search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர் தற்கொலை"

    காதலியை திருமணம் செய்ய பிடிக்காமல் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    நித்திரவிளையை அடுத்த நடைக்காவு, பாறையடியை சேர்ந்தவர் அஜின்ராஜ்(வயது 26).

    நெல்லை மாவட்டம் மணி முத்தாறு 9-வது பட்டாலியனில் வேலை பார்த்த அஜின் ராஜூக்கு கோதையாறு நீர் மின் நிலையத்தில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

    கோதையாறு நீர் மின் நிலையத்தில் போலீசார் தங்கும் ஓய்வு அறையில் நேற்று அஜின்ராஜ் தங்கி இருந்தார். திடீரென அவர் தங்கி இருந்த அறையில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. நீர் மின் நிலைய ஊழியர்கள் சத்தம் கேட்டு அங்கு ஓடிச் சென்றனர்.

    அங்கு அஜின்ராஜ் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்தார். அவர் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    அஜின்ராஜ் தற்கொலை செய்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் கோதையாறு சென்று அஜின்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது சாவுக்கு காரணம் என்ன? என்றும் விசாரித்தனர்.

    இதற்காக அஜின்ராஜின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அவர் கடைசியாக யாரிடம் பேசினார்? எப்போது பேசினார்? என்பதை கண்டறியும் பணி நடந்தது.

    இதற்கிடையே அஜின்ராஜ் தற்கொலை செய்தது குறித்து பேச்சிப்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அஜின்ராஜிக்கும், அவரது ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் காதல் இருந்தது தெரிய வந்தது.

    அஜின்ராஜ், போலீஸ் வேலையில் சேர்ந்த பின்பு காதலியை புறக்கணித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக காதலி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் அஜின்ராஜை அழைத்து விசாரித்தனர்.

    அஜின்ராஜ், காதலியை 6 மாதம் கழித்து திருமணம் செய்வதாக கூறியுள்ளார். 6 மாத கெடு முடிவடையும் நிலையில் காதலி, அஜின்ராஜை தொடர்பு கொண்டு உள்ளார். காதலியிடம் அஜின்ராஜ் நேற்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

    அஜின்ராஜின் காதலி நேற்று திருமணத்திற்காக ஊரில் காத்திருந்தார். அஜின்ராஜ் நீண்ட நேரமாகியும் ஊருக்கு வராததால் அவரது காதலி, உறவினர்களுடன் களியக்காவிளை போலீஸ் நிலையம் சென்றார். அங்கு காதலன் தன்னை திருமணம் செய்ய வராமல் ஏமாற்றி விட்டதாக கூறினார். போலீசார் மாணவியின் காதலனான அஜின்ராஜை தேடினர்.

    அப்போது அவர் கோதையாறு நீர் மின் நிலையத்தில் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இந்த தகவலை போலீசார் காதலியிடம் தெரிவித்தனர். இதை கேட்டதும் அவர் கதறி அழுதார்.

    இது பற்றி களியக்காவிளை போலீசார், அஜின்ராஜ் தற்கொலை வழக்கை விசாரிக்கும் பேச்சிப்பாறை போலீசாருக்கு தெரிவித்தனர்.

    அஜின்ராஜ் காவல் பணியில் இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டதால் இது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யாஅறி இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

    அஜின்ராஜ் தற்கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
    கோதையாறு மின்நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குலசேகரம்:

    குமரி மாவட்டம் நித்திர விளை அருகே உள்ள நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் அஜின்ராஜ் (வயது 26).

    இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ் நாடு சிறப்பு காவல்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். அஜின்ராஜை பேச்சிப்பாறை அருகே கோதையாறில் செயல்படும் மின் நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக நியமித்திருந்தனர். அங்கு அவருடன் மேலும் சில போலீஸ்காரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்று காலை அஜின்ராஜும், கணேசன் என்ற இன்னொரு போலீஸ்காரரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கோதையாறில் உள்ள மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்குவதற்காக கணேசன் சென்றுவிட்டார்.

    பொருட்களை வாங்கிக் கொண்டு கணேசன் கோதையாறு மின்நிலையத்திற்கு திரும்பிச் சென்ற போது அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. போலீஸ்காரர் அஜின்ராஜ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்தார்.

    உடனே இதுபற்றி பேச்சிப்பாறை போலீசாருக்கு கணேசன் தகவல் கொடுத்தார். இங்கிருந்து இன்ஸ் பெக்டர் ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் கோதையாறு மின் நிலையத்திற்கு விரைந்து உள்ளனர். போலீசார் விசாரணையில்தான் அஜின்ராஜ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி தெரியவரும்.

    உசிலம்பட்டியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்தார்.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டியைச் சேர்ந்தவர் வனராஜா. இவரது மகன் சதீஷ் (வயது 27).

    இவர் பழனி போலீஸ் பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். சதீஷ், ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

    அதனை வீட்டில் கூறி திருமணத்திற்கு சம்மதம் கேட்டார். ஆனால் அவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் சதீஷ் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் மனம் தளராமல் வீட்டில் பேசினார். ஆனால் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தரவில்லை.

    இதனால் சதீஷ் மனவேதனைஅடைந்தார். நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வாழ்க்கையில் வெறுப்படைந்த சதீஷ், வீட்டின் விட்டதில் போர்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். உறவினர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உசிலம்பட்டி தாலுகா போலீசார் விரைந்து சென்று சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணியில் உள்ள லாட்ஜியில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். அதிகாரிகள் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதலிப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் விவேக்(வயது 25). இவர் மணிமுத்தாறில் உள்ள சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் விவேக் தங்கி இருந்தார். நீண்ட நேரமாக அறை கதவு திறக்கப்படவில்லை.

    இதையடுத்து லாட்ஜ் ஊழியர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையில் இருந்த மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு விவேக் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதையடுத்து வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தூக்கில் பிணமாக தொங்கிய விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட விவேக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 1½ மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு விவேக், வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் விவேக் கடைக்கு சென்று புதிய புடவை ஒன்று வாங்கி அதில்அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விவேக் அதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டாரா? காதல் விவகாரமா? அல்லது குடும்ப பிரச்சினையா? என்று வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மாடியில் இருந்து குதித்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மாரநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் சுகுமாறன் (வயது29).

    சிறப்பு காவல்படை போலீஸ்காரரான இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மொட்டமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    குடும்ப பிரச்சனை காரணமாக சுகுமாறன் கடந்த சில வாரங்களாகவே விரக்தியுடன் காணப்பட் டார். யாருடனும் சரிவர பேசவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பணியை முடித்து வீட்டுக்கு வந்த சுகுமாறன் திடீரென்று வீட்டு மாடியில் இருந்து குதித்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமாறன் இறந்தார்.

    இதுகுறித்து வன்னியம் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ஈஞ்சம்பாக்கம் அருகே வேலைப்பளுவால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    சென்னை நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம், தட்கல் நகர் பொதிகை தெருவை சேர்ந்தவர் விஜய ரங்கன். இவரது மகன் பால முருகன் (வயது28). ஐ.டி. முடித்த இவர் போலீஸ் வேலைக்கு சேர்ந்தார்.

    அசோக்நகரில் உள்ள போலீஸ் பயிற்சி அகாடமியில் 2 வருடமாக பயிற்சி பெற்று வந்தார். அவருக்கு கம்ப்யூட்டர் டைப் செய்யும் பிரிவில் பணி வழங்கப்பட்டு இருந்தது.

    பாலமுருகனுக்கு விடுமுறை கொடுக்காமல் இரவு பகலாக பணி வழங்கப்பட்டது. அதிக வேலைப்பளு காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார்.

    இதுதொடர்பாக அவர் தனதுதந்தையிடம் கூறி வருத்தப்பட்டார். அவரிடம் தந்தை ஐ.டி.படித்துவிட்டு ஏன் போலீஸ் வேலைக்கு போக வேண்டும்? வேறு ஏதாவது வேலைப்பார்க்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தினார். இதனால் கடந்த 2 நாட்களாக பாலமுருகன் வேலைக்கு செல்லவில்லை.

    நேற்று இரவு உடனே வேலைக்கு வருமாறு பாலமுருகனுக்கு அழைப்பு வந்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் மீண்டும் தனது தந்தையிடம் கூறி புலம்பினார். அவர் மகனை சமாதாப்படுத்தினார். ஆனால் பாலமுருகன் ஆறுதல் அடையவில்லை.

    இன்று அதிகாலை பாலமுருகன் தனது அறையில் தாயாரின் சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கினார். இன்று காலையில் மகனை எழுப்புவதற்காக விஜயரங்கன் அறைக்கதவை திறந்தார். அப்போது மகன் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக தூக்கில் இருந்து மகனை இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலமுருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    ×