என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bride groom suicide"
பாகூர்:
தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவர் அரியாங்குப்பத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் அன்புகுமார் (வயது27). இவர் புதுவையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கும் பி.எஸ். பாளையத்தை சேர்ந்த முகில்அரசிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் முகில்அரசி கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக்கொண்டு தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி பிரிந்து சென்ற முதல் அன்புகுமார் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் அய்யனாரும், அவரது மனைவியும் காய்கறி வியாபாரத்துக்கு சென்று விட்டனர். மதியம் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது அங்கு மகன் அன்புகுமார் மின்விசிறியில் கயிறால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அன்புகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அன்புகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கவிராஜன் (வயது 29). பி.காம் மற்றும் மல்டி மீடியா அனிமேசன் படித்துள்ள இவர், போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.
இவருக்கும், தேவதானத்தைச் சேர்ந்த முனீசுவரி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பெற்றோர் கட்டாயத்தின் பேரிலேயே கவிராஜன் திருமணம் செய்தாராம். இதனை மனைவியிடம் அடிக்கடி கூறிவந்தார்.
இந்த நிலையில் இரவில் வேலை இருப்பதால், வீட்டிற்கு காலையில் வருகிறேன் என கவிராஜன் மனைவியிடம் கூறிச் சென்றார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் ஸ்டூடியோவுக்கு சென்றனர்.
அங்கு கதவு பாதியளவு திறந்து கிடந்தது. அதனை திறந்து உள்ளே சென்ற போது கவிராஜன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் கிருஷ்ணன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லவகுசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கவிராஜன் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மனைவி முனீசுவரி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
மலைக்கோட்டை:
திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறையை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் தினேஷ் (வயது 31). இவர் லிப்ட் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் காண்டிராக்ட் பணி எடுத்து செய்து வந்தார். இவருக்கும் மலைக்கோட்டை தாயுமானவர் தெருவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களது வீட்டிற்கு சென்று விட்டனர். மணமகள் வீட்டார் அவர்களுடைய வீட்டிற்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் தினேஷ் அவரது வீட்டின் மாடிக்கு சென்று அங்குள்ள அறையில் படுத்து தூங்கினார். இன்று காலை மாப்பிள்ளை அழைப்பு நடைபெற இருந்ததால் அவரது தாய் மாடிக்கு சென்று தினேஷ் தூங்கி கொண்டிருந்த அறையின் கதவை தட்டி அழைத்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை.
இதைத்தொடர்ந்து உறவினர்கள் சென்று கதவை தட்டி அழைத்தனர். அப்படியும் அவர் வர வில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அறையில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் தினேஷ் தொங்கினார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது தினேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் தினேஷ் தற்கொலை செய்து கொண்டது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
திருமணம் பிடிக்காததால் தினேஷ்தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தினேஷ் 10ம்வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அவருக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த மணமகள் பட்டப்படிப்பு படித்துள்ளார். தன்னை விட அவர் அதிகம் படித்திருந்ததால் தினேஷ் ஒரு வித தயக்கத்துடன் இருந்துள்ளார். நேற்று வரவேற்பு நிகழ்ச்சியின் போதும் யாரிடமும் சரியாக முகம் காட்டி பேசாமல் இருந்துள்ளார். இரவு வீட்டிற்கு வந்ததும் தூங்க செல்வதற்கு முன்பு அவரது தாயிடம் நீண்ட நேரம் பேசியுள்ளார். அதன்பிறகு மாடிக்கு சென்ற அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். மணமகள் தன்னை விட அதிகம் படித்திருந்ததால் தாழ்வு மனப்பான்மை காரணமாக தினேஷ் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினேஷ் திருமணத்தையொட்டி அவரது வீடே களை கட்டியிருந்தது. திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்காக வித விதமான உணவுகள் தயார் செய்யப்பட்டு வந்தது. அவர் தற்கொலை செய்ததால் களை கட்டியிருந்த திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கோவில் பாளையம் சோழ நகரை சேர்ந்தவர் குமார்ராஜா (வயது 33).
இவர் பெருந்துறை சிப் காட்டில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் பணி புரிந்த ஷோபனா (21). இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 3 மாதத்துக்கு முன் இவர்களின் திருமணம் நடந்தது.
குமார்ராஜாவுக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை காதல் மனைவி ஷோபனா கண்டித்தார். இது தொடர்பாக இரு வருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இதில் ஷோபனா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு போய் விட்டார். இதனால் குமார் ராஜா மிக வேதனையில் இருந்தார் இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அவரது அம்மா வெளியே போய் விட்டார். இதனால் அவர் காதல் மனைவி பிரிந்த ஏக்கத்தில் வீட்டில் உள்ள மின் விசிறி கம்பியில் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு வந்த அவரது தாயார் மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் எட்வர்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை:
காரமடை அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 33). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு தமிழரசி என்ற பெண்ணை காதலித்து திருணம் செய்து கொண்டார். கோவிந்தராஜ் தொழுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
நோய் பாதிப்பு ஏற்பட்டதால் கோவிந்தராஜ் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.
அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கோவிந்தராஜின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலஉப்பிலிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது27). 8-ம் வகுப்பு படித்துள்ள இவர் கட்டிட வேலைபார்த்து வந்தார்.
இவருக்கும், மைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கருப்பு மகள் சித்ரா (23) என்பவருக்கும் கடந்த மாதம் 25-ந்தேதி திருமணம் நடந்தது. சித்ராதேவி பட்டப் படிப்பு முடித்துள்ளார்.
திருமணமான நாளில் இருந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுறது. இதனால் ரஞ்சித்குமார் கடந்த சில வாரமாகவே விரக்தியுடன் காணப்பட்டார். வேலைக்கும் சரியாக செல்லவில்லை.
சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரஞ்சித்குமார் விஷம் குடித்துவிட்டு பரமக்குடிக்கு அரசு பஸ் சில் சென்றார். பஸ்சில் மயங்கி கிடந்த அவரை சக பயணிகள் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார்.
திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்