilnews
திண்டுக்கல் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் நல்லம்மாள். (வயது 50). இவர் இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அதிர்ச்சி அடைந்த டி.எஸ்.பி. பிரபாகரன் மற்றும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது நல்லம்மாள் போலீசாரிடம் கூறியதாவது:-
நான் வேடசந்தூர் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியில் வசித்து வருகிறேன். எனது கணவர் வேல்முருகன் 4 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 3 மகள்கள் உள்ளனர். சிறுகுழந்தைகளான அவர்களை நான் கூலி வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறேன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் வசித்த வீட்டை அதே பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவர் அபகரித்து கொண்டு வீட்டை விட்டு துரத்தினார். இதனால் நான் எனது குழந்தைகளுடன் நாடக மேடையில் தங்கி பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறேன்.
இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் கலெக்டர் ஆபீசில் மனு அளித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் நான் எனது குழந்தைகளுடன் கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க வந்தேன்.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
இதனையடுத்து போலீசார் அவரை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
ஈரோடு மேல்திண்டலை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 50). தறிப்பட்டறை தொழிலாளி.
இவரது மனைவி ஈஸ்வரி (45). 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. இன்னொரு மகள் திண்டலில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
ஈஸ்வரி அந்த பகுதியில் வீட்டு வேலைகள் செய்து வந்தார். நேற்று இரவு மாதேஸ்வரன் வேலைக்கு சென்றுவிட்டார்.
வீட்டில் ஈஸ்வரியும், இளைய மகளும் இருந்தனர். அவர்கள் இரவு தூங்க சென்றனர். தினமும் அதிகாலை 5 மணிக்கே ஈஸ்வரி எழுந்து வேலைக்கு சென்று விடுவார்.
ஆனால் இன்று காலை 7 மணி வரையும் வீடு திறக்கப்படவில்லை. ஈஸ்வரியின் நடமாட்டமும் இல்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
வீட்டின் கதவை தட்டினர். அப்போதுதான் இளைய மகள் எழுந்துள்ளார். அவர் எழுந்து பார்த்தபோது ஈஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மயக்கமடைந்து கிடந்தார்.
அந்த நிலையில் தாயை கண்ட மகள் அதிர்ச்சி அடைந்தார். அவர் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர்.
ஈஸ்வரியின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்து வடிந்த ரத்தம் உறைந்து காணப்பட்டது. ஈஸ்வரி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
ஈஸ்வரியும், அவரது இளைய மகள் மட்டுமே நேற்று இரவு வீட்டில் இருந்துள்ளனர். எனவே ஈஸ்வரி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
ஆனால் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தற்கொலைக்கு முயன்ற ஈஸ்வரி அந்த பகுதியில் அனைவரிடமும் நன்கு சகஜமாக பேசி பழகக்கூடியவராம். அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
இதற்கிடையே கேரளாவில் போராட்டங்களில் ஈடுபடும் ஐயப்ப பக்தர்களை சமரசப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக போராட்டத்தில் தீவிரம் காட்டும் அமைப்புகள், கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பம் ஆகியோரை பேச்சு வார்த்தைக்கு அரசு அழைத்தது. இதில் பந்தளம் ராஜகுடும்பம் திருவாங்கூர் தேவசம் போர்டுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையவில்லை.
சபரி மலை தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படமாட்டாது என முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக கூறிவிட்டார். எனவே, வரும் நாட்களில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என கூறப்படுகிறது. #Sabarimalaverdict
சென்னை:
கோவையை சேர்ந்தவர் கவிதா (வயது 37). இவர் அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவிதா சென்னை வந்தார். பின்னர் நேற்று மாலை அவர் கோவை செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.
அப்போது கவிதா பாதி மயக்கத்தில் இருந்தார். இதனை கவனித்த விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். இதற்கு அவரால் சரிவர பதில் கூற முடியவில்லை.
இதையடுத்து கவிதாவின் விமான பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து திருப்பி அனுப்பினர். இதனால் கோபம் அடைந்த கவிதா, சர்வதேச விமான முனையத்தில் 2-வது தளத்தில் உள்ள புறப்பாடு பகுதிக்கு சென்றார். திடீரென அவர் அங்கிருந்து கீழே குதிக்க போவதாக சத்தமிட்டு குதிக்க முயன்றார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்புக்கு நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயணிகள் கவிதாவை தடுத்து மீட்டனர்.
அப்போது அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கவிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்து உள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் அடிக்கடி சென்னை வரும்போது நட்சத்திர ஓட்டலில் தங்குவது வழக்கம். சம்பவத்தன்று கவிதா விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்பு ஓட்டலில் இருந்து புறப்படும் போதே அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று உள்ளார். இதனால் அவர் மயக்கம் அடைந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
கவிதா தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் சாமுண்டிபுரம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நெல்சன். பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி புனிதா (28). இவர்களுக்கு எவலின் (7) என்ற மகளும் எபின் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.
நேற்று இரவு நெல்சனுக்கும் புனிதாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த புனிதா தனது குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார்.
அதன் படி இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்தார். இதில் 3 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த நெல்சன் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் மனைவி, குழந்தைகள் மயங்கி கிடந்ததை பார்த்து கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் மயங்கி கிடந்த புனிதா மற்றும் அவரது குழந்தைகள் எவலின், எபின் ஆகியோரை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு நாள் தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் வந்து கோரிக்கை மனு கொடுத்து வருகின்றனர்.
இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வாயில் முன்பு நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் போலீசாரை கண்டித்து கோஷமிட்டவாறு தான் கொண்டு வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றினர்.
தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தீக்குளிக்க முயன்றது மதுரை மாவட்டம் மேலூர் நேதாஜி ரோட்டை சேர்ந்த சலீம் மனைவி ஷகிராபானு (வயது 43) என்பது தெரிய வந்தது. இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரிடம் கடன் வாங்கியுள்ளார். பல்வேறு தவனைகளில் கடன் பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்பும் கடன் கொடுத்தவர்கள் கூடுதல் வட்டி கேட்டு துன்புறுத்தியதாகவும் இதுகுறித்து மேலூர் போலீசார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிகிறது.
இதனால் கடன் கொடுத்தவர்கள் அதிக வட்டி கேட்டு தொந்தரவு செய்வதாகவும், கொலைமிரட்டல் விடுப்பதாக கூறி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஷகிரா பானு தீக்குளிக்க முயன்றுள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஒரு பெண் தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைக்க முயன்றார்.
உடனே அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் கண்ணீர் மல்க தெரிவிக்கையில், நான் வடமதுரை இ.பி. காலனியில் வசித்து வருகிறேன். எனது பெயர் டெய்சி ராணி (வயது 35). எனது கணவர் சேகருக்கு சொந்தமாக 3 செண்ட் இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தோம். கணவரின் சகோதரர் தேவராஜ் மற்றும் அவரது மனைவி வெங்கடேஸ்வரி ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டு தங்கள் குடும்ப தேவைக்காக எங்களிடம் பணம் கேட்டனர்.
நாங்கள் பெருமாள் மற்றும் வீரணன் ஆகியோரிடம் வீட்டு பத்திரத்தை வைத்து ரூ.10 லட்சம் கடன் வாங்கினோம். அதன் பிறகு மாதம் தோறும் வட்டி கட்டி வந்த நிலையில் ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால்தான் வீட்டு பத்திரத்தை தர முடியும் என எங்களை மிரட்டி வந்தனர்.
இது தொடர்பாக எனது கொழுந்தன் தேவராஜிடம் கூறியபோது அவர் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். பணத்தை தராவிட்டால் வீட்டை தங்களது பெயரில் மாற்றி எழுதிக் கொள்வோம் என என்னையும், என் கணவரையும் அடியாட்களை வைத்து மிரட்டி வந்தனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு சொந்தமான வீட்டை அபகரித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தற்கொலை செய்ய முடிவு செய்தோம் என்று தெரிவித்தார். இதனையடுத்து மாவட்ட கலெக்டரிடம் தனது கோரிக்கை மனுவை அளித்துச் சென்றார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள சேங்கனூரைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி (வயது 35). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கணவர் இறந்து விட்டதால் மகன்கள்-மகளை படிக்க வைப்பதில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் குடும்ப வறுமை காரணமாக லட்சுமி சென்னைக்கு சென்று வீட்டு வேலை பார்த்து வருகிறார். தற்போது அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் வேலை பார்க்கும் இடத்தில் நன்னிலம் அருகே உள்ள அச்சுத மங்கலத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (30) என்பவரும் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
அப்போது ராஜீவ்காந்தியுடன் பழக்கம் ஏற்பட்டதால் லட்சுமி அவரிடம் பணம் கடனாக பெற்றுள்ளார்.
இந்தநிலையில் ராஜீவ் காந்தி தனது மனைவி ஆனந்தியிடம் லட்சுமி பணம் வாங்கி விட்டு தராமல் இருப்பதாக கூறியுள்ளார்.
இதுபற்றி ஆனந்தி அவரது உறவினர்களிடம் கூறியதின் பேரில் அவர்கள் லட்சுமியிடம் பணம் கேட்டு அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த லட்சுமி இன்று காலை 7 மணியளவில் அப்பகுதியில் உள்ள மொட்டையாறு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் சென்றவர்கள் லட்சுமியை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றிய புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குடவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்