என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் பீதி"
- மஞ்சூர் பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டெருமை ஒன்று சுற்றி வருகிறது.
- சுமார் அரைமணி நேரம் அங்கேயே முகாமிட்ட காட்டெருமை மெதுவாக நகர்ந்து தேயிலை தோட்டத்திற்குள் சென்றது.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது.
சமீபகாலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. காட்டெருமைகள் கூட்டமாக விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சூறையடுவதுடன் தோட்டங்களையும் நாசம் செய்து வருகின்றன.
மஞ்சூர் பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டெருமை ஒன்று சுற்றி வருகிறது. கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து நடமாடி வரும் காட்டெருமை தேயிலை தோட்டங்களில் இலை பறிக்கும் தொழிலாளர்களை விரட்டுவதாக கூறுகின்றனர்.
இதனால் தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தேயிலை தோட்டங்களில் இருந்து வெளியேறி கடைவீதியில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்திற்கும், வாகன போக்குவரத்தும் பாதிப்பு ஏற்படுகிறது.
கடந்த இருதினங்களுக்கு முன் மணிக்கல்மட்டம் பகுதியில் தொழிலாளர்கள் இருவர் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது தோட்டத்திற்குள் புகுந்த காட்டுமாடு திடீரென தொழிலாளர்களை விரட்ட துவங்கியது. இதை கண்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து தேயிலை தோட்டத்தில் இருந்து தலைதெறிக்க தப்பியோடி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மணிக்கல் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. திடீரென காட்டெருமை வருவதை கண்ட அப்பகுதியினர் உடனடியாக தங்களது வீடுகளை அடைத்து தாழிட்டு கொண்டார்கள்.
சுமார் அரைமணி நேரம் அங்கேயே முகாமிட்ட காட்டெருமை மெதுவாக நகர்ந்து தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதன் பிறகே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்தார்கள்.
இதையடுத்து மஞ்சூர் பகுதியில் சுற்றிவரும் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையத்தை சேர்ந்தவர் மணி (55). விவசாயி. இவரது தோட்டத்திற்குள் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு இருந்த 40 தென்னை மரங்களின் குருத்துக்களை தின்று சேதப்படுத்தியது.
பின்னர் அங்கிருந்த சிவக்குமார் வீட்டின் காம்பவுண்டு சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது. வீட்டில் சிவக்குமாரும் அவரது மனைவி முத்துவும் தூங்கி கொண்டு இருந்தனர். யானை காம்பவுண்டு சுவரை உடைக்கும் சத்தம் கேட்டு விழித்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். யானை வீட்டிற்குள் நுழைந்து விடும் என்ற அச்சத்தில் இருவரும் சமையல் அறையில் பதுங்கி கொண்டனர்.
சற்று நேரம் அங்கிருந்த யானை பின்னர் அப்பகுதி செட்டியார் தோட்டத்தில் உள்ள விஜய கோபால் தோட்டத்திற்குள் புகுந்து சேதப்படுத்தியது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து பெரிய நாயக்கன் பானையம் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மேற்கு தொடர்ச்சி மலை பூச்சியூர் பகுதிக்கு யானையை விரட்டி விட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் இப்பகுதியில் விநாயகன், சின்னதம்பி ஆகிய இரு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதில் விநாயகன் யானையை பிடித்து முதுமலையில் விட்டனர். தற்போது ஊருக்குள் புகுந்து இருப்பது மற்றொரு யானையான சின்னதம்பியாக இருக்கலாம் என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், பள்ளியஅக்ரஹாரம் மின்பகிர்மான வட்டம், கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குண்டூர் கிராமத்தில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த இரு மின் கம்பங்கள் தெருவோரம் உள்ள வீடுகள் மீது சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் எந்த நேரத்திலும் மின் கம்பம் வீட்டின் மீது சாய்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் வசித்து வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
குண்டூர் கிராமத்தில் உள்ள 3 மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருந்தன. அவை தற்போது வீசிய கஜா புயலால் மேலும் சாய்ந்து விட்டது. எந்த நேரத்திலும் வீட்டின் மீது விழுந்தது விடும் அபாயம் உள்ளது இதனால் கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறோம். வெண்ணுகுடி, எடக்குடி உதாரமங்களம் உள்பட பல கிராமத்திற்கு செல்லும் முக்கிய சாலையோரம் உள்ள மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளதால் இந்த சாலையில் செல்லும் கிராம மக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
உயிர்பலி ஏற்படும் முன் மின்வாரியம் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரிசெய்து அச்சத்தை போக்கிட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaCyclone
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுவதால், அவை திசை மாறி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது வழக்கமாகி வருகிறது. வனத்துறையில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால், குடியிருப்புக்குள் புகும் வனவிலங்குகளை கண்காணித்து விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.
கோத்தகிரியில் இருந்து அளக்கரை செல்லும் சாலையில் உள்ள காமராஜ் நகர், புதூர், சேலாடா உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாய்களையும், கால்நடைகளையும் சிறுத்தைப்புலி அடித்துக்கொன்று வருவதால், பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜ் நகரில் ஜெயபால், பாண்டியன், சேக் முகமது, கல்வி ஆகியோரது வீடுகளில் புகுந்து வளர்ப்பு நாய்களை சிறுத்தைப்புலி கவ்வி சென்றது. கடந்த வாரம் அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டில் நள்ளிரவில் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தைப்புலி கடித்து காயப்படுத்திவிட்டு சென்றது. நேற்று முன்தினம் இரவு புதூர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தைப்புலி பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான ஆட்டை அடித்துக்கொன்று, அட்டகாசம் செய்தது.
முன்னதாக மதிய வேளையில் அளக்கரை செல்லும் வழியில் புதூர் விநாயகர் கோவில் அருகே உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு குடியிருப்புகளுக்கு ஓட்டம் பிடித்தனர். பகலில் தேயிலை தோட்டங்களிலும், இரவில் குடியிருப்பு பகுதியிலும் தொடர்ந்து நடமாடி வளர்ப்பு நாய்களையும், கால்நடைகளையும் சிறுத்தைப்புலி வேட்டையாடி வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியால் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகிறோம். மேலும் தோட்ட தொழிலாளர்களுக்கு உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் கிராமப்பகுதியில் முகாமிட்டு சிகிச்சை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி பகுதியிலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆண்டிப்பட்டி மற்றும் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி கீழஓடைத் தெருவை சேர்ந்த கனகராஜ் மனைவி மல்லிகா. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து வந்த மல்லிகா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆண்டிப்பட்டி பகுதியில் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் மல்லிகாவிற்கு பன்றி காய்ச்சல் இருந்ததாகவும் ஆனால் மருத்துவர்கள் வைரஸ் காய்ச்சல் என கூறியதாகவும் தெரிவித்தனர். அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால் மர்ம காய்ச்சல் பரவுகின்றது.
எனவே சுகாதாரத்தை மேம்படுத்த மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகின்றன. பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் பலியாகினர். இதனால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தூத்துக்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு 3 வயது பெண் குழந்தை பலியானதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது 3 வயது பெண் குழந்தை சரண்யா.
நேற்று மாலை சரண்யா அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள். காலையில் அவளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவளை அவரது பெற்றோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
ஏற்கனவே நேற்று முன்தினம் டெங்கு காய்ச்சலுக்கு முள்ளக்காட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் சாந்தினி என்பவர் இறந்தார். இந்த நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 3 வயது பெண் குழந்தை பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து கூட்டாம்புளி உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சாந்தினி (வயது 26). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது சாந்தினி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் சாந்தினிக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரமாக முத்தையாபுரம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சாந்தினி சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சாந்தினி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். ஏற்கனவே முள்ளக்காடு பகுதியில் பலருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது.
சுகாதார துறையினர் போதிய மருத்துவ வசதிகள் செய்யவில்லை என்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக சாந்தினியின் கணவர் முருகன் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் குடிநீர் உடைந்து சாலையில் தேங்கி கிடக்கிறது. ஆங்காங்கே கழிவுநீரும் தேங்கியுள்ளன. சுகாதார நடவடிக்கைகள் சரியில்லை. எனது மனைவிக்கு காய்ச்சல் வந்தபோதே மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்தேன். ஆனால் முறையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் எனது மனைவியை இழந்துவிட்டேன்’’ என கண்ணீருடன் கூறினார்.
மேலும் இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, இப்பகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லை. இங்குள்ள சுகாதார நிலையத்தில் ஒருவர் மட்டுமே டாக்டர். மற்ற 3 பேர் பயிற்சி டாக்டர்கள். இங்கு காலையில் பரிசோதனைக்கு சென்றால் வெளியில் வர மதியம் ஆகிவிடுகிறது. எனவே கூடுதல் டாக்டர்கள் நியமிக்கவேண்டும் என்றனர்.
இந்த நிலையில் மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலியானதால் முள்ளக்காடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுகாதாரதுறையினர் தூத்துக்குடி பகுதி முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரியிடம் கேட்ட போது, முள்ளக்காட்டில் கர்ப்பிணி சாந்தினி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளார். அவர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உள்ளார். அவருக்கு என்ன விதமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தது? என்பது குறித்து விரிவாக விசாரித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனிடையே டெங்கு காய்ச்சலை தடுக்க தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் இன்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. அரசு துறையினரும், தனியார் அமைப்புகளும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகரி வனச்சரகத்துக்கு உட்பட்ட சோலூர் மட்டம் சகாயபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (48). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் சோலூர் மட்டம் சாலையில் அமைந்துள்ள கோழி மரஹாடாவில் தனது தேயிலை தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 கரடிகள் திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறி நடராஜை தாக்கியது.
இதில் நடராஜின் கை, கால் மற்றும் வயிறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சத்தம் போட்டார். இதனை கேட்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கரடிகளை கல் வீசி துரத்தினார்கள்.
பின்னர் நடராஜை மீட்டு கோத்தகிரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு கரடி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.
கோத்தகிரி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொத்த முக்கை பகுதியை சேர்ந்த தம்பதி கரடி தாக்கியதில் உயிர் இழந்தனர். அதே போல் அதன் சுற்றுப்புற பகுதியில் 10-க்கும் மேற்பட்டோர் கரடி தாக்கி காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது-
கீழ் கோத்தகிரி வனச்சரகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் 16 வன ஊழியர்கள் பணியில் இருந்தனர். தற்போது சிலர் மட்டுமே உள்ளனர். தேவையான உபகரணங்கள் இல்லாத நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் அவர்கள் பணி புரிகின்றனர்.
கூடுதல் ஊழியர்களை பணி அமர்த்தினால் மட்டுமே விலங்கு-மனித மோதலை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கரடிகள் நடமாட்டத்தை தொடர்ந்து கீழ் கோத்தகிரி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்