என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Country bomb"
- திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஏற்பட்ட நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
- திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதவியில், "திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஏற்பட்ட நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் நாட்டு வெடிகள் தயாரித்து வந்ததை விடியா திமுக அரசும், காவல்துறையும் அறிந்திருக்காமல் இருந்தது ஏன்?
விடியா திமுக ஆட்சியில் அனைத்து மட்டங்களிலும் நிர்வாகம் என்பது அறவும் செயல்பாட்டில் இல்லை என்பதையே தொடர்ச்சியான நிகழ்வுகள் உணர்த்தும் செய்தி.
தொடர்ந்து மக்கள் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் விடியா திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த விபத்திற்கான காரணத்தை உரிய விசாரணை மூலம் கண்டறியுமாறும், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் குடியிருப்பு பகுதிகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
- போலீசார் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கஞ்சா, வெடிகுண்டு கலாச்சாரத்தால் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பாகூரில் உள்ள பழமையான மூல நாதர் கோவிலின் பின்புறம் உள்ள சுற்றுசுவரில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெடிக்க செய்து சோதனை செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. அந்த வீடியோவை வெளியிட்டுள்ள நபர் வெடிகுண்டு வீசும் கும்பலுக்கு ஆதரவாக ஒருவர் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகூர் மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் செல்போனில் பரவும் வீடியோ வைத்து 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் இதே போல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த சம்பவமும் வில்லியனூரில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். போலீசார் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை பசு மாடு கடித்தது.
- உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் தாயப்பா (61) விவசாயி. இவர் 5 பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டிருந்தார். தொடர்ந்து அங்கு உள்ள மானாவாரி நிலத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் ஒரு நாட்டு வெடிகுண்டு கிடந்தது. கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை ஒரு பசுமாடு கடித்தது.
அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அந்த பசு மாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் சிதைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அந்த பசு மாடு தாயப்பா வீட்டிக்கு தானாக நடந்து வந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த பசு மாட்டுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மாடு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, சிலர் காட்டுபன்றிகளை வேட்டையாட நாட்டுவெடி குண்டு (அவுட்காய்) வைத்து வேட்டையாடி வருகின்றனர். அந்த நாட்டு வெடிகுண்டுகளை மாடுகள் உள்பட கால்நடைகள் தெரியாமல் கடித்து விடுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே நாட்டு வெடிகுண்டு வைக்கும் நபர்கள் மீது வனத்துறை மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
- அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.
சென்னை அடுத்த வண்டலூரில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக நிர்வாகி ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
இதையடுத்து, திமுக நிர்வாகி ஆராமுதனை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திமுக நிர்வாகியை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து தலை சிதறி மாடு இறந்தது.
- புதுக்குளம் பகுதியில் நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்? நாச வேலைக்கு திட்டமிடப் பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் புலிகள் வன காப்பக பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரண மாக வனத்துறையினர் வனப்பகுதியில் பொது மக்கள் செல்ல கடும் கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
கடந்த ஆண்டு ஸ்ரீவில்லி புத்தூர் வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. இதை யடுத்து போலீசார் வனப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர ராஜபுரம் மேற்கு பகுதியில் சண்முகராஜ் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்றது. இரவு நீண்ட நேரமாகியும் அது திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சண்முக ராஜ் மாட்டை தேடிச் சென்றார். அப்போது புதுக்குளம் பகுதியில் ரத்த வெள்ளத்தில் மாடு இறந்து கிடந்தது. வாய் கிழிந்த நிலையில் மாட்டின் தலை சிதறியிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டை கடித்ததில் மாடு பலியாகி இருப்பது தெரியவந்தது.
புதுக்குளம் பகுதியில் நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்? நாச வேலைக்கு திட்டமிடப் பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்தனர்.
- சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:
மதுரை மாநகரருக்கு உட்பட்ட கரிமேடு விஸ்வசாபுரி 1-வது தெரு பகுதியை சேர்ந்தவர் அஜித். தனியார் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வரும் இவர் அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று இரவில் அஜித்தின் வீட்டிற்குள் இருந்து திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் பதறியடித்து எழுந்தனர்.
பின்னர் தங்களது வீட் டிற்கு வெளியே வந்து அச்சத்துடன் பார்த்தனர். முதலில் அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் வெடிச்சத்தம் கேட்ட அஜித்தின் வீட்டிற்குள் இருந்து நெடியுடன் கூடிய புகை வெளிவந்துள்ளது. மேலும் உடனடியாக இதுபற்றி அப்பகுதியினர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.
ஆனால் வீட்டில் யாரும் இல்லை. அப்பகுதியில் விசாரித்தபோது கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஜித் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்தனர். பின்னர் பூட்டை உடைத்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு மர்ம பொருள் வெடித்து அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிய நிலையில் கிடந்தது. சமையல் அறையில் இருந்த பொருட்களும் சேதமடைந்து கருகிய நிலையில் கிடந்தது. இதனையடுத்து போலீசார் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.
வீட்டிற்குள் வெடித்தது நாட்டு வெடிகுண்டா? அல்லது வேறு ஏதேனும் வெடிக்கும் மர்ம பொருளா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
- மேய்ச்சலுக்கு சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த சுண்ணாம் புபள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 37). விவசாயி. இவர் விவசாயம் செய்வ தோடு கறவை மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில், சுண்ணாம்பு பள்ளம் அருகே வனப்பகுதியை ஒட்டி யுள்ள நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகே சுதாகர் தன்னுடைய பசு மாட்டை மேய்ச்சலுக்காக நேற்று கட்டியிருந்தார்.
அப்போது காட்டுப்பன்றி களை வேட்டையாடுவதற்காக பூமியில் புதைத்து வைக்கப் பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை எதிர்பாராத விதமாக பசுமாடு கடித்ததாக கூறப்படுகிறது.
இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு மாட்டின் வாய்ப்பகுதி கிழிந்து காயமடைந்துள்ளது.
வெடி சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆலங்காயம் போலீசார், ஆலங்காயம் வனத்துறையினர், மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்ததனர்.
அதனேபேரில் விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக மாட்டிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். மேலும், சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- வீடுகளில் 4 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. இதனை கைப்பற்றிய ேபாலீசார் ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 27). இவருக்கும் புதுவையை சேர்ந்த காத்த வராயன் (29) என்பவருக்கும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வேலைவாங்கி கொடுப்பது தொடர்பாக முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக இவர்கள் 2 பேரும் அடிக்கடி மோதி உள்ளனர். எனவே எந்த நேரத்திலும் அசம்பாவித சம்பவங்கள் நடை–பெறலாம் என ஆரோ–வில் போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ஆரோவில் போலீசார் ஜெயச்சந்திரன் வீட்டுக்கு சென்று இன்று அதிகாலை அரிடி சோதனை செய்தனர்.
அப்போது அங்கு 4 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. இதனை கைப்பற்றிய ேபாலீசார் ஜெயச்சந்திரனை கைது செய்தனர். இதேபோல காத்தவராயன் வீட்டில் நடந்த சோதனையிலும் 4 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது.
இதனைத்தொடர்ந்து காத்தவராயனை போலீசார் கைது செய்தனர். போலீசில் சிக்கிய 2 பேரும் எதற்காக வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தனர்? எங்கிருந்து வாங்கி வந்தனர் என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்