என் மலர்
நீங்கள் தேடியது "Examination"
- தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளாதவர்கள் இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதள முகவரில் இருந்து விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதவிக்கான நேர்காணல் தேர்விற்கான அழைப்பு கடிதத்தினை பதிவிறக்கம் செய்த விண்ணப்பதாரர்கள் மட்டும், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் 26-ந்தேதி காலை 8.30 மணியளவிலும், கட்டுநர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் வருகிற 29-ந்தேதி காலை 8.30 மணியளவிலும் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் துணைப்பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முன்பாக, தங்களது கல்வித்தகுதி, முன்னுரிமை கோரும் சான்று உள்பட அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்திய ஆவணம் ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கான இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சேலம் மாவட்ட அளவில் கலைத்திருவிழா கடந்த வாரம் 7 மையங்களில் 200-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
- 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 11 ஆயிரத்து 474 பேர் பங்கேற்றனர். முதல் இடங்களை பிடித்த 536 பேர், மாநில கலைத்திருவிழா போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
சேலம்:
சேலம் மாவட்ட அளவில் கலைத்திருவிழா கடந்த வாரம் 7 மையங்களில் 200-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 11 ஆயிரத்து 474 பேர் பங்கேற்றனர். முதல் இடங்களை பிடித்த 536 பேர், மாநில கலைத்திருவிழா போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
இப்போட்டி சென்னை,
கோவை, மதுரை, திரு வள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்க ளில் வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக தேர்வு பெற்ற மாணவ- மாணவி களை அழைத்துச் செல்ல ஆசிரியர்கள் ஒருங்கி ணைப்பாளர்களாக நிய மிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நேற்று சேலம்
அரசு மகளிர் மேல்நி லைப்பள்ளியில் நடந்தது. அதில், மாணவர்களை அழைத்துச் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர்.
- விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
- தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் ஊர்காவல் படையில் காலியாக உள்ள பணி யிடத்திற்கு சேவை செய்ய மற்றும் தன்னார்வ மனப்பான்மையுடன் பணியாற்ற ஆட்கள் தேர்வு வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்ட ஊர்காவல் படையில் பணிபுரிய விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நேரில் வந்து கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள வேண்டிய நபர்கள் நல்ல உடல் திறன் மற்றும் கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், வயது 18 முதல் 45 வயது உடையவராகவும், எந்தவித குற்றப்பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.
சாதி, மதம், அரசியல் மற்றும் எந்தவித சங்கத்திலும் உறுப்பினராக இருக்க கூடாது. அரசு ஊழியராக இருந்தால் அவர்கள் தங்கள் துறைசார்ந்த அதிகாரியிடம் தடையில்லாச்சான்று பெற்று சமர்பிக்க வேண்டும். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஊர்காவல் படையில் வீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு காவல் துறையினரின் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். ஊர்காவல் படை வீரர்க ளுக்கு மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும். அவ்வாறு பணிபுரியும் ஊர்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு மதிப்பூதியமாக ரூ.560 வழங்கப்படும்.
நேர்முக தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கல்வி தகுதிக்கான அசல் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் இவைகளுக்குண்டான நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் புகைப்படம் அனைத்தும் எடுத்து வர வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- தூய்மை பணியாளர்கள் மற்றும் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தஞ்சாவூர்:
கும்பகோணம் ஒன்றியம், பெரும்பாண்டி ஊராட்சியில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஊராட்சி அலுவலகத்தில் நடந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் தொடங்கி வைத்து பேசினார்.
பெரும்பாண்டி ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு செயலாளர் சரோஜா பாஸ்கர் தலைமை தாங்கினார்.
முகாமில் ரத்த அழுத்தம், சக்கரை நோய் அளவு, உப்பு அளவு, கண் நோய் பரிசோதனை, இ.சி.ஜி மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முகாமில் பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் அசோக்குமார் தலைமையில் செவிலியர்கள், ஆய்வக நுட்புனர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
இதில் 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர். பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை கள ஒருங்கி ணைப்பாளர் நாரயணவடிவு, அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.
முடிவில் பெரும்பாண்டி ஊராட்சி செயலாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.
- மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- சுமார் 750-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நாகப்பட்டினம்:
திட்டச்சேரி அரசினர் மேல்நிலை பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வட்டார அளவிலான கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுனர் லியாக்கத் அலி வரவேற்றார்.
முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை, எலும்பு சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வரவழைக்கப்பட்டு மக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.
முகாமில் திட்டச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 750-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இதில் காசநோய் பிரிவு துணை இயக்குனர் சங்கீதா, தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் சங்கரி, பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வை–யாளர் கற்பகம் நன்றி கூறினார்.
- இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பானவைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
- சுமார் 1000 பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, மருதூர்தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் வட்டார அளவிலான சுகாதார விழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு நாகை செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார்.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், இணை இயக்குனர் அமுதா, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர் மாலதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை, சிவகுரு பாண்டியன், பழனிச்சாமி மற்றும் வருவாய் துறை, சுகாதார துறையினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, முகாம் அரங்கில் காய்கறி பழங்கள் மற்றும் முதல்-அமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பானவைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
முகாமில், சுமார் 1000 பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும், மேல் சிகிச்சைக்கான அறிவுரையும் வழங்கப்பட்டது. முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.
- கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி மருந்து, மாத்திரை வழங்கினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் கீழக்கரை நகர் எஸ்.டி.பி. ஐ. கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக்கல்லூரி மருத்து வமனை இணைந்து இலவச சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.
கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவன தலைவர் உமர் அப்துல் காதர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி கலந்து கொண்டார். கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் சரவணன் தலைமையில் குழந்தைகள் மருத்துவர் கவுதம், காது, தொண்டை, மூக்கு மருத்துவர் ஆரோபிண்டோ, கண் மருத்துவர் வடுலா கிருஷ்ணன், எலும்பு முறிவு மருத்துவர் யுவராஜன், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் நூருல் ஆயிஷா, பொது மருத்துவர் ப்ளெக்ஸ் நிதின், தோல் மருத்துவர் ஸ்ரீ பார்வதி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி மருந்து, மாத்திரை வழங்கினர்.
முகாமிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி, கீழக்கரை நகராட்சி கவுன்சிலர்கள் முகமது பாஷா, சகிலா பேகம், சித்திக், சமூக ஆர்வலர் அஜ்ஹர், ரோட்டரி கிளப் மரம் நடுதல் சேர்மன் சபீக். ம.ஜ.க. நிர்வாகி செய்யது இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு முகாமில் பயனடைந்தனர். அதனைத் தொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் எர்ணாகுளம் பஷீர் திருக்குர்ஆன் வழங்கினார்.
- இன்று தமிழகம் முழுவதும் அனைத்து தேர்வு மையங்களிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது.
- சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் நாளில் ஏராளமானோர் தேர்வு எழுதினர்.
சேலம்:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இன்று முதல் வருகிற 14-ம் தேதி வரை ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -2 தேர்வு, கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் என 2 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
தனியார் பள்ளி ஆசிரியர்கள்
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு தொடங்கியது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் நாளில் ஏராளமானோர் தேர்வு எழுதினர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பணிக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை உள்ளதால் ஏராளமானோர் இந்த தேர்வை எழுதினர். குறிப்பாக இதில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், டியூசன் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள், மற்றும் வேலைக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்று தேர்வு எழுதினர்.
முன்னதாக தேர்வு மைய நுழைவு வாயிலில் ஹால்டிக்கெட் பரிசோதிக்கப்பட்டு தேர்வு அறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் புகைப்படத்துடன் கூடிய அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டை வைத்திருந்தனர். ஆசிரியைகள் பலர் தங்களது பெற்றோருடன் தேர்வு மையத்துக்கு வந்ததை காண முடிந்தது. தேர்வர்கள் உடன் வந்தவர்கள் தேர்வு முடியும் வரை தேர்வு மையத்தின் வெளியே காத்திருந்தனர்.
தேர்வுக்கான பணியில் அரசு கல்லூரி பேராசிரியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்வு மைய நுழைவு வாயிலில் போலீசார் மற்றும் கல்லூரிகளில் உள்ள தனியார் வாட்ச்மேன்கள் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறப்பு பஸ்கள்
தேர்வையொட்டி கிராம புறங்களில் இருந்து தேர்வு எழுத வருபவர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் சேலம், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர், தாரமங்கலம், கொளத்தூர், மேச்சேரி உள்ளிட்ட இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம், உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- கரூர் மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-2 ஏ மாதிரி தேர்வு நடைபெற்றது
- தேர்வுக்கான ஏற்பாடுகளை கரூா மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.
கரூர்:
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ், முதன்மை போட்டி தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்புக்கான தேர்வுகளுக்கு, மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் வகையில், மாதிரி முழு தேர்வுகள், கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று பி.எஸ்.சி., குரூப்-2 ஏ, முதன்மை தேர்வுக்கான மாதிரி முழுத்தேர்வு நடந்தது. அதில் 33 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை கரூா மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.
- முகாமில் 496 பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
- அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறித்து பரிசோதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
கோட்டூர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி சார்பில் பொது மற்றும் கண் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. மதுரை மீனாட்சி மிசன்,தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர்.
முகாமிற்கு நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன் முகாமை தொடங்கி வைத்தார்.முகாமில் 496 பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்,
அனைவருக்கும் ரத்த அழுத்தம் ,சர்க்கரை அளவு குறித்து பரிசோதிக்கப்பட்டது, தேவைபடுவோருக்கு ஈ.சி.ஜி எடுக்கப்பட்டது. அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. பங்கேற்ற முதியோர்கள் 40 பேருக்கு கைத்தடிகள் வழங்கப்பட்டது.கண்ணாடி தேவை படும் சுமார் 205 பேருக்கு கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
முகாமில் ஊராட்சி தலைவர்கள் சுஜாதா பாஸ்கரன் தமிழ்செல்வி வேல்முருகன்,திலகவதி சிவசுப்ரமனியன், தேவகி உதயகுமார், ஓ.என்.ஜி.சி மருத்துவ அலுவலர் கனேஷ்குமார், உற்பத்தி பிரிவு தலைவர் வில்சன், ஏரியா பொது மேலாளர் சரவணன்,முத்துகுமார், நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மகேந்திரன், துணைத்தலைவர் வனஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் நல்லூர், களப்பால், வாட்டார், வெங்கத்தான்குடி, அக்கரைகோட்டகம், பைங்காட்டூர், பனையூர் போன்ற ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
முகாமை ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்பு திட்ட அலுவலர்கள் கார்த்திகேயன், முருகானந்தம் ஒருங்கிணைத்தனர். முகாமை கடலூரை சேர்ந்த முதியோருக்கான முதியோர் அமைப்பு ஏற்று நடத்தியது.
- மார்ச், 13 ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது.
- 26 ஆயிரத்து 160 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக, அரசு நியமித்த சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமை யில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் மார்ச், 13 ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 213 மேல்நிலை பள்ளிகளில் பயிலும், 25 ஆயிரத்து, 664 மாணவர், 496 தனித்தேர்வர் உட்பட, 26 ஆயிரத்து, 160 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, 92 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடத்துவது, அதற்காக பணிகள், முதன்மை, துறை கண்காணிப்பாளருக்கான ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவ லகத்தில் இன்று நடந்தது.
இதில் பொதுத்தேர்வு க்கான சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரி, கஜலட்சுமி தலைமையில் மாவட்ட தேர்வுத்துறை, கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொது த்தேர்வை எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மூலம் ஹால்டிக்கெட் வழங்க ப்பட்டது.
- கோவையில் 254 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது.
- பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக் கான வினாத் தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டன.
கோவை,
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (13-ந் தேதி) தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத்தேர்வு 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரையும் நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடக்கிறது.
கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 35 ஆயிரத்து 541 பேரும், பிளஸ்-1 பொதுத் தேர்வை 34 ஆயிரத்து 259 பேரும், எஸ்.எஸ். எல்.சி. பொதுத்தேர்வை 41ஆயிரத்து 526 பேரும் எழுத உள்ளனர். இதற்காக கோவை மாவட் டத்தில் 254 தேர்வுமையங்கள் அமைக் கப்பட்டு உள்ளன.
இதில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக் கான வினாத் தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டு வரப் பட்டன. அவை கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட் டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வினாத்தாள்கள் கோவை மாவட்டத்தில் 12 கட்டுக் கோப்பு மையங்களில் பாது காப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
இதில், கோவை டவுன் ஹாலில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் பொதுத்தேர்வுக்கான வினாத் தாள்கள் பாது காப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.மேலும் அந்த அறைக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது. போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். அங்கு கண்காணிப்பு காமி ராக்களும் பொருத் தப்பட்டு உள்ளன.
இது போல் கோவை மாவட்டத்தில் மற்ற வினாத்தாள் மையங்க ளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.