என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cotton"
- திருவாரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
- பல்வேறு இடங்களில் 65 லிருந்து 70 நாட்களான பருத்தி பயிர்களில் தொடர் மழையால் பஞ்சு நிறம் மாறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக நன்னிலம், வலங்கைமான், குடவாசல், கூத்தாநல்லூர், நீடாமங்கலம், கோட்டூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் 75 லிருந்து 85 நாட்கள் ஆன பருத்தி பயிர் வயல்களில் மழைநீர் தேங்கி பருத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பருத்தி பயிரில் பூக்கள் வைத்து வந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பூக்கள் அனைத்தும் உதிர்ந்து விழுந்து மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.மேலும் விவசாயிகள் பருத்தி வயல்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைத்து பருத்தி பயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த தொடர் மழையின் காரணமாக பஞ்சு நிறம் மாறி வருவதாகவும் இதனால் பருத்தியின் தரம் குறைந்து குறைந்த விலைக்கு விற்பனையாகும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக கமலாபுரம், ஓகை ,பேரையூர், புனவாசல்,,பூந்தாழங்குடி, கீழ மணலி, மேல மணலி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கோட்டூர், விக்கிரபாண்டியம், புழுதிக்குடி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 65 லிருந்து 70 நாட்களான பருத்தி பயிர்களில் தொடர் மழையால் பஞ்சு நிறம் மாறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பருத்தி பயிரிட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக வயல்களில் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட நிலையில் மழை நீரை வடிய வைத்து மீதமுள்ள பருத்திச் செடிகளையாவது காப்பாற்றி விடலாம் என்கிற முனைப்பில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது பஞ்சு நிறம் மாறுவதால் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் பருத்தியின் தரம் குறைந்து விட்டதாக கூறி வியாபாரிகள் குறைந்த விலைக்கு பருத்தியை வாங்கும் நிலை ஏற்படும் எனவும் இதனால் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத சூழல் ஏற்படும் எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இது தொடர்பாக வேளாண் அதிகாரிகள் பருத்தி பயிரை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது.
- கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:-
திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக உள்ள விசைத்தறி ஜவுளித் தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த ஜவுளித்துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியில் உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்க வில்லை. பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது .ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை.
மேலும் மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் அவர்களுடன் போட்டியிட முடியாத சூழ்நிலை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தனி பேரிப்பு அமைத்து மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
மேலும் சிறு, குறு, நிறுவனங்களுக்கான தொழில் ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்ததால் வியாபாரிகள் ஜவுளி வாங்கு வதை நிறுத்திவிட்டனர். எனவே சிறுகுறு தொழில் ஒப்பந்தத்தை ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை குறைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இன்று முதல் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது.
திருவொற்றியூர்:
மணலி ஆண்டார் குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான டயர் போன்ற பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள் குடோன் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். குடோனில் உள்ளே இருக்கக்கூடிய மூலப் பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பற்றக்கூடியவை கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.
தீயிலிருந்து வெளியேறிய புகை திருவொற்றியூர், மணலி, மணலி புதுநகர் போன்ற சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. மணலி, எண்ணூர், மாதவரம் போன்ற பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 100-க் கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தண்ணீர், தீயணைப்பான் திரவம் போன்றவர்களைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் 24 மணி நேரத்திற்கு மேலாகியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தொடர்ந்து ரசாயன புகை சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளதால் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
- குடோனில் பதுங்கி இருந்த 4 அடி நீள கண்ணாடி வீரியன் பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது.
- ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.
சீர்காழி:
சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் தனியார் டூ வீலர் ஷோரூம் உள்ளது.
இந்த ஷோரூமின் ஒரு பகுதியில் உள்ள குடோனில் பாம்பு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள்.
இது குறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாண்டி யனுக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் அங்கு சென்ற பாண்டியன் குடோனில் பதுங்கி இருந்த நான்கடி நீளம் உள்ள கடுமையான விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்துடப்பாவில் அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.
- திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 18 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.
- ராசரி விலை ரூ. 6ஆயிரத்து 950. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.91 லட்சமாகும்.
மூலனூர், நவ.5-
வெள்ளகோவில் அருகே உள்ள மூலனூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 361 விவசாயிகள் தங்களுடைய 4 ஆயிரத்து 174 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து ஆயித்து 322 குவிண்டால் திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 18 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். பருத்தி விலை குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயிரத்து 479 வரை விற்பனையானது.
சராசரி விலை ரூ. 6ஆயிரத்து 950. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.91 லட்சமாகும். ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
- பெண் தலைமை காவலர் பவானி ஆகியோர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
- 600 கிலோ அரிசி கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் அடுத்த சின்ன கங்கனாங்குப்பம் பாண்டி சாலையில், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மனோ கரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் ராஜேந்தி ரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை,போலீஸ்காரர்கள் முருகா னந்தம், ராஜா, பெண் தலைமை காவலர் பவானி ஆகி யோர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர். இதில் சாக்கு முட்டைகள் இருந்தது. சந்தேகம் அடைந்த போலீ சார் சாக்கு மூட்டைகளை திறந்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. பின்னர் வாகன டிரைவரை பிடித்து வந்து விசாரணை நடத்தி னர். அவர் கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த செல்வம் என தெரியவந்தது. மேலும் 600 கிலோ அரிசி கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த அரிசி மூட்டைகளை சோதனை செய்து குடோ னில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.
- இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 366 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.
- மொத்தம் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.
அவிநாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 366 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. இதில், ஆா்.சி.ஹெச். பி.டி. ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 6,500 முதல் ரூ.7,119 வரையிலும், கொட்டு ரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.
- திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 20 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.
- வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.09 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
மூலனூர்:
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.09 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 465 விவசாயிகள் தங்களுடைய 5,152 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1,628 குவிண்டால்.
திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 20 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். பருத்தி குவிண்டால் ரூ.6,450 முதல் ரூ.7,392 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.6,800. கடந்த வார சராசரி விலை ரூ.6,900. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.09 கோடி.ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
- திருப்பூா், கோவை மாவட்டங்களை சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்தனா்.
- ஏலத்தில் மொத்தமாக ரூ.14.07 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.
அவிநாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 694 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். திருப்பூா், கோவை மாவட்டங்களை சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்தனா்.
ஏலத்தில் ஆா்.சி.ஹெச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ.7,176 வரை, கொட்டுரகம் (மட்ட ரகம்) ரூ.2,000 முதல் ரூ.3,500 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.14.07 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.
- தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 996.
- சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6,009-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைப்பெற்றது
பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 342 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. சராசரியாக 358.80 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 06 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.6,996/-
குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,329/- சராசரி மதிப்பு குவிண்டா லுக்கு ரூ.6,009/- என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.
- ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி மற்றும் தேங்காய் பருப்புகள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
- பொது ஏலத்தில் பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.5,488 முதல் ரூ.7,342 வரை விற்பனையானது.
எடப்பாடி:
எடப்பாடி நெடுங்குளம் சாலையில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி மற்றும் தேங்காய் பருப்புகள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது. பொது ஏலத்தில் பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.5,488 முதல் ரூ.7,342 வரை விற்பனையானது. இது போல் நடைபெற்ற தேங்காய் பருப்புகளுக்கான பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,485 முதல் 7,585 வரை வேலை போனது. 2-ம் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.6,675 முதல் ரூ.7025 வரை விற்பனையானது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு மற்றும் பருத்தி வணிகம் நடைபெற்றது.
- இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.
- திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 23 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா்.
மூலனூர்,செப்.24-
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 1.26 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.
கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 496 விவசாயிகள் 5,756 மூட்டைகளில் மொத்தம் 1,845 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 23 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். விலை குவிண்டால் ரூ. 6,450 முதல் ரூ. 7,472 வரை விற்பனையானது.
சராசரி விலை ரூ. 6,850. கடந்த வார சராசரி விலை ரூ. 6,800. ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்