என் மலர்
நீங்கள் தேடியது "Children"
- முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.
- முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: -
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் அறிவது, தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதியுதவியாக (கல்வியுதவி தொகை) 1 முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2,000-மும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.4,000-மும், 9 முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.5,000-மும், 11 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.6,000-மும் உயர்த்தி வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை பன்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது
- ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமையம் திருவரங்குளம் ஒன்றியம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை திறன்களை வெளிக்கொணரும் ஒருங்கிணைந்த கலை மற்றும் பன்பாடு நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் தங்கமணி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள். குளோரியாமேரி, வசந்த அருவி இய ன் முறை மருத்துவர் செந்தில்செல்வன், திருவரங்குளம் ஒன்றிய காளிமுத்து கோகிலேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கைக்குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதாக சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பிற்கு புகார்கள் வந்ததன.
- பல்லடம் போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் நால்ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதாக, சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பிற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து பல்லடம் போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் மகளிர் போலீசார் நால்ரோடு பகுதியில் கைக்குழந்தைகளுடன் இருந்த கர்நாடகாவை சேர்ந்த லட்சுமி , ரோசன்பாய் ஆகிய 2 பெண்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கும் அபராதம் என மதுரை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தொழிலாளர் துறை, சைல்டு லைன் (1098), பென்சில் போர்ட்டல் (www.pencil.gov.in) ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம்.
மதுரை
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் துறை அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் அறிவுரைப்படி மதுரை கூடுதல் தொழிலாளர் கமிஷனர் குமரன், இணை கமிஷனர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படி மதுரை பள்ளிக் கல்வித்துறை உதவி யுடன் நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தினம் அன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பாக மாணவ-மாணவிகள் இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை, அனை வருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறுகையில், 14 வயது நிரம்பாத குழந்தைகளை வேலையிலும், 18 வயது நிரம்பாதவர்களை அபாய மான தொழிலிலும் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டு உள்ளது. அதனை மீறுவோருக்கு ரூ.50 ஆயிரம் அல்லது 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்க சட்டத்தில் வழி உள்ளது.
மேலும் குழந்தைகளை வேலை செய்ய அனுமதிக்கும் பெற்றோருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க இயலும். எனவே குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தப்படுவது பற்றி ஏதேனும் தெரியவந்தால் தொழிலாளர் துறை, சைல்டு லைன் (1098), பென்சில் போர்ட்டல் (www.pencil.gov.in) ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
- ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது.
- இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 300 பேர் கலந்து கொண்டு தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார்கள்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் அக மதிப்பீட்டு குழு, ராஜபாளையம் ரோட்டரி சங்கம், ராஜபாளையம் வட்டார தமிழ்நாடு அறிவியல் கழகம் ஆகியவை இணைந்து விருதுநகர் மாவட்ட 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ராஜூக்கள் கல்லூரியில் நடத்தியது.
மாநாட்டின் கருப்பொருளாக ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது. ராஜபாளையம் வட்டாரத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 300 பேர் கலந்து கொண்டு தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார்கள்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் குழுவின் விருதுநகர் மாவட்ட ஆலோசகர் சுரேஷ் தளியத் தலைமை உரையாற்றினார். ராஜபாளையம் எக்ஸட் ஜே.சி.ஐ. பட்டய தலைவர் மாடசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுதா பெரியத்தாய் ேபசினார். மாநிலச் செயலாளர் பரமசிவம் அறிமுக உரையாற்றினார். இதயம் நிறுவனங்கள் மேனேஜிங் டைரக்டர் முத்து, கல்லூரி ஆட்சி மன்ற குழுச் செயலர் சிங்கராஜ் மற்றும் ராஜபாளையம் ரோட்டரி சங்க தலைவர் வைமா திருப்பதி செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மிகச் சிறப்பான திட்டத்தை வெளிப்படுத்திய மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றி தழ்களை வழங்கினர்.
கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன், சத்யா கல்வி குழும தலைவர் குமரேசன், ராஜபாளையம் ரோட்டரி சங்க செயலர் பார்த்தசாரதி, துளிகள் அமைப்பு மாவட்ட பொருளாளர் ஜெயந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வட்டார செயலாளர் மாரியப்பன் நன்றியுரை கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறந்த திட்டத்தை தேர்வு செய்தனர்.
- தென்காசி ஊராட்சி ஒன்றியம் சில்லரைபுரவு ஊராட்சியை சேர்ந்த சொர்ண ராஜ் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பாதித்து இறந்தார்.
- சில்லரைபுரவு பஞ்சாயத்து தலைவர் குமார் நிவாரண தொகை தலா ரூ.3 லட்சம் மொத்தம் 6 லட்சத்திற்கான காசோலைகளை தாயார் லலிதா முன்னிலையில் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி ஊராட்சி ஒன்றியம் சில்லரைபுரவு ஊராட்சியை சேர்ந்த சொர்ண ராஜ் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பாதித்து இறந்தார். இந்நிலையில் கொரோனா பாதித்து உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் வாழ்வாதாரம் மேம்படமத்திய அரசு அறிவித்த நிவாரண தொகையை சில்லரைபுரவு பஞ்சாயத்து தலைவர் குமார், உயிரிழந்த சொர்ண ராஜ் மகள் சோபியா, மகன் சச்சின் டெண்டுல்கர் ரிடம் தலா ரூ.3 லட்சம் மொத்தம் 6 லட்சத்திற்கான காசோலைகளை தாயார் லலிதா முன்னிலையில் வழங்கினார்.
நிவாரண தொகையை பெற்றுக் கொண்ட சொர்ணராஜ் குடும்பத்தினர், பிரதமர் நரேந்திர மோடிக்கும், பஞ்சாயத்து தலைவர் குமாருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
- ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அறுவுறுத்தல்படி ஒருங்கிணைந்த கல்வி துறை, சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் அலுவலகம், சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து போதை பொருள் தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை திருமணம் தடை சட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் அம்சேந்திரன், திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சமூக நல விரிவாக்க அலுவலர் தையல் நாயகி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக புறதொடர்பு பணியாளர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- தொழிற்சாலைகளில் குழந்தைகள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்ய சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- அப்போது, 18 வயதுக்கு உட்பட்ட 2 குழந்தை தொழி லாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டு அவர்களை அதிகாரிகள் மீட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வெள்ளி கொலுசுகள் மற்றும் இதர வெள்ளி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் குழந்தைகள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்ய சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினர், தொழிலக பாதுகாப்பு சுகாதா இயக்க அதிகாரிகள் ஆகியோர் நேற்று சேலம் சிவதாபுரம், பனங்காடு பகுதிகளில் உள்ள வெள்ளி கொலுசுகள் தயாரிக்கும் பட்டறைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, 18 வயதுக்கு
உட்பட்ட 2 குழந்தை தொழி லாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டு அவர்களை அதிகாரிகள் மீட்டனர். இதையடுத்து குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ள தாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆய்வின்போது, தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சைல்டு லைன் மற்றும் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை தவறும் பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதன்மூலமாக குறைந்தபட்ச 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 வரை அபராதம் அல்லது 2 தண்டனைகளும் சேர்ந்து அனுபவிக்க நேரிடும் என்று சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.
- குழந்தைகள் இருக்கும் இடத்திற்கே நகர்த்தி சென்று எக்ஸ்ரே எடுக்கும் வசதி.
- சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் நகர்த்தக்கூடிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பயன்பாட்டை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு தேவைப்பட்டால் குழந்தைகள் இருக்கும் இடத்திற்கே நகர்த்தி சென்று எக்ஸ்ரே எடுத்து பச்சிளம் குழந்தைகளின் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள இயலும்.
ஒரு முறை எக்ஸ்ரே எடுத்தால் பின்னர் தேவைப்–படும் உடல் பகுதியை தனித்தனியாக கணினி மூலம் பார்த்து எக்ஸ்ரே பகுத்தாய்வு செய்து கொள்ளும் வசதியுடன் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
- சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எந்திரத்தை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கினர்.
- 82 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் மாணவர் ஆலோசனை மையம், தஞ்சாவூர் எம்.ஆர்.சி அன்பு இல்லத்தின் குழந்தைகளுடன் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாடியது.
நிகழ்ச்சி ஜெபப் பாடலுடன் தொடங்கியது. எம்.ஆர்.சி. அன்பு இல்ல நிறுவனர் ரூபன் வரவேற்புரை வழங்கினார். இல்லத்தின் தலைமை வார்டன் ரவி வாழ்த்துரை வழங்கினார்.
குழந்தை சுவிசேஷ பெல்லோஷிப்பின் முன்னாள் இயக்குனர் கிறிஸ்டோபர் ஒரு பொம்மை நிகழ்ச்சியை நடத்தினார்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் எம்.ஆர்.சி இல்ல மாணவர்களை கலை நிகழ்ச்சிகளுடன் மகிழ்வித்தனர். குட்சமாரியன் கிளப் மூலம் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
முனைவர் சி.ரவிதாஸ் தலைமையிலான இயற்பியல் துறை இந்த இல்லத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எந்திரத்தை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கினர்.
விரிவாக்கப் பணிகளின் தலைவர் முனைவர் வி.ஆனந்த் கிதியோன் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கினார்.இந்த இல்லத்தில் உள்ள 82 குழந்தைகளுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
அவர்களும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியை மாணவர் ஆலோசனை மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாம் தேவா ஆசிர் வழிகாட்டுதலின் கீழ் பிஷப் ஹீபர் கல்லூரியின் மாணவர் ஆலோசகர்கள் சர்மிளா பானு, டேனியல் அஷ்ரத் செல்லையா மற்றும் முனைவர் எஸ்.லிடியா சூசன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
- கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
- பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் வருகிற 11.1.2023 வரை பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்து பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், ஆகியோர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
இந்த கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மேலும் பொதுமக்கள் எவரேனும் பள்ளி செல்லா , இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை dpckanchi@yahoo.co.in என்ற என்ற இ-மெயில் முகவரி அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதை உறுதி செய்ய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை குடியிருப்பு பகுதியில் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. வருகிற 11-ந் தேதி வரை இப்பணி நடைபெறும்.
பள்ளி செல்லா குழந்தைகள் 6 முதல் 18 வயது வரையிலும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 5 முதல் 18 வயது வரையிலும் கணக்கெடுப்பானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஆசிரிய பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கணக்கெடுப்பு பணியை வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் வேலன், ஆசிரிய பயிற்றுநர்கள் ஸ்ரீதரன், சுரேஷ், ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், சிங்காரவடிவேல் மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா கூறுகையில்:-
6 முதல் 18 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் இக்கணக்கெடுப்பு பணி வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.