என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Eligibility"
- 6 தனியார் மருத்துவ கல்லூரிகள் புதிதாக தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.
- ஆன்லைன் வழியாக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும்.
சென்னை:
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு நீட்தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறை கேட்டால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கால தாமதம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ஆவலுடன் காத்திருந்த நிலையில் கலந்தாய்வு தள்ளிப் போகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்கும் என்று மத்திய மருத்துவ ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு, மாநில இடங்களுக்கான கலந்தாய்வை தொடங்க முடிவு செய்தது. அதன்படி ஆகஸ்ட் 21-ந் தேதி பொது கலந்தாய்வு தொடங்குகிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 2024-25-ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆகஸ்ட் 8-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம் போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 21-ந்தேதி முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு மூலமாக நடத்தப்படும் கலந்தாய்விற்கான மெரிட் லிஸ்ட் ஆகஸ்ட் 19 -ந்தேதி வெளியிடப்படும். 21-ந்தேதி ஆன்லைன் வழியாக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும்.
22 மற்றும் 23-ந் தேதிகளில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் என 4 வகை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடத்தப்படும். எந்த இடத்தில் நடக்கும் என்ற விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலம் 5050 எம்.பி.பி.எஸ். இடங்கள், ஈ.எஸ்.ஐ. கல்லூரிகள் மூலம் 3,400 இடங்கள் 3 நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் மூலம் 450 என ஆக மொத்தம் 9050 இடங்கள் உள்ளன.
பல் மருத்துவ இடங்கள் 2200 உள்ளன. இது தவிர 6 தனியார் மருத்துவ கல்லூரிகள் புதிதாக தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். புதிய மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கலந்தாய்வின் போது இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக இடங்கள் இந்த ஆண்டு உருவாக்கப் படவில்லை. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஊட்டியில் இருந்து 2 மருத்துவ குழு, மருந்து, மாத்திரையுடன் சென்றுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக அனுப்பவும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.196.16 கோடி செலவில் கட்டப் பட்டு வரும் டவர் பிளாக் கட்டிடத்தை ஆய்வு செய்தார்.
- இந்தியாவில் ஐஐடிகள் இருப்பது போல் அமெரிக்காவில் SAT என்ற உயர்கல்வி தேர்வுகள் இருக்கின்றன.
- இங்கு கேள்வி யாருக்கு தகுதி இருக்கிறது' என்பது அல்ல, 'யார் அதிகாரத்தில் இருக்கிறார்' என்பதே கேள்வி.
அண்மையில் தகுதித்தேர்வு குறித்து ராகுல்காந்தி பேசிய வீடியோ வைரலானது.
அந்த வீடியோவில், "இந்தியாவில் ஐஐடிகள் இருப்பது போல் அமெரிக்காவில் SAT என்ற உயர்கல்வி தேர்வுகள் இருக்கின்றன. அந்தத் தேர்வுகள் அமல்படுத்தப்பட்ட போது வெள்ளையர்கள் தான் அதிக மதிப்பெண்கள் பெற்றனர். கறுப்பினத்தவரும் லத்தீன் அமெரிக்கர்களும் தேர்ச்சி பெற முடியவில்லை. அவர்களுக்கு தகுதியும் அறிவும் இல்லை எனப் பேசினார்கள்.
பிறகொரு நாள் ஒரு பேராசிரியர் வந்தார். அதே தேர்வுத்தாள்களை கறுப்பினத்தவர்களைக் கொண்டு தயார் செய்து, கறுப்பினத்தவர்களை எழுத வைத்தார். வெள்ளை மாணவர்கள் எவரும் தேர்ச்சி பெற முடியவில்லை.
எனவே இங்கு கேள்வி யாருக்கு தகுதி இருக்கிறது' என்பது அல்ல, 'யார் அதிகாரத்தில் இருக்கிறார்' என்பதே கேள்வி."
உயர் சாதியினர் நடத்தும் தேர்வுகளில் தலித்துகள் தோல்வி அடைகிறார்கள் என்று சொன்னால், ஒன்று செய்வோம், தலித்துகளை தேர்வுத் தாளை தயாரிக்க வைத்து, உயர் சாதியினரை தேர்வு எழுதச் சொல்லுங்கள்" என்று ராகுல்காந்தி பேசுகிறார்.
தகுதியின் சிக்கலான விஷயங்களை ராகுல்காந்தி மிக எளிமையாக விளக்கியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- மாநில கபடி போட்டிக்கு புனித ஜான்ஸ் பள்ளி தகுதி பெற்றது.
- அரசு உதவி பெறும் 24 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பசும்பொன்
கமுதி அருகே உள்ள கே.எம்.கோட்டை புனித ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் 19-ம் வயதிற்குட்பட்ட இப்பள்ளி மாணவர்கள் 2-ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பயிற்சி அளித்த ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர்.
மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் சிக்கல், உப்பூர்,சாயல்குடி, பரமக்குடி, ராமேசுவரம், மண்டபம், உச்சிப்புளி உட்பட ஏராளமான பகுதியில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 24 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.
- அதன்படி நடப்பாண்டு சிடெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சேலம்:
மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு சிடெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சிடெட் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆன்லைன் மூலமாக மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு ஆகிய மாதங்களுக்கு இடைப்பட்ட நாட்களில் நடைபெற உள்ளது.
கல்வி தகுதி
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான ெதாடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் பிளஸ்-2 தேர்ச்சியுடன் 2 வருட டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். இவர்கள் 1 முதல் 5-ம் வரையிலான ஆசிரியர் பணிக்கு சிடெட் தாள்- 1 எழுத தகுதியுடையவர்கள் ஆவர். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் சிடெட் தாள்-2 எழுத தகுதியுடைவர்கள் ஆவர்.
ஆசிரியர் பணிக்கான பி.எட்., டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பு ஆகிய தகுதியை என்.சி.டி.இ -ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்
களுடன் தேவையான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
2 தாள் தேர்வையும் எழுத விரும்பினால் ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2023 ஆகும். தமிழ்நாட்டில் இந்த தேர்வு சேலம், நாகர்கோவில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனம் காந்தி திடலில் நடைபெற்றது.
- விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2 ஆண்டுகளில் தி.மு.க. அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் திண்டி வனம் காந்தி திடலில் நடை பெற்றது. தி.மு.க. நகர செயலாளர் கண்ணன் தலை மையில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாரு மான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2 ஆண்டு களில் தி.மு.க. அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நாளில் நூறாண்டு காலம் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற திராவிடமாடல் ஆட்சி தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கும். மக்களுடைய அதிகாரத்தை ஏற்றுக் கொள்கின்ற திட்டம் தான் திராவிட மாடல் ஆட்சி. நீட்பொதுத்தேர்வில் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மறுக்கப்படுகின்றது. இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை தற்போது இந்தியா முழுநவதும் வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிக்கின்ற பல்வேறு திட்டங்களை இந்தியாவை ஆளுகின்ற பா.ஜனதாவின் பிரதமர் நரேந்திர மோடி , முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் திட்டம் இலவசம் எனவும், வீண் திட்டங்கள்என அறிவித்துவிட்டு இன்று கர்நாடகாவில் நடைபெறும் தேர்தலில் முதலமைச்சர் திட்டங்களைசெயல்படுத்த போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவர் மு .க .ஸ்டாலின். இதுதான் திராவிட மாடல் என்பதை நிலை நிறுத்தி எதிர்காலத்தில் இந்தியாவைதிராவிட மாடல் ஆட்சி ஆளுகின்ற நிலை உருவாகும். இவ்வாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரமணன், தி.மு.க. நிர்வாகி வக்கீல் அசோகன், மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சந்திரன், துணை அமைப்பாளர் ரிஸ்வான், நகர துணை செயலாளர் ஓவியர் கவுத மன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- இன்று தமிழகம் முழுவதும் அனைத்து தேர்வு மையங்களிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது.
- சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் நாளில் ஏராளமானோர் தேர்வு எழுதினர்.
சேலம்:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இன்று முதல் வருகிற 14-ம் தேதி வரை ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -2 தேர்வு, கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் என 2 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
தனியார் பள்ளி ஆசிரியர்கள்
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு தொடங்கியது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் நாளில் ஏராளமானோர் தேர்வு எழுதினர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பணிக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை உள்ளதால் ஏராளமானோர் இந்த தேர்வை எழுதினர். குறிப்பாக இதில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், டியூசன் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள், மற்றும் வேலைக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்று தேர்வு எழுதினர்.
முன்னதாக தேர்வு மைய நுழைவு வாயிலில் ஹால்டிக்கெட் பரிசோதிக்கப்பட்டு தேர்வு அறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் புகைப்படத்துடன் கூடிய அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டை வைத்திருந்தனர். ஆசிரியைகள் பலர் தங்களது பெற்றோருடன் தேர்வு மையத்துக்கு வந்ததை காண முடிந்தது. தேர்வர்கள் உடன் வந்தவர்கள் தேர்வு முடியும் வரை தேர்வு மையத்தின் வெளியே காத்திருந்தனர்.
தேர்வுக்கான பணியில் அரசு கல்லூரி பேராசிரியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்வு மைய நுழைவு வாயிலில் போலீசார் மற்றும் கல்லூரிகளில் உள்ள தனியார் வாட்ச்மேன்கள் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறப்பு பஸ்கள்
தேர்வையொட்டி கிராம புறங்களில் இருந்து தேர்வு எழுத வருபவர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் சேலம், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர், தாரமங்கலம், கொளத்தூர், மேச்சேரி உள்ளிட்ட இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம், உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- நாளை காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
- 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த முகாமானது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முகாமில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இந்த முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்று, ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்று கொள்ளலாம்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 255 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
- அரசுப்பள்ளி மாணவர்களில் 64 பேர் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றனர்.
கடலூர்:
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை கட லூர் மாவட்டத்தைச் சேர்ந்த 532 மாணவ, மாணவிகள் எழுதினர்.இவர்களில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 266 பேர், அரசு மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 65 பேர், அரசு உதவி பெறும் பள்ளி களைச் சேர்ந்தவர்கள் 21 பேர், மெட்ரிக், சுயநிதிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 180 பேர் ஆவார்கள். நீட் தேர்வு முடிவு அண்மையில் வெளியானது. இதில் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியான மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்றவர்களின் பட்டியலை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் வெளியிட்டது.
அதன்படி, அரசுப்பள்ளி மாணவர்களில் 64 பேர் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதி யைப் பெற்றனர். மேலும், 12 பேர், இந்த ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். இதேபோல, அரசு மாதிரிப் பள்ளியைச் சேர்ந்தவர்களில் 33 பேர் அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ள நிலையில், 4 பேர் நேரடியாக மட்டுமே விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றனர். அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த வர்களில் 10 பேரும், மெட்ரிக், சுயநிதிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 132 பேரும் விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பூஸ்டர் கடந்த 15ந் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது.
- பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது உட்பட்டவர்களுக்கு முதல் தவணை 87 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 63 சதவீதம் பேருக்கும், 15 முதல் 18 வயது உட்பட்டவர்களுக்கு முதல் தவணை 87 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 74 சதவீதம் பேருக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை 98 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 76 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை பூஸ்டர் கடந்த 15ந் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் தவணை செலுத்தி 6மாதங்கள் அல்லது 26 வாரங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.இந்த தடுப்பூசி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் இலவசமாக அடுத்த செப்டம்பர் 30-ந் தேதி வரை செலுத்தப்படும்.
இது குறித்து, கலெக்டர் வினீத் கூறியதாவது:-
மாவட்டத்தில் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் ஆன, 10 லட்சத்து 14 ஆயிரத்து 495 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை செலுத்திய ஒரு லட்சத்து, 50 ஆயிரத்து 949 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 65 ஆயிரத்து 444 பேர் உள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்