என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "College"
- 2022- 23ம் ஆண்டிற்கு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடை யேயான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
- பாராட்டு சான்றிதழ்கள் மாவட்ட கலெக்டர் வாயிலாக வழங்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2022- 23ம் ஆண்டிற்கு மாவட்ட நிலை யில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடை யேயான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர்கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் திருப்பூர்மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் இளங்கோ வரவேற்புரையாற்றினார். முன்னதாக திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் எழிலி போட்டி களைத் துவக்கி வைத்து தொடக்கவுரை யாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். கவிதை போட்டியில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி இளங்கலை கணினிஅறிவியல் இரண்டாமாண்டு மாணவி சத்தியபிரியா முதல் பரிசும், அவிநாசிஅரசுக் கலை மற்றும அறிவியல் கல்லூரி மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல்பயிலும் மாணவி அபாரணி இர ண்டாம் பரிசும், முத்தூர் கருப்பண்ணன் மாரிய ப்பன்கல்லூரி இளங்கலை கணிதம் இரண்டாமாண்டு பயிலும் மாணவி சிவாத்தாள் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
கட்டுரைப் போட்டியில் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரி இளங்கலை ஆங்கிலம் மூன்றாமாண்டு மாணவி ஈ. கீதாஸ்ரீ முதல் பரிசும்,திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்க லைமுதலாமாண்டு வணிகவியல் மாணவி முத்துலட்சுமி இரண்டாம் பரிசும்,திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி முதுகலை ஆங்கில இலக்கியம் முதலா மாண்டு மாணவி ஜெனிபர் ஜாஸ்மின் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
பேச்சுப்போட்டியில் உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை வரலாறு பயிலும் மாணவி விஷ்ணு ப்பிரியாமுதல் பரிசும், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கூட்டுறவு இரண்டாமா ண்டுபயிலும் மாணவி விஜி இரண்டாம் பரிசும், திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கலை க்கல்லூரியில் மூன்றாமாண்டு இளம் அறிவியல் வேதியியல் பயிலும் மாணவி பிருந்தா மூன்றாம் பரிசும் பெற்றனர்.
மாவட்ட நிலையில் நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும்பேச்சு ப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000ம், இரண்டாம் பரிசு ரூ.7000ம், மூன்றாம் பரிசு ரூ.5000 மற்றும் பாராட்டுச்சான்றித ழ்கள் மாவட்ட கலெக்டர் வாயி லாக வழங்கப்படும்.இந்நிகழ்ச்சியின் முடிவில் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியின் கௌரவ விரிவுரையாளர் நந்தினி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிகளில் திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலு வலக ப்பணியாளர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் பரிசளிப்பு விழா நடந்தது.
- விழாவில் 1,050 மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரியின் பல்வேறு துறைகள் மற்றும் சங்கங்கள் 2022-23 கல்வியாண்டில் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கினார். அவர் பேசுகையில், மாணவர்கள் கல்வியிலும், கல்வி சார்ந்த பிற தகுதிகளையும் வளர்த்து கொண்டு சிறந்த விளங்க வேண்டும். போட்டிகளில் பரிசு பெறுவதைக் காட்டிலும் போட்டிகளில் கலந்து கொள்வதே சிறப்பானது. அனைத்துப் போட்டிகளிலும் மாணவர்கள் தயங்காமல் கலந்து கொள்ள வேண்டும் என்றார். முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.
துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். கணிதத்துறைத் தலைவர் லலிதாம்பிகை நன்றி கூறினார். விழாவில் 1,050 மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.
- கல்லூரி சார்பில் மாணவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
- மாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்கிற மனிதர்கள் வாழ்வில் முன்னிலை வகிக்கின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட நிர்வா கம், பொது நூலகத்துறை, பபாசி ஆகியவை இணைந்து மாவட்டத்தில் முதல் புத்தக திருவிழா நடத்த உள்ளது.
இதற்கான விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சார இயக்கம் திருத்துறைப்பூண்டி பிர்லியண்ட் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவில் திருத்து றைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கினார்.
ராய் டிரஸ்ட் நிறுவன தலைவர் துரை ராயப்பன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், வாசிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி, வாசகர் வட்ட துணை தலைவர் கமல், கல்லூரி நிர்வாக அலுவலர் முத்தலிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பேசுகையில்:-
திருவாரூரில் நடைபெறும் புத்தக திருவிழாவில் கல்லூரி சார்பில் மாணவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
இன்றைய போட்டி நிறைந்த உலகில் அனைத்து துறைகளிலும் தங்களது அறிவை விரிவுபடுத்தி கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
மாற்றத்தை எதிர்கொ ண்டு ஏற்றுக்கொள்கிற மனிதர்கள் வாழ்வில் முன்னிலை வகிக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் விமலா அனை வரையும் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் தவமலர் நன்றி கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணலி நூலகர் செந்தில் நாதன் செய்திருந்தார்.
- பல்கலைக்கழகம், கல்லூரிகள் யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
- பிரத்யேக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
திருப்பூர் :
வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் பல்கலைக்கழகம், கல்லூரிகள் கட்டாயம் உரிய விவரங்களை யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அகில இந்திய கல்விக்க வுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவில் உயர்கல்வி பயில்கின்றனர். அவ்வாறு பல்கலைக்கழகம், கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் முழு விவரங்களை சேர்க்கையின் போதே educationindia.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் மாணவர்களும் இணையத ளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து பிரத்யேக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். இது குறித்து கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், சட்ட பல்கலைக்கழக கல்லூரிகளில் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என அகில இந்திய கல்விக்கவுன்சில் அறிவுறுத்தி யுள்ளது.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
- முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. உதவிப்பேராசிரியை சாந்தி வரவேற்றார். ஆங்கிலத்துறையின் தலைவர் பெமினா, உதவிப் பேராசிரியர்கள் சாந்தா கிறிஸ்டினா, ஸ்வப்னா ஆகியோர் பேசினர்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வகுப்பாசிரியர்களிடம் கலந்துரையாடினார். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகை குறிப்புகள் பெற்றோர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. உதவிப்பே ராசிரியர் அர்ச்சனா தேவி நன்றி கூறினார்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிக நிறும செயலரியல் துறை சார்பில் மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் நோக்கமானது மாணவர்களிடையே சந்தையிடுதல் குறித்த சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதாகும். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
இதில் 105 மாணவர்கள் இணைய வழி சந்தையிடுதலை மையமாக வைத்து விளம்பர நடிப்பு மற்றும் வண்ண கோலம் வரைதல் போன்ற போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்றனர். துறைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் விண்ணரசி ரெக்ஸ் போட்டிக்கான விதிமுறை களை எடுத்துரைத்தார்.
முடிவில் உதவி பேராசிரியர் சூர்யா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் ஜாஸ்மின் பாஸ்டினா செய்திருந்தார்.
- 10 கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டு 3-ம் இடம் வென்றனர்.
- ரூ. 2 ஆயிரத்து 500 ரொக்கம், சான்றிதழ்கள் வழங்கினர்.
நாகப்பட்டினம்:
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுஜரித்தா மாக்டலின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
கல்லூரியில் வணிகவியல் துறையில் பயிலும் லோகேஷ்வரன், மோகன்ராஜ் மற்றும் ராம்ஜி ஆகிய மாணவர்கள் திருவாரூர் சங்கர் ஐ. ஏ.எஸ் அகாடமி நடத்திய 10 கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் வென்று 2500 ரூபாய் ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்ததை பாராட்டி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வரும், வணிகவியல் துறைத் தலைவருமான அன்வர் அஹமது, முனைவர் சாவித்திரி. வணிகவியல் துறை பேராசிரியர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுஜரித்தா மாக்டலினை வாழ்த்தினர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆளுமைத்திறனின் அவசியம் குறித்த விளக்கப்பட்டது.
- துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் (நிறுமச் செயலரியல்) துறை சார்பில் ஆளுமைத்திறனின் அவசியம் பற்றி விரிவுரை நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மேலாண்மைத்துறை இணைப்பேராசிரியர் சந்திரபோஸ் பங்கேற்றார். அவர் பேசுகையில், மாணவர்கள் நேர்காணலுக்கு செல்வதற்கு முன்பு தங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும், சிறந்த ஆடை முறைகள் நேர்காணலின் போது மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கிறது என்றும் கூறினார்.
நேர்காணல் அறைக்குச் செல்லும் முறை, நேர்காணலின்போது கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் முறை, நேர்காணலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் ஆகியவற்றையும் எடுத்துரைத்தார்.
துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் சூரியா நன்றி கூறினார். உதவிப்பேராசிரியை ஜாஸ்மின் பாஸ்டினா ஏற்பாடு செய்தார்.
- சேலத்தில் லாரியை முந்தி செல்ல முயன்ற கல்லூரி மாணவர் காயமடைந்தார்.
- விபத்தில் சிக்கிய 2 பேரில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம்:
கிருஷ்ணகிரி டவுன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.
இவரது மகன் நித்தியானந்தம் (வயது 20). இவர் சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில், அதே கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படிக்கும் ஓமலூர் அருகே உள்ள கோட்டை மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ஹரிஷ் (20) என்பவரை அழைத்துக் கொண்டு அயோத்தியாப்பட்டணம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள், லாரியில் உரசி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் நித்தியானந்தம் தலையில் பலத்த அடிபட்டு மயங்கினார். அந்த வழியே வந்தவர்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நித்தியானந்தம் சிகிச்சை பெற்று வருகிறார். ஹரிஷூம் காயமடைந்தார்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கரூர் வள்ளுவர் கல்லூரியில் வளாக நேர்காணல் நடைபெற உள்ளது
- கல்லூரி தாளாளர் செங்குட்டுவன் தகவல்
கரூர்,
கரூர் வள்ளுவர் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பான கல்வியுடன், இந்தியாவின் தலை சிறந்த வங்கி மற்றும் மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பையும் பெற்றுத்தருவதில் முதலிடம் வகிக்கிறது. ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் நூறு சதவிகித வேலை வாய்ப்பை பூர்த்திசெய்கிறது.
இந்தவகையில், மென்பொருள் துறையில் முதலிடம் பிடித்துள்ள டாடா கன்சல்டன்சி நிறுவனம் வரும் மார்ச் 13ஆம் தேதி வளாக நேர்காணல் நடத்த உள்ளனர்.
வேறு எந்த கல்லூரிக்கும் கிடைக்காத வாய்ப்பு வள்ளுவர் கல்லூரிக்கு கிடைத்திருப்பதற்கு. கல்லூரி அளிக்கும் சிறப்பான ஊக்குவிப்பு மற்றும் பயிற்சிதான் காரணம் என்று கல்லூரி தலைவர் செங்குட்டுவன் கூறினார். இந்த நேர்காணல் மூலம் கணிசமான மாணவர்கள் பணியமர்த்தபடுவார்கள் என்றும் அவர் கூறினார். கடந்த வருடங்களில் ஏராளமான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நிறுவனத்தில் பணியா ற்றிக்கொண்டிருப்பதாக பெருமையுடன் கூறினார்.
- இளையான்குடி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இயற்பியல்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் கோளரங்கம் 2 நாட்கள் நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இயற்பியல்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் கோளரங்கம் 2 நாட்கள் நடந்தது. கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான், கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இயற்பியல் துறை மாணவ-மாணவிகள் அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தி விளக்கினர். இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், அல்ஹாஜ், நசீர் கான், அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாஹ் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில்
- செய்யது ஹமிதா கல்லூரியில் நுண்ணுயிரியல் கருத்தரங்கம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
கீழக்கரை
கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு கருத்தரங்கம் முதல்வர் சதக்கத்துல்லா தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாணவர்களாகிய மதுரை மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை விஞ்ஞானி செல்வபிரபு, சென்னை சவிதா மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் சதீஷ்குமார் பாலு ஆகியோர் பங்கேற்று ேபசினர்.
நோய்க்கு காரணமான நுண்ணுயிரினங்களை கண்டறிவதற்கு பயன்படும் அனைத்து உபகரங்களைப் பற்றியும் அதனை கையாளும் முறைகளைப் பற்றியும் செல்வபிரபு எடுத்துரைத்தார். நானோ அறிவியல் பற்றியும், அதனுடைய வகைகளை குறித்தும், மருத்துவத்தில் நானோ அறிவியலின் தாக்கம் குறித்தும் சதீஷ்குமார் பாலு எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் ஆனந்த், ஷோபனா, விஜயகுமாரி, சாகுல் ஹமீது ஆகியோர் செய்திருந்தனர்.
- முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.
- கருத்தரங்கத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரி, இலங்கை ஒப்பீட்டு சமயம், சமூக நல்லுறவு துறை கிழக்குப் பல்கலைக்கழகம், ஷான்லகஸ் நிறுவனம் சார்பில் இலக்கியங்களில் தமிழர் அறிவுருவாக்க முறைகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. கவுசானல் கல்லூரி கூட்ட அரங்கில் கல்லூரி செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமை தாங்கினார். முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் அலங்கானூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார்.
முதுநிலை விரிவுரையாளர் நவரத்தினம் கருத்துரை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியர் ராமர் நோக்க உரை ஆற்றினார், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சிவகுரு வாழ்த்துரை வழங்கினார். அறிவு மணி மைய உரையாற்றினார். முன்னதாக கவுசானல் கல்லூரி தமிழ் உயராய்வு மைய தலைவர் ராஜலட்சுமி வரவேற்றார். முடிவில் உதவி பேராசிரியர் ரேவதி நன்றி கூறினார். கருத்தரங்கத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்