என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "armed forces"
- தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்துள்ளது.
- வேலூர் எஸ்.பி. மணிவண்ணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
வேலூரில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜா. இவர் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் இன்ஸ்பெக்டர் ராஜா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்துள்ளது.
இதையடுத்து வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா மீது அடுக்கடுக்காக புகார் எதிரொலி காரணமாக இன்ஸ்பெக்டர் ராஜாவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து வேலூர் எஸ்.பி. மணிவண்ணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
- திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:
திருச்சி மாநகரத்தில் செயல்படும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார்கள் வருகின்றன. அவ்வப்போது விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரும் மேற்கண்ட மையங்களில் அதிரடி சோதனை நடத்தி அப்பாவி பெண்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலியல் தொழிலை தடுக்க தவறியதாக, திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், பால சரஸ்வதி, ஏட்டு அசாலி ஆகிய மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக சாலையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் வெளி மாநில அழகி உட்பட 3 பேர் மீட்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
- போலி அடையாள அட்டைகளை தயாரித்துக் கொண்டு அரசு அதிகாரி என மிரட்டி மதன்குமார் வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- ஆயுதப்படை மைதானத்துக்குள்ளேயே புகுந்து வாகனத்தை திருடிசென்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று மைதானத்திற்கு வந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆயுதப்படைக்கு சொந்தமான பொலிரோ வாகனத்தை காணவில்லை.
இதனால் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அந்த வாகனத்தை திருடி சென்றது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வேளையில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த மற்றொரு போலீஸ் வாகனத்தை ஒருவர் திருட முயன்றார். இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் அந்த வாலிபரை மடக்கி அவரிடம் விசாரித்தனர்.
அப்போது அந்த நபர், தாரமங்கலம் தொளசம்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மதன்குமார்(வயது 38) என்பது தெரியவந்தது. இவர் அங்கு பொலிரோ வாகனத்தில் வந்துள்ளார்.
அந்த வண்டிகள் அரசு முத்திரை பொருத்தப்பட்டிருந்தது. அவர் முதல்வர் நிவாரண பிரிவின் உதவி இயக்குனர் என்ற அடையாள அட்டையும் அவர் வைத்திருந்தார், அதனை அவர் போலியாக தயாரித்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
மதன்குமார் கூட்டாளிகளுடன் வந்து போலீஸ் வாகனத்தை திருடினாரா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா நேரடியாக விசாரணை நடத்தினார். உதவி கமிஷனர் லட்சுமி பிரியா, இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் ஆயுதப்படை மைதானத்தில் வெளிப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். திருடப்பட்ட வாகனம் எந்த பகுதி வழியாக சென்றுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மதன்குமாரிடமும் துருவி துருவி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்தான் போலீஸ் வாகனத்தை திருடியது தெரியவந்தது. மேலும் அந்த வாகனத்தை சூரமங்கலம் ஜங்ஷன் பகுதியில் நிறுத்தி இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ஜங்ஷன் பகுதியில் சாலையோரம் நிறுத்தி இருந்த போலீஸ் வாகனத்தை போலீசார் மீட்டனர். மதன்குமார் இரவு ஆயுதப்படை மைதானத்துக்கு தனது சொகுசு காரில் வந்து மது குடித்ததும், பின்னர் அங்கிருந்த போலீஸ் வாகனத்தில் சாவி போடாமலேயே இணைப்பு கொடுத்து ஸ்டார்ட் செய்து வண்டியை எடுத்துச் சென்று ஜங்ஷன் பகுதியில் நிறுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்திச் சென்று அவரது சொகுசு காரை எடுக்க காலையில் வந்திருக்கிறார். அப்போது போலீஸ் வண்டியில் உள்ள மைக்கை கழற்றி அவரது வண்டியில் வைக்கும் போது போலீசாரிடம் சிக்கியது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
அவரிடம் இருந்து ஏராளமான போலியான அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பயன்படுத்தி வந்த சொகுசு காருக்கான எண்ணையும் போலியாக தயாரித்து ஒட்டி உள்ளார். மேலும் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
தாரமங்கலம் அருகிலுள்ள சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 33). இவர் கடந்த 6 வருடங்களாக தாரமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதன்குமார் தான் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணி புரிந்து வருவதாக அறிமுகம் ஆனார்.
இதை தொடர்ந்து அவர் அடிக்கடி தனது காருக்கு டீசல் நிரப்பிவிட்டு பில்லில் கையொப்பம் இட்டு சென்று வந்துள்ளார். இவ்வாறு அவர் டீசல் அடித்த வகையில் பாக்கி ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் சேர்ந்ததால் அவரிடம் பணத்தை மஞ்சுநாதன் கேட்டார். அதற்கு அந்த நபர் தான் அரசு அதிகாரி என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுபற்றி மஞ்சுநாதன் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி டீசல் போட்டு மோசடியில் ஈடுபட்ட மதன்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில் போலி அடையாள அட்டைகளை தயாரித்துக் கொண்டு அரசு அதிகாரி என மிரட்டி மதன்குமார் வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது போலீஸ் வண்டியை திருடி சென்று இதுபோன்ற மோசடியில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்துள்ளது என்றனர்.
போலீசாரின் ஆயுதப்படை மைதானத்துக்குள்ளேயே புகுந்து வாகனத்தை திருடிசென்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கைதான மதன்குமார் வேறு பல இடங்களில் இதுபோன்று கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- பாளை ஆயுதப்படையில் முத்துராஜ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.
- முத்துராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள மானூர் களக்குடியை அடுத்த திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 52).
சப்- இன்ஸ்பெக்டர்
இவர் கடந்த 1993-ம் வருடம் தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். அதைத்தொடர்ந்து பதவி உயர்வு பெற்று தற்போது பாளையில் உள்ள மாவட்ட ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.
இதனையடுத்து அங்குள்ள போலீஸ் புதிய குடியிருப்பில் மனைவி ஜெயா மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார். மகன்கள் இருவரும் என்ஜினியரிங் முடித் துள்ளனர்.
'திடீர்' சாவு
முத்துராஜுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டில் இருந்த முத்துராஜ் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் முத்துராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து பெரு மாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே முத்துராஜ் உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் இன்று மாலை அவரது சொந்த ஊரான திருமலாபுரத்தில் போலீசாரின் இறுதி அஞ்சலியுடன் உடல் அடக்கம் நடைபெறுகிறது.
- அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று இருந்த இருசக்கர வாகனங்கள் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- ஈரோடு மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு பத்து வாகனங்கள் காவல்துறை மூலம் கொண்டு செல்லப்பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டஅந்தியூர், தவிட்டுப்பாளையம், அண்ணா மடுவு, பச்சாபாளையம், புது மேட்டூர், சின்னத்தம்பி பாளையம், வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கேட்பாரற்று இருந்த இருசக்கர வாகனங்கள் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி அந்த வாகனங்கள்பற்றி விபரம் தெரியாததாலும் வாகனங்களைத் தேடி யாரும் உரிமை கோரி வராததாலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவுப்படி ஈரோடு மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு பத்து வாகனங்கள் காவல்துறை மூலம் கொண்டு செல்லப்பட்டது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் ராணுவ தளபதிகள் ரோட்ரிக்ஸ், சங்கர்ராய் சவுத்ரி, தீபக் கபூர், முன்னாள் விமானப்படை தளபதி என்.சி.சூரி, முன்னாள் கடற்படை தளபதிகள் எல்.ராமதாஸ், அருண் பிரகாஷ், மேத்தா, விஷ்ணு பகவத் மற்றும் ஓய்வு பெற்ற 148 முப்படை உயர் அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஆயுதப்படைகள், எல்லைதாண்டி சென்று நடத்தும் தாக்குதல்களுக்கு அரசியல் தலைவர்கள் உரிமை கோரும் ஏற்க இயலாத, வழக்கத்துக்கு மாறான நடைமுறை நிலவி வருகிறது. ஆயுதப்படைகளை ‘மோடி சேனை’ என்று அழைக்கும் அளவுக்கு சென்றுவிட்டனர்.
அவர்களின் அரசியல் செயல் திட்டங்களுக்கு ராணுவத்தை பயன்படுத்துகிறார்கள். மேலும், விமானி அபிநந்தன் புகைப்படத்தை பிரசாரத்துக்கு உபயோகிக்கிறார்கள். இதற்கு எங்கள் ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #MilitaryVeterans
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ரங்கநாதன். இவர் பணியின்போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து போலீஸ் ஏட்டு ரங்கநாதனை கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 6-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய ராணுவம்-நடப்பு சாம்பியன் ஓ.என்.ஜி.சி. (ஏ பிரிவு) அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த ராணுவ அணி ஆட்ட நேரம் முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் ஓ.என்.ஜி.சி. அணிக்கு அதிர்ச்சி அளித்தது. 3 வெற்றி, ஒரு தோல்வி கண்ட ராணுவ அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.
சென்னை ஆக்கி சங்கம்-பெங்களூரு ஆக்கி சங்க அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் பாதியில் பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் அந்த அணியால் கடைசி வரை தனது முன்னிலையை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. சென்னை அணி சரிவில் இருந்து மீண்டு வந்து ஆட்டத்தை சமன் செய்தது. மற்றொரு ஆட்டத்தில் மத்திய அமைச்சக அணி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை ஆக்கி சங்க அணியை தோற்கடித்து 2-வது வெற்றியை தனதாக்கியது.
இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே-மத்திய அமைச்சகம் (பிற்பகல் 2.30 மணி), பஞ்சாப் சிந்து வங்கி-இந்தியன் ஆயில் (மாலை 4.15 மணி) அணிகள் மோதுகின்றன. #tamilnews
திருப்பூர்:
தேனி மாவட்டம் போடி அம்மாபட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது 29). திருப்பூர் ஆயுதப்படையில் போலீஸ்காராக வேலைபார்த்து வந்தார்.
இவரது மனைவி ரமா (25). இந்த தம்பதிக்கு 6 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் திருப்பூர் பூலுவப்பட்டி பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி மோகன் பணிக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று திருப்பூர் - வஞ்சிபாளையம் இடையே வந்த ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே மோகன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்திபோது, கடன் தொல்லையால் போலீஸ்காரர் மோகன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்