என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராணுவ வீரர் பலி"
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் ராணுவ வீரராக இருந்தவர் பிரதீப் (வயது 26). இவர் மராத்தான் போட்டியில் பங்குபெற கோவை ராணுவ மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தார்.
இன்று காலை கோவையில் பயிற்சியில் ஈடுபட்டார். ராணுவ வீரர் பிரதீப்பின் சொந்த ஊர் கேரள மாநிலம் முட்டம் பகுதியாகும். இவரது தம்பி பிரதீஷ் (26) வீட்டு கடன் பெறுவது சம்பந்தமாக கோவையில் பயிற்சி பெறும் பிரதீப்பை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தார். இரட்டையார்களான இருவரும் வீட்டு லோன் பெறுவது குறித்து பேசினர்.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் குன்னூருக்கு புறப்பட்டனர். ராணுவ வீரர் பிரதீப் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பிரதீஷ் பின்னால் அமர்ந்திருந்தார்.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் நேற்று சூறாவளியுடன் மழை பெய்தது. இதனால் வாகனங்கள் மெதுவாக சென்றன.
பிரதீப் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மேட்டுப் பாளையம்- குன்னூர் இடையே உள்ள மரப்பாலம் அருகே வந்தபோது சாலை ஓரம் இருந்த ராட்சத மரம் சாய்ந்தது. மரம் சாய்வது தெரிந்தும் சுதாரிக்க முடியாமல் பிரதீப் தடுமாறினார். அந்த நேரத்தில் ராட்சத மரம் மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது. இதில் ராணுவ வீரர் பிரதீப் படுகாயம் அடைந்தார்.
மரம் சாயந்ததில் 2 கார்கள் சிக்கி நொறுங்கின. அதிர்ஷ்டவசமாக 2 காரில் பயணம் சென்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சுற்றுலா பயணிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த பிரதீப் மற்றும் லேசான காயம் அடைந்த அவரது தம்பி பிரதீஷ் ஆகியோரை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராணுவ வீரர் பிரதீப்பை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். லேசான காயங்களுடன் பிரதீஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முறைப்படி வெலிங்டன் ராணுவ முகாம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையை அடுத்த பருத்திக்காட்டு விளையைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 38). இவர் கடந்த 16 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சுபி. கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி இவர்களுக்கு திருமணம் நடந்தது. தற்போது சுபி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். 15 நாட்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் மனைவியை பார்ப்பதற்காக ஜெகன் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் விடுமுறை முடிந்து பஞ்சாப் மாநிலத்துக்கு பணிக்கு சென்றார்.
நேற்று அங்கு நக்சலைட் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஜெகனும் ஈடுபட்டு இருந்தார். நக்சலைட்டுகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஜெகன் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஜெகனின் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை உறவினர்கள் தொடர்பு கொண்டனர். அவரது முயற்சியின் பேரில் ஜெகனின் உடலை ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அனேகமாக நாளை ஜெகன் உடல் சொந்த ஊர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலியான ராணுவ வீரர் ஜெகனின் தந்தை வேலப்பன். தாயார் சீதாலட்சுமி. இவருக்கு 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். ஜெகன் சிறு வயதாக இருக்கும்போது வேலப்பன் இறந்து விட்டார். இதனால் ஜெகன் குடும்ப பாரத்தை சுமந்தார். 2 சகோதரிகளுக்கும் திருமணம் செய்து கொடுத்த பின்தான் தனக்கு திருமணம் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்தார்.
அதன்படி 2 சகோதரிகளுக்கும் திருமணம் நடந்த பின்னர் தனது 38 வயதில் தான் ஜெகன் திருமணம் செய்து கொண்டார். அவர் இறந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் அந்த கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஜெகனின் மனைவி சுபியின் சொந்த ஊர் தெற்கு சூரங்குடி ஆகும். அந்த கிராமத்திலும் உறவினர்கள் சோகம் அடைந்துள்ளனர். #NaxalOperation #TNSoldierDeath
மதுரை மாவட்டம், சேடப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஏ.தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் திருமேனி (வயது 38). பஞ்சாபில் ராணுவ வீரராக பணியாற்றி வந்த இவர், சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று சின்னகட்டளையில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக திருமேனி மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
பெரியாற்று பாலத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
அதே வேகத்தில் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த திருமேனிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லம் கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் தங்கம் (வயது 36) ராணுவ வீரர். இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களது மகன் அஜய்தர்சன் (வயது 2½). கடந்த 5 நாட்களுக்கு முன்பு தங்கத்திற்கு 2-வது ஆண் குழந்தை பிறந்தது. மகனை பார்ப்பதற்காக தங்கம் சொந்திராபாத்தில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தார்.
சேத்தூரில் உள்ள மாமியார் வீட்டில் இருந்து மனைவி மற்றும் மகன்களை பார்பதற்காக தங்கம் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு மகனை பார்த்து விட்டு இரவில் ஜமீன் கொல்லம் கொண்டானுக்கு புறப்பட்டார்.
அம்மையப்பபுரம்- இளந்திரை கொண்டான் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.
இதில் கீழே விழுந்த தங்கம் பலத்த காயம் அடைந்து மயங்கினார்.
அதேபகுதியை சேர்ந்த இளையராஜா அந்த வழியே வந்தபோது காயங்களுடன் தங்கம் கிடப்பதை கண்டார். இதுபற்றி ஈஸ்வரியின் சகோதரர் முருகனுக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து தங்கத்தை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்து குறித்து தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள கான்டி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, அந்த காட்டுக்குள் இன்று காலை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காட்டின் நடுப்பகுதிக்கு சென்றபோது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கு நடந்துவரும் துப்பாக்கிச் சண்டையில் படுகாயமடைந்த இரு வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஒரு வீரர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் கான்டி வனப்பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #Kupwaraencounter #Soldiermartyred
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்