search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver arrested"

    திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் மணல் கடத்தியவர்களை போலீசார் கைது செய்து, லாரிகளை பறிமுதல் செய்தனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீசார் கானாடுகாத்தான் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தினர். இதைப்பார்த்த டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர் ஆறுமுகம் என்பவரை தேடிவருகின்றனர்.

    இதேபோல சிவலங்குடி அருகே சாக்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்த போது, அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி வந்த குளத்தூர் பகுதியை சேர்ந்த பிரகாசை (வயது 35) கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

    சிவகங்கை சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது தலைமையிலான போலீசார் நேற்று திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமறம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரித்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி புதுக்கோட்டையிலிருந்து காளையார்கோவிலுக்கு மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, புதுக்கோட்டையைச்சேர்ந்த செந்தில்குமார் (32), காளையார்கோவில் அருகே உள்ள புல்லுக்கோட்டையைச்சேர்ந்த ரஞ்சித்(26) ஆகிய இருவரையும் கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்து திருப்பத்தூர் நகர் போலீசாரிடம் ஒப்புடைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    அரியலூர் அருகே ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளர் மற்றும் டிரைவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்ல நாயகபுரம் பாசனதாரர் சங்க தலைவராக இருப்பவர் தமிழ்வேல். இவர் சங்கத்தின் மூலம் டெண்டர் எடுத்து அங்குள்ள பெரிய ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தி உள்ளார். இப்பணி முடிவடைந்ததை அடுத்து அதற்கான தொகையை அரியலூர் செந்துறை சாலையில் உள்ள மருதையாறு வடிநில கோட்ட நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் அவர் கேட்டுள்ளார். 

    அப்போது அந்த தொகையை வழங்குவதற்கு செயற்பொறியாளர் மணிமாறன் ரூ.18ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு இடைத்தரகராக மணிமாறனின் கார் டிரைவர் சக்திவேல் செயல்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத தமிழ்வேல், இது குறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயன பொடி தடவிய ரூ.18 ஆயிரத்தை மருதையாறு வடிநில கோட்ட நீர்வளத்துறை அலுவலகத்தில் இருந்த மணிமாறனிடம் தமிழ்வேல் கொடுத்துள்ளார். அதனை மணிமாறன் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த போலீசார் மணிமாறன் மட்டும் டிரைவர் சக்திவேல் ஆகிய 2பேரையும் கைது செய்தனர். 

    பின்னர் அவர்களை அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சஞ்சீவி பாஸ்கர்,2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
    நாசரேத்தில் சொத்து தகராறில் தந்தையை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    நாசரேத்:

    நாசரேத் ஏதேன் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 84). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் ஜோசப் எட்வர்டுராஜ் (வயது 50) டிரைவர். இவருக்கு திருமணமாகி தூத்துக்குடி பிறமுத்துவிளையில் தனியாக வசித்து வருகிறார். இவர் தந்தை வீட்டிற்கு அடிக்கடி சென்று சொத்தை பிரித்து தருமாறு கேட்டு வந்துள்ளார். 

    இந்நிலையில் நேற்று ஜோசப் எட்வர்டுராஜ் நாசரேத்தில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்று தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜோசப் எட்வர்டுராஜ், செல்லத்துரையை  அடித்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து புகாரின் பேரில் நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து ஜோசப் எட்வர்டுராஜை கைது செய்தார்.
    அரியலூர் அருகே மணல் கடத்தியது தொடர்பாக லாரியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் மாங்காய்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு லாரியை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் லாரி டிரைவரான பெரம்பலூரை சேர்ந்த சிவபாலன்(வயது 34), கிளனர் கண்ணன்(44) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து லாரி உரிமையாளரான சுரேஷ்(32) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமக்குடி அருகே அனுமதியின்றி மணலை திருடிச் சென்றது தொடர்பாக லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    பரமக்குடி:

    பரமக்குடி அருகே பார்த்திபனூர்-நரிக்குடி விலக்கு ரோட்டில் பார்த்திபனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் மணல் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக லாரி உரிமையாளர் மோசுகுடி கிராமத்தை சேர்ந்த பாண்டி(வயது 36), சிவகங்கை மாவட்டம் கணபதியேந்தல் கிராமத்தை சேர்ந்த டிரைவர் முத்துக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
    காதலித்த மாணவியை திருமணம் செய்ய மறுத்த டிரைவர் குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள சிதம்பராபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சந்தனக்குமார் (வயது24). இவர் ஜே.சி.பி. டிரைவராக உள்ளார்.

    மாலதி கல்லூரிக்கு செல்லும் போது சந்தனக்குமார் அடிக்கடி பார்த்து பேசி வந்தார். அப்போது அவர்களிடையே காதல் ஏற்பட்டது. பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலமாக அவர்கள் தங்களது காதலை வளர்த்து வந்தனர். தனிமையிலும் சந்தித்து பேசி வந்தார்கள்.

    இந்த நிலையில் சந்தனக்குமாருக்கு அவரது வீட்டில் பெண் பார்த்தனர். இதை அறிந்த மாலதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்தனக்குமாரிடம் வலியுறுத்தினார். அதற்கு சந்தனக்குமார் மறுத்து விட்டாராம்.

    இதுபற்றி மாலதி தரப்பில் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனக்குமாரை கைது செய்தனர்.

    விழுப்புரம் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்தது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    நேற்று இரவு விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையம் அருகே சென்னை & திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக வந்தது. இதையறிந்ததும் போலீஸ்காரர் ராம்குமார் என்பவர் அந்த லாரியை மறிக்க முயன்றார்.  அப்போது லாரி டிரைவர் போலீஸ்காரர் ராம்குமார் மீது லாரியை மோதுவது போல் வேகமாக வந்தார். திடுக்கிட்டு போன ராம்குமார் அங்கிருந்து விலகி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    பின்னர் போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று மணல் கடத்தல் லாரியை மடக்கி பிடித்தனர். லாரியில் இருந்து விழுப்புரம் அருகே தில்லூர் கிராமத்தை சேர்ந்த ஜெளிணிகணேஷ் (வயது 37) காவணி பாக்கத்தை ராமச்சந்திரன் ஆகியோரை போலீசார் பிடித்து விழுப்புரம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செளிணிது போலீஸ் காரர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்ற ராமச்சந்திரன், ஜெளிணிகணேஷ் ஆகியோரை கைது செய்தார். மேலும் மணல் கடத்தல்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆத்தூர் அருகே பலாத்கார முயற்சியில் 8-ம் வகுப்பு மாணவியை கொலை செய்த டிரைவர் தன்னை கொலை செய்யுமாறு கூறியுள்ளார்.
    மாணவி ராஜலட்சுமியை கொலை செய்த தினேஷ்குமாரிடம் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் குற்றப்பிரிவு, தனிப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது தினேஷ்குமார் ‘என்னை கொன்று விடுங்கள் என போலீசாரிடம் கெஞ்சினார். நான் வெளியே சென்றால் இதுபோல் வேறு யாரையாவது கொலை செய்து விடுவேன். ஆகவே என்னை உயிருடன் விட்டு விடாதீர்கள். தயவு செய்து கொன்று விடுங்கள் என்று கூறினார்’. அவரிடம் போலீசார், வேறு என்ன? என்ன? குற்றங்கள் செய்துள்ளாய் என கேட்டு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    ஆத்தூர் அருகே பலாத்கார முயற்சியில் 8-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக டிரைவர் தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி ஊராட்சி சுந்தரபுரத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் சாமிவேல் (வயது 48). விவசாயி. இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது45).

    இவர்களது கடைசி மகளான ராஜலட்சுமி அருகில் உள்ள தளவாய்பட்டி ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சாமுவேலின் வீட்டின் அருகே குழந்தைவேல் மகன் தினேஷ்குமார் என்ற கார்த்தி (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல் அறுவடை எந்திரத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளி மாவட்டங்களுக்கு நெல் அறுவடைக்கு சென்று விட்டு ஊர் திரும்பினார். குடிப்பழக்கம் கொண்ட தினேஷ்குமார் கடந்த 3 நாட்களாக போதையிலேயே சுற்றி வந்தார். பள்ளிக்கு சென்ற சிறுமி ராஜலட்சுமியை பின் தொடர்ந்து சென்று கேலி, கிண்டல் செய்வதும், சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று இரவு 7.30 மணி அளவில் வீட்டில் ராஜலட்சுமி மல்லிகை பூ கட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தினேஷ்குமார் ராஜலட்சுமியை பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய் சின்னபொண்ணு பதறி அடித்தபடி ஓடி வந்தார்.

    அப்போது தினேஷ்குமார், சின்னபொண்ணுவை கீழே தள்ளிவிட்டு விட்டு கையில் இருந்த அரிவாளால் ராஜலட்சுமியின் கழுத்தை கொடூரமாக அறுத்தார். இதில் ரத்தம் மளமளவென பீறிட்டு வெளியேறியது.

    பின்னர் தலையை தனியாக துண்டித்து எடுத்தார். இதில் ராஜலட்சுமி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உடலை வெளியே இழுத்து சென்றார். இதை பார்த்த அவரது தாய் கதறி அழுதபடி ஓடினார். பின்னர் ரத்தம் ரத்தம் சொட்ட சொட்ட துண்டித்த தலையை தளவாய்பட்டி- சுந்தராபுரம் சாலையின் நடுவே வைத்து விட்டு தினேஷ்குமார் தப்பி ஓடினார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் டி.எஸ்.பி. பொன் கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர் கேசவன், மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் சிறுமியின் உடல், தலையை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தினேஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவி ராஜலட்சுமி, தினேஷ்குமார் மனைவியுடன் நெருக்கமாக பழகி வந்தார். அவர் வீட்டிற்கு சென்று, பூக்கள் பறித்து வருவது வழக்கம். கடந்த 3 நாட்களாக வீட்டில் இருந்த தினேஷ்குமார், மாணவியிடம் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. சைகோ போல சுற்றி திரிந்த தினேஷ்குமார் நேற்று மாணவியின் வீட்டிற்கு சென்று பாலியல் தொந்தரவு செய்ததுடன் மறுத்த அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

    தினேஷ் குமாரின் மனைவி சாரதா கூறியதாவது:-

    நெல் அறுவடை எந்திரம் வாங்க கடனுதவி கிடைக்காததால் தஞ்சாவூரில் நெல் அறுவடை எந்திர டிரைவர் வேலைக்கு தினேஷ்குமார் சென்றார். அங்கு உடன் வேலை பார்த்து தொழிலாளர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் அடிக்கடி கோபத்தில் ஆவேசமாக தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    அங்கு கொட்டகையில் தங்காமல், சில மாதங்களாக இரவில் சுடுகாட்டில் தூங்கியதால் இந்த நிலை வந்ததாக தினேஷ்குமார் கூறி வந்தார். இதனால் ஆத்தூரை சேர்ந்த வாகன உரிமையாளர் ராமு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். நீ மேலும் நீ மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று வா என்று அவர் கூறி உள்ளார்.

    10 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த தினேஷ்குமார் நான் தான் ‘முனி’ என்று கூறி சாமி ஆடினார். சுடுகாட்டில் படுத்ததால் எனக்கு பேய், பிசாசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், வி‌ஷம் குடித்து இறந்தவர்கள், கிணற்றில் விழுந்து இறந்தவர்கள் பெயரையும் கூறி வந்தார்.

    அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராஜலட்சுமி எங்கு இருக்கிறார். உடனே இங்கு வரச் சொல். நான் அவரை பார்க்க வேண்டும் என கூறினார். உடனே நாங்கள், தினேஷ்குமாரின் முகத்தில் தண்ணீரை தெளித்து, சத்தம் போடாமல் ஒழுங்காக இருக்கும்படி கூறினோம்.

    சைக்கோ போல் சுற்றி வந்த அவர் ஆவேசமாக பேசியதுடன் உறவினர்களை அடிக்கவும் போவார். வாயில் வந்தபடி திட்டினார். இந்த நிலையில் எனது கணவர் மாணவி ராஜலட்சுமியை கொலை செய்து விட்டு வீட்டுக்கு வந்த பின்பு தான் எனக்கு இது பற்றி தெரியும். இதனால் அதிர்ச்சியில் உறைந்த நானும், எனது கணவரின் தம்பியும் சேர்ந்து தினேஷ்குமாரை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கொள்ளிடக்கரை பகுதியில் அதிக அளவில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உத்தரவின் பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு ஆட்டோக்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், அப்பகுதியில் இருந்து சரக்கு ஆட்டோக்களில் மணல் கடத்தி வந்த அணைக்குடம் கிராமத்தை சேர்ந்த மகாராஜன் மகன் விஜய் (வயது 23), சங்கர் மகன் விக்னேஷ் (16) ஆகிய 2 பேரையும் கைது செய்து, சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    செஞ்சி:

    செஞ்சி அருகே அத்தியூரில் உள்ள ஏரியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக அனந்தபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் அத்தியூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிராக்டரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் டிரைவர் நிறுத்தாமல் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றார். இதில் சுதாரித்துக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் விலகி உயிர் தப்பினார்.

    இதையடுத்து போலீசார் அந்த டிராக்டரை மடக்கி, டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தச்சம்பட்டை சேர்ந்த செல்வகுமார் மகன் இளையராஜா (வயது 31) என்பதும், அத்தியூர் ஏரியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. 
    சிறுகனூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சமயபுரம்:

    சிறுகனூர் அருகே மணல் அள்ளி செல்வதாக மண்ணச்சநல்லூர் தாசில்தார் ரேணுகாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி 94 கரியமாணிக்கம் வருவாய் ஆய்வாளர் வனிதா கன்னியாகுடி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள உப்பாற்றில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருப்பதைப் பார்த்து அங்கு விரைந்து சென்றார். அவரைக் கண்டதும் மணல் அள்ளியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இதுபற்றி சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கன்னியாகுடியை சேர்ந்த முருகையா மகன் நாகராஜ்(வயது38), அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (40) ஆகிய இருவரையும் கைது செய்து லால்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 
    ×