என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மணல் கொள்ளை"
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் சதுமுகையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நடுப்பாளையத்தில் இருந்து சதுமுகை நோக்கி ஒரு டிராக்டர் வந்தது. அதனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த டிராக்டரில் ஆற்று மணல் இருந்தது. அந்த மணல் ஆற்றில் இருந்து அனுமதியின்றி கடத்தி வரப்பட்டதாகும்.
அந்த மணலை கொண்டு வருவதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து அந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டிராக்டரை ஓட்டி வந்த சதுமுகை, நடுப்பாளையத்தை சேர்ந்த ரவியை (வயது 43) போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். டிராக்டரில் 1 யூனிட் ஆற்று மணல் இருந்தது. அந்த மணலுடன் டிராக்டர் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் மணல் திருட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், பாண்டியராமன் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கு ஒன்றில், மணல் திருட்டு குறித்து புதிய உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று பிறப்பித்துள்ளது.
அதன்படி, மணல் திருட்டில் ஈடுபடுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க கூடாது எனவும், அபராதம் கட்டிவிட்டு எடுத்துச் செல்லவும் அனுமதிக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாட்டு வண்டியாக இருந்தாலும் கூட, மாடுகளை மட்டுமே உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், வாகனங்களை ஒப்படைக்க கூடாது என, உள்துறை செயலாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், மணல் திருட்டு மூலம் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருங்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை உருவாகும் என வேதனை தெரிவித்துள்ளனர். #MaduraiHC #SandTheft
மீஞ்சூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்த நிலையில் மீஞ்சூரை அடுத்த பள்ளிபுரம் கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கொசஸ்தலை ஆற்றின் கரையை உடைத்து லாரியில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களில் கொண்டக்கரையை சேர்ந்த முனுசாமி, மகேந்திரன், சுப்பாரெட்டிபாளையத்தை சேர்ந்த வாசு ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் மணல் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
முல்லை பெரியாற்றில் அதிகளவு மணல் கொள்ளை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைந்தது. மேலும் ராட்சத பள்ளங்கள் தோண்டியதால் நீர்வரத்து உள்ள சமயங்களில் சுழலில் சிச்கி உயிரிழப்புகளும் அதிகரித்தது. எனவே மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். தாசில்தார் ஆர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் நேற்று நள்ளிரவு 18-ம் கால்வாய் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது முல்லை பெரியாற்றில் இருந்து மணல் கடத்தி சரக்கு வாகனம் மற்றும் மாட்டு வண்டிகளில் ஏற்றி வந்தனர்.
அதிகாரிகளை கண்டதும் வாகனங்களில் வந்தவர்கள் அங்கேயே விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவற்றை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகம் கொண்டுவரப்பட்டது. மேலும் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் குடுமியான்மலையை அடுத்த அண்ணாபண்ணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்து, அதனை ஓட்டி வந்த டிரைவர் கன்னியாகுமரியை சேர்ந்த சுசீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி மஞ்சளாற்று படுகையில் அதிக அளவில் மணல் கொள்ளை நடைபெறுவதால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீருக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மணல் கொள்ளையர்களை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
போலீசாரும் மணல் திருடும் கும்பலை பிடித்து அபராதம் விதித்த போதும் மணல் கடத்தல் தொடர்கதையாகி வருகிறது. தேவதானப்பட்டி போலீசார் கெங்குவார்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு ஒருவர் டிராக்டரில் மணல் கடத்திக் கொண்டு இருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் கண்ணன் என தெரிய வந்தது. மேலும் அனுமதியின்றி மணல் அள்ளியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து கண்ணனை கைது செய்து டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி:
சின்னமனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். துரைச்சாமிபுரம் சுடுகாட்டு பாதையில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த நபர்களை மடக்கி விசாரணை நடத்தினர்.
ஆற்று புறம்போக்கு பகுதியில் அனுதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வரவே மாட்டு வண்டியை பறிமுதல் செய்து துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த முருகன் (52), மாரிச்சாமி (48) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் தேவாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம் தலைமையிலான போலீசார் சிந்தலைச்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அவ்வழியே மார்க்கையன் கோட்டை முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (28) என்பவர் டிராக்டரில் மணல் திருடி வந்தது தெரிய வந்தது.
போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுகுளத்தூர்:
முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் பெரிய கண்மாய் 64 லட்ச ரூபாய் குடிமராமத்து திட்டத்தின்கீழ் மராமத்து செய்யப்பட்டு வருகிறது. மராமத்து பணியின்போது தண்ணீர் தேங்கும் கண்மாய் பகுதிகளை 3 அடி ஆழத்திலும், கரைகளையும் பலப்படுத்த வேண்டும்.
ஆனால் கண்மாய் மராமத்து பணிகள் பெயரளவில் மட்டுமே சீரமைக்கபட்டு, மணல் உள்ள பகுதிகளில் மணலை பொதுப்பணித்துறையினரின் அனுமதியோடு, குவியலாக எடுத்து, இரவு நேரங்களில் விற்பனை செய்கின்றனர்.
இதனால் கண்மாயின் சில பகுதிகள் 40 அடிக்கும் ஆழமாக தோண்டப்பட்டு, விபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதலபாதாளத்தில் உள்ளது. கண்மாய் மராமத்து பணிகளை முறையாக பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.
அதேபோல் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்படும் மதகுகளில் நேற்றிரவு மதகுகள் உடைந்து பாலம் துண்டிக்கப்பட்டது. இதனால் மேட்டூரில் இருந்து திருச்சி காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் முழுவதும் உடைந்த மதகுகள் வழியாக கொள்ளிடத்தில் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவசாய சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது :-
காவிரி-கொள்ளிடம் ஆற்றில் கரூர் முதல் திருச்சி வரை கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையே கொள்ளிடம் இரும்பு பாலம் மற்றும் முக்கொம்பு அணை பாலம் உடைய காரணம் ஆகும்.
கோர்ட்டு உத்தரவுப்படி ஆறுகளில் 5 அடி அளவு தான் மணல் அள்ள வேண்டும். ஆனால் அரசு குவாரிகளிலும் பல அனுமதி பெறாத திருட்டு குவாரிகளிலும் காவிரி ஆறுகளில் 50 அடி முதல் 100 அடி ஆழம் வரை மணலை அள்ளி விட்டனர்.
பாலங்கள் அடியிலும் இந்த மணல் கொள்ளை நடந்தது. அதனால் தான் வெள்ளம் வரும் நேரங்களில் பள்ளங்களை நிரப்ப வெள்ள நீர் பாலங்களின் அருகில் உள்ள மணல் திட்டை அள்ளிக்கொண்டு செல்கிறது.
அப்போது பாலத்தின் தூண் அருகில் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் பாலம் சுவர் வலுவிழந்து போய் விடுகிறது. இதனால் தான் பலவீனம் அடைந்து கொள்ளிடம் பழைய பாலமும், நேற்றிரவு முக்கொம்பு மேலணை பாலமும் உடைந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டன.
கடந்த ஆண்டு கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணையின் மதகுகள் உடைந்தது. தொடர்ந்து எடப்பாடி அருகில் உள்ள அணையிலும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.
தொடர்ந்து ஏற்படும் பாலம் பிரச்சனைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். இதை வலியுறுத்தி நாங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
அணைகள் கட்டப்பட்டது தண்ணீரை தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்துவதற்காகத் தான் தவிர இப்படி உடைந்து வீணாக வெளியேறுவதற்காக அல்ல. தண்ணீருக்காக போராடி, அதன் மூலம் கிடைத்த நீரை தேக்கி வைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் போனது கண்டிக்கத்தக்கது. நீர் மேலாண்மை சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று கூறும் அரசு கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தேக்க என்ன செய்துள்ளது.?
இவ்வாறு அவர் கூறினார். #PRPandian
மதுரை:
பறவைகள் சரணாலயம் அருகேயுள்ள கண்மாயில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அவரிடம் திருமங்கலம் அருகேயுள்ள பேரையூர், சாத்தூர், எழுமலை கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர்.
அதில் பேரையூர் அருகேயுள்ள எழுமலையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இதன் அருகேயுள்ள கண்மாயில் மணல் திருட்டு நடைபெறுவதாக பேரையூர் தாசில்தாரிடம் புகார் மனு கொடுத்தோம். எங்கள் புகார் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நடவடிக்கை எடுக்காத தாசில்தார் மீது நடவடிக்கை எடுப்பதோடு மணல் திருட்டையும் தடுக்க வேண்டுகிறோம்.
மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தேனி:
போடி அருகே பெருமாள் கவுண்டன் பட்டி பகுதியில் உள்ள நீர்நிலைகளில் அதிக அளவு மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் பொதுமக்கள் அல்லல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே மணல் கடத்தும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் பெருமாள்கவுண்டன்பட்டி ஆலமரம் பஸ் நிறுத்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த டிராக்டரை மறித்து சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கண்ணபிரகாசம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்