search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car accident"

    கள்ளக்குறிச்சி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் திருநங்கை சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள இந்திலி காமராஜர்நகரை சேர்ந்தவர் இளையராணி. இவரது வளர்ப்பு மகள் ரமணா (வயது 19), திருநங்கை.

    இவர் நேற்று மாலை மொபட்டில் இந்திலி கிராமத்தில் இருந்து டவுன் பகுதிக்கு புறப்பட்டார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஒரு வளைவில் திரும்பினார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று ரமணா ஓட்டி சென்ற மெபட் மீது மோதியது. பின்னர் அருகில் உள்ள பாலத்திலும் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ரமணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பாலத்தில் கார் மோதியதில் அதன் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. விபத்து ஏற்பட்டதும் காரில் இருந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விபத்தில் இறந்த ரமணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    திண்டுக்கல் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தி.மு.க. நிர்வாகிகள் படுகாயம் அடைந்தனர்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல்லில் நேற்று மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வத்தலக்குண்டு தி.மு.க. நகர செயலாளர் சின்னத்துரை, ஒன்றிய செயலாளர் முருகன் உள்பட 5 பேர் ஒரு காரில் வந்தனர்.

    கூட்டம் முடிந்த பிறகு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆத்தூர் அருகில் உள்ள கூலம்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்தபோது வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் டயர் வெடித்தது.

    இதனால் அந்த கார் டிரைவர் மோதாமல் இருப்பதற்காக இடது புறம் திருப்பினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் காரில் வந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வத்தலக்குண்டு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை கருமத்தம்பட்டி அருகே மொபட் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சூலூர்:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள மோப்பரி பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி மாரத்தாள் (55). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் கணியூர் டோல்கேட் அருகே சென்றனர். அப்போது கோவை நோக்கி வந்த சொகுசு கார் மொபட் மீது மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணவன்-மனைவி இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருப்பூரை சேர்ந்த தினேஷ் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
    ஒரத்தநாடு அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஒரத்தநாடு:

    அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). விவசாயி. இவரது மனைவி பரிமளா (38). இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் தஞ்சை சென்று விட்டு பின்னர் ஊர் திரும்பினர்.

    அப்போது ஒரத்தநாடு அருகே பாப்பநாடு பகுதி கடைவீதியில் வந்த போது பின்னால் வேகமாக வந்த கார் மோதி இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் மீட்டு பட்டுககோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது பரிமளா ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து படுகாயம் அடைந்த சண்முகம் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றதை கண்ட அப்பகுதி ரோந்து போலீசார் காரை பின் தொடர்ந்து விரட்டி சென்று பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி என்ற இடத்தில் மடக்கி பிடித்தனர். அப்போது கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து பாப்பாநாடு போலீசில் சண்முகத்தின் அக்கா வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கார் வேதாரண்யம் பகுதி துளசியாபட்டினத்தை சேர்ந்த ஒருவருடையது என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். விபத்தில் இறந்த பரிமளாவுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    புதுக்கோட்டை அருகே துக்க வீட்டிற்கு சென்று திரும்பியபோது கார் கவிழ்ந்த விபத்தில் நண்பர்கள் 3 பேர் பலியானார்கள்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி ஜீவா நகரை சேர்ந்தவர் முகமது பஷீர் (வயது 30). இவரது நண்பர்கள் புத்தாம்பூர் கார்த்திகேயன் (25), லேணா விலக்கு செல்வ கணபதி. 3 பேரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் அறந்தாங்கி அருகே இவர்களின் கல்லூரி நண்பர் சந்திரசேகரன் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 3 பேர் நேற்று இரவு காரில் சென்றனர். மீண்டும் அவர்கள் புதுக்கோட்டை நோக்கி திரும்பிக்கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அவர்களது கார் புதுக்கோட்டையை அடுத்த குளவாய்பட்டி அருகே வந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர மரத்தில் மோதி அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காருக்குள் இருந்த பஷீர் அகமது, கார்த்திகேயன், செல்வகணபதி ஆகிய 3 பேரும் இடிபாடுகளுக்கு சிக்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களுடன் பயணம் செய்த முருகானந்தம், மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வல்லத்திராக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துக்க வீட்டுக்கு சென்று திரும்பிய போது நண்பர்கள் 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    மேட்டூர் அருகே இன்று அதிகாலை கார் மரத்தில் மோதிய விபத்தில் தனியார் மருத்துவமனை மேலாளர் பலியானார்.

    மேட்டூர்:

    ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலிருந்து ஒரு காரில் அய்யப்ப பக்தர்கள் 6 பேர் மேட்டூர் வழியாக சபரிமலைக்கு சென்றனர். இந்த காரை அசோக் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த கார் ஈரோடு மாவட்டம் சின்ன பள்ளம் என்ற இடத்தில் சென்ற போது இன்று அதிகாலை 2.30 மணி அளவில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி ரோட்டில் ஓரமாக இருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த அய்யப்ப பக்தர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு அம்மாப்பேட்டை போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த விஜயவாடா, ராமலிங்கேஸ்வரர் நகரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மேலாளர் ஆஞ்சினேலு (வயது 32) சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த ஆஞ்சினேலுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த விபத்து குறித்து ஈரோடு அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    திருச்சூரில் இருந்து மூணாறுக்கு ‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். #GoogleMaps #Caraccident
    திருவனந்தபுரம்:

    திருச்சூர் வடக்கஞ்சேரியைச் சேர்ந்தவர்கள் கோகுல்தாஸ், (வயது 23). ஈசாக் (29), முஸ்தபா (36).

    3 வாலிபர்களும் கடந்த வியாழக்கிழமை காரில் திருச்சூரில் இருந்து மூணாறுக்கு புறப்பட்டனர். சரியான வழி தெரியாததால் ‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    இவர்களது கார் மூணாறு அருகே பாலமட்டம்- அவழிச்சல் சாலையில் சென்று கொண்டிருந்தது.

    நள்ளிரவு நேரத்தில் ‘கூகுள் மேப்’பை பார்த்தபடி கார் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அவழிச்சல் அருகே சென்ற போது சாலையில் பெரும் பள்ளம் இருப்பதை கண்டனர்.

    காரை நிறுத்த முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. காரில் இருந்த 3 பேரும் காருடன் பள்ளத்தில் விழுந்தனர்.

    30 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் சுமார் 8 அடி தண்ணீர் இருந்தது. இதனால் வாலிபர்கள் மூவரும் காரின் மேற்பகுதியை பிடித்தபடி உதவிக்கேட்டு கூச்சலிட்டனர்.

    30 அடி ஆழம் கொண்ட பள்ளம்.

    அப்போது அந்த வழியாக ரப்பர் தோட்ட தொழிலாளிகள் சிலர் இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பள்ளத்தில் இருந்து கூச்சல் வந்ததை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். அங்கு காரை பிடித்தபடி 3 வாலிபர்கள் உயிருக்கு போராடுவதை கண்டனர்.

    தொழிலாளிகள் அனைவரும் பள்ளத்தில் விழுந்த வாலிபர்களை பத்திரமாக மீட்டனர். இதற்காக அவர்கள், அணிந்திருந்த வேட்டியை கழட்டி கயிறு போல் ஆக்கி அதன் மூலம் வாலிபர்களை வெளியே அழைத்து வந்தனர்.

    வாலிபர்கள் மூவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பினர். பள்ளத்தில் விழுந்த கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

    3 வாலிபர்கள் பள்ளத்தில் விழுந்து மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் இன்னொரு குடும்பமும் மூணாறு செல்ல ‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி இதே பாதையில் வந்தது.

    கிராம மக்கள் அவர்களை தடுத்து நடந்த சம்பவத்தை கூறி மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தினர்.

    இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, திருச்சூர்-மூணாறு செல்ல ‘கூகுள் மேப்’பில் வழி தேடினால் இந்த பாதைதான் வருகிறது. ஆனால் இங்கு 30 அடி ஆழ பள்ளம் இருப்பது உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே தெரியும்.

    இதுபற்றி பிரதான சாலையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்க நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையேல் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பதை தடுக்க முடியாது என்றனர்.  #GoogleMaps #Caraccident





    திருச்செந்தூர் அருகே சுவற்றில் கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள அம்மன்புரம் கானா விளையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. முத்துக்குமார் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார். இவர் கடந்த 1-ந் தேதி பயணிகளை ஏற்றி கொண்டு உடன்குடிக்கு சவாரி சென்றார். பின்னர் சவாரி முடித்து மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தார். 
    அவர் காயாமொழி அருகே வந்த போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள சுவற்றில் மோதியது. 

    இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பொள்ளாச்சியில் வாகன சோதனையின் போது கார் மோதி போலீஸ்காரர் காயம் அடைந்தார். காரை ஓட்டி வந்த புது மாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை போலீசாக உள்ளவர் ஆனந்த் (வயது 36). நேற்று சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி, ஏட்டு ஜவஹர்லால் நேரு, ஆனந்த் மற்றும் போலீசார் வடக்கிபாளையத்தில் தடுப்பு வேலி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக வந்த கார் தடுப்பு வேலியில் மோதியது. மோதிய வேகத்தில் தடுப்பு வேலி பாய்ந்து போலீஸ்காரர் ஆனந்த் மீது மோதியது. இதில் அவர் காயம் அடைந்தார். மற்றவர்கள் சிதறி ஓடி தப்பினர். காயம் அடைந்த ஆனந்த்தை போலீசார் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கார் ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் எஸ். நாகூரை சேர்ந்த கணேஷ்குமார் (23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கணேஷ் குமார் புதுமாப்பிள்ளையாவார். இன்னும் 10 நாளில் திருமணம் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    திருச்சி அருகே உள்ள நாச்சிக்குறிச்சியை சேர்ந்தவர் பாபு (வயது 52). இவரது மனைவி ராதா (45). இவர்களுக்கு அஜன் (28), அம்ரிஸ்ராமச்சந்திரன் (22) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    பாபு சென்னை சிட்லப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கியில் கேஷியராக வேலைப்பார்த்து வந்தார். பாபு குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று அவர் இறந்து விட்டார்.

    இதைத்தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊரான திருச்சி நாச்சிக்குறிச்சிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பாபுவின் உடலை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி சென்னையில் இருந்து கொண்டு சென்றனர்.

    ஒரு காரில் ராதா, அம்ரிஸ்ராமச்சந்திரன் மற்றும் பாபுவின் தாய் தங்கம் (65), உறவினர் புவானியா (25) ஆகியோர் வந்தனர். இந்த காரை சென்னையை சேர்ந்த கோகுல் என்பவர் ஓட்டி சென்றார்.

    மற்றொரு காரில் அஜன் மற்றும் உறவினர்கள் சென்றனர். இந்த கார்கள் ஆம்புலன்சை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன.

    இன்று காலை 6 மணிக்கு அவர்கள் சென்ற கார்கள் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள ரவுண்டானாவை கடந்து சென்றது.

    லாரி மீது மோதிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் அம்ரிஸ் ராமச்சந்திரன் பிணமாக கிடக்கும் காட்சி.

    அப்போது சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது கோகுல் ஓட்டி சென்ற கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. உள்ளே இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.

    இந்த விபத்தில் காரில் இருந்த ராதா, அவரது மகன் அம்ரிஸ் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் அந்த காரில் இருந்த தங்கம், புவானியா, கார் டிரைவர் கோகுல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர் பேட்டை இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்- இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம், எடைக்கல் சப்- இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயம் அடைந்த 3 பேரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் இறந்த ராதா, அம்ரிஸ்ராமச்சந்திரன் ஆகியோரது உடல்கள் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதைப்பார்க்க பரிதாபமாக இருந்தது. விபத்தில் இறந்த அம்ரிஸ் ராமச்சந்திரன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்குள் விபத்தில் சிக்கி அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சீனாவில் சாலையைக் கடந்த மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 5 மாணவர்கள் பலியாகினர். #ChinaAccident
    பீஜிங்:

    சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியோனிங் மாகாணத்தின் ஹூலுடாவ் நகரில் உள்ள துவக்கப்பள்ளிக்கு இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் வந்துகொண்டிருந்தனர். அப்போது, எதிர்முனையில் இருந்து வந்த மாணவர்கள், பள்ளிக்கு வருவதற்காக சாலையை கடந்து வந்தனர்.

    மாணவர்கள் வரிசையாக சாலையை கடந்தபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார், மாணவர்கள்  மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 18 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.



    தவறான பாதையில் கார் வந்ததால் மாணவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீனாவில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் மத்திய சீனாவில் பொதுமக்கள் மீது சொகுசு கார் மோதியதில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #ChinaAccident
    அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் மேம்பாலத்தில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் ஏறியதில் 5 பேர் உயிரிழந்தனர். #HaryanaAccident
    ஹிசார்:

    அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்று பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், இரவில் பாலத்தின் மீதுள்ள நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அதிவேகமாக வந்த ஒரு கார், கட்டுப்பாட்டை இழந்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறியது. அத்துடன் எதிரே வந்த மற்றொரு கார் மீதும் மோதிவிட்டு பாலத்தில் இருந்து கவிழ்ந்தது.



    அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்தனர். கார்  டிரைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #HaryanaAccident
    ×