என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாதர் சங்கம்"
- விலை உயர்வை திரும்ப பெறுவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது
- ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நாகர்கோவில்:
பால் விலை உயர்வு, சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு செல்வராணி தலைமை தாங்கினார். சுபாஷ் சந்திர போஸ் சுதா, மதன், பார்வதி, ராஜேஷ்வரி, இசக்கிமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாதர் சங்க நிர்வாகிகள் சென்னைக்கு புறப்பட தயாராகினர்.
- ரெயிலடியில் இன்று மதியம் மாதர் சங்க நிர்வாகிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை டி.ஜி.பி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மாதர் சங்கத்தினர் அறிவித்தி ருந்தனர்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாதர் சங்க நிர்வாகிகள் சென்னைக்கு புறப்பட தயாராகினர். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான மாதர் சங்க நிர்வாகி களை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் இன்று மதியம் மாதர் சங்க நிர்வாகிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட மாதர் சங்க நிர்வாகிகளை உடனடியாக விடுவிக்க கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மறியலில் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
- 100 நாள் வேலையை முறையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலையை வழங்கி சம்பளம் முழுமையாக வழங்கிட வேண்டும்.
- இன்று காலை மாவட்ட தலைவர் மல்லிகா தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
கடலூர்:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 100 நாள் வேலைக்கு காலை 7 மணிக்கு வேலைக்கு வர வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும். 100 நாள் வேலையை முறையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலையை வழங்கி சம்பளம் முழுமையாக வழங்கிட வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும். புதிய பட்டாக்களை குடும்ப பெண்கள் பெயரில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை மாவட்ட தலைவர் மல்லிகா தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் கோஷமும் எழுப்பினர். இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- இளம் பெண்களுக்கு பானம் இலவசமாக வழங்கப்படும் என்று தகவல் பரவியது.
- பெண்களை குடிப்பழக்கத்திற்கு ஈடுபடுத்துகின்ற மோசமான ஒன்றாகும்.
திருப்பூர் :
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மங்கலம் ரோட்டில் இயங்கிவரும் தனியார் ஓட்டலில் இரவு பார்ட்டியில் கலந்து கொள்ளும் இளம் பெண்களுக்கு பானம் இலவசமாக வழங்கப்படும் என்று தகவல் பரவியது. டாஸ்மாக் மது போதையில் பல குடும்பங்கள் அழிந்து வரும் நிலையில் இது போன்ற செயல் பெண்களை குடிப்பழக்கத்திற்கு ஈடுபடுத்துகின்ற மோசமான ஒன்றாகும். பொருளாதார வசதி உள்ள பெண்களை குடிபழக்கத்திற்கு ஈடுபடுத்துகிற மோசமான நடவடிக்கையே இது. திருப்பூர் பணம் கொட்டும் நகரம் என்பதால் இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.
அவர்களை ஈர்த்து அவர்களை போதைக்குள் தள்ளும் முயற்சிக்கு இது போன்ற ஓட்டல் அழைப்பது கண்டிக்கதக்கது. திருப்பூரில் முளைவிடத் தொடங்கும் இந்த போதை கலாச்சாரத்தை வேரறுப்பது நமது கடமையாகும். எனவே இது போன்ற நிகழ்வுகளை எக்காலத்திலும் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- சோழவந்தானில் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது.
- அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தானில் அனைந்திய ஜனநாயக மாதர் சங்க மதுரை புறநகர் மாவட்ட 16-வது மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் பிரேமலதா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அட்சயா, மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். வரவேற்புக் குழு தலைவர் வேல்பாண்டி வரவேற்றார்.
அமர்தவள்ளி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநிலச் செயலாளர் லட்சுமி மாநாட்டை தொடங்கி வைத்துபேசினார். புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துராணி வேலை அறிக்கை சமர்பித்தார். மாவட்டப் பொருளாளர் பர்வதவர்த்தினி வரவு -செலவு அறிக்கை வாசித்தார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் பொன்னுத்தாய், மாநில நிர்வாகி சசிகலா, மாநிலத் தலைவர் வாலண்டினா ஆகியோர் பேசினர். மாவட்டக் குழு துணைத் தலைவர் மோகனவிஜயா நன்றி கூறினார். பின்பு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. முன்னதாக மாநாட்டு அரங்கத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர்.
அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகே சங்க கொடி ஏற்றப்பட்டது.
- பல்லடத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 16வது திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது.
- பல்லடத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கடைவீதி வந்தடைந்தது.
பல்லடம் :
பல்லடம் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லடத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 16வது திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக நேற்று ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்ட ஊர்வலம் பல்லடம் அரசு கல்லூரி முன்பிருந்து துவங்கி பல்லடத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கடைவீதி வந்தடைந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மாநிலத் தலைவர் பொன்னுத்தாய், மாநில செயலாளர் பிரமிளா, திருப்பூர் மாவட்ட தலைவர் மைதிலி, மாநிலத் துணைத் தலைவர் சாவித்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கும், குடியிருப்போர்களுக்கும் இடையூறாக குடியிருப்புக்குமத்தியில் புதிதாக மதுபான கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது,
- புதுஆற்று இரு கரையிலும் தேவையான அளவில் மிள்விளக்குகள் பொருத்த வேண்டும்
தஞ்சாவூர்:
தஞ்சை சாந்தபிள்ளை கேட் கல்லணைக்கால்வாய் மேல்கரையில் அனைத்தி ந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாதர் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.
இதற்கு கிளை தலைவர் அம்பிகா தலைமை தாங்கினார். செயலாளர் சரஸ்வதி, பொரு ளாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி சங்க கொடியேற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கும், குடியிருப்போர்களுக்கும் இடையூறாக குடியிருப்புக்குமத்தியில் புதிதாக மதுபான கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது, புதுஆற்று இரு கரையிலும் தேவையான அளவில் மிள்விளக்குகள் பொருத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட தலைவர் கலைச்செல்வி, மாநகர செயலாளர் வசந்தி, மாநகர தலைவர் புனிதா, மாநகர பொருளாளர் பைந்தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்