என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Anti Social Elements"
- கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்தனர்.
- போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் கூட்ட நெரிசல்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து போலே பாபா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், " சில சமூக விரோதிகளால் நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.பி சிங்கிடம் தெரிவித்துள்ளேன்.
மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பர்மாத்மாவிடம் பிரார்த்திக்கிறேன்" என்றார்.
இதற்கிடையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை தொடங்கப்படும் என்றும், ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.
- கோவை மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, சில குண்டர்கள் அத்துமீறல்.
- மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் 24 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஈஷா சார்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு மின் மயான கட்டுமான பகுதிக்குள், நீதிமன்ற உத்தரவை மீறி சமூக விரோத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, காவல்துறையினரும், கிராம மக்களும் குண்டர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஈஷா சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவை ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்டகால கோரிக்கைகளின் அடிப்படையில், அவர்களின் பயன்பாட்டிற்காக முறையான அனுமதிகளோடு ஈஷா சார்பில் நவீன எரிவாயு மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டுமான பகுதிக்குள் நேற்று கோவை மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, சில குண்டர்கள் அனுமதியின்றி அத்துமீறி உள்ளே நுழையவும், அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சி செய்தனர்.
அவர்களை ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்களும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள இக்கரை போளுவாம்பட்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, முட்டத்துவயல், தாணிக்கண்டி ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பல ஆண்டுகளாக தங்களின் பயன்பாட்டிற்காக மின் மயானம் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில் இக்கிராம மக்களின் பயன்பாட்டிற்காக அரசின் உரிய அனுமதிகளான கிராம பஞ்சாயத்தின் கட்டட அனுமதியும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் Consent to Establish CTE ஆகியவைகளை பெற்ற பின்னர் ஈஷாவின் சார்பில் எரிவாயு மின் மயானம் கட்டப்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் பொருட்டு தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக சிவஞானம், சுப்ரமணியன், காமராஜ் ஆகியோர் மயானக் கட்டுமானத்திற்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஈஷா சார்பில் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மயான கட்டுமானப் பகுதிக்குள் தொடர்பில்லாத நபர்கள் யாரும் உள்ளே நுழைய கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.
ஆனாலும் சுப்ரமணியன் மற்றும் சிவஞானம் அவர்களின் ஆட்களோடு மயான கட்டுமான பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, கட்டிட பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, அங்குப் பணியில் இருந்தவர்களை மிரட்டியும் சென்றார்.
மேலும், இவர்களின் குழு எரிவாயு மயானத்திற்கு எதிராக கிராம மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரவச் செய்து ஊர் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைக் குறிப்பிட்டு, இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி 6 கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் 24 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் பேரூர் துணை கண்கானிப்பாளரிடமும் முறையிடப்பட்டு, ஆலாந்துறை காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இது தொடர்பான வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. அதில் உரிய அனுமதிகளோடு மட்டுமே ஈஷா எரிவாயு மயானம் கட்டியள்ளதை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கையை கேட்டுள்ளது.
இவ்வழக்கை தொடர்ந்த சுப்ரமணியன் என்பவரின் நிலம் முறைகேடான முறையில் வாங்கப்பட்டு உள்ளதையும், அங்கு கட்டப்பட்டு இருக்கும் குடியிருப்பும் முறையான அனுமதி பெறாமல் இருப்பதையும் சுட்டிகாட்டி அவருக்கு அபராதம் விதித்து இவ்வழக்கை தள்ளுபடி செய்ய ஈஷா சார்பில் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாங்கள் தொடர்ந்த வழக்கு கைவிட்டு போவதையும், மேலும் அவ்வழக்கு தங்களுக்கே பாதகமாக முடிய இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் இடத்தின் அமைதியை குலைக்கும் நோக்கிலும், வீண் சச்சரவுகளை உருவாக்கும் விதமாகவும் சில அமைப்புகளின் மூலம் சுப்ரமணியன் அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்தே உண்மைக் கண்டறியும் குழு என்ற போலி பெயரில் சில உதிரி அமைப்புகளைச் சேர்ந்த விஷமிகள் ஈஷாவின் நவீன எரிவாயு மயான கட்டுமான பகுதிக்குள் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி உள்ளே நுழையவும், அங்கே ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சி செய்தனர். அவர்களை ஈஷாவின் நுழைவாயிலிலேயே காவல்துறையினரும், கிராம மக்களும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த தேர்தலுக்காக தனது ஆளுனர் பதவியை விட்டுவிட்டு வந்த தமிழசை தென்சென்னை தொகுதியில் தோல்வியடைந்தார்.
- கட்சியில் சின்ன வருத்தம் உள்ளது. நான் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தபோது எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு அதன்பின்னர் தெலங்கானா மாநில ஆளுநர் பதவி வழக்கங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு கூடுதலாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதிவியும் அவருக்கு வழங்கப்பட்டது.
தமிழிசை பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர், கர்நாடகாவில் ஐபிஎஸ் ஆக இருந்த அண்ணாமலைக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் இந்நாள் அரசியல் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது பேசி பாஜகவை தமிழகத்தில் காலூன்றச் செய்யும் பணியில் அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதனால் பாஜகவுடன் இணக்கமாக இருந்த அதிமுக, கூட்டணியை முறித்துக்கொள்ளும் அளவுக்கு அண்ணாமலையின் பேச்சுகள் சென்றது. இந்நிலையில் 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ம.க, த.மா.க உடன் கூட்டணி அமைத்து களம் கண்ட பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
இந்த தேர்தலுக்காக தனது ஆளுனர் பதவியை விட்டுவிட்டு வந்த தமிழசை தென்சென்னை தொகுதியில் தோல்வியடைந்தார். இந்நிலையில்தான் தமிழக பாஜகவின் அந்நாள் தலைவரான தமிழிசைக்கும் இந்நாள் தலைவரான அண்ணாமலைக்கும் இடையில் பனிப்போர் மூண்டுள்ளதாக தெரிகிறது. அண்ணாமலை குறித்து அதிரடியான குற்றச்சாட்டுகளை தமிழிசை முன்வைத்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழிசை கூறியதாவது, கட்சியில் சின்ன வருத்தம் உள்ளது. நான் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தபோது எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது.
சமூக விரோத ரவுடிகள் போல இருப்பவர்களை கட்சிக்குள் விட மாட்டேன். ஆனால் இப்போது அப்படி கட்சியில் சிலர் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ள்ளார். மேலும் வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழிசையின் இந்த கருத்துக்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
- திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் நகை பறிப்பு- வழிப்பறியில் ஈடுபடும் சமூக விரோதிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- பால்சுணை கண்ட சிவன் கோவில், அரசு சுற்றுச்சூழல் பூங்கா, மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழி உள்ளது.
மதுரை
மதுரையில் உள்ள முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக பவுர்ணமியன்று ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வது உண்டு.
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் பால்சுணை கண்ட சிவன் கோவில் மற்றும் அரசு சுற்றுச்சூழல் பூங்கா, மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழி உள்ளது. இங்கு தினமும் திரளானோர் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவிற்கு மதுரை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.
விசேஷ நாட்கள் தவிர மற்ற நேரங்களில் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் ஆட்கள் நடமாட்டம் மிக மிக குறைவாக இருக்கும். போலீசாரும் கண்டு கொள்ளாததால் அந்தப்பகுதி தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
மது, கஞ்சா அடித்து சுற்றித்திரியும் இவர்கள் அந்த வழியாக செல்லும் நபர்களை குறிவைத்து பணம், நகை, செல்போன் பறிப்பு போன்ற செயல்களில் துணிகரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் செல்லவே அச்சமடைந்துள்ளனர். போலீசார் தீவிர ரோந்து சென்று சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தனியார் பள்ளி அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
- நிழல்குடையை தற்போது சிலர் ஆக்கிரமித்து மது அருந்துவதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
உடுமலை :
உடுமலை தளி ரோட்டில் எலையமுத்தூர் பிரிவில் தனியார் பள்ளி அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிழல்குடையை தற்போது சிலர் ஆக்கிரமித்து மது அருந்துவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மதுஅருந்தி விட்டு பாட்டில்களை உடைத்து விட்டும் சென்று விடுகின்றனர். இதனால் பயணிகள்நிழற்குடைக்குள்சென்று காத்திருப்பதற்கு பதிலாக ரோட்டில் நிற்கும் நிலை உள்ளது. எனவே நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்