என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனைவி தாக்குதல்"
ராமாபுரம் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர். வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஓட்டலில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (23) தனியார் மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
சவுந்தர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சந்தியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சவுந்தர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியாவை பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி இரவு சந்தியா வேலைக்கு சென்று விட்டு செல்போனில் பேசியபடியே வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தியாவை வழிமறித்த சவுந்தர் “யாருடன் போனில் பேசுகிறாய்” என்று கேட்டு சந்தியாவின் செல்போனை பறிக்க முயன்றார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சவுந்தர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சத்தியாவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வயிறு, கழுத்து, மார்பு உள்ளிட்ட 5 இடங்களில் கத்திக்குத்து பட்டு படுகாயமடைந்த சந்தியா ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரை கைது செய்தனர். அவர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பள்ளமொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (35). மரம் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி ஆதிலட்சுமி (30).
கண்ணன்-ஆதிலட்சுமி தம்பதிக்கு சாருமதி (10) என்ற மகளும், வெற்றிவேல் (5) என்ற மகனும் உள்ளனர். கண்ணனுக்கு குடிப்பழக்கம் உண்டு. சாருமதி ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவி நடத்தையில் கண்ணன் சந்தேகப்பட்டார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இன்று காலை கண்ணனும், ஆதிலட்சுமியும் வேலைக்கு புறப்பட்டனர். அப்போது மனைவியை கண்ணன் திட்டினார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், அவரது மனைவி ஆதிலட்சுமியை தன்னிடம் இருந்த மரம் வெட்டும் கத்தியால் வெட்டினார். ரத்தம் சொட்டச் சொட்ட அலறிய படி ஆதிலட்சுமி அங்கிருந்து ஓடினார். அவரை ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆதிலட்சுமி ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சுங்குவார்சத்திரம் போலீசார் கண்ணனை கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெறுகிறது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப் பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள கணபதி நகரைச் சேர்ந்தவர் உமர் அலி பருக். துணி வியாபாரி. இவரது மனைவி ஷாகிரா பானு. இவர் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கணவர் உமர் அலி பருக் மீது புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கணவர் தினமும் குடித்து விட்டு வந்து என்னை கடந்த 4-ந் தேதி இரவு அசிங்கமாக பேசி கையால் எனது வாயின் மீது குத்தினார். இதனால் எனது வாயில் இருந்து 5 பற்களும் உடைந்து விட்டன. வலி தாங்க முடியாமல் துடிதுடித்தேன்.
சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என என்னை மிரட்டி சட்ட விரோதமாக வீட்டில் அடைத்து வைத்து அவர் கொடுமைப் படுத்தினார்.
அவரது பிடியில் இருந்து தப்பிய நான், சென்னை ராயபுரத்தில் உள்ள எனது அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டேன். என்னை காயப்படுத்தி மிரட்டி கொடுமைப்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உமர் அலி பருக்கை கைது செய்தார். காயம் அடைந்த ஷாகிரா பானு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அழகாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 38) தொழிலாளி. இவரது மனைவி சரளா(32). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. ஆறுமுகம் தனது மனைவியுடன் வடக்கு பாளையங்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.
குழந்தை இல்லாத விரக்தியில் ஆறுமுகம் தனது மனைவி சரளாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஆறுமுகம் ஆத்திரம் அடைந்து சரளாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் சரளா பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரளாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சோழத்தரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.
தேனி:
தேனி அருகே பழனி செட்டிபட்டி ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது36). இவரது மனைவி இந்திராணி(33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சொக்கலிங்கம் சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வருகிறார்.
இந்திராணி தேனி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இந்திராணி தனியாக வசித்து வருகிறார்.
வெளிநாட்டில் இருந்து ஊர்திரும்பிய சொக்கலிங்கம் மற்றும் அவரது தாய் செல்வி ஆகியோர் இந்திராணியிடம் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் 2 பேர் மீது வழக்குபதிவு செய்து சொக்கலிங்கத்தை கைது செய்தனர்.
இதேபோல் தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் அருண்குமார்(24). இவரது மனைவி முத்துபிரியா. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாய் வீட்டில் முத்துபிரியா வசித்து வருகிறார். சம்பவத்தன்று அருண்குமார் அங்கு சென்று முத்து பிரியாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் முத்துபிரியாவின் தாய் சீதாலெட்சுமி மற்றும் சிலர் அருண்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து தேனி போலீசார் 4 பேர்மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கருப்பன் (வயது 36). சிவகாசியில் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவரது 2-வது மனைவி கவிதா (28). இவரும் ஏற்கனவே திருமணமானவர்.
இந்த நிலையில் கவிதாவின் தங்கை கலைச்செல்விக்கும், கருப்பனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதில் கலைச்செல்விக்கு குழந்தை பிறந்தது.
இதுபற்றி கணவரிடம் கவிதா கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கருப்பன் தாக்கியதில் காயம் அடைந்ததாக விருதுநகர் மேற்கு போலீசில் கவிதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பனை கைது செய்தனர்.
எடப்பாடி அருகே உள்ள அரசிராமணி ஊராட்சிக்கு உட்பட்ட மோளக்கவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (44).
ஐஸ் வியாபாரியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 4-வதாக தமிழரசி (38) என்ற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது அவருடன் மோளக்கவுண்டன் கொட்டாய் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அண்ணாமலை சரியாக வியாபாரத்திற்கு செல்லாமல் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழரசி மற்றும் அவரது உறவினர்கள் அண்ணாமலையை கண்டித்தனர். நேற்று முன்தினம் அதிகாலை அண்ணாமலைக்கும் அவரது மனைவி தமிழரசிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அண்ணாமலையை அவரது மனைவியும், உறவினர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அண்ணாமலை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அப்போது மனைவி மற்றும் அவரது உறவினர்களின் அடியை என்னால் தாங்க முடியவில்லை, இதனால் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கதறினார். இதை பார்த்த அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அண்ணாமலையை மீட்ட தீயணைப்பு வீரர்கள் அவரை சமாதானம் செய்து மருத்துவமனையின் பாதுகாப்பான இடத்தில் தொடர் சிகிச்சைக்காக விட்டுச்சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருத்தாசலம் அடுத்த கூனங்குறிச்சியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன்(38). இவரது மனைவி ரேக்கா(30). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சவுந்தரராஜனுக்கும் ரேக்காவிற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 11.6.2012 அன்று ரேக்கா தன் கணவரிடம் கோபித்துக்கொண்டு விருத்தாசலம் சித்தலூரில் உள்ள தன் பாட்டி வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். அங்கு சென்ற சவுந்தரராஜன் கத்தியால் ரேக்காவின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ரேக்கா விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப்பெற்றார்.
இந்த வழக்கு விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு விருத்தாசலம் 1-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணைக்கு வந்த வழக்கினை மாஜிஸ்திரேட் கோபிநாத் விசாரித்தார். விசாரணையின் முடிவில் கோபிநாத்திற்கு 3 வருட சிறைத்தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்