என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "announce"
- “சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆடி 18-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலையின் நினைவிடம், ஓடாநிலையில் உள்ளது
திருப்பூர்:
தீரன் சின்னமலை நினைவு தினத்தினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் நிருபர்க ளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, "சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆடி 18-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலையின் நினைவிடம், ஓடாநிலையில் உள்ளது. இந்நிலையில் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெகுவிமரிசையாக அவரது பிறந்தநாள் மற்றும் நினைவுதினம் கொண்டாட ப்படும். ஆங்கிலேயர்களை நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்று, தூக்கிலிடப்பட்ட வீரன் தீரன் சின்னமலையை அனைத்து தரப்பு மக்களும் இதனை கொண்டாடக் கூடிய வகையில், திருப்பூர் மாவட்டத்திற்கு நாளை (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.
என்பதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்தோம். அவர் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, எனது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆடி 18-ம் நாள் தீரன் சின்ன மலை நினைவு தினத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை அறிவித்த தமிழக முதல்வருக்கும், பரிந்துரைத்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
+2
- தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
- கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் ராமராஜ், துணைச் சேர்மன் ஆஸ்கர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் பேசும்போது, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அல்லிகுளம், குமாரகிரி, கூட்டுடன்காடு, வர்த்தகரெட்டிபட்டி, தளவாய்புரம், மாப்பிள்ளை யூரணி, மறவன்மடம், மற்றும்சேர்வைகாரன்மடம் ஆகிய ஊராட்சிகளில் தார்சாலைகள், பேவர்பிளாக் சாலைகள், வடிகால்கள், கழிவுநீர் கால்வாய், சிறு பாலம், தடுப்புச் சுவர்அமைத்தல் ஆகிய வளர்ச்சித் திட்ட பணிகள்ரூ.1 கோடியே 90 லட்சத்தில் மேற்கொள்ளப் பட இருப்பதாக தெரி வித்தார்.
கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், யூனியன் கூட்ட அரங்கு கவுன்சிலர்கள் அமரும் இருக்கைகள் மே ம்படுத்தப்பட வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
முத்துக்குமார் உட்பட சில கவுன்சிலர் கோரிக்கைகள் முன்வைத்து பேசினர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் பதிலளித்தார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், சுதர்சன் தொம்மைசேவியர், ஆனந்தி, முத்துமாலை, ஜெயகணபதி, மரியசெல்வி, முத்துலட்சுமி, செல்வபாரதி, நர்மதா, யூனியன் சத்துணவு அமைப்பாளர் செல்வராணி மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் தற்போது மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் விடிய, விடிய மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனியில் இரவு நேரங்களில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சற்று முன் கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
மேலும் நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
கஜா புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் விடிய, விடிய அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
சற்று முன் கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்