என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Director Review"
- இயக்குனர் (பொது) பிரசாந்த், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பள்ளி கட்டிட மேம்பாட்டு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
ராசிபுரம்:
சென்னை ஊரக வளர்ச்சி இயக்க கூடுதல் இயக்குனர் (பொது) பிரசாந்த், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். முன்னதாக அவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்ட இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்களுடன் பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், முத்துக்காளிப்பட்டி மற்றும் குருக்கபுரம் ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பள்ளி கட்டிட மேம்பாட்டு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் திட்ட இயக்குனர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர்கள் பன்னீர்செல்வம் மற்றும் தமிழன்பன், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவ
லர்கள் பாஸ்கர் மற்றும்
வனிதா, உதவி பொறியா ளர்கள் சிவக்குமார் மற்றும் நைனாமலை ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு திட்டப்பணிகள் குறித்து சோதனை
- அனைவருக்கும் சரியான மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்
வாணியம்பாடி:
ஆலங்காயம் ஒன்றியம், வள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.செந்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வள்ளிப்பட்டு கிராமத்தில் நடைபெற்று வந்த மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகளை வீடுவீடாக சென்று பார்வையிட்டார். அனைவருக்கும் சரியான மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ச. பசுபதி, வள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர். சங்கீதா மற்றும் நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.
- பாசன நீர் ஆதாரத்திற்கு கிணறு தோண்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
- இதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி வழங்கினார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம், சின்னகல்வராயன் மலை வடக்குநாடு ஊராட்சி, கும்பப்பாடி கிராமத்தில், 2021-22-ம் ஆண்டு, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தோட்டக்கலை துறையின் மூலம் தரிசு நிலத் தொகுப்பு கண்டறியப்பட்டது. தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றும் இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் நீர் ஆதாரம் உருவாக்கி, தோட்டக்கலைத் துறை மூலம் அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படுகிறது. பாசன நீர் ஆதாரத்திற்கு கிணறு தோண்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துறை இயக்குனர் பிருந்தாதேவி தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்த
னர்.
சேலம் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, உதவி இயக்கு னர் சேலம் (நடவு பொருள்), பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கோதை நாயகி, தோட்டக்கலை அலுவலர் ஜான்சி, உதவி தோட்டக்கலை அலுவலர் செந்தில்குமார், மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி வழங்கினார்.
- விதைச்சான்று இயக்குநர் ஆய்வு செய்தார்.
- விதை ஆய்வாளர் ஜெயந்திமாலா, விதை சான்று அலுவலர் வீரபாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று இயக்குநர் வளர்மதி பரமக்குடி பகுதியில் உள்ள உரம் மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தார். பஸ் நிலையம் அருகே உள்ள கே.எஸ்.ஆர். உரம் மற்றும் விதை விற்பனை நிலையத்தில் ஆய்வின் போது, ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?, விதையின் தரம் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக உள்ளதா? என்பதை சரி பார்த்தார். அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரம் மற்றும் விதைகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, உச்சிப்புளி வட்டாரத்தில் இயங்கி வரும் அரசு தென்னங்கன்று பண்ணையை பார்வையிட்டு விற்பனைக்கு தயாராக உள்ள தென்னங்கன்றுகளின் தரத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது விதை ஆய்வு துணை இயக்குநர் துரைகண்ணம்மாள், விதைச்சான்று உதவி இயக்குனர்கள் சிவகாமி, துரைசாமி, திருப்புல்லாணி வட்டார உதவி இயக்குநர் அமர்ரால், விதை ஆய்வாளர் ஜெயந்திமாலா, விதை சான்று அலுவலர் வீரபாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்