search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car accident"

    • திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் திடீரென நிலை தடுமாறிய கார் தாறுமாறாக ஓடியது
    • இதில் சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானது

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 34). இவரது மனைவி கற்பகம் (32). தந்தை அழகர்சாமி (57), மகள் மதுமிதா (11), மகன் யோகதர்ஷன் (9), உறவினர்கள் ஆசை பிரியா, பால்பாண்டி, யோகிசாய் (2), உள்பட 9 பேர் காரில் திருச்சி சமயபுரத்துக்கு சென்றனர்.

    சாமி தரிசனம் முடித்து விட்டு மீண்டும் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் மாணிக்கம் பிள்ளை சத்திரம் பகுதியில் வந்தபோது திடீரென நிலை தடுமாறிய கார் தாறுமாறாக ஓடியது. சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் சிறுவன் யோகி சாய் படுகாயமடைந்தான். மற்றவர்களும் காயமடைந்ததால் அவர்களை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாழையூத்து பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்த போது தொழிலாளி விபத்தில் சிக்கினார்.
    • விபத்து குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே உள்ள ஆழ்வார் கற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது40). கூலி தொழிலாளி. இவர் நேற்று தாழையூத்து பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கன்னியாகுமரியை நோக்கி சென்ற கார் மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுதாகர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தியாகதுருகம் புறவழிச்சாலையில் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்த கார்-2 பேர் காயம் அடைந்தனர்.
    • காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கோரனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன் (வயது 29) இவர் சம்பவத்தன்று தனது உறவினர்கள் அமிர்தலிங்கம், பழனிவேல் ஆகியயோருடன் விவசாய நிலத்துக்கு மின் மோட்டார் வாங்குவதற்கு சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தியாகதுருகம் புறவழிச் சாலையில் பிரிதிவிமங்கலம் காலனி அருகே சென்ற போது காருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி, காரை முந்தி சென்ற போது காரின் பக்கவாட்டில் உரசியதில் கார் சாலையோர பள்ளத்தில் விழுந்தது.

    இந்த விபத்தில் காரில் வந்த செந்தமிழ்ச்செல்வன், அமிர்தலிங்கம், பழனிவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து செந்தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிந்து எந்த லாரி மோதியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

    • உயிரிந்தவர்களில் 3 இளைஞர்கள், 6 பெண்கள் ஆவர்.
    • கிரேன் மூலம் ஆற்றில் இருந்து கார் வெளியே எடுக்கப்பட்டது.

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த 10 பேர் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். இவர்கள், இன்று காலை 5.45 மணியளவில் ராம்நகரில் உள்ள ரிசார்ட்டில் தங்கிவிட்டு, தேலா ஆற்றின் வழியே காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் கவிழ்ந்து அடித்துச் செல்லப்பட்டது.

    இதில், காரில் இருந்த 10 பேரில் 9 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்து ராம்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில், உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் உள்ளனர். கிரேன் மூலம் ஆற்றில் இருந்து கார் வெளியே எடுக்கப்பட்டது.

    உயிரிந்தவர்களில் 3 இளைஞர்கள், 6 பெண்கள் ஆவர். விபத்து குறித்து வழக்கப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் ( வயது 46 ) , கார் மெக்கானிக் . இவர் வேலூரில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு காரில் தனியாக சென்றுள்ளார்.

    பின்னர் இரவு மீண்டும் வேலூர் நோக்கி வந்துள்ளார் . ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு அருகே வந்தபோது, கார் நிலைத்தடுமாறி சிறு பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது . இதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பிரதீப்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரதீப் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது.
    • கார் மோதியதால் சேதமடைந்த மின்கம்பம் வளைந்து உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது.

    கயத்தாறு:

    நெல்லை டவுன் முத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி ( வயது 30 ). இவர் கோவில்பட்டியில் இருந்து நெல்லைக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

    கயத்தாறு அருகே நாற்கர சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனயில் சிகிச்கைக்காக சேர்த்தனர். கார் மோதியதால் சேதமடைந்த மின்கம்பம் வளைந்து உயர் மின்னழுத்த கம்பிகள் அருந்து சாலையில் விழுந்தது.

    விபத்துக்குறித்து தகவல் அறிந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, தனிப்பிரிவு ஏட்டு பிரித்தீவிராஜ் மற்றும் போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மின்வாரிய பணியாளர்களும் விபத்து பகுதிக்கு சென்று துரிதமாக பணிகளை மேற்கொண்டனர்.

    இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது. 

    • கார் தாறுமாறாக ஓடி எதிர்புறம் சாலையில் உருண்டு பாலத்தின் தடுப்பு சுவர் மீது தொங்கியது.
    • விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார் 4 வழிச்சாலையில் அம்மையநாயக்கனூர் நக்கம்பட்டி மேம்பாலம் என்ற இடத்தில் வந்தபோது நிலைதடுமாறி தாறுமாறாக ஓடி எதிர்புறம் சாலையில் உருண்டு பாலத்தின் தடுப்பு சுவர் மீது தொங்கியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த வெள்ளி குறிச்சியைச் சேர்ந்த ராணுவ வீரரான அசோக் குமார் (24), அதே ஊரைச் சேர்ந்த முத்து மகன் கருப்பு ராஜா (34), மாரி மகன் சரவணன் (20) ஆகியோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லபட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அந்த வழியாக வந்த இளைஞர்கள் சிலர் உதவி செய்து ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். போக்குவரத்து பாதிப்பையும் அவர்கள் சீர் செய்து ஒழுங்குபடுத்தினர்.

    அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய காரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
    • விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் உமா சங்கர் (வயது 21). இவர் திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அடுத்த புதூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2020-ம் ஆண்டு சேர்ந்து இருந்தார்.

    பின்னர் கொரோனா தொற்று அதிகரித்ததால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் ஊருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் உமாசங்கர் தனது நண்பரான நசரத் பேட்டையை சேர்ந்த விஜய் (வயது 20) என்பவருடன் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து டி.சி.யை திருப்பி கேட்டு எழுதி கொடுத்தார்.

    பின்னர் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி திரும்ப சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது திருத்தணி நோக்கி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    படுகாயமடைந்த விஜய் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்.
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டைமாவட்டம் ஆற்காடு பெரிய அசேன்புரா பகுதியை சேர்ந்தவர் முகமது இம்ரான் (வயது 23). கார் டிரைவரான இவர் கடந்த 16 - ந்தேதி இரவு ஆற்காடு பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். லுவை அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் திடீரென முகமது இம்ரான் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆற் காடு அரசு மருத்துவமனையி லும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் . இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கராபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • காயமடைந்த 3 பேர் சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டை சேர்ந்தவர் சவுரிராயன்(68). இவர் தனது உறவினர் செல்வராஜின் குழந்தைகளான ரோமியோ(13), அனார்(10), மடோனா(6) ஆகியோரை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு இளையாங்கண்ணி கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, சங்கராபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குழந்தைகள் ரோமியோ, அனார், மடோனா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். சவுரிராயன் காயமின்றி உயிர் தப்பினார்.

    இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கார் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.
    • சடலங்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்ளாட்சி நிர்வாகம் தெரிவித்தது.

    பாட்னா:

    பீகாரின் பூர்னியா மாவட்டம் தாராபாடி பகுதியில் திருமண விழாவில் கலந்துகொண்டு கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நானியா கிராமத்திற்கு 10 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். இன்று காலை 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் பூர்னியா- கிஷன்கஞ்ச் மாநில நெடுஞ்சாலை அருகில் உள்ள தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மாஜிஸ்திரேட் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர். மேலும், உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். காயமடைந்த 2 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பீகாரில் கார் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார். அத்துடன், ஒவ்வொரு குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டார்.

    திண்டுக்கல் அருகே சென்டர் மீடியனில் கார் மோதி 2 பேர் படுகாயமடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்தவர் பிரபு (வயது 29). கார் டிரைவர். இவர் சசிகலா (39) என்பவரை காரில் ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். நேற்று நள்ளிரவு ஊராளிப்பட்டி பிரிவில் கார் வந்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் காரின் பெரும் பகுதி சேதமடைந்தது. அவ்வழியே வந்தவர்கள் படுகாயமடைந்த பிரபு மற்றும் சசிகலாவை மீட்டு திண்டுக்கல் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நடந்து வருகிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வெளியூருக்கு செல்லும் மக்களும் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பும் மக்களும் அதி வேகத்தில் வந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

    பல நேரங்களில் உயிரிழப்பும் நடந்து வருகிறது. கடந்த 1 மாதத்தில் மட்டும் இந்த சாலையில் பல விபத்துகள் இது போல நடந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அடிக்கடி முகாமிட்டு அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    ×