search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car accident"

    அரியலூர் அருகே இன்று காலை பயணிகள் நிழற்குடைக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர். 4பேர் காயமடைந்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் கீழப்பளூர் அருகே வாரணவாசி திருச்சி சாலையில் பஸ் நிழற்குடை உள்ளது. இன்று காலை வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பஸ் ஏறுவதற்காக நிழற்குடையின் கீழ் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடி நிழற்குடைக்குள் புகுந்தது. இதில் அங்கு நின்றிருந்த அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி மருதமுத்து (வயது 70), இளங்கோவன் (55) ஆகியோர் மீது மோதியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பயணிகள் திருநாவுக்கரசு, சாமிநாதன், கொளஞ்சி, பள்ளி மாணவன் விக்கிரமதி (15) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அரியலூர் டி.எஸ்.பி. மோகன்தாஸ் மற்றும்கீழப்பளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவர் , சம்பவம் நடந்ததும் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடிவிட்டார். காரில் கட்சி கொடி கட்டப்பட்டுள்ளது. இதனால் விபத்தை ஏற்படுத்திய நபர் அரசியல் கட்சி பிரமுகராக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர்.

    விபத்தில் பலியான இளங்கோவனின் பேரன் விக்கிரமதி. இவன் கீழப்பளூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வருகிறான். அவனை பஸ் ஏற்றி விடுவதற்காக இளங்கோவன் பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தார். இந்தநிலையில் பேரன் கண் முன்பே இளங்கோவன் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், வாரணவாசி பயணிகள் நிழற்குடை அருகே வேகத்தடை அமைக்க கோரியும் அப்பகுதி பொதுமக்கள் திடீரென அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.விஸ்வநாதன் சென்னையில் நேற்று காலமானார் #PersonalSecretary #Viswanathan #RIP
    சென்னை:

    ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.விஸ்வநாதன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 77.

    திருச்சி கலெக்டர், சுகாதாரத்துறை செயலாளர், முதல்-அமைச்சரின் செயலாளர், கோ-ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் உள்பட பல உயரிய பதவிகள் வகித்தவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.விஸ்வநாதன். இவர் சென்னை அண்ணாநகர் பொன்னிகாலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    விஸ்வநாதன் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து காரில் வெளியே கிளம்பினார். காரை பின்புறமாக இயக்கும்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் வீட்டின் காம்பவுண்ட் சுவரின் மீது பலமாக மோதியது. இதில் அவர் தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் நேற்று மாலை உயிரிழந்தார்.

    அவரது உடல் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் அவரது உடல் நியூ ஆவடி ரோட்டில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

    மறைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஸ்வநாதனுக்கு ஆதிரைசெல்வி என்ற மனைவியும், கவுதமன், அசோக்குமார் என்ற 2 மகன்களும், மித்ரா என்ற மகளும் உள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தார். அவருடைய நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதிக்கு தனது நண்பர்கள் விக்ரம், அனுமந்தகவுடா ஆகியோருடன் காரில் சென்றார்.

    அங்கு அவர்கள் வனப்பகுதியை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை சுரேஷ் ஓட்டி வந்தார். உனிசெட்டி அருகில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சுரேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விக்ரம், அனுமந்தகவுடா ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் இறந்த சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன் கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கும்பகோணம் அருகே சைக்கிள் ஓட்ட பழகிய போது கார் மோதி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள புளியடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் பிரசன்னா(வயது 7). இவன் ஆடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    ராஜகோபாலின் சகோதரி மகன் ஹரிஹரன்(14). இவனும் மாமா வீட்டிலேயே தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்த நிலையில் நேற்று வீட்டின் அருகே பிரசன்னாவிற்கு, ஹரிஹரன் சைக்கிள் ஓட்ட பழகி கொடுத்தான். அந்த நேரத்தில் கும்பகோணத்தில் இருந்து புதூர் நோக்கி சென்ற கார், பிரசன்னா ஓட்டிக்கொண்டு இருந்த சைக்கிள் மீது மோதியது. இதில் பிரசன்னா படுகாயம் அடைந்தான். ஹரிகரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    படுகாயம் அடைந்த பிரசன்னாவை, உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசன்னா பரிதாபமாக இறந்தான்.

    பின்னர் அவனது உடலை, பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹரிஹரன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    விபத்து நடந்தவுடன் கார் டிரைவர், காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். உடனே அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள், மோட்டார் சைக்கிளில் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி சென்று மடக்கி பிடித்து திருநீலக்குடி போலீசில் ஒப்படைத்தனர்.

    திருநீலக்குடி போலீஸ் சப்-இன் பெக்டர் அருள்குமார், அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், காரை ஓட்டி வந்தது மாந்தை கிராமத்தை சேர்ந்த ஜோஸ்வா(23) என்று தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோஸ்வாவை கைது செய்தனர்.

    பொங்கலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பொங்கலூர் சக்தி நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 69). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் பொங்கலூருக்கு புறப்பட்டார்.

    காட்டூர் பிரிவு வந்தபோது எதிரே ஒரு கார் வந்தது. காருக்கு வழிவிட முயன்றபோது பக்கவாட்டில் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. இதில் 3 வாகனங்களும் மோதி விபத்தானது.

    இதில் தலைமை ஆசிரியர் படுகாயம் அடைந்தார். கார், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் தப்பி விட்டனர். அக்கம் பக்கத்தினர் ராமசாமியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களை தேடி வருகிறார்கள்.

    இதேபோன்று சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் சேகர் (46). இவர் காங்கயம் பகுதியில் தங்கி தென்னை மட்டை பின்னும் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை தேடி வருகிறார்கள்.

    மும்பையில் டிராபிக் சிக்னலில் நிற்காமல் வேகமாக சென்ற கார் வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மும்பை:

    மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாராவியில் டிராபிக் சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது வேகமாக வந்த கார் ஒன்று வாகனங்கள் மீது மோதியது. இது முன்னாள் இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் 2 பேர் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சிசிடிவி கேமரா பதிவை வைத்து கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. டிரைவர் கார் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்தாக கூறப்படுகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்த டிரைவர் வாகனங்கள் மீது மோதியுள்ளார்.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் பயணம் செய்த பெண் காரிலிருந்து குதித்து உயிரை காப்பாற்றிக் கொண்டார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பீகார் மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்தில் கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
    பாட்னா :

    பிகார் மாநிலம், அராரியா மாவட்டத்தில் உள்ள தராபாடி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    குளத்தில் கவிழ்ந்த காரில் இருந்து கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட ஒரு குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    விபத்து குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்தடைந்த அம்மாநில போலீசார் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கட்டிட தொழிலாளி காரை பின்னோக்கி ஓட்டி வந்த போது எதிர்பாராதவிதமாக மோதியதில் அவருடைய 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்ததது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள நைனாபுதூரை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25), கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி சுகன்யா (25). இவர் களுடைய மகள் அக்‌ஷிதா (4), மகன் லெக்‌ஷய் (2).

    நேற்று காலையில் ஜெகன் தனது காரை வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார். அவருடைய குழந்தைகள் இருவரும் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது காரை கழுவுவதற்காக ஜெகன் சற்று பின்னோக்கி ஓட்டி வந்தார்.

    அப்போது, திடீரென்று காரின் பின்பக்கத்தில் இருந்து மகன் லெக்‌ஷயின் அலறல் சத்தம் கேட்டது. உடனே, ஜெகன் காரை நிறுத்திவிட்டு பின்னால் சென்று பார்த்தபோது, அங்கு லெக்‌ஷய் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கார் பின்னோக்கி வந்தபோது எதிர்பாராதவிதமாக குழந்தையின் மீது மோதியது தெரிந்தது. உடனே, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது குழந்தை லெக்‌ஷய் பரிதாபமாக இறந்து விட்டது தெரியவந்தது. இதை அறிந்ததும் ஜெகனும், அவருடைய குடும்பத்தினரும் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுபற்றி ஜெகனின் மனைவி சுகன்யா சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கரூர் அருகே சாலையோரம் இருந்த புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியானார்கள்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவருடைய முதல் மனைவி கிரேசி ஜெயலட்சுமி (55), 2-வது மனைவி சுப்புலட்சுமி (53), டிரைவர் முனியாண்டி (65). இவர்கள் 4 பேரும் ஒரு காரில் நேற்று மதியம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    கரூர் அருகே சின்னதாராபுரம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் செல்வராஜூம், முனியாண்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் காரின் இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடிய கிரேசி ஜெயலட்சுமியையும், சுப்புலட்சுமியையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். விபத்தில் பலியான செல்வராஜ் கிராமப்புற வளர்ச்சி துறை இணை இயக்குனராகவும், முனியாண்டி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கார் டிரைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணாடி பாலகிருஷ்ணன். அ.தி.மு.க. நிர்வாகி. இவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழி 9-வது வார்டு முன்னாள் கவுன்சிலர்கள்.

    பாலகிருஷ்ணனின் மகன் ராஜகுரு(வயது27). இவர் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு காற்றாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சீதப்பாலை அடுத்த பூலாங்குழியைச் சேர்ந்த மெர்லின்ஷீபா(24) என்பவருக்கும் கடந்த 18 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மெர்லின்ஷீபா 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். நேற்று அவரை பார்ப்பதற்காக புதுமாப்பிள்ளை ராஜகுரு மோட்டார் சைக்கிளில் பூலாங்குழி சென்றார்.

    தாழக்குடி அவ்வையார் அம்மன் கோவில் அருகே வந்த போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜகுரு சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் ராஜகுருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். ராஜகுருவின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர் கள் கதறி அழுதனர்.

    ராஜகுருவின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை ஓட்டி வந்த வாலிபரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவரை போலீசார் நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவரை விடுவித்து விட்டதாக தெரிகிறது. இது ராஜகுருவின் உறவினர்களுக்கு தெரியவந்தது. இன்று அவர்கள் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். விபத்தை ஏற்படுத்திய வாலிபரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீசார் மீண்டும் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    திண்டிவனம் அருகே சாலையின் தடுப்புக்கட்டையில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.
    திண்டிவனம்:

    நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த ஆணைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது(வயது 57). இவரது மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

    அந்த திருமண பத்திரிகையை சென்னையில் உள்ள உறவினர்களுக்கு கொடுப்பதற்காக பீர் முகமது தனது உறவினர்களான அகமது உசேன்(65), அப்துல் ரகுமான்(27) ஆகியோருடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார்.

    காரை அப்துல் ரகுமான் ஓட்டினார். அந்த கார் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாதிரி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது கார் அப்துல் ரகுமானின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதுவதுபோல் சென்றது. அந்த பஸ் மீது மோதாமல் இருக்க காரை அப்துல்ரகுமான் வலதுபக்கமாக திருப்பினார். அப்போது அங்கிருந்த சாலையின் தடுப்புக்கட்டையில் மோதி கார் கவிழ்ந்தது.

    இதில் அப்துல்ரகுமான் மற்றும் அகமது உசேன் ஆகியோர் காரின் இடிபாட்டுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பீர்முகமது பலத்த காயம் அடைந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த பீர்முகமதை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ராமநாதபுரம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா வந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ராமநாதசுவாமி கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடவும், தரிசனம் செய்யவும் குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவதுண்டு.

    சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த பாத்திர வியாபாரி கார்த்திகேயன் தனது குடும்பத்துடன் காரில் நேற்று ராமேசுவரம் புறப்பட்டார். அவரது மனைவி வெங்கடேசுவரி (வயது55), மகன் சிங்காரவேல் (29), மகள் நாகராஜலட்சுமி (37), பேத்தி நிகிதா (12) ஆகியோரும் காரில் வந்தனர்.

    இன்று அதிகாலை ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே கார் வந்த போது எதிரே லாரி வந்தது.

    அதன் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வெங்கடேசுவரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கார்த்திகேயன் மற்றும் குடும்பத்தினர் காயத்துடன் மீட்கப்பட்டு அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் பஜார் போலீசார் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #Tamilnews
    ×