என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொது தேர்வு"
- ஹலோ... ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கிறது? வெற்றி பெற முடியவில்லையே என்ற கவலையில் இருக்கிறீர்களா? என்கிறார்கள்.
- ஆலோசனை வழங்கும் போது கவுன்சிலர்கள் அவர்களுக்கே உரித்தான பாணியில் சமயோசிதமாக பேசி அவர்களின் மனதை மாற்றுகிறார்கள்.
சென்னை:
பிளஸ்-2 விற்கு பிறகு மருத்துவமா? என்ஜினீயரிங்கா? என்ன படிக்கலாம்? என்ற பலவிதமான கனவுகளுடன் இருந்த மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் சறுக்கினால் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
போச்சு... எல்லாம் போச்சு... என்று விரக்தியடைந்து உயிரையே மாய்த்துக் கொள்ளும் மனநிலைக்கு சென்று விடுகிறார்கள்.
அவர்களின் மனநிலையை மாற்றி இயல்பு நிலைக்கு திருப்பி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட சிறப்பு ஆலோசனை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைத்து உள்ளது. இதற்காக 104 என்ற தனி போன் எண்ணும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மையம் டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்படுகிறது.
40 மனநல ஆலோசகர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள். நேற்று தேர்வு முடிவு வெளியானதில் 47 ஆயிரம் பேர் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளார்கள்.
இவர்களின் போன் எண்களை இந்த ஆலோசனை மையத்தில் சேகரித்து வைத்து உள்ளார்கள். தேர்வு முடிவு வெளியானதும் மிக குறைந்த மதிப்பெண்களில் வெற்றியை நழுவவிட்டவர்களின் போன் எண்களை தனியாக பிரித்து எடுத்தார்கள்.
உடனடியாக அவர்கள் ஒவ்வொருவரையும் போனில் தொடர்பு கொண்டார்கள். மறுமுனையில் போனை எடுத்ததும் அவர்கள் குரலை வைத்தே ஆலோசகர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள்.
ஹலோ... ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கிறது? வெற்றி பெற முடியவில்லையே என்ற கவலையில் இருக்கிறீர்களா? என்கிறார்கள்.
அதை கேட்டதும் மறுமுனையில் விம்மி அழுவதை புரிந்து கொள்கிறார்கள். என்ன தம்பி... எவ்வளவு தைரியமானவர் நீங்கள்... இப்படி அழலாமா... என்று உரையாடல் தொடங்கி மன அழுத்தத்தை குறைத்து அவர்களது எண்ணத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள்.
இன்று வரை 2 ஆயிரம் பேரை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். இந்த உரையாடலின் போதே 'ஹை ரிஸ்க்கில்' இருப்பவர்கள் தனியாக அடையாளம் கண்டு விடுகிறார்கள்.
அவர்களை மட்டும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். இதுவரை 4 பேர் ஹை ரிஸ்க்கில் இருப்பதை கண்டு பிடித்துள்ளார்கள். அவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.
ஆலோசனை வழங்கும் போது கவுன்சிலர்கள் அவர்களுக்கே உரித்தான பாணியில் சமயோசிதமாக பேசி அவர்களின் மனதை மாற்றுகிறார்கள்.
பிளஸ்-2 வில் தோற்றதால் வாழ்க்கையில் தோற்றுவிட்டதாக நினைக்கலாமா? இன்னும் துணைத் தேர்வு இருக்கிறது. அப்போது மீண்டும் தேர்வை எழுதி வெற்றி பெற முடியும்.
மதிப்பெண் குறைந்துவிட்டதே நான் விருப்பப்பட்ட பாடத்தை படிக்க முடியாதே என்று கவலைப்படுகிறீர்களா? அதற்கு இணையான எத்தனையோ பாடங்கள் இருக்கிறது. உங்களால் இன்னும் எவ்வளவோ சாதிக்க முடியும் என்கிறார்கள். மேலும் அவர்களுக்கு அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள்.
இதுதவிர நட்புடன் உங்களோடு மனநல சேவை என்ற இலவச தொலைபேசி (14416) எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அமைப்பு முற்றிலும் தற்கொலையை தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
ஆனால் இந்த எண்ணை மன அழுத்தத்தில் இருப்பவர் தொடர்பு கொண்டால் சில நிமிட காத்திருப்புக்கு பிறகு இந்திக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆங்கிலத்துக்கு எண் 2-ஐ அழுத்தவும், தமிழுக்கு எண் 3-ஐ அழுத்தவும் என்று மொழியை தேர்வு செய்ய சொல்கிறது.
அதன் பிறகு தமிழகத்தை சேர்ந்தவர்களா? புதுச்சேரியை சேர்ந்தவர்களா? என்பதை தேர்வு செய்கிறார்கள்.
இத்தனை வேலையும் முடிந்த பிறகு அனைத்து இணைப்புகளும் பிசியாக உள்ளன. தயவு செய்து லைனில் காத்திருங்கள் என்று சில நிமிட ரெக்கார்டு பதிவை கேட்டு கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகுதான் இணைப்பு கிடைக்கும்.
தற்கொலை முடிவு என்பது ஓரிரு நொடிகளில் எடுப்பது. அந்த நேரத்தில் அவர்களின் எண்ணத்தை மாற்றினால்தான் பலன் கிடைக்கும்.
ஆனால் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருப்பவர்கள் போன் பண்ணி கூடுதல் 'டென்ஷனை' வரவழைக்க விரும்பமாட்டார்கள். எனவே 14416 எண்ணின் செயல்பாட்டில் மாற்றம் தேவை.
'வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை உலகினில்' என்பது உங்களுக்காக பாடப்பட்டது. பிளஸ்-2 என்பது ஒரு முயற்சி. அந்த முதல் முயற்சி உங்களுக்கு கைகொடுக்காமல் போயிருக்கலாம். போனால் போகட்டும்.
இன்னும் முயற்சிக்கலாம். வேறு எவ்வளவோ படிக்கலாம். முன்னேறலாம். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. இந்த தோல்வி வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிக்கான திருப்புமுனை யாக கூட இருக்கலாம். கவலையை விடுங்கள். அடுத்த கட்டத்தை நோக்கி பயணியுங்கள்.
- தேர்வு தோல்வியால் பிளஸ்-2மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநின்றவூர்:
ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்.தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் தேவா(வயது17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வை சரியாக எழுதவில்லை. இதுபற்றி அவர் பெற்றோரிடம் கூறிவந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. அப்போது தேவா தமிழ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் தோல்வி அடைந்து இருந்தார். அவர் தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் குறைந்த மதிப்பெண்ணும் பெற்று இருந்ததாக தெரிகிறது.
இதனால் மாணவர் தேவா மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி அடுத்த தேர்வில் பரீட்சை எழுதி கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
எனினும் தேர்வு தோல்வியால் மிகுந்த மனவேதனையில் இருந்த தேவா வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் கதறி துடித்தனர்.
தேர்வு தோல்வியால் பிளஸ்-2மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 மையங்களில் 33 ஆயிரத்து 948 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 20 ஆயிரத்து 790 மாணவர்கள், 22 ஆயிரத்து 68 மாணவிகள் என மொத்தம் 42 ஆயிரத்து 858 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை (13-ந் தேதி) தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் பிளஸ்-2 தேர்வு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 90 ஆயிரத்து 723 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.
பிளஸ்-2 தேர்வை 6,903 மாணவர்கள், 7,014 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 917 பேர் எழுத உள்ளனர். இதேபோல் 14-ந் தேதி தொடங்கும் பிளஸ்-1 தேர்தலை 13 ஆயிரத்து 114 பேரும், அடுத்த மாதம் 6-ந் தேதி தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 16 ஆயிரத்து 434 பேரும் எழுத உள்ளனர். பிளஸ்-2 தேர்வை கண்காணிக்க 80 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 மையங்களில் 33 ஆயிரத்து 948 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர். பிளஸ்-1 தேர்வை 30,891 பேர் எழுத உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 20 ஆயிரத்து 790 மாணவர்கள், 22 ஆயிரத்து 68 மாணவிகள் என மொத்தம் 42 ஆயிரத்து 858 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். பிளஸ்-1 தேர்வை 44 ஆயிரத்து 356 பேர் எழுத உள்ளனர்.
இதில் பிளஸ்-2 தேர்வை 171 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 தேர்வை 173 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளும் எழுத உள்ளனர்.
- அரசு பள்ளி கள், தனியார் பள்ளிகள் உள்பட24 மையங்களில் நடை பெற உள்ளது.
- அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 526 முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கான பள்ளி ஒதுக்கீடு குலுக்கல் முறையில் நடைபெற்றது.
அரூர்,
தமிழகத்தில் வரும் மார்ச் 13-ம் தேதி முதல் 12-ம் வகுப்புக்கும் 14-ம் தேதி முதல் 11 வகுப்புக்கும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.
அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அரூர் ஆண்கள் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, மொரப்பூர், பாப்பி ரெட்டிப்பட்டி அரசு பள்ளி கள், தனியார் பள்ளிகள் உள்பட24 மையங்களில் நடை பெற உள்ளது.
இங்கு அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 526 முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கான பள்ளி ஒதுக்கீடு குலுக்கல் முறையில் நடைபெற்றது.
அரூர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இப்பணியில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபாலன் முன்னிலை யில் கண்காணிப்பாளர்கள் ராக வேந்தர், செந்தமிழ்செல்வன், பன்னீர் ஆகியோர் பணி ஒதுக்கீடு பணியில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் 22,757 பேர் 11ம் வகுப்பு தேர்வும் 19,680 பேர் 12ம் வகுப்பு தேர்வும் எழுதவுள்ளனர்.
- பேனா, பென்சில் இலவசமாக வழங்கப்பட்டது
- பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
ஜோலார்பேட்டை அருகே வீர ஆஞ்சநேயர் கோயிலில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவர். களுக்கு சிறப்பு யாக பூஜை செய்து, 1000 பேருக்கு கோயில் நிர்வாகம் சார் பில் பேனா, பென்சில்கள். வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட் டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் வி எம் வட்டத்தில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலில் சனிக்கிழமை, ருக்கு சிறப்பு யாக பூஜை யும், உற்சவ வழிபாடும் நடைபெறுகிறது. மேலும் ஆண்டுதோறும் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணபெற்றோர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மாணவர்களுக்கு சிறப்பு யாக பூஜைசெய்யப் பட்டு பென்சில், பேனா வழங்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வீர ஆஞ்சநேயர் கோயி லில் காலை 8.30 மணி முதல் 11மணி வரை 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியருக் கான சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.ஐ சரஸ்வதி, ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தி மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோ ருக்கு கலச பூஜை சிறப்பு யாக வேள்வி நடை பெற்று, பேனா, பென்சில் பூஜையில் வைத்து பள்ளி நிர்வாகத்தின் சங்கல்பம் பெற்றோர்கள் சங்கல்பம் நடைபெற்றது.
இதில், அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த ஆயிரம் மாணவர் கள் பங்கேற்று வழிபட்ட னர்.
தொடர்ந்து 1000 மாணவர்களுக்கு பேனா, பென்சில்களை கோயில் நிர்வாகி எக்ஸெல் ஜி.கும ரேசன் வழங்கினார். மேலும், இந்த சிறப்பு யாக பூஜையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர் கள் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.
- மழைக்கால நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
- அரசு பொதுதேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அகில இந்திய குலாலர் முன்னேற்ற சங்க சார்பில் மாநில மகளிர் மாநாடு பற்றிய ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் தியாகராஜன் நீலகண்டர் தலைமை யில் நடந்தது. மாவட்ட தலைவர் கணேஷ் பால்பாண்டி வரவேற்றார்.
அரசு பொதுதேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தமிழகத்தில் உள்ள அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண தொகை ரூ10ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும்.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பு களில் 5 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். மண்பாண்ட தொழில் செய்ய களிமண் எண் எடுக்க தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், குமார், அசோக் உள்படபலர் கலந்து கொண்டனர்.
- 10-ம் வகுப்பில் பிரியா என்ற மாணவி 410 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், பிளஸ்-2 அரசு தேர்வில் லூர்து டென்சிகா என்ற மாணவி 497 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் மற்றும் பலர் வாழ்த்தினார்கள்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
10-ம் வகுப்பில் பிரியா என்ற மாணவி 410 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், அட்சயா 396 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், சாரா 385 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று உள்ளார்கள். அதேபோல் பிளஸ்-2 அரசு தேர்வில் லூர்து டென்சிகா என்ற மாணவி 497 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தையும், எமிமா 452 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், முகமது நிஸாருத்தீன் 441 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளை பள்ளி தாளாளர் செல்லம்மாள் சுந்தர்ராஜன், பள்ளி முதல்வர் பரிமளா காந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரமோகன் மற்றும் பலர் வாழ்த்தினார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகளுக்கான தேர்வுகள் இந்த மாதம் இறுதிக்குள் நிறைவடைகிறது. அதன்பின்னர், பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு நடைபெற இருக்கின்றன.
ஏற்கனவே திட்டமிட்டு இருந்த பள்ளி செயல்முறை திட்டத்தின்படி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதி வரை பள்ளிகள் இயங்குவதாக இருந்தது. இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.
அதில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு பள்ளி செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவரப்படுமா? என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்பாகவே பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வி துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வுகளை 1.4.2019 முதல் 12.4.2019-க்குள் நடத்தி முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணையை மாவட்ட அளவில் அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக உடனே அனுப்பி தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.
வேலை நாட்களின் இழப்பினை சனிக்கிழமைகளில் ஈடுசெய்யுமாறும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2018-2019-ம் கல்வியாண்டின் கடைசி வேலைநாள் 12.4.2019 என தெரிவித்துகொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தொடக்கப்பள்ளிகளை (1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு) பொறுத்தவரையில் 13.4.2019-க்குள் ஆண்டு இறுதி தேர்வை முடிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு அடுத்த மாதம் 13-ந் தேதியுடன் நிறைவடைகிறது. #PublicExamination
கோபி:
கோபி அருகே உள்ள காசிபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
காசிபாளையம் பேரூராட்சியில் 300 நபர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே பேரூராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப்பணிகள் நடை பெறுகிறது.
கோபி குடிநீர் திட்டத்திற்கு சுமார் ரூ.53 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதானால் நாள் தோறும் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
கோபி நகராட்சி மத்தியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை அகற்றவேண்டும் என நீண்டநாட்களாக புகார் வந்துள்ளது. இதற்காக ரூ.62.20 லட்சம் செலவில் புதிய எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. விரைவில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெறும்.
பள்ளி கல்வித்துறை சார்பில் 1.50 கோடி மரக் கன்றுகள் நட்டு மாணவர்களே பராமரிக்கும் திட்டம் விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
8,9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசின் 25 சதவிகித பங்குத் தொகையுடன் மத்திய அரசு ஸ்மார்ட் மடிக்கனிணிகள் இந்த மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு புதிதாக 750 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேள்வித்தாளில் எப்படி விடையளிக்க வேண்டும் என்றும் அதற்குறிய மதிப் பெண்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளிலும் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஓராண்டிற்கு பிறகு தமிழக கல்வித்துறை இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழிகாட்டியாக திகழும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்