என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "agricultural"
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை (கிசான் கிரிடிட் கார்டு) விண்ணப்பம் பெறும் முகாம்
- முகாமில் ரூ.1,60,000 வரை வட்டி இல்லா பயிர் கடனுக்கான பரிந்துரை செய்யபடும்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை (கிசான் கிரிடிட் கார்டு) விண்ணப்பம் பெறும் முகாம் பாண்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற உள்ளது. முகாமில் ரூ.1,60,000 வரை வட்டி இல்லா பயிர் கடனுக்கான பரிந்துரை செய்யபடும். ஆகவே கேசிசி அட்டை இதுவரை பெறாத விவசாயிகள் ஆதார், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம்-1 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும் கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.
- விரிவாக்க கிடங்குகளில் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
- தங்களுக்கு தேவையான இடு பொருட்களை உழவன் செயலி வாயிலாக பதிவு செய்து வாங்க முடியும்.
உடுமலை,செப்.19-
குடிமங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க கிடங்குகளில் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-
குடிமங்கலம் வட்டாரத்தில் பருவமழையை எதிர்பார்த்து மக்காச்சோளம், உளுந்து, பாசிபயறு, கம்பு, சோளம், நிலக்கடலை, கொண்டைக்கடலை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயாராக உள்ளனர்.
வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய தேவையான அளவு விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மக்காச்சோளம் - 2,112 கிலோ, சோளம் (சி.ஓ.,32) - 1,300 கிலோ, சோளம் (கே-12) -492 கிலோ, உளுந்து (வி.பி.என்.,8) - 750 கிலோ, உளுந்து (வி.பி.என்.,9) - 217 கிலோ, உளுந்து (வி.பி.என்.,11) - 1,500 கிலோ, கொண்டைக்கடலை - 600 கிலோ, நிலக்கடலை (தரணி) - 1,260 கிலோ ஆகிய ரக விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், பொட்டாஷ் பாக்டீரியா ஆகியவையும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. பயிர்களுக்கு நுண்ணூட்ட உரங்களான பயறு வகை நுண்ணூட்டம், தானிய வகை நுண்ணூட்டம் மற்றும் தென்னை நுண்ணூட்ட உரங்களும், உயிரியல் பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லிகளான மெட்டாரைசியம் அனிசோபிலே, டிரைகோடெர்மா விரிடி, சூடோ மேனாஸ் ஆகியவையும் விவசாயிகளுக்கு வழங்க தயாராக உள்ளது.
நடப்பாண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு சிறுதானிய பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, கம்பு மற்றும் ராகி செயல்விளக்க திடல் அமைக்க, விதைகள், நுண்ணூட்ட உரங்கள், நுண்ணூட்ட சத்து உரங்கள் ஆகியவை அடங்கிய தொகுப்புகள், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.விவசாயிகள், தங்களுக்கு தேவையான இடு பொருட்களை உழவன் செயலி வாயிலாக பதிவு செய்தும், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டும் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
- இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலுார் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளை வித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தேங்காய்
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 32.57 குவிண்டால் எடை கொண்ட 8 ஆயிரத்து 613 தேங்காய் விற்பனைக்கு வந்தது.இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.00-க்கும், சராசரி விலையாக ரூ.23.19-க்கும் என மொத்தம் ரூ. 74ஆயிரத்து 825-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல்511.34 குவிண்டால் எடை கொண்ட 1019-மூட்டை தேங்காய் பருப்பு விற்ப னைக்கு வந்தது.
இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.72.89-க்கும், சராசரி விலையாக ரூ.77.29-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.77-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.59.19-க்கும், சராசரி விலையாக ரூ.71.99-க்கும் என மொத்தம் ரூ.37லட்சத்து52ஆயிரத்து 905-க்கு விற்பனையானது.
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 38 லட்சத்து27 ஆயிரத்து 730-க்கு விற்பனையானது.
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
- விவசாயம் எப்படி முக்கியமோ அதேபோல அதிகாரிகளும் முக்கியமானவர்கள்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் வேளாண் துறையில் பணிபுரியும் பட்டதாரி வேளாண் அலுவலர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவது துரதிருஷ்ட வசமானது.
புதுவையின் பொருளா தாரத்தில் ஆதார துறையா கவும் முதுகெலும்பாகவும் விவசாயத் துறை உள்ளது. விவசாயம் எப்படி முக்கியமோ அதேபோல அதிகாரிகளும் முக்கியமானவர்கள்.
அவர்கள் மனக்குறை யோடு பணி புரிவது விவசாய வளர்ச்சியை பாதிக்கும். பட்டதாரி வேளாண் அலுவலர்களின் எல்லா கோரிக்கைகளும் நியாயமானவை. உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டியவை.
விவசாய அலுவலர்கள் 32 ஆண்டுகளாக ஒரே பதவியில் உள்ளனர். 8 ஆண்டுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. இது வழங்கப்பட்டிருந்தால் 4 முறை பதவி உயர்வு பெற்றி ருப்பார்கள்.
ஆனால் ஒரே பதவி யிலிருந்து ஓய்வுபெறு கின்றனர். இது நியாயமற்றது. சீனியாரிட்டி அடிப்படை யில் உடனடியாக துணை இயக்குனர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
வேளாண் அலுவலர் காலி பணியிடங்களில் சேர பிஎஸ்சி வேளாண் பட்டப்படிப்பு அவசியம் என பணி நியமன விதிகள் திருத்தப்பட வேண்டும். காலி பணியிடங்கள் அனைத்தையும் விதிக ளின்படி நிரப்ப வேண்டும். தகுதி வாய்ந்த டாக்டர் பட்டம் படித்த கூடுதல் வேளாண் இயக்குனரை முதல்வராக நியமிக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றி வேளாண்துறை ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- துணை வேளாண்மை அலுவலர் முருகன் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கி பேசினார்.
- நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அம்பை:
அம்பை வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் வாகைக்குளம் கிராமத்தில் விவசாய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்பை ஒன்றிய குழு தலைவர் சிவனுபாண்டியன் என்ற பரணிசேகர் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார் வரவேற்று பேசினார். துணை வேளாண்மை அலுவலர் முருகன் வேளாண்மைத்துறை யில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கி பேசினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி உழவன் செயலி பதிவேற்றம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலெட்சுமி நந்தகுமார், துணைத்தலைவர் சாமுவேல், மன்னார்கோவில் கவுன்சிலர் மாரியம்மாள் சண்முக குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கலாஜதா கலை நிகழ்ச்சியினை தென்காசி கலை வாணர் கலைகுழுவினர் நடத்தினர்.
இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மூலம் வேளாண்மை த்துறையில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான உழவன் செயலி பதிவேற்றம், வேளாண் அடுக்குத்திட்டம் திட்டம் மூலம் விவசாயிகள் தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்வது குறித்தும், குளங்களில் இருந்து வண்டல் மண் எடுப்ப தற்கு அரசு தெரிவித்துள்ள வழிமுறைகள், நுண்ணீர் பாசனம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், சிறுதானியத்தின் முக்கியத்துவம், நெல் தரிசில் உளுந்து, மண்வள அட்டை, அங்கக வேளாண்மை போன்ற திட்டங்கள் தொடர்பான கருத்துக்களை உரைநடை வடிவிலும், கலை நிகழ்ச்சிகளான தப்பாட்டம், பறையாட்டம், சாட்டைகுச்சியாட்டம், கரகா ட்டம் போன்றவற்றின் மூலம் கிராம மக்களுக்கு எடுத்து கூறி னார்கள்.
நிகழ்ச்சியில் வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் விஜய லெட்சுமி, சாமிராஜ் மற்றும் அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கசரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் 2021- 22 -ம் ஆண்டில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லிராணி கூறியதாவது:-
2021-22-ம் ஆண்டில் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கருங்கடல், வெள்ளமடம், கச்சனாவிளை ஆகிய கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் மற்றும் மானிய விலையில் இடு பொருட்கள் வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் தொடக்க விழாவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள், கைதெளிப்பான்கள், வரப்பு பயிராக பயிரிட ஏதுவாக உளுந்து விதைகள் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மண்புழு உரங்கள், மரக்கன்றுகள், வீட்டுத்தோட்ட விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் வெள்ளமடம் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் இடு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜேஸ்மின் கலந்து கொண்டார். ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இடுபொருட்களை விளங்கினார். கருங்கடல் மற்றும் கச்சனாவிளை கிராமங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இடுபொருட்களை விளங்கினார்கள்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத் துறை, விதைசான்று துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆழ்வை வட்டார வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
- புதுவை அருகே சன்னியாசிக்குப்பம் கிராமத்தில் கொல்லைப்புற கோழி வளர்ப்பு பற்றிய செயல்விளக்கம் நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சிக்ஷயை கால்நடை வளர்ப்பு ஆர்வலர்கள் 20 பேருக்கு தலா 2 பெறுவிடை கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் சன்னியாசிக்குப்பம் கிராமத்தில் கொல்லைப்புற கோழி வளர்ப்பு பற்றிய செயல்விளக்கம் நடைபெற்றது.
வேளாண் அலுவலர் நடராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சி யை கால்நடை வளர்ப்பு ஆர்வலர்கள் 20 பேருக்கு தலா 2 பெறுவிடை கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டது
இந்த செயல்விளக்க முகாமின் ஏற்பாடுகளை ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, உதவி வேளாண் அலுவலர் பக்கிரி, கிராம விரிவாக்கப் பணியாளர் புவனேஷ்வரி செயல்விளக்க உதவியாளர் வள்ளியம்மாள், அலுவலக உதவியாளர் விஜயகுமார் , சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.
- அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது. இதனால் விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இரும்புப்பாலம் அடுத்த செங்கோடம்பாளையம் செல்லும் வழியில் ஏராளமான ஏக்கரில் மானாவரி சாகுபடி செய்யும் விவசாய நிலங்கள் உள்ளன.
இதில் மக்காசோளம், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பயிரிடப் பட்டுள்ளன. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது நிலத்தில், அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது.
இந்த விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென அருகில் இருந்த விவசாய நிலங்களுக்கும் பரவியது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்அடிப்படையில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த திடீர் தீவிபத்திற்கு காரணம் மர்ம நபர்களா? அல்லது கடுமையான வெயிலின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- விவசாயிகளுக்கு தேவையான எந்திரங்கள் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது.
- செயலி மூலம் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க வேலையாட்களுக்கு மாற்றாக, வேளாண் எந்திரமயமாக்கல் தேவைப்படுகிறது.
அதிக விலை, உயர்ந்த வேளாண் எந்திரங்கள், கருவிகளை விவசாயிகள் வாங்குவது சிரமம்.
எனவே விவசாயிகளுக்கு தேவையான எந்திரங்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் வாங்கி குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது. அரசு திட்டங்கள் மூலம் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவி களை பயன்படுத்தலாம்.
அறுவடை காலங்களில் நெல் அறுவடை எந்திரங்களின் தேவை அதிகரிக்கும் போது பிற இடங்களில் வாடகை உயர்ந்து விடுகிறது. இதனால் வேளாண் வருமானம் குறைந்து விவசாயிகள் சிரமப்படுவர்.
வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரம் மூலம் தீர்வு பெறலாம்.
நெல், மக்கா சோளம், பயறு, தானிய வகைகள் அறுவடை செய்யும்போது எந்திர அறுவடை செய்ய எந்திரங்களின் உரிமையாளர் பெயர், விலாசம், மொபைல் எண் விபரத்தை, வட்டார, மாவட்ட வாரியாக உழவன் செயலியில் வேளாண் பொறியியல் துறை மூலம் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.
ஈரோடு மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான 15 சக்கர வகை அறுவடை எந்திரங்களும், 5 டிரேக் வகை அறுவடை எந்திர ங்களும் உழவன் செயலில் பதிவேற்றப்படுகிறது.
விவசாயிகள் தங்களது இருப்பிடத்தில் இருந்து செயலி மூலம் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- வேளாண்மை-உழவர் நலத்துறையின் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேட்டாம் பாடி கிராமத்தில் மானிய விலையில் பண்ணைக் கருவிகள் தொகுப்பு, தார்பாய்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
- இரும்புசட்டி, அரிவாள், தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறையின் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேட்டாம் பாடி கிராமத்தில் மானிய விலையில் பண்ணைக் கருவிகள் தொகுப்பு, தார்பாய்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலை வகித்து வருகைபுரிந்த விவசாயிகளை வரவேற்று திட்டத்தின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
அட்மா குழு தலைவர் பழனிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வேளா ண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண்மை கருவிகளான கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புசட்டி, அரிவாள், தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார்.
முகாமினை வேளாண்மை அலுவலர் மோகன், உதவி வேளாண்மை அலுவலர் கோபிநாத், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
- காரைக்குடியில் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், பண்ணைக்கருவிகள் கலெக்டர் வழங்கினார்.
- தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது.
இதில் நெல் பயிருக்கான இழப்பீடு மற்றும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோருதல், எந்திரம் மூலம் நடவு செய்வதற்கு மானியம் வழங்கக் கோருதல், கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்துத் தரக் கோருதல், வறட்சி நிவாரணம் வழங்கக் கோருதல், பண்ணைக்குட்டை அமைத்துத் தரக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும், தேவை யான நிலங்களில் தடுப்ப ணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல் மரங்கள் அகற்றுதல் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
16 விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளான வேளாண் இடு பொருட்கள், பண்ணைக்கருவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார். விவசாயி களுக்கு பயனுள்ள வகை யில் உழவர் இதழையும் கலெக்டர் வெளியிட்டார். அதனை விவசாயிகள் பெற்றுக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்